Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார்

Students can Download 6th Tamil Chapter 7.3 வேலுநாச்சியார் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.3 வேலுநாச்சியார்

மதிப்பீடு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார்

Question 1.
வேலுநாச்சியார் ஐதர்அலியின் உதவியை எவ்வாறு பெற்றார்?
Answer:
வேலுநாச்சியார் ஐதர் அலியின் உதவியைப் பெற்றமை:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார் 1
(i) வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆண்ட செல்லமுத்து மன்னரின் ஒரே மகள். அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்துகொண்டார். முத்துவடுகநாதர், காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். சிவகங்கையை மீட்க வேலுநாச்சியார் திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

(ii) வேலுநாச்சியார், மைசூர் சென்று ஐதர் அலியைச் சந்தித்து உருதுமொழியில் ஆங்கிலேயர்களை எதிர்ப்பது பற்றிப் பேசினார். வேலுநாச்சியாரின் உருதுமொழித் திறமையைக் கண்ட ஐதர்அலி உதவி செய்வதாக உறுதியளித்தார். அதன்படி ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களை அனுப்பி வைத்தார்.

(iii) அப்படை வீரர்களுடன் மருது சகோதரர்களின் தலைமையில் வேலுநாச்சியார் படை புறப்பட்டது. முதலில் காளையார்கோவிலை மீட்டார். பிறகு சிவகங்கையையும் மீட்டார்.

Question 2.
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.
Answer:
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு
முன்னுரை :
வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆண்ட செல்லமுத்து மன்னரின் ஒரே மகள். வேலுநாச்சியார் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளைக் கற்றார். சிலம்பம், குதிரையேற்றம், வாள்போர், வில்பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்துகொண்டார்.

முத்துவடுகநாதர் மரணம் :
காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

ஆலோசனைக் கூட்டம் :
திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் வேலுநாச்சியார், அமைச்சர் தாண்டவராயன், தளபதிகளாகிய பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர். சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், எப்படியாவது சிவகங்கையை மீட்க வேண்டும் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஐதர்அலி அனுப்பிய ஐயாயிரம் படை வீரர்கள் வந்தனர். அடுத்தநாள் சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் எனத் திட்டமிட்டனர்.

போர்த்திட்டம் :
முத்துவடுகநாதர் காளையார் கோவிலில் கொல்லப்பட்டதால் முதலில் காளையார் கோவிலைக் கைப்பற்றிய பிறகு சிவகங்கையை மீட்கவும் திட்டமிட்டனர். அதன்படி ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர்.

காளையார் கோவிலைக் கைப்பற்றுதல் :
திட்டமிட்டபடி காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போரின் இறுதியில் ஆங்கிலேயரின் படையை தோற்கடித்து காளையார் கோவிலை வேலுநாச்சியார் கைப்பற்றினார்.

வேலுநாச்சியாரின் திட்டம் :
காளையார் கோவிலைக் கைப்பற்றியதும், உடனே சிவகங்கையைத் தாக்கலாம் என்று பெரிய மருது கூறினார். அதற்கு வேலுநாச்சியார் “அவசரம் வேண்டாம், இப்போது சிவகங்கை கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். வரும் விஜயதசமித் திருநாள் அன்று கதவுகள் திறக்கப்படும். அப்போது உள்ளே நுழையலாம்” என்றார். “விஜயதசமி நாளில் பெண்களுக்கு மட்டும் கோட்டைக்குள் செல்வதற்கு அனுமதியுண்டு. பெண்கள் பிரிவினர் கூடைகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றுடன் ஆயுதங்களை மறைத்துச் செல்லட்டும். அவர்கள் உள்ளே தாக்குதலைத் தொடங்கியதும் ஆண்கள் பிரிவினரும் கோட்டைக்குள் நுழைந்து தாக்கி ஆங்கிலேயரை விரட்டிவிடலாம்” என்றார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார்

உடையாளுக்கு நடுகல் :
வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்குமாறு ஆங்கிலேயர்கள் உடையாள் என்னும் பெண்ணை வற்புறுத்தியும், அவள் மறுத்ததால் அவளைக் கொன்றுவிட்டார்கள். அவளுக்கு உரிய முறையில் சிறப்புச் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் தாண்டவராயன். வேலுநாச்சியாரின் உத்தரவின்படி நடுகல் நடப்பட்டது. வேலுநாச்சியார் சிவகங்கையை நோக்கிச் சென்றபோது வழியில் உடையாளின் நடுகல்லுக்குத் தாம் வைத்திருந்த தாலியை எடுத்துக் காணிக்கையாகச் செலுத்தி வணங்கினார். வீரர்கள் “உடையாள் புகழ் ஓங்குக” என்று முழங்கினர்.

குயிலியின் நாட்டுப்பற்று :
குயிலி பெண்கள் படைப்பிரிவுடன் மாறுவேடத்தில் உள்ளே சென்று ஆயுதக் கிடங்குக்குத் தீ வைத்தாள். வேலுநாச்சியார் படைவீரர்களுடன் கோட்டைக்குள் புகுந்தார். ஆங்கிலேயரின் படையுடன் கடுமையாகப் போரிட்டு வென்றார். ஆங்கிலப்படை 2 கோட்டையைவிட்டு ஓடியது. இவ்வெற்றிக்குப் பின் குயிலியின் உயிர்த் தியாகம் இருந்தது. 2 குயிலி தன் உடலில் தீ வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்துவிட்டாள். தன் உயிரைக் கொடுத்து நாட்டை மீட்டுக் கொடுத்தாள் குயிலி. வேலுநாச்சியார், “அவளது துணிவுக்கும் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.

முடிவுரை:
வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர் அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது.
மூன்றாம் பருவம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Students can Download 6th Tamil Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 1.
காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக.
Answer:
காந்தியடிகளின் பொன்மொழிகள் :
(i) எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உய்த்திருக்கிறது.
(ii) நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
(iii) அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.
(iv) எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.
(v) பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.
(vi) பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்.
(vii) குணநலனும், புனிதத்தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம்.
(viii) சாதுவான வழியில், உன்னால் உலகத்தையும் அசைக்க முடியும்.
(ix) உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.
(x) எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.
(xi) தோல்வி மனச்சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.

Question 2.
காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் :
(i) கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம்
(ii) வரிகொடா இயக்கம்
(iii) ஒத்துழையாமை இயக்கம்
(iv) உண்ணாவிரதம்
(v) உப்பு சத்தியாகிரகம்
(vi) சட்டமறுப்பு இயக்கம்
(vii) தனியாள் அறப்போராட்டம்
(viii) வெள்ளையனே வெளியேறு.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
Answer:
ஆ) மதுரை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 2.
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) திரு.வி.க
இ) உ.வே.சா.
ஈ) பாரதியார்
Answer:
இ) உ.வே.சா

பொருத்துக

1. இலக்கிய மாநாடு – பாரதியார்
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
3. குற்றாலம் – ஜி.யு.போப்
4. தமிழ்க் கையேடு – அருவி
Answer:
1. இலக்கிய மாநாடு – சென்னை
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்
3. குற்றாலம் – அருவி
4. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலோசனை – நாம் எச்செயலைச் செய்தாலும் பெரியவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும்.

2. பாதுகாக்க – நம் நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

3. மாற்றம் – பருவமழை பொய்த்ததால் பூமியின் தட்பவெப்பநிலை மாற்றம் அடைகிறது.

4. ஆடம்பரம் – நாம் ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்த்து எளிமையாக வாழவேண்டும்.

குறுவினா

Question 1.
காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை ?
Answer:
காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையாததற்குக் காரணம் :
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லவில்லை.

Question 2.
காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
Answer:
1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்
ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.

சிறுவினா

Question 1.
காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
Answer:
காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு :
(i) காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.

(ii) செல்லும் வழியில், வயலில் வேலை செய்யும் உழவர்களைக் கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர்.

(iii) அப்போது, காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

(iv) பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார்.

(v) அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அந்த எளிமைத் திருக்கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 2.
காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
Answer:
(i) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
(ii) ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
(iii) திருக்குறள் அவரைக் கவர்ந்த நூல்.

(iv) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.

(v) உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்து, “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார். இந்நிகழ்வுகளே காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.

