Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு

மதிப்பீடு 

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது?
Answer:
அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு:
“செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு

நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் கிராமப் பஞ்சாயத்து தலைவர்.

Question 2.
முருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்?
Answer:
“நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள்.

அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள்.

ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தான் பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்” என்று சொன்னார் முருகேசன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு

Question 3.
விவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன?
Answer:
“முதியவரான விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பம்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது.

விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்” என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை அரசி வழங்கினார்.

சிந்தனை வினா.

நண்பர்கள் உன்னை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். அவர்கள் சென்றபிறகு, பணப்பை ஒன்று நாற்காலியில் இருப்பதைக் காண்கிறாய். இந்நிலையில் நீ செய்யப்போவது என்ன ?
அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்
ஆ) உரியவரே தேடிக்கொண்டு வரட்டும் எனக் காத்திருப்பேன்.
இ) நான் பார்த்ததால், எனக்குத்தான் உரியது என வைத்துக்கொள்வேன்.
Answer:
அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு

கற்பவை கற்றபின்

Question 1.
நேர்மையால் உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 2.
நேர்மை நிறைந்த தீர்ப்பு கதையை நாடகமாக நடித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 6.1 உழவுப் பொங்கல் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 6.1 உழவுப் பொங்கல்

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
வையகம் என்பதன் பொருள்
அ) ஊர்
ஆ) வயல்
இ) உலகம்
ஈ) கிராமம்
Answer:
இ) உலகம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 2.
நலனெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) நலன் + எல்லாம்
ஆ) நல + னெல்லாம்
இ) நலன் + னெல்லாம்
ஈ) நலம் + எல்லாம்
Answer:
அ) நலன் + எல்லாம்

Question 3.
நிறைந்தறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) நிறைந்து + அறம்
ஆ) நிறைந்த + அறம்
இ) நிறை + அறம்
ஈ) நிறை + தறம்
Answer:
அ) நிறைந்து + அறம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 4.
‘இன்பம்’ – இச்சொல்லுக்குரிய எதிர்சொல் ……………
அ) மகிழ்ச்சி
ஆ) களிப்பு
இ) கவலை
ஈ) துன்பம்
Answer:
ஈ) துன்பம்

ஆ. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக
………………….,  …………………………

………………….,  ………………………..
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல் - 3

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

………………….,  …………………………

………………….,  ………………………..

Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல் - 2

ஈ. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

………………….,  …………………………

………………….,  ………………………..
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல் - 1

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் எது?
Answer:
அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில்.

Question 2.
உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?
Answer:
(i) எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது.
(ii) பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 3.
பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?
Answer:
பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவு பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்க வேண்டுமென கவிஞர் கூறுகிறார்.

ஊ. சிந்தனை வினா.

‘உழவர், சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும்’. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
Answer:
உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நாம் உணவின்றிதான் வாழ வேண்டும். உழவர்கள், பயிர்களை விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமைகிறது. எனவே, உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

கற்பவை கற்றபின்

Question 1.
உழவுத் தொழிலின் பெருமையை உணர்ந்து போற்றுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 2.
பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 3.
பாடலிலுள்ள நயங்களைப் பாராட்டுக.
எதுகை நயம் :
பொங்குக – எங்கணும்
வு – பம்
வு – பகு
ங்கம் – இங்கிதன்
வே – உவை
ழையும் – வாழி

மோனை நயம் :
பொங்குக – புதுவனம்
ங்கணும் – ர்த்தொழில்
ணவு – யிரோ
ணமும் – யிர்கள்
ழவும் – டையும்
ங்கம் – தானியம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

இயைபு :
பொங்குகவே – தங்குகவே
உணவுதரும் – அணியவரும்
உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம்

Question 4.
உழவு நடக்கும் இடத்திற்குச் சென்று, செய்தி திரட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
விழலாகும் என்பதன் பொருள்
அ) வீணாகும்
ஆ) எங்கும்
இ) பெருமை
ஈ) மகிழ்ந்து
Answer:
அ) வீணாகும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 2.
நாமக்கல் வெ. இராமலிங்கனார் ………….. என்றும் போற்றப்படுகிறார்.
அ) தேசிய கவி
ஆ) காந்தியக் கவிஞர்
இ) உவமைக் கவிஞர்
ஈ) புரட்சிக் கவிஞர்
Answer:
ஆ) காந்தியக் கவிஞர்