சிந்தனை வினா

Question 1.
காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?
Answer:
காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகள் :
(i) உண்மை பேசுதல்
(ii) நேர்மை
(iii) இன்னா செய்யாமை
(iv) பிறர் துன்பம் தீர்க்கும் திறம்
(v) அகிம்சை வழிப் போராட்டம்
(vi) ஆடம்பரத்தை எதிர்த்து எளிமையைப் போற்றியமை
(vii) தீண்டாமையை எதிர்த்தமை
(viii) ஒற்றுமையைப் போற்றியமை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மதுரையில் காந்தியடிகளின் பெயரில் …………………… உள்ளது.
2. ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ………………………..
3. ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ……. வீட்டில் நடைபெற்றது.
4. எளிமையை ஓர் அறமாகப் போற்றியவர் ………………..
5. காந்தியடிகளைப் “பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டவர் ………………..
6. பாராதியாரை “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறியவர் …………………
7. “பாரதியாரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியவர் ……………..
8. தமிழகம் வந்த பிறகு காந்தியடிகளின் கோலம் …………….
9. காந்தியடிகள் மனிதர்களிடம் ……………………….. பாராட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
10. காந்தியடிகளைக் கவர்ந்த நூல்கள் ……………
11. சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு …………………
12. சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் …………………….
13. காந்தியடிகள் செல்வதற்கு முதலில் மறுத்த இடங்கள் ………………,……………..
Answer:
1. அருங்காட்சியகம்
2. 1919
3. இராஜாஜி
4. காந்தியடிகள்)
5. பாரதியார்
6. இராஜாஜி
7. காந்தியடிகள்)
8. எளிமைத் திருக்கோலம்
9. உயர்வு தாழ்வு
10. ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு, திருக்குறள்
11. 1937
12. உ.வே.சாமிநாதர்
13. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி

வினாக்கள் :

Question 1.
காந்தியடிகளுக்கும் பாரதிக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் யாது?
Answer:
(i) 1919 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ரௌலட் சட்டத்தை எதிர்த்து இராஜாஜியின் வீட்டில் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார்.

(ii) “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டார்.

(iii) “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் காந்தியடிகள்.

(iv) “அது முடியாது, திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறிய பாரதியார், “நான் போய் வருகிறேன்” என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.

Question 2.
பாரதியார் பற்றிக் காந்தியடிகளின் மதிப்பீடு யாது?
Answer:
(i) ஒருமுறை பாரதியார், காந்தியடிகளை ஒரு பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்தார். அவர் ‘வேறு பணி இருப்பதாகவும் அடுத்த நாள் நடத்த முடியுமா’ என்று கேட்டார். அதற்குப் பாரதியார் மறுத்துவிட்டுத் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் காந்தியடிகளின் இயக்கத்திற்கு வாழ்த்துகள் என்றும் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

(ii) அவர் சென்றதும் “இவர் யார்?” என்று காந்தி வியப்புடன் கேட்டார். “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்றார் இராஜாஜி.

(iii) “அப்படியா? இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீட்டை அறியலாம்.

Question 3.
காந்தியடிகள் ஆடம்பரத்தை எதிர்ப்பவர் என்பதற்கு சான்று ஒன்று தருக.
Answer:
(i) காந்தியடிகள் தமிழ்நாடு வந்தபோது காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றபோது கானாடுகாத்தான் என்னும் ஊரில் ஒரு பணக்காரர் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீடு மிகவும் ஆடம்பரமாக இருந்தது.

(ii) வீட்டில் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் நிறைந்து இருந்தன. காந்தியடிகள் அந்தப் பணக்காரரிடம், “உங்கள் வீட்டை வெளிநாட்டுப் பொருள்களால் அழகு செய்து இருக்கிறீர்கள். அதற்குச் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுத்தால் போதும். இதைவிட அழகாக செய்துவிடுவேன்” என்று கூறினார். பணக்காரர் தலைகுனிந்தார்.

(iii) அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் மறுமுறை வந்தபோது அங்கே வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றுகூட இல்லை. காந்தியடிகள் மகிழ்வுடன் அவரைப் பாராட்டினார்.

Question 4.
காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட முதலில் ஏன் மறுத்தார்?
Answer:
(i) குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒருசாராருக்குத் தடை இருந்தது.

(ii) எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.

(iii) மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Question 5.
உ.வே.சாமிநாதர் பற்றிக் காந்தியடிகள் கூறியது யாது?
Answer:
(i) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். அப்போது உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ச்சியடைந்தார்.

(ii) ” இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் கூறினார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Students can Download 6th Tamil Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Question 1.
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக.
Answer:
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை மாணவர்கள் தாங்களாகவே இசையோடு பாடி மகிழ்ந்திடுங்கள்.

Question 2.
நாட்டு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
(i) இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்பது போல இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாய்த் திகழ்வது நம்மைப் போன்ற மாணவர்கள்தாம். * நாம் நமது சக்தியை நல்வழியில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். நாம் பெற்றோர் கூறுவதனையும், ஆசிரியர் கூறுவதனையும் கேட்டு செயலாற்ற வேண்டும்.

(ii) நம்மைப் போன்ற மாணவர்கள் முயன்றால் எதிர்கால வரலாற்றையே சிறப்பாக மாற்றலாம். மாணவர்கள் இளம்வயதிலேயே பொதுத்தொண்டு செய்வதைப் பற்றி அறிய வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி இயக்கம் ஆகிய இயக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்புகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இத்தொண்டு பதிலுதவி பாராத் தொண்டாக இருக்க வேண்டும்.

(iii) பொதுத்தொண்டு செய்ய முனையும் மாணவர்கள் தன்னலமற்றவராக இருத்தல் வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை எதிர்ப்பவராகவும் இருக்க வேண்டும். அடக்கத்துடன் இருக்க வேண்டும். ஏமாற்றம் ஏற்பட்டால் சகித்துக் கொள்பவராய் இருக்க வேண்டும். அளவற்ற பொறுமையுடனும், கீழ்ப்படியும் பண்புடனும் இருத்தல் அவசியம் ஆகும்.

(iv) அப்துல்கலாம் கூறியதைப் போல் ‘வானம்தான் எல்லை, நான் பறந்து கொண்டே இருப்பேன்’ என்பதைப் போல் நம்முடைய வாழ்வில் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்கி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(v) ஆபத்துக் காலங்களில் மட்டும்தான் உதவி செய்ய வேண்டும் என்று இருக்கக்கூடாது. எந்நிலையிலும் பிறர் துயர் களைய நாம் உதவ வேண்டும். சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புதல், அவருடைய உறவினர்க்குத் தகவல் அனுப்புதல், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்க்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

(vi) சுத்தமான குடிநீர், நல்ல உணவு போன்றவை ஏழை, எளியவர்களுக்குக் கிடைக்கும் வகையில் செயல்படும் எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான அவசியத்தைத் தெளிவுப்படுத்த வேண்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

(vii) குளம், குட்டைகளை ஆழப்படுத்துதல், மரங்களை வெட்டாமல் பாதுகாத்தல், புதியதாக மரக்கன்றுகள் நடுதல், அனைத்து இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டுதல், – சுற்றுச்சூழல் பாதுகாத்தல் போன்றவை தற்கால தேவையாக உள்ளன. இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் செய்ய வேண்டும்.

(viii) விழாக்காலங்களில் பொது இடங்களில் மக்கள் செல்வதற்கு வரிசையை ஒழுங்குப்படுத்துதல், போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளையும் செய்யலாம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

(ix) “துறவும் தொண்டும்தான் இந்தியாவின் இலட்சியங்கள் அந்த இருவழிகளில் நாட்டைச் செலுத்தினால் மற்றவை தாமாக சரியாகிவிடும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இவ்விரு வழிகளில் மாணவர்கள் தொண்டு செய்து நாடு வளம் பெற வழி செய்ய வேண்டும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
Answer:
ஆ) திருக்குறள்

Question 2.
காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
Answer:
அ) காவிரிக்கரை

Question 3.
கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
Answer:
அ) சிற்பக்கூடம்

Question 4.
நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல் + ஆடை
ஆ) நூலா + டை
இ) நூல் + லாடை
ஈ) நூலா + ஆட
Answer:
அ) நூல் + ஆடை

Question 5.
எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
Answer:இ) எதிரொலிக்க

நயம் அறிக

Question 1.
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
எதுகை :
மெய்களை – மெய்யுணர்வு
ன்னை – அன்னிய

மோனை :
புதுமை – பூமி
தெய்வ – தேசம்
மெய்களை – மெய்யுணர்வு
காளி – காவிரி
ம்பனின் – ங்கை
ன்னி – காஷ்மீர்
புல்வெளி – புன்னகை
ல்லை – ட்டி
ன்னை – ன்னிய – ண்ணல் – றத்தின்

குறுவினா

Question 1.
தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்கள் :
(i) திருவள்ளுவர்
(ii) காளிதாசர்
(iii) கம்ப ர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Question 2.
இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
Answer:
இந்தியாவின் மேற்குத் திசையில் தோன்றுகின்ற நதிகள் அனைத்தும் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

சிறுவினா

Question 1.
தாராபாரதி பாடலின் கருத்தைச் சுருக்கி எழுதுக.
Answer:
தாராபாரதி பாடலின் பொருள் :
(i) பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்திய நாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது.

(ii) உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன.

(iii) கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

(iv) குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

(v) புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சித் தருகின்றன.

(vi) அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகள் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

சிந்தனைவினா

Question 1.
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer:
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை :
(i) இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் மன்னர்கள் என்றும் நாட்டைத் தாங்கும் தூண்கள் என்றும் கூறிக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? போதாது. அதனை மெய்ப்படுத்த மாணவ சமுதாயம் முன்வர வேண்டும்.

(ii) ஆம் இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான் உள்ளது. மாண்+ அவன் = மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் ஊக்கத்தில் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது.

(iii) மண்ணைக் குழைத்தால்தான் நாம் விரும்பிய வண்ணம் மட்பாண்டங்கள் செய்யவியலும். கல்லை உளியால் செதுக்கினால்தான் அழகான சிலை உருவாகும். அவற்றை போல மாணவர்ளைச் செம்மைப்படுத்தினால்தான் நம் நாடு வளரும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

(iv) பூகோளப் பாடத்தில் இந்திய வரைபடம் வரையும் போது எந்த மாநிலங்களில் எந்தெந்த நதிகள் பாய்கின்றன? அவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் யாவை? அவற்றால் பயனடையும் நிலப்பரப்பு அளவு யாது? நம் நாட்டில் விளையும் பயிர்கள் யாவை? போன்ற விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். மாணவப் பருவத்தில் இவற்றையெல்லாம் அறிந்தால்தான் எதிர்காலத்தில் நாட்டைப் பற்றிய விழிப்புணர்வு அவனிடத்தில் தோன்றும்.

(v) ஒவ்வொரு மாணவனும், படித்த இளைஞனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட வேண்டும். நாட்டை நல்வழிப்படுத்தவும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தவும் மாணவர்களின் மகத்தான பொறுப்பே முதலிடத்தில் உள்ளது.

(vi) படித்துவிட்டோம், வேலைக்குப் போகிறோம், வருவாயைப் பெற்றோரிடம் கொடுத்தோம் என்று இல்லாமல் பெற்றோருக்கு உதவுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், கிராமப்புற இளைஞர்கள் காலை, மாலை வேளைகளில் வயலுக்குச் சென்று தந்தைக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம். ஒவ்வொரு மாணவனும் இதைக் கடைப்பிடித்தால் நாடு கண்டிப்பாக முன்னேறும்.

(vii) மனிதநேயம் வளர மாணவர்கள் பாடுபடுதல் அவசியம். சமூகத் தொண்டுகளில் பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாமல் ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. இந்தியத் தாய்க்கு …………… நூலாடை.
2. இந்தியத் தாய்க்கு …………… என்பது மேலாடை.
3. கன்னிக்குமரியின் கூந்தலுக்குப் பூத்தொடுப்பது ………………….. தோட்டம்
4. அள்ள அள்ளக் குறையாதது ……………….
5. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது ……………..
6. தாராபாரதியின் இயற்பெயர் …………….
7. தாராபாரதி பெற்ற அடைமொழி ………….
8. புதுமைகளைச் செய்த நாடு …………….
9. அண்ணல் காந்தியின் அகிம்சை’ என்னும் சிறிய கைத்தடி அறத்தின் …………… ஆக விளங்கும்.
Answer:
1. திருக்குறள்
2. மெய்யுணர்வு.
3. காஷ்மீர்
4. அமுத சுரபி
5. இந்தியா)
6. இராதாகிருஷ்ணன்
7. கவிஞாயிறு
8. இந்தியத் திருநாடு
9. ஊன்றுகோல்

விடையளி

Question 1.
இந்திய நாட்டின் ஆடைகளாக விளங்குபவை எவை?
Answer:
(i) திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது.
(ii) உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகிறது.

Question 2.
காளிதாசர், கம்பர் பற்றி தாராபாரதியின் கவிதைகள் கூறுவது யாது?
Answer:
(i) காளிதாசரின் இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கும்.
(ii) கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கையாற்றின் அலைகள் இசையமைக்கும்

Question 3.
பொற்காலம், கலைக்கூடம் எனக் குறிப்பிடப்படுபவை எவை?
Answer:
(i) புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து காட்சியளித்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன.
(ii) கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சியளிக்கின்றன.

Question 4.
பாரதநாடு எவ்வாறு திகழ்கிறது?
Answer:
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது.

Question 5.
அறத்தின் ஊன்றுகோல் எது?
Answer:
காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி அறத்தின் ஊன்றுகோலாக விளங்குகின்றது.

Question 6.
தாராபாரதி – குறிப்பு எழுதுக.
Answer:
(i) தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
(ii) இவரது அடைமொழி கவிஞாயிறு.
(iii) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள் ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

நூல் வெளி
தாராபராதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இவற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பாடலின் பொருள்

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் . தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Students can Download 6th Tamil Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. “இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது” என்றாள் மலர்க்கொடி, “இந்த மலரைப் பார் அந்த மலரைவிட அழகாக உள்ளது” என்றான் கரிகாலன்.

Question 1.
இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்கள் :
அவனுடைய, அங்கு, இங்கு, இம்மலர், அம்மலர், இந்த, அந்த

Question 2.
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.
Answer:
நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் :
அது, அவர்கள், அவள், அவை, அந்த வீடு, இது, இவர்கள், இவள், இவை, இந்த வீடு, இப்புத்தகம், அப்புத்தகம், இப்பையன், அப்பையன்.

பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக

செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது? என்று வினவினான். “யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா. 2 பெரியவர்களுக்கா?” என்று கேட்டார் விற்பனையாளர். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?” என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.

பத்தியில் உன்ன வினாச்சொற்கள் :
1. எங்கு ?
2. யாருக்கு?
3. ஏன்?
4. இல்லையோ?
5. ஆடைதானே?

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் வீடு ……………. உள்ள து. (அது/அங்கே )
2. தம்பி …………….. வா. (இவர்/இங்கே )
3. நீர் ………………. தேங்கி இருக்கிறது? (அது/எங்கே )
4. யார் …………….. தெரியுமா? (அவர்/யாது)
5. உன் வீடு. …………. அமைந்துள்ளது? (எங்கே என்ன)
Answer:
1. அங்கே
2. இங்கே
3. எங்கே
4. அவர்
5. எங்கே

குறுவினா

Question 1.
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
Answer:
ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அவை அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு, சுட்டுத்திரிபு.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Question 2.
அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 1

சிந்தனை வினா

Question 1.
அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
Answer:
அகச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) அது, இவன், அவர்.

அகவினா : வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) எது? எவர்? யார்?

புறச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) அப்பையன், இப்பெட்டி

புறவினா : வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) எவ்வீடு? வருவானோ ?
(i) அகச்சுட்டு, அகவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் உள்ளேயே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
(ii) புறச்சுட்டு, புறவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

மொழியை ஆள்வோம்

சொற்றொடர்ப் பயிற்சி.
அ) அந்த, இந்த என்னும் சுட்டுச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
Answer:
(i) அந்தக் குழந்தை அழகாக இருந்தது.
(ii) இந்தக் குளத்தில் நீர் வற்றி விட்டது.

ஆ) எங்கே, ஏன், யார் ஆகிய வினாச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
Answer:
(i) “எங்கே செல்கிறாய்?” என்று கண்ணன் முகிலனிடம் கேட்டான்.
(ii) “ஏன் அழுகிறாய்?” என்று தாய் குழந்தையைக் கேட்டாள்.
(iii) திருக்குறளை இயற்றியவர் யார்?

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக

அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)
Answer:
நான் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்.

ஆ) பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)
Answer:
பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.

பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 2

(i) நான் ஊருக்குச் சென்றேன்.
(ii) நீ ஊருக்குச் சென்றாய்.
(iii) அவன் ஊருக்குச் சென்றேன்.
(iv) அவள் ஊருக்குச் சென்றான்.
(v) அவர் ஊருக்குச் சென்றாள்.