Question 3.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் ……………
அ) பாரதிதாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ண தாசன்
ஈ) நாமக்கல் வெ. இராமலிங்கனார்
Answer:
ஈ) நாமக்கல் வெ.இராமலிங்கனார்

பாடல் பொருள்

உழவுத்தொழிலின் மேன்மையை இப்பாடல் விளக்குகின்றது. உழவின் சிறப்பால் பொங்குகின்ற பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் எனக் கூறுகின்றது. எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற தொழில் ஏர்த்தொழிலே. உணவுப்பொருள்கள் இல்லையென்றால் நாம் வாழ்வது அரிது. பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும். மற்ற தொழில்களைக் கற்றுக்கொண்டாலும், பயிர்த்தொழில் இல்லையெனில் எல்லாம் வீணாகும். தங்கம், வெள்ளி போன்றவற்றை நாம் உண்ண முடியாது. உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமையும். இன்பத்தைத் தருவதும் உழவுத்தொழிலே ஆகும். பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம்.

நூல் குறிப்பு

உழவுப் பொங்கலின் சிறப்பை விளக்கும் இப்பாடலை இயற்றியவர், நாமக்கல் வெ. இராமலிங்கனார். அவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து இப்பாடல் எடுத்தாளப் பெற்றுள்ளது. இந்திய விடுதலை குறித்தும், காந்தியடிகள் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளார். காந்தியக் கவிஞர் என்றும் போற்றப்படுகிறார். இவருடைய ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்னும் பாடல் வரி மிகவும் புகழ்பெற்றதாகும். ‘தமிழன் என்றோர் இனமுண்டு’ என்றும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் என்றும் நிலைத்திருப்பவை. இவர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 5.4 இணைப்புச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘அதனால்’ என்பது ………..
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) உரிச்சொல்
ஈ) இணைப்புச்சொல்
Answer:
ஈ) இணைப்புச் சொல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 2.
கருமேகங்கள் வானில் திரண்டன ………………..மழைபெய்யவில்லை .இத்தொடருக்குப் பொருத்தமான இணைப்புச்சொல்
அ) எனவே
ஆ) ஆகையால்
இ) ஏனெனில்
ஈ) ஆயினும்
Answer:
ஈ) ஆயினும்

Question 3.
கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ………… அவன் நண்ப ன் மிதிவண்டியே போதும் என்றான்.
அ) அதனால்
ஆ) ஆதலால்
இ) இருந்தபோதிலும்
ஈ) ஆனால்
Answer:
ஈ) ஆனால்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

ஆ. கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக.

Question 1.
நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்).
Answer:
நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம்.

Question 2.
வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை . (ஆனால்)
Answer:
வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை.

Question 3.
பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்)
Answer:
பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 4.
முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்)
Answer:
முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில் அவனுக்கு உடல்நலமில்லை.

Question 5.
அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே)
Answer:
அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. ஆகவே கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

இ. கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச்சொற்களை இணைத்து எழுதுக.

(ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, ஆகவே, பிற) அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. …………………….. , சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. …………………….., அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. …………………….., அதனைக் கண்டு…………………….. விலங்குகள் அஞ்சின………………………, அது தனியாகக் குகையில் வசித்தது. …………………….. அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. …………………….. குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன்…………………….. விலங்குகள் அஞ்சியோடின………………………, அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா?
Answer:
(ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, ஆகவே, பிற)

அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. ஆனால், சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. ஆகையால், அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. எனவே, அது தனியாகக் குகையில் வசித்தது. ஆனால் அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. அதனால் குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. ஏனெனில், அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா?