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்

அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
Answer:
நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.

ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)
Answer:
நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)
Answer:
நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருட்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

Question 1.
கிடைக்கும் பொருள்களின் …………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
அ) அளவை
ஆ) மதிப்பை
இ) எண்ணிக்கையை
ஈ) எடையை
Answer:
ஆ) மதிப்பை

Question 2.
சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை ………………. மாற்றலாம்.
Answer:
கோலமாவாக

Question 3.
வணிகத்தின் நோக்கம் என்ன?
Answer:
மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.

Question 4.
மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
Answer:
கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.

Question 5.
இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
Answer:
வணிகம்.

மொழியோடு விளையாடு

விடுகதைக்கு விடை காணுங்கள்

(கப்பல், ஏற்றுமதி இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை)
1. தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?
2. தண்ணீ ரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான். காலில்லாத அவன் யார்?
3. பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?
4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?
5. ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும், அவை என்ன?
Answer:
1. தராசு
2. கப்பல்
3. குதிரை
4. நெல்மணி
5. ஏற்றுமதி இறக்குமதி

பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக

நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

1. கோமேதகம்
2. நீலம்
3. பவம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைடூரியம்
9. வைரம்.

செயல் திட்டம்

Question 1.
பண்டைத் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் எழுதுக.
Answer:
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிகத் தலங்களாக அமைந்திருந்தன.

இத்துறைமுகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னைக் கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.

கொற்கை, புகார் போன்ற துறைமுகங்களில் அரேபிய குதிரைகள் ஓடுகின்ற சத்தம், பொருட்களை வாங்கும் பொழுது ரோமானியர்கள் கொடுக்கும் பொற்காசுகளின் சலசலப்பு, உயர்தமிழ் செம்மொழிக்கு ஒப்ப அரபி, ரோமானியரின் மொழி, பேச்சுக்கள், இரவு நேரங்களில் வெளிநாட்டு லாந்தர்களின் மந்தகாச ஒளி, வெளிநாட்டினர் நடமாட்டத்தில் தூங்கா நகரங்களாக இவை இருந்தன. இந்து, கிறித்துவம், இஸ்லாம் மத நல்லிணக்கமும் பேணப்பட்டது.

இந்தத் துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருட்களை யவனர், உரோமர், எகிப்தியர், கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளைக் கொடுத்து, தமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்குச் சான்றுகள் உள்ளன.

Question 2.
உங்களுக்குத்தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதி அதில் பயன்படுத்தப்படும் ஐந்தைந்து சொற்களைப் பட்டியலிடுக. (எ.கா.) உழவு
Answer:
(i) உழவுத்தொழில் – கலப்பை, அறுவை இயந்திரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள்.
(ii) நெசவுத்தொழில் – ஊடைநூல், பாவுநூல், கரக்கோல், மிதிக்கட்டை, கத்திக் கயிறு
(iii) தச்சுத்தொழில் – உளி, அரம், மரப்பலகைகள், ஒட்டுப்பலகைகள், சுத்தி.
(iv) உணவுத்தொழில் – பாத்திரங்கள் (தட்டு, கரண்டி, குவளைகள், சிறு பாத்திரங்கள், பெரிய பாத்திரங்கள்) அடுப்பு, சமையலுக்குத் தேவையான பொருட்கள்.

குறுக்கெழுத்துப்புதிர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் 3
இடமிருந்து வலம்
1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர்.
2. சுட்டிக்காட்டப் பயன்படுவது ……………. எழுத்து

வலமிருந்து இடம்
4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை.

மேலிருந்து கீழ்
1. காடும் காடு சார்ந்த இடமும்
3. தோட்டத்தைச் சுற்றி …………… அமைக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கீழிருந்து மேல்
4. மீனவருக்கு மேகம் ……………. போன்றது.
5. உடலுக்குப் போர்வையாக அமைவது.

விடைகள் :
இடமிருந்து வலம் : 1. முடியரசன், 2. சுட்டு
மேலிருந்து கீழ் : 1. முல்லை , 3. வேலி

வலமிருந்து இடம் : 4. குதிரை, 5. பண்டமாற்று
கீழிருந்து மேல் :4. குடை, 5. பனி மூட்டம்

கலைச்சொல் அறிவோம்

1. பண்ட ம் – Commodity
2. கடற்பயணம் – Voyage
3. பயணப் படகுகள் – Ferries
4. தொழில் முனைவோர் – Entrepreneur
5. பாரம்பரியம் – Heritage
6. கலப்படம் – Adulteration
7. நுகர்வோர் – Consumer
8. வணிகர் – Merchant

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Students can Download 6th Tamil Chapter 6.4 உழைப்பே மூலதனம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.4 உழைப்பே மூலதனம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Question 1.
உழைப்பே மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
காட்சி -1

கதாபாத்திரங்கள்: அருளப்பர், வளவன்,
அமுதா, எழிலன் (அருளப்பர் பிள்ளைகளை அழைத்தல்)

அருளப்பர் : பிள்ளைகளே! நான் வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் கொடுத்த பணத்தைக் கவனமாகப் பாதுகாத்து எனக்குத் திருப்பித் தர வேண்டும்.
(ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். மூவரும் மகிழ்ந்தனர்.)

வளவன் : நமது திறமையை எடைப்போடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

அமுதா : நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

எழிலன் : நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்.
வளவன் உழவுத்தொழில் செய்து முன்னேறினான். அமுதா ஆடு, மாடு வளர்த்து தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்றுப் பொருள் ஈட்டினாள். எழிலன் பணத்தைப் பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் புதைத்து வைத்தான்.)

காட்சி -2

கதாபாத்திரங்கள் : அருளப்பர், வளவன், அமுதா, எழிலன்
(அருளப்பர் பயணம் முடிந்து திரும்பி வந்தார்.)

அருளப்பர் – 1: வளவா! நான் கொடுத்த பணம் எங்கே?

வளவன் : அப்பா, நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வேளாண்மைச் செய்தேன். நல்ல வருவாய் கிடைத்தது. நீங்கள் கொடுத்த பணம் இப்போது இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது.

அருளப்பர் : நல்லது! உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. அந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள் வேளாண்மையைத் தொடர்ந்து செய். அமுதா! நீ என்ன செய்தாய்?

அமுதா : அப்பா! நான் மாடுகளை வாங்கிப் பராமரித்தேன். நீங்கள் தந்த பணம் இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது. இதோ பெற்றுக் கொள்ளுங்கள்.

அருளப்பர் : மிக்க மகிழ்ச்சி. இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக் கொள். பண்ணையை மேலும் விரிவாக்கி நடத்து. வாழ்த்துகள். எழிலா! உன்னிடம் கொடுத்த பணம் எங்கே?

எழிலன் : அப்பா! நீங்கள் கொடுத்த பணத்தை மிகப் பத்திரமாகப் பெட்டியில் வைத்திருக்கிறேன். (தந்தை மனம் வருந்தினார்).

அருளப்பர் : பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். எழிலா! நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். வயதில் இளையவன் நீ. என்னுடன் சிறிதுகாலம் உடனிருந்து தொழிலைக் கற்றுக் கொள். உன் எதிர்கால வாழ்வுக்கு அது உதவும்.
(தந்தை கூறியதைக் கேட்ட எழிலன், தன் தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என முடிவு செய்தான்.)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Question 2.
நீங்கள் எழிலனாக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? வகுப்பறையில் பேசுக.
Answer:
நான் எழிலனாக இருந்தால் பல்பொருள் அங்காடி வைப்பேன். ஏனெனில் அங்குதான் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைக்கும். பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு விற்கப்படவில்லையே என வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எப்போதும் வியாபாரம் நடக்கும். அதுமட்டுமின்றி நான் உற்பத்தியாளரிடம் நேரிடையாகப் பொருள்களை வாங்கி விற்பேன். அதிக இலாபமின்றி நியாயமான முறையில் வியாபாரம் செய்வேன். மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொள்வேன். “கொடுப்பதும் குறைவிலாது, கொள்வதும் மிகை கொளாது” என்ற பழந்தமிழரின் வாக்கினை மெய்ப்பிப்பேன்.

என்னுடைய அங்காடியில் இயன்றவரை இயற்கை முறையில் பயிர்செய்த காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றையே விற்பேன். என் நோக்கம் நுகர்வோராகிய மக்கள் மனநிறைவுடன் என் அங்காடிக்கு வந்து செல்ல வேண்டும் என்பதாகும். அதன்படி வணிகம் செய்து என் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.

சிந்தனை வினா
Question 3.
கதையில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?ஏன்?
Answer:
கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் என்னைக் கவர்ந்தவர் அமுதா.

காரணம் : ஆடு, மாடுகளை வளர்த்து அதில் வரும் பணத்தைச் சேமித்து வைத்தாள். அவள் வருமானத்திற்காக அதனைச் செய்தாலும் பல உயிர்களைக் காப்பாற்றுகிறாள். இதனால் அவளிடம் உள்ள கருணை, அன்பு, பரிவு போன்ற பண்புகள் வெளிப்படுகின்றன. இக்காரணத்தினால் எனக்கு அமுதா கதாபாத்திரம் கவர்ந்ததாக உள்ளது.

மதிப்பீடு

சுருக்கி எழுதுக

Question 1.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
‘பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்’ என்பது ஔவையாரின் அறிவுரை, பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன். இக்கருத்தை விளக்கும் கதைதான் உழைப்பே மூலதனம்’

அருளப்பர் விடைபெற்றுச் செல்லல் :
பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தமது பிள்ளைகளான வளவன், அமுதா, எழிலன் ஆகியோருக்குத் தனித்தனியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அதனைக் கவனமாகப் பாதுகாத்துத் தனக்குத் திருப்பித் தரவேண்டும் என்று கூறிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

பிள்ளைகளின் ஆலோசனை :
“நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றான் வளவன். “நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அமுதா. “நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்” என்றான் எழிலன்.

வளவனின் செயல் :
வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த பணத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தான். உழுது, பண்படுத்திக் காய்கறித் தோட்டம் அமைத்தான். நாள்தோறும் கவனமுடன் பாதுகாத்தான். தோட்டம் முழுவதும் அவரை, வெண்டை , கத்தரி, பாகற்காய் முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தான்.

அமுதாவின் செயல் :
அமுதாவிற்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை கொடுத்த பணத்தில் நாட்டுப் பசுக்கள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அன்போடு பராமரித்தாள். அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.

எழிலனின் செயல் :
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தான். வீட்டில் இருந்தால் தொலைந்து விடும் என்பதால் பணத்தைப் பெட்டியில் வைத்து மூடி, அதனை வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்து வைத்தான்.

வளவனை விசாரித்த அருளப்பர் :
அருளப்பர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். பிள்ளைகளிடம் தான் கொடுத்த பணத்தைப் பற்றி விசாரித்தார். வளவன் வேளாண்மைத் தொழில் செய்ததாகவும் அதிலிருந்து நல்ல வருவாய் வந்ததாகவும் கூறினான். இரண்டு மடங்காக பணம் சேர்ந்துள்ளது என்று கூறி பணத்தைத் தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த தந்தை “உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. இப்பணத்தில் வேளாண்மையைத் தொடர்ந்து செய்” என்றார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

அமுதாவின் பதில்:
அமுதா, தான் மாடுகளை வாங்கிப் பராமரித்ததாகவும் அதில் பணம் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது என்றும் கூறினாள். மிக்க மகிழ்ச்சி. “இந்தப் பணத்தை எனது 6 பரிசாக நீயே வைத்துக் கொள்” என்றார் அருளப்பர்.

எழிலனின் பதில் :
எழிலன் தனக்குக் கொடுத்த பணத்தைப் பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினான். தந்தை ஏமாற்றம் அடைந்தார். அவனது முதிர்ச்சி இன்மையைக் கண்டு மனம் வருந்தினார்.

அருளப்பரின் அறிவுரை :
“பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்” என்றார்.

முடிவுரை :
எழிலன் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தான்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Students can Download 6th Tamil Chapter 6.3 வளரும் வணிகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.3 வளரும் வணிகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 1.
உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
எங்கள் ஊர் – நீலகிரி :
(i) தேயிலை, காபி, குறுமிளகு போன்ற பணப்பயிர்.
(ii) பாகற்காய், பீன்ஸ், பூசணி, மஞ்சள், இஞ்சி போன்ற காய்கறிகள்.
(iii) கேரட், கோஸ், நூக்கல், குடைமிளகாய் போன்றவை.

Question 2.
ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.
Answer:
சிறப்புப் பொருள்கள் :
(i) மதுரை மல்லி
(ii) திருப்பதி லட்டு
(iii) திருநெல்வேலி அல்வா
(iv) திண்டுக்கல் பூட்டு
(v) மணப்பாறை முறுக்கு
(vi) சேலம் மாம்பழம்
(vii) காஞ்சிபுரம் பட்டு
(viii) பழனி பஞ்சாமிர்தம்
(ix) பொல்லாச்சி இளநீர்
(x) ஊட்டி ரோஜா
(xi) காஞ்சிபுரம் இட்லி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி
Answer:
அ) நுகர்வோர்

Question 2.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து
Answer:
இ) வணிகச்சாத்து

Question 3.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
Answer:
அ) பண்டமாற்ற

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 4.
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வண்ண ம் + படங்கள்
ஆ) வண்ண ப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ண மான + படங்கள்
Answer:
அ) வண்ண ம்+ படங்கள்

Question 5.
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த
Answer:
இ) விரிவு + அடைந்த

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) வணிகம் – ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் விற்பதும் வணிகம்.
ஆ) ஏற்றுமதி – பழங்காலத்தில் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இ) சில்லறை தற்போது சில்லறை தட்டுப்பாடு அதிகமாகி விட்டது.
ஈ) கப்பல் – கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்.

குறுவினா

Question 1.
வணிகம் என்றால் என்ன?
Answer:
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

Question 2.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் எனப்படும்.

Question 3.
சிறுவணிகப் பொருட்கள் யாவை?
Answer:
பால், கீரை, காய்கறிகள் போன்றவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

சிறுவினா

Question 1.
சிறுவணிகம், பெருவணிகம் – வேறுபடுத்துக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் 1

Question 2.
பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
Answer:
பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள் :
தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு.

பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள் :
சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபியாவிலிருந்து குதிரைகள்.

சிந்தனை வினா

Question 1.
வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?
Answer:
(i) வணிகப் பொருள்கள் உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரியிடம் செல்கிறது.
(ii) மொத்த வியாபாரியிடமிருந்து சில்லரை வியாபாரியிடம் செல்கிறது.
(iii) சில்லரை வியாபாரியிடமிருந்து நுகர்வோரை(மக்களை) வந்தடைகின்றது.
(iv) இணையத்தின் மூலமாகவும் பொருள்களை மக்கள் பெறுகின்றனர்.
(v) அஞ்சல் வழியிலும் பொருள்களைப் பெறுகின்றனர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Question 2.
உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) பால் வியாபாரம்
(ii) காய்கறி அங்காடி
(iii) செய்தித்தாள் விற்பனையாளர்
(iv) தேநீர் அங்காடி
(v) பல்பொருள் விற்பனையாளர்

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் 2

கூடுதல் வினாக்கள்

Question 1.
வணிகம் குறித்து கூறும் இலக்கியங்கள் யாவை?
Answer:
(i) தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
……………….
உமணர் போகலும். – நற்றிணை – 183
(ii) பாலோடு வந்து கூழொடு பெயரும்………….. – குறுந்தொகை – 23
(iii) பொன்னோடு வந்து கறியொடு பெயரும்………… – அகநானூறு – 149

Question 2.
வணிகத்தின் வகைகளையும் அவ்வகையில் நடைபெறும் வணிகம் பற்றியும் எழுதுக.
Answer:
(i) வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் E வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை – ‘வணிகச்சாத்து’ என்பர்.

(ii) கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம்’ என்றும் ‘பாக்கம்’ என்றும் குறிக்கப்பட்டன.

(iii) தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

(iv) வணிகத்தைத் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்.

Question 3.
இணையவழி வணிகம் பற்றி எழுதுக.
Answer:
(i) கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

(ii) இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம், விலை, சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவன பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை நம் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

(iii) பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம். வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது.