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
இணைப்புச் சொற்கள் எதற்குப் பயன்படுகின்றன?
Answer:
தங்கு தடையின்றிப் பேசவும், எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 2.
இணைப்புச்சொற்களுள் நான்கு எழுதுக.
Answer:

  • அதனால்
  • ஆகையால்
  • அப்படியானால்
  • ஆதலால்

Question 3.
இணைப்புச்சொற்களைப் பயன்படுத்தி, எவையேனும் இரண்டு தொடர்களை எழுதுக.
Answer:

  • கண்ணன் வந்துவிடுகிறேன் என்றான். ஆனால், இன்னும் வரவில்லை.
  • நான் தாய்நாட்டிலேயே பணியாற்ற விரும்புகிறேன். ஆகையால், வெளிநாடு செல்லமாட்டேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
புத்தகப் பூங்கொத்து கதையொன்றில் இடம்பெற்றிருக்கும் இணைப்புச்சொற்களைக் கண்டறிக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Question 2.
வீட்டிலோ பள்ளியிலோ பிறர் பேசும்போது, என்னென்ன இணைப்புச்சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பட்டியலிடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

கூடுதல் வினா

விடையளி :

Question 1.
இணைப்புச்சொற்கள் பற்றி எழுதுக.
Answer:
தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர்.

மொழியை ஆள்வோம்

அ. கேட்டல்

Question 1.
நாள்தோறும் வழிபாட்டுக் கூடத்தில் சொல்லப்படும் திருக்குறளைக் கேட்டறிக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 2.
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் கட்டடக்கலைகள் பற்றிய செய்திகளைக் கேட்டு அறிந்து கொள்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

ஆ. பேசுதல் :

Question 1.
நீங்கள் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்து 5 மணித்துளி பேசுக.
Answer:
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் :
அனைவருக்கும் வணக்கம்!
நான் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மதுரை. இம்மதுரை தூங்கா நகர், கோவில் நகர், தமிழர் நாகரிகத் தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்சு, தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் சிறப்பிக்கப் பெறுகிறது.

மதுரை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது மீனாட்சியம்மன் கோவில். இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் எனக் காட்சிப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மதுரை நகரின் நடுவில் அமைந்து மதுரைக்கே அழகூட்டுகிறது. இராமர், லட்சுமணர், இந்திரன், தேவர்கள் போன்றவர்களால் வழிபடப்பட்ட பெருமைக்குரியது. மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பகுளம் உள்ளது. இக்குளத்திலிருந்து திருமலை நாயக்கர் மகாலுக்குச் செல்வதற்குச் சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

திருமலை நாயக்கர் மகால் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இது கலைநயத்தில் ‘தாஜ்மகால்’ போன்றது. அந்த மகாலில் மிகச்சிறந்த ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அமைந்துள்ள தூணின் உயரம் 82 அடி, சுற்றளவு 19 அடி ஆகும்.

அடுத்ததாக நாங்கள் பார்த்தது காந்தி மியூசியம். இவ்விடம் இராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த இடம் ஆகும். இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய ஆடைகள், கடைசியாக அவர் அணிந்திருந்த உடை ஆகியவை இடம்பெற்றுள்ளன. நல்ல நூலகம் ஒன்றும் அமைந்துள்ளது.

மதுரைக்கு அருகே திருப்பரங்குன்றம் சென்றோம். இது ஒரு குகைக் கோவில். ஒரே கல்லில் குடைந்த கோவில் ஆகும். மதுரையில் இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன.

Question 2.
நற்பண்புகள் கொண்ட சான்றோர் ஒருவரைப்பற்றி 5 மணித்துளி பேசுக.
Answer:
அனைவருக்கும் காலை வணக்கம்!
நான் பாலம் என்ற அமைப்பை நடத்திவரும் ‘பாலம் கல்யாணசுந்தரம்’ அவர்களைப் பற்றிக் கூறவிருக்கிறேன்.

இவர் திருநெல்வேலி மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940ஆம் ஆண்டில் பிறந்தவர். தமிழ்மீது பற்றுக் கொண்டவர். கல்லூரியில் வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினாலும் அவர் தமிழையே படித்தவர்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவர் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காகச் செலவிட்டுத் தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் உணவு பரிமாறுபவராக வேலை பார்த்தவர். அவர் ஈட்டிய மொத்த வருவாயைக் கொடுத்து வரலாறு படைத்தவர்.

இவரைப் போன்று உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த எவரும் செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 6.5 மில்லியன் டாலர் (இந்தியப் பணம் 30 கோடி) பரிசாகப் பெற்றவர். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

குடும்பப்பங்காகக் கிடைத்த ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்தைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து மகிழ்வுற்றவர். ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்து கொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதைவாசியாக வாழ்ந்தவர்.
தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் அவரைப் போற்றுவோம். அவரைப் போல நாமும் நற்பண்புகளுடன் வாழ்வோம் என்று உறுதியேற்போம்.