(iv) பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Students can Download 6th Tamil Chapter 6.2 கடலோடு விளையாடு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.2 கடலோடு விளையாடு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Question 1.
பாடப்பகுதியில் உள்ள பாடலை பாடலை இசையோடு பாடிக் காட்டுக.
Answer:
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும் அலை நம்தோழன் – ஐலசா
அருமைமேகம் நமதுகுடை – ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா
விண்ணின் இடி காணும் கூத்து – ஐலசா

Question 2.
உங்களைக் கவர்ந்த நாட்டுப்புறப் பாடல்களை எழுதி வருக.
Answer:
ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாய்ப்போல்
அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாற்போல்
செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாற்போல்
சினந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை
கண்ணான எங்கள் இளந்தாரிமாரை
கண்ணூறு படாமற் காவும் ஐயனாரே
மட்டுருக் காலை அருவாளு மடித்து
மாவிலங்கன் பிடி சீவி யிறுக்கி வெட்டும் பிடியைச் சிறக்கவே
போட்டு வெள்ளித்தகட்டினால் விரல் கூட்ட மிட்டு
வளர்தருவி வெட்டும் இளந்தாரி மாரை நாவூறு வாராமற் காரும் ஐயனாரே.

Question 3.
சொந்தமாக கடல், வானம், மலை ஆகியவற்றைப் பாடல் எழுதிப் பாடுக.
Answer:
கடல் :
அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா
உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்
போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா
பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!
முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!
சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!
முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்
வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

வானம் :
வாழ்வில் இன்பமும் துன்பமும்
உண்டென்பதை உணர்த்த
வானில் சந்திரனையும் சூரியனையும்
உன்னகத்தே வைத்தாய்!
வாழ்வில் தோன்றி மறையும்
நகைச்சுவை போல
வானில் தோன்றி மறையும்
மின்னலைக் காட்டினாய்!
மனிதன் கைமாறு கருதா
உதவிகள் செய்வதற்கு
முகில் கூட்டங்களை வைத்து
மழைபெய்வித்துச் சான்றானாய்!
வானமே! எத்தனைப் பேருக்கு
அடைக்கலம் தந்தாய்!
வாழ்க்கைப் பெட்டகமே நீயேதான்!
வாழ்க வளர்கவே!

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

மலை :
காடுகளை உனதாக்கி
மழையினைத் தந்தாய்!
சுவைமிகு காய்கனிகளை உனதாக்கி
நல் அமுதினைத் தந்தாய்!
அரிய மூலிகைகளை உனதாக்கி
மாமருந்தினைக் தந்தாய்!
பல்வகை உயிரினங்களுக்கும்
இருப்பிடம் தந்தாய்!
மலைமகளே உன்னைப்
பாதுகாப்போம் பராமரிப்போம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கதிர்ச் + சுடர்
ஆ) கதிரின் + சுடர்
இ) கதிரவன் + சுடர்
ஈ) கதிர் + சுடர்
Answer:
ஈ) கதிர் + சுடர்

Question 2.
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மூச்சு + அடக்கி
ஆ) மூச் + அடக்கி
இ) மூச் + சடக்கி
ஈ) மூச்சை + அடக்கி
Answer:
அ) மூச்சு + அடக்கி

Question 3.
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்
Answer:
ஆ) பெருவானம்

Question 4.
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை
Answer:
அ) அடிக்குமலை

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு
Answer:
அ) 4
ஆ) 1
இ) 2
ஈ) 3

குறுவினா

Question 1.
அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
Answer:
மீனவர்கள் அலையைத் தோழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Question 2.
கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
கடல் பாட்டில் முழுநிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

சிறுவினா

Question 1.
‘கடல்’ பாட்டின் பொருளை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள், விரிந்த கடலே பள்ளிக்கூடம்.

(ii) கடல் அலையே தோழன், மேகமே குடை, வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை. விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து, சீறிவரும் புயல் விளையாடும் ஊஞ்சல்.

(iii) பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை. அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை.

(iv) கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு. மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்: வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம். முழு நிலவுதான் கண்ணாடி.

(v) மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம். இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.
Answer:
நான்வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் பாய் பின்னும் தொழில்(வந்தவாசி):
தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் வந்தவாசியில் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான மூலப்பொருள் கோரை. இது ஒருவகைப் புல்லாகும். இது காவிரி ஓடும் கரையோரப் பகுதிகளில் விளைகின்றது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

தமிழகத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முன்பெல்லாம் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட பாய்கள், தற்போது இயந்திரங்கள் மூலம் நெய்யப்படுகிறது.

கோரைப் பிரிப்பது, அதற்கு சாயம் பூசுவது வெயிலில் உலர்த்துவது, நெய்வது, பாய் நெய்த பிறகு அதன் ஓரங்களில் துணி வைத்து தைப்பது, பாய்களைச் சுருட்டிக் கட்டாகக் கட்டுவது போன்ற பல்வேறு கட்டங்களில் பணி நிகழ்கிறது.

பத்தமடைப் பாய் எந்த அளவு புகழ்பெற்றதோ அதே போல் எங்கள் பகுதியான வந்தவாசியில் தயாரிக்கும் பாய்களும் புகழ்பெற்றது. பாயில் பல வகைகள் உள்ளன. அவை கோரைப்பாய், பிரம்புப் பாய், ஈச்சம்பாய், மூங்கில் பாய், நாணல் கோரைப் பாய் என்பனவாம். பாயைத் தரையில் விரித்து நாம் உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம் ஆகும்.

கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முகுது வலி வராமலும் தடுக்கும். பாயில் படுத்து உறங்குவது ஞாபக சக்தியையும் மன அமைதியையும் தருகிறது.

Question 2.
நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?
Answer:
நாட்டுப்புற இலக்கியங்கள், மக்களின் மனவுணர்வுகளைப் பலவாறான கூறுகளில் மிக எளிமையாகவும் இனிமையாகவும் வெளிப்படுத்துபவைகளாக விளங்கும். இவை பெரும்பான்மையும் கல்வி பயிலா மக்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன எனலாம். இப்பாடல்களுக்கு ஆசிரியர் என்று ஒருவர் இல்லை. இவை ஓலைச்சுவடிகளில் பதிவு பெறுவதற்கு முன்பு வாய்மொழியாக ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பதிவு செய்யப்பட்டன.

இந்த இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக அல்லது செவி வழியாக பகிரப்பட்டு வந்தவை ஆகும். ஏட்டில் எழுதப்படாமல் வழிவழியாக தாய் பாட அவளைத்தொடர்ந்து மகள் எனப் பல தலைமுறையாகப் பாடப்படுகிறது. நாட்டுப்புறங்களில் .9 பாடப்பட்டு வளர்ந்தவை. எழுதப்படாமல் வாய்மொழியாக வளர்ந்தமையால் இது வாய்மொழி இலக்கியம் எனப் பெயர் பெற்றது.

இதன் வேறு பெயர்கள் – பாமரர் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், ஏட்டில் எழுதாக் கவிதை, காற்றிலே மிதந்த கவிதை, வாய்மொழிப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்.

வகைகள் – புராணக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஏற்றப்பாட்டு, விதைப்புப் பாட்டு, நடவுப் பாட்டு, அறுவடைப் பாட்டு, நெல் குத்தும் பாட்டு, சுண்ணம் இடிக்கும் பாட்டு தெம்மாங்குப் பாடல்கள்,

கூடுதல் வினாக்கள்

Question 1.
வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?
Answer:
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் 3 பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

Question 2.
நீ அறிந்த நாட்டுப்புறப் பாடல்களின் பெயர்களை எழுதுக.
Answer:
நடவுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, வள்ளைப் பாட்டு, விடுகதைப் பாட்டு, ஏற்றப்பாட்டு, 5 பரிகாசப் பாட்டு, கும்மிப் பாட்டு, கண்ண ன் பாட்டு, ஏசல் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு.

Question 3.
நெய்தல் திணை பற்றி எழுதுக.
Answer:
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

நூல் வெளி
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை ‘வாய்மொழி இலக்கியம்’ என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Students can Download 6th Tamil Chapter 6.1 நானிலம் படைத்தவன் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.1 நானிலம் படைத்தவன்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Question 1.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலுக்கு உரிய நிலங்களை அறிந்து எழுதுக.
Answer:
(i) குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்கள்.
(ii) முல்லை – காடும் காடு சார்ந்த இடங்கள்.
(iii) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்கள்.
(iv) நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ……………..
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை
Answer:
இ) வீரம்

Question 2.
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து
Answer:
ஆ) கல் + எடுத்து

Question 3.
நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….
அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்
Answer:
ஆ) நான்கு + நிலம்

Question 4.
நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடி என்ற
ஈ) நாடு அன்ற
Answer:
அ) நாடென்ற

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Question 5.
கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி
Answer:
ஈ) கலமேறி

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) மாநிலம் – என் நண்பன் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளான்.
ஆ) கடல் – கடல் பரந்து விரிந்துள்ளதால் அதற்குப் பரவை என்று பெயர்.
இ) பண்டங்கள் – தின்பண்டங்களை வீணாக்கக்கூடாது.

நயம் அறிக

Question 1.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. எதுகை :
Answer:
ல்லெடுத்து – மல்லெடுத்த
ராக்கி – பேராக்கி
மாநிலத்தில் – நானிலத்தை
– சூழும்
முக்குளித்தான் – எக்களிப்பு
ண்டங்கள் – கண்டங்கள்
ஞ்சானம் – அஞ்சுவதை

Question 2.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை :
அஞ்சாமை – அஞ்சுவதை

குறுவினா

Question 1.
நான்கு நிலங்கள் என்பன யாவை?
Answer:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை நான்கு நிலங்கள் ஆகும்.

Question 2.
தமிழன் எதற்கு அஞ்சினான்?
Answer:
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.

Question 3.
தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
Answer:
ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்வதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்.

சிறுவினா

Question 1.
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?
Answer:
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை உருவாக்கின விதம் :
(i) தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான்.
(ii) தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.
(iii) ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான்.
(iv) முல்லை , மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்தினான். இதனால் நாகரிக மனிதன் ஆனான்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Question 2.
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
Answer:
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன :
(i) பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.
(ii) பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக்கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.
(iii) ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான்.
(iv) தமிழன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான்.

சிந்தனை வினா

Question 1.
காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனச் சிந்தித்து எழுதுக.
Answer:
நாகரிக வளர்ச்சி :
மனிதன் காடுகளில் தோன்றினான், கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான். அவர்களுடைய பசியைப் போக்க காட்டு விலங்குகளை வேட்டையாடினான். அவற்றைச் சுட்டுத் தின்பதற்காக நெருப்பைக் கண்டறிந்தான். சிக்கிமுக்கிக் கல்லை அதற்குப் பயன்படுத்தினான். தேவதாரு மற்றும் மூங்கில் மரத்தைக் கொண்டு நெருப்பு மூட்டக் கற்றுக் கொண்டு உணவுப் பொருட்களைச் சுட்டுத் தின்றான். பிறகு கல், வெண்கலம், இரும்பு என வகை வகையான கருவிகளைக் கண்டறிந்தான். விவசாயத்திற்கு அக்கருவிகளைப் பயன்படுத்தினான்.

இரை கிடைக்கும் இடத்தைத் தேடி இடம் விட்டு இடம் பெயர்ந்தான். ஓரிடத்தில் வீடு கட்டி வாழ்ந்து விவசாயத்தின் மூலம் உணவு பெறுவது தொடங்கி ஆடு, மாடுகளைப் பழக்கி உழவுத் தொழில் செய்தான். மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொண்டான். படகுகள் செய்து ஆறு, கடல் ஆகிய நீர்நிலைகளில் பயணித்தான். பருத்தி, ஆட்டு மயிர்கள் கொண்டு ஆடை உருவாக்கினான். இவ்வாறு அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவனே உருவாக்கினான். சிறு சிறு குடியிருப்புகள் உருவாயின.

இது ஒரு கிராமம் தோன்றுவதற்குத் தொடக்கமாக அமைந்தது. இச்சிறு கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக வளர்ச்சி பெற்றன. நகரங்கள் வந்தபிறகு நாகரிகம் வந்தது. தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள மொழி பயன்பட்டது.

இவ்வாறு வளர்ந்த மனிதன் அறிவியல் வளர்ச்சியின் மூலம் பல வகையில் முன்னேறினான். புதிய புதிய இயந்திரங்கள் மக்களின் வேலைச் சுமையைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தியது. மனிதன் ஓய்வு பெறக் கற்றுக் கொண்டான். இவ்வாறு மனிதன் படிப்படியாக வளர்ந்தான்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
முடியரசனின் இயற்பெயர் யாது?
Answer:
முடியரசனின் இயற்பெயர் துரைராசு.

Question 2.
முடியரசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
முடியரசன் இயற்றிய நூல்கள் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை.

Question 3.
முடியரசன் எவ்வாறு பாராட்டப் பெற்றார்?
Answer:
முடியரசன் திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றார்.

பிரித்து எழுதுக.

1. கல்லெடுத்து – கல் + எடுத்து
2. மல்லெடுத்த – மல் + எடுத்த
3. திண்டோள் – திண்மை + தோள்
4. பெருவெளி – பெருமை + வெளி
5. எக்களிப்பு – எ + களிப்பு
6. கலமேறி – கலம் + ஏறி
7. முத்தெடுத்தான் – முத்து + எடுத்தான்
8. நானிலம் – நான்கு + நிலம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

நூல் வெளி
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாரட்டப்பெற்றவர். இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Students can Download 6th Tamil Chapter 5.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்ற அதிகாரங்களில் உள்ள திருக்குறள்காரன் ஐந்தனைப் பொருளுடன் எழுதி வந்து வகுப்பில் பொருளுடன் பகிர்க
Answer:
விருந்தோம்பல் : விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவு அல்லது பொதுவாக, உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பது. அதாவது, விருந்தினர், அந்நியர்களை வரவேற்று விருந்தோம்பி மகிழ்விப்பதாகும்.

1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தேம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள் : வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம் வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆகும்.

2. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள் : தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

3. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள் : நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

கள்ளாமை : தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமையை அவரறியாமல் கைக்கொள்ளவோ வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும்.

1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பொருள் : பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

2. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
பொருள் : அருளைப் பெரிதாகக் கருதி அன்புடையவராய் நடத்தல் பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை .

3. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
பொருள் : நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும். கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
திருக்குறள் உலகப் பொதுமறை எனப்படுவது ஏன்? வகுப்பறையில் பேசுக.
Answer:
திருக்குறள் உலகப்பொதுமறை :
(i) திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘தமிழுக்குக் கதி’ எனச் சிறப்பிக்கப்படுவது. (க-கம்பராமாயணம், தி – திருக்குறள்) நம் தாய்மொழியான தமிழ்மொழிக்கு மணிமகுடம் போன்றது. புகழ்பெற்ற இலக்கியமாகும். திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ்மொழியில் இயற்றப்பட்ட நூலாகும். மேலும், திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

(ii) இந்நூல் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்துள்ளமையால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.

(iii) உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது. இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால்
ஆ) நம் வீடு மாறினால்
இ) நாம் நான்கு வரவேற்றால்
ஈ) நம் முகவரி மாறினால்
Answer:
அ) நம் முகம் மாறினால்

Question 2.
நிலையான செல்வம் …………………..
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
Answer:
இ) ஊக்கம்

Question 3.
ஆராயும் அறிவு உடையவர்கள் ………………. சொற்களைப் பேசமாட்டார்.
அ) உயர்வான
ஆ) விலையற்ற
இ) பயன்தராத
ஈ) பயன்உடைய
Answer:
இ) பயன்தராத

Question 4.
பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பொருளுடைமை
ஆ) பொருளுடைமை
இ) பொருள்+உடைமை
ஈ) பொருள்+ளுடைமை
Answer:
இ) பொருள்+உடைமை

Question 5.
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) உள்ளவது எல்லாம்
ஆ) உள்ளுவதெல்லாம்
இ) உள்ளுவத்தெல்லாம்
ஈ) உள்ளுவதுதெல்லாம்
Answer:
ஆ) உள்ளுவதெல்லாம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 6.
பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) பயனிலா
ஆ) பயன்னில்லா
இ) பயன் இலா
ஈ) பயன் இல்லா
Answer:
அ) பயனிலா

நயம் அறிக

Question 1.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
அடி எதுகை : உள்ளுவது – தள்ளினும்
அடி மோனை : உள்ளுவது – உயர்வுள்ளல்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல.
Answer:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
Answer:
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

“ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திசூடி, இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

1. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.

2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

3. சொல்லுக சொல்லில் பயனுடைய
சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்.
Answer:
2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க,

வீட்டிற்குள் வந்த வேலனை தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா, அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக்கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். “நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன்” என்றான்.

1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
Answer:
2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

குறுவினா

Question 1.
எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?
Answer:
உண்ணப்படும் பொருள் அமிழ்தமே ஆனாலும் தன்னை நோக்கி வந்த விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

Question 2.
எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்?
Answer:
பிறருடைய பொருளை அவர் அறியா வகையில் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பதுகூடத் தீமையானது.