இ. படித்தல் :

Question 1.
திருக்குறளைப் பொருள் விளங்கப் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே திருக்குறளைப் பொருள் விளங்கப் படிக்க வேண்டும்.

Question 2.
புத்தகப் பூங்கொத்தில் விளையாட்டுகள் தொடர்பான கதைகளைப் படித்துக் காட்டுக
Answer:
மாணவர்கள் தாங்களாகவே புத்தகப் பூங்கொத்தில் விளையாட்டுகள் தொடர்பான கதைகளை படிக்க வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

ஈ. எழுதுதல்.

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:

  • பண்பு உடையவராக வாழ்தல் நல்வழியாகும்.
  • திருக்குறள் “உலகப்பொதுமறை” என்றழைக்கப்படுகிறது.
  • கங்கை கொண்ட சோழபுரம் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.

Question 2.
தொடரில் அமைத்து எழுதுக.
1. வெற்றி – ………………………………….
2. நாகரிகம் – ………………………………….
3. உழவுத்தொழில் – ………………………………….
4. கலையழகு – ………………………………….
Answer:

  1. வெற்றி – குமரன் மல்யுத்த போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி வாகை சூடினான்.
  2. நாகரிகம் – தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு.
  3. உழவுத்தொழில் – கண்ணன் தன் விடாமுயற்சியால் உழவுத்தொழிலில் வளம் பெருக்கினான்.
  4. கலையழகு – கண்ணன் வரைந்த ஓவியம் கலையழகின் மொத்த உருவமாகும்.

3. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத்திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான். புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப்பெற்றான். நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை.

போர்க்களத்தில் வீறுகொண்டு செம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப்படையே ஆகும். வலிமை சான்ற அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப்பதவிக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 1.
நால்வகைப் படைகள் யாவை?
Answer:
தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை.

Question 2.
நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது எது?
Answer:
நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை.

Question 3.
மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது?
Answer:
மாற்றார் என்னும் சொல்லின் பொருள் பகைநாட்டரசர் (பகைவர்).

Question 4.
உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 5.
காலாட்படை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
கால் + ஆள் + படை.

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. மக்களுக்கு உரிய பண்பில்லாதவர் ……………….. போன்றவர் என வள்ளுவர் கூறுகிறார்.
2. கங்கை கொண்ட சோழபுரம் ……………….. என்று புலவர்களால் போற்றப்பட்டது.
3. கம்பைக் குறிக்கும் வீரக்கலை ……………….. ஆகும்.
Answer:
1. மரத்தைப்
2. கங்காபுரி
3. சிலம்பாட்டம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

5. பிறமொழிச் சொற்களையும் பேச்சுத்தமிழையும் நீக்கிச் சரியாக எழுதுக.

1. டூமாரோ ஈவினிங் என் ஸிஸ்டர் ஊருக்குப் போவா.
Answer:
நாளை மாலை என் தங்கை ஊருக்குச் செல்வாள்.

2. ஷேர் ஆட்டோவில் பைவ் பாசஞ்சர்ஸ் இருக்காங்க.
Answer:
பகிர் தானியங்கியில் ஐந்து பயணிகள் இருக்கிறார்கள்.

3. என் வீட்டில் வாசிங் மிஷின் ரிப்பேராக இருக்கு.
Answer:
என் வீட்டில் சலவை இயந்திரம் பழுதாகி இருக்கிறது.

Question 6.
பொருத்துக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 13
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 1

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 7.
பாடலை நிறைவு செய்க.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 14
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Question 8.
கீழ்க்காணும் குறட்பாக்களிலுள்ள சொற்களைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 15
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 3

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

நிறுத்தக்குறிகளை அறிந்துகொள்வோம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 4

மொழியோடு விளையாடு

Question 1.
சுழலட்டையைப் பயன்படுத்திக் குறிப்புகளுக்கு விடை எழுதுக
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 5
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 16
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 6

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 17
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 18
1. விதையில் ஓரெழுத்தை நீக்கி, வேறோர் எழுத்தைச் சேர்க்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 7

2. சபையில் ஓரெழுத்தை நீக்கி, வேறொர் எழுத்தைச் சேர்க்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 8