Question 3.
ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?
Answer:
தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழி கேட்டுக் கொண்டு செல்லும்.

Question 4.
நாம் எத்தகைய சொற்களைப் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
Answer:
நாம் பயனுடைய சொற்களை மட்டும் பேச வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
அனிச்சமலர் குறித்து வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும். அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.

Question 2.
அழியும் செல்வம் எது?
Answer:
களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்து விடும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 3.
ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் மூலம் கூறப்பட்ட கருத்துகள் யாவை?
Answer:
(i) ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.
(ii) தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக் கொண்டு செல்லும்.
(iii) தண்ணீ ரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப் பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.
(iv) எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையாவிட்டாலும் எண்ணமே மனநிறைவைத் தருக.

Question 4.
பயன் தராத சொற்களைப் பேசாதவர் யார்?
Answer:
நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

Students can Download 6th Tamil Chapter 5.5 மயங்கொலிகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

Question 1.
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க
Answer:
1. அலகு – பறவை மூக்கு
அளகு – பெண் பறவை
அழகு – வனப்பு

2. அலை – திரை, திரி
அளை – தயிர்
அழை – கூப்பிடு

3. இலை – தழை
இளை – மெலி
இழை – நூல்

4. ஒலி – ஓசை
ஒளி – வெளிச்சம்
ஒழி – கெடு

5. கலை – வித்தை
களை – நீக்க
கழை – மூங்கில்

6. கிலி – அச்சம்
கிளி – ஒரு பறவை
கிழி – துண்டாக்கு

7. தலை – சிரசு
தளை – கட்டுதல்
தழை – இலை

8. தால் – நாக்கு
தாள் – கால், பாதம்
தாழ் – பணி

9. வலி – வலிமை
வளி – காற்று
வழி – பாதை

10. வால் – விலங்குகளின் வால் பகுதி
வாள் – கத்தி
வாழ் – உயிர் வாழ்.

Question 2.
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக் குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சிரம் என்பது ………………. (தலை / தளை )
2. இலைக்கு வேறு பெயர் ……………… (தளை / தழை)
3. வண்டி இழுப்பது ……………… (காலை/காளை)
4. கடலுக்கு வேறு பெயர் ……………….. (பரவை / பறவை)
5. பறவை வானில் ………….. (பறந்தது/பரந்தது)
6. கதவை மெல்லத் …………… திறந்தான் / திரந்தான்)
7. ………………. வீசும். (மனம்/மணம்)
8. புலியின் ………………. சிவந்து காணப்படும். (கன்/கண்)
9. குழந்தைகள் … …………………… விளையாடினர். (பந்து/பன்து)
10. வீட்டு வாசலில் …………… போட்டனர். கோலம்/கோளம்)
Answer:
1. தலை
2. தழை
3. காளை
4. பரவை
5. பறந்தது
6. திறந்தான்
7. மணம்
8. கண்
9. பந்து
10. கோலம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக

Question 1.
எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
Answer:
என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

Question 2.
தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
Answer:
தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

Question 3.
வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
Answer:
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

பொருள் வேறுபாடறிந்து எழுதுக

1. வாசலில் போடுவது …………………..
2. பந்தின் வடிவம் …………….
Answer:
1. கோலம் – (அழகு புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம்).
2. கோளம் – (உருண்டை)

மொழியை ஆள்வோம்

பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க.

முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.

வினாக்கள் :
1. முகிலன் எதற்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்றான்?
2. முகிலனின் தாத்தா வீட்டில் என்ன இருந்தது?
3. முகிலனின் வழக்கம் என்ன?
4. முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்?
5. முகிலன் தன் தாத்தா பாட்டியோடு எவ்விழாவைக் கொண்டாடுவான்?

சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக

1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்.
3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்.
4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்.
Answer:
(விடை: 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

உரையாடலை நிரப்புக

செல்வன் : வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?
மாமா : நான் நலமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?
செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.
மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?
செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள்.
மாமா : அப்படியா. நீ எப்படிப் படிக்கிறாய்?
செல்வன் : நன்றாகப் படிக்கிறேன் மாமா.
மாமா : நாளை சுதந்திர தினவிழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?
செல்வன் : ஆம் மாமா. நான் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
மாமா : வெற்றி பெற வாழ்த்துகள்.
செல்வன் : நன்றி மாமா!

நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக

இன்பம் கொடுப்பது நட்பு
மகிழ்ச்சி அளிப்பது நட்பு
கைக் கொடுப்பது நட்பு
ஊக்கம் அளிப்பது நட்பு.

மொழியோடு விளையாடு

Question 1.
கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா) கல் + ல் + உண்டு = கல்லுண்டு, கல் + ல் + இல்லை = கல்லில்லை.
Answer:
1. பல் + ல் + உண்டு = பல்லுண்டு
பல் + ல் + இல்லை = பல்லில்லை .

2. மின் + ன் + உண்டு = மின்னுண்டு
மின் +ன் + இல்லை = மின்னில்லை

3. மண் + ண் + உண்டு = மண்ணுண்டு
மண் + ண் + இல்லை = மண்ணில்லை.

கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 1

சுற்றுலாத்தலங்கள் :
1. கன்னியாகுமரி
2. தஞ்சாவூர்
3. மாமல்லபுரம்
4. ஏற்காடு
5. கல்லணை
6. சுருளி
7. குற்றாலாம்
8. மதுரை
9. செஞ்சி
10. ஊட்டி

செயல் திட்டம்

Question 1.
கதிரவன் உதிக்கும் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 2

Question 2.
உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்திலுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் குறித்த படத்தொகுப்பைச் செய்தியுடன் சேகரிக்க.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 3
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் 4
விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது , செஞ்சி. இது, மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இதன் கிழக்கே சாரங்கபாணி ஆறு உள்ளது. சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட செஞ்சி, தொன்மைச் சிறப்புகள் பல நிறைந்தது. பெருங் கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் பல இங்கு உள்ளன. செஞ்சிக்குள் பல சிறப்பு பெற்ற ஊர்கள் காணப்படுகின்றன. தொண்டூர், திருநாதர்குன்று,

பனமலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில், செஞ்சியர்கோன் என்ற அரசன், இவ்வூரில் உள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி எனும் மூன்று மலைகளையும் சேர்த்து கோட்டை ஒன்றை எழுப்பத் திட்டமிட்டான் செஞ்சிக்கோட்டையும் இக்காலத்தில் அமைக்கப்பட்டதுதான்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்குப்பின், செஞ்சி நாயக்கர்கள் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, பொ.ஆ. 16-ம் நூற்றாண்டில் தங்களது ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர், செஞ்சிக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டையானது, பொ.ஆ. 1677-ல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. இக்கோட்டை தமிழகத்திலேயே தலைசிறந்த கோட்டை ஆகும்.

தமிழகத்தில் இன்றைக்கும் முழமையான அமைப்பில் காணப்படக்கூடிய ஒரு கோட்டையாகத் திகழ்கிறது. இக்கோட்டைக்குள் ஏழுநிலை மாடங்கள் நிறைந்த கல்யாண மகால், வெங்கட்ரமணர் கோயில், தர்பார், களஞ்சியங்கள், யானைக்குளம், அரச குடும்பத்தினர் குடியிருப்புகள், சதத்துல்லாகான் மசூதி, தேசிங்குராஜன் சமாதி எனப் பல பகுதிகள் உள்ளன.

பீரங்கி மேடையும், அதன்மேல் காணப்படும் பீரங்கியும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோட்டைவாயில்களும், அதன் படிக்கட்டுகளும், அதன் உள்கட்டமைப்புகளும் * மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரைவட்டவடிவில், வளைவு வளைவாக கருங்கற்களைக் கொண்டு கோட்டையின் அரண் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை மறைந்திருந்து தாக்கவும், உள்ளே இருப்பவர்கள் தக்க பாதுகாப்புடன் இருக்கவும் மிகுந்த கவனத்துடன் இக்கட்டுமானம் அமைத்துள்ளது காண்போர் அனைவராலும் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

தமிழ்ச்சொல் அறிவோம்
1. நல்வரவு – Welcome
2. சிற்பங்கள் – Sculptures
3. சில்லுகள் – Chips
4. ஆயத்த ஆடை – Readymade Dress
5. ஒப்பனை – Makeup
6. சிற்றுண்டி – Tiffin