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்
3.விலையில் ஓரெழுத்தை நீக்கி, வேறொர் எழுத்தைச் சேர்க்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 9

4.ஆசையில் ஓரெழுத்தை நீக்கி, வேறொர் எழுத்தைச் சேர்க்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 10

5. கடையில் ஓரெழுத்தை நீக்கி, வேறொர் எழுத்தைச் சேர்க்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 11

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள் - 12
1. பிற உயிரினங்களின் மீது அன்பு காட்டுவேன்
2. விளையாட்டு, உடலுக்கும் மனத்திற்கும் நல்லது என அறிந்துகொண்டேன்.
3. நீர்த்தேக்கங்கள், வேளாண்மைக்கு உயிர் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அறிந்து கொள்வோம்

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடையவாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.4 இணைப்புச்சொற்கள்

செயல் திட்டம்

தமிழர் கலைகள் குறித்துச் செய்தித்தாளில் வரும் படங்களையும் செய்திகளையும் தொகுத்து வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
முதலாம் இராசேந்திர சோழனை ஏன் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்?
Answer:
முதலாம் இராசேந்திர சோழன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்ததன் அடையாளமாகத்தான் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

Question 2.
சிங்கமுகக் கிணறு – குறிப்பு எழுதுக.
Answer:
சிங்க வடிவத்தில் சிங்கமுகக் கிணறு அமைந்திருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றில் ஒரு வாயில் இருக்கும்.

Question 3.
சோழ கங்கப் பேரேரிக்கு நீர் எங்கிருந்து வருகிறது?
Answer:
மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவு வரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைத்தனர். சோழ கங்கப் பேரேரி இன்றி பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலுள்ள வாயில்களின் பெயர்களைக் கூறுக.
Answer:

  • தெற்குப் பக்க நுழைவாயில்
  • வடக்குப் பக்க நுழைவாயில்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

சிந்தனை வினா.

Question 1.
ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் என்ன ஆகும்? கருத்துகளைக் குழுவில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவன் 1 : ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் மழைநீரைத் தேக்கி வைக்க முடியாது.
மாணவன் 2 : நிலத்தடி நீரின்றி மக்கள் துன்பப்படுவர்.
மாணவன் 3 : விவசாயத்திற்குப் போதுமான நீர் கிடைக்காது.
மாணவன் 1 : நீர்நிலைகள் மண் மூடிய நிலையில் உள்ளதால், மழைக்காலங்களில் வரும் மழைநீர் சிறிதளவே தேங்கும். உபரிநீர் வீணாகக் கடலில் கலந்துவிடும்.
மாணவன் 2 : கோடைக்காலங்களில் நீர்நிலைகளைத் தூர்வாரி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

கற்பவை கற்றபின்

Question 1.
காலம் வென்ற கங்கை கொண்ட சோழபுரம் என்ற பாடப் பகுதியைச் சரியான ஒலிப்போடும் நிறுத்தக்குறிகளோடும் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே சரியான ஒலிப்போடும் நிறுத்தக்குறிகளோடும் படிக்க வேண்டும். கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அக்கோவிலிலுள்ள சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றியும் வகுப்பறையில் கலந்துரையாடுக. கலந்துரையாடுதல் (சிற்பங்களின் சிறப்புகள்)

மாணவன் 1 : நீ சென்று வந்த கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பற்றிக் கூறுகிறாயா?
மாணவன் 2 : கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. ஆனால் அக்கோயிலைவிட உயரம் குறைவானது.
மாணவன் 1 : அப்படியா?
மாணவன் 2 : ஆமாம். அதற்கடுத்து செங்கற்களால் கட்டப்பட்ட நந்திச்சிலை இருந்தது. இக்கோவிலின் வாயில், தரைமட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் இருப்பது தனிச்சிறப்பாகும். அது மட்டுமா? தூண்களிலும் கோவில்களிலும் அழகான சிற்பங்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தின.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

மாணவன் 3 : நான்கூட இக்கோவிலுக்கு ஒருமுறை சென்றுள்ளேன். கோவிலின்
வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபக்கங்களிலும் உள்ள கலைச் செல்வி மற்றும் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி ஆகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை என்று என் அப்பா கூறியுள்ளார்.
மாணவன் 2 : இக்கோவிலில் சிங்க முகக் கிணறு ஒன்று உள்ளது.
மாணவன் 1 : சிங்க முகக் கிணறா? அது என்ன? மாணவன் 2 : கிணறு சிங்கம் வடிவத்திலிருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றிலே ஒரு வாயில் இருக்கும். சிங்க வடிவத்தில் இருப்பதால் சிங்கமுகக் கிணறு என்ற பெயர் பெற்றது.

மாணவன் 1 : சோழர்களின் சிற்பக்கலைக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இந்தியச் சிற்ப வரலாற்றில் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்கள் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளன. கங்கை கொண்ட சோழபுரம் சிற்பக்கூடமாக அமைந்துள்ளது. இச்சிறப்புகளால் கங்கை கொண்ட சோழபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
மாணவன் 1 : இது நம் தமிழகத்திற்கே பெருமையன்றோ ?
மாணவர்கள் : ஆமாம். பெருமைதான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

Question 2.
சுராவின் – தமிழ் உரைநூல் (முழு பருவம்) – 5 ஆம் வகுப்பு நீங்கள் கண்டுகளித்த சுற்றுலா இடங்களின் சிறப்புகளைப் பட்டியலிடுக. நான் கண்டுகளித்த சுற்றுலாத்தளம் – பிச்சாவரம் :

  • பிச்சாவரத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அலையாத்தி காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடாகும்.
  • சிறுசிறு தீவுக்கூட்டங்கள், படகுக் குழாம், எழில்மிகு கடற்கரை, மாங்குரோவ் செடிகளைக் கொண்ட காடுகளின் ஊடே படகுப் பயணம் இவை மிகவும் சிறப்பானது.
  • கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள கால்வாய்களையும் காடுகளையும் பார்வையிட படகு மூலம் சென்று பார்த்தேன்.
  • இங்கு உயர்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதி நவீன தொலைநோக்கிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியைப் பார்த்தேன்.
  • இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து வியந்து போனேன். பிச்சாவரம் பார்க்கப் பார்க்க ஆனந்ததை அள்ளித் தந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது …………..
அ) சிலம்பம்
ஆ) மற்போர்
இ) மட்டைப்பந்து
ஈ) நீர் விளையாட்டு
Answer:
இ) மட்டைப்பந்து

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
‘மஞ்சு விரட்டு’ என்பதைக் குறிக்கும் விளையாட்டு …………………
அ) மற்போர்
ஆ) ஏறுதழுவுதல்
இ) சிலம்பாட்டம்
ஈ) வில்வித்தை
Answer:
ஆ) ஏறுதழுவுதல்

Question 3.
மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) மற் + போர்
ஆ) மள் + போர்
இ) மல் + போர்
ஈ) மறு + போர்
Answer:
ஈ) மறு + போர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 4.
தன் + காப்பு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ……………
அ) தன்காப்பு
ஆ) தண்காப்பு
இ) தனிகாப்பு
ஈ) தற்காப்பு
Answer:
ஈ) தற்காப்பு

Question 5.
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை …….
அ) சிலம்பாட்டம்
ஆ) வில்வித்தை
இ) ஏறுதழுவுதல்
ஈ) வழுக்கு மரம் ஏறுதல்
Answer:
ஆ) வில்வித்தை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
அ) சிலம்பு + ஆட்டம் = …………………….
ஆ) வீரம் + கலை = …………………….
Answer:
அ) சிலம்பு + ஆட்டம் – சிலம்பாட்டம்
ஆ) வீரம் + கலை – வீரக்கலை

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) தனக்கென்று= ……………………. + ……………………….
ஆ) கொடைத்திறம்= ……………………. + ……………………….
Answer:
அ) தனக்கென்று – தனக்கு + என்று
ஆ) கொடைத்திறம் – கொடை + திறம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

ஈ. பொருத்துக

1. காளை – கம்பு
2. சிலம்பு – மூங்கில்
3. சிறுவாரைக்கம்பு – திமில்
4. தாளாண்மை – உழவு
வேளாண்மை – முயற்சி
Answer:
1. காளை – திமில்
2. சிலம்பு – கம்பு
3. சிறுவாரைக்கம்பு – மூங்கில்
4. தாளாண்மை — முயற்சி
5. தாளாண்மை – உழவு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக.
Answer:

  • சிலம்பாட்டம்
  • ஏறுதழுவதல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
ஏறுதழுவுதல் என்றால் என்ன?
Answer:
ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும்.

Question 3.
சிலம்பாட்டம் – பெயர்க்காரணம் தருக.
Answer:
சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் உண்டு.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 4.
வல்வில் ஓரியின் வில்லாற்றல் சிறப்பைக் கூறுக.
Answer:
(i) கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ‘வல்வில் ஓரி’ வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.

(ii) அவர், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பெரிய யானையொன்று எதிர்ப்பட, அதன் மீது அம்பெய்தினார்.

(iii) அந்த அம்பானது, அப்பெரிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீர்ந்தது என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

(iv) படைத் திறமும் கொடைத் திறமும் கொண்டு விளங்கிய வல்வில் ஓரியை வன்பரணர் இவ்வாறு பாடி மகிழ்ந்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 5.
மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது?
Answer:
இருவர் கைகோர்த்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவர் போர் செய்வதே மற்போர்.

ஊ. சிந்தனை வினாக்கள்.

Question 1.
சிலம்பாட்டம் தற்காப்புக் கலைகளுள் ஒன்று. ஏன்?
Answer:
(i) சிலம்பாட்டம் தற்காப்புக் கலைகளுள் ஒன்றுதான்.

(ii) ஏனென்றால் சிலம்பு எடுத்து சுழற்றும்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன.

(iii) கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.

(iv) ஒரே ஒரு தடியைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பாட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
உடலில் உறுதி உடையவரே உலகை ஆளும் உள்ள உறுதி உடையவர். இவ்வரிகளை பற்றி உமது கருத்து யாது?
Answer:
‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நம் உடல் நலம் நன்றாக இருந்தால்தான் உள்ளமும் நன்றாக இருக்கும். உடல் வலிமை பெறும்போது எதையும் தாங்கும் திறனைப் பெற முடியும். தெளிவான மனம் அமையும். சோம்பலின்றி சுறுசுறுப்பாகச் செயலாற்ற முடியும். உள்ளம் துடிதுடிப்பாக இருக்கும். அதனால் உலகை ஆளும் அளவிற்கு உள்ள உறுதியைத் தருகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

எ. எதிர்ச்சொல் உருவாக்குக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் - 3
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் - 1

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றிப் பேசுக.
Answer:
எங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று வழுக்கு மரம். ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மர விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்பட்டு, மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவுவார்கள். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்பட்டு இருக்கும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக எங்கள் கிராமத்தில் இவ்விளையாட்டு நடத்துகிறார்கள்.

Question 2.
உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகள் எவை? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த விளையாட்டு கபடி. கபடி விளையாட்டு ஓர் அற்புதமான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு உடல் வலிமை வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு ஏறு தழுவுதல்) தயாராகும் முன் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. எதிரணிக்குச் செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

அவ்வீரரைத் தொடவிடாமல் மடக்கிப் பிடித்து, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்குச் சமமாகும். மூச்சு விடாமல் ‘கபடி கபடி’ என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். அப்படிப்பட்ட ஓர் அருமையான விளையாட்டு.

இந்த விளையாட்டிற்கு நல்ல உடல் வலிமை வேண்டும், உடல் வலிமை இருந்தால் தான் இந்த விளையாட்டு வீரர்கள் அதில் சாதனை படைக்க முடியும். தம் அணிக்குத் திரும்பும் முன் ‘கபடி கபடி’ என்று பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழந்து விடுவார்.

Question 3.
விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் எவை? அவற்றைப் பற்றி உங்களுடைய கருத்துகளைக் கூறுக.
Answer:
விழாக்காலங்களில் ஊர் கூடி விளையாடும் விளையாட்டுகள் :

  • தவளை ஓட்டம்
  • இசை நாற்காலி
  • கயிறு இழுத்தல்
  • பானை உடைத்தல்
  • மெதுவாக சைக்கிள் ஓட்டுதல்

அவற்றைப் பற்றி என் கருத்து :
திருவிழாக்கள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை. உழைத்து உழைத்துக் களைத்தவர்கள் தங்களின் களைப்பைப் போக்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்டவைதான் திருவிழாக்களும் விளையாட்டுகளும்

விளையாட்டுகளின் மூலம் ஒற்றுமை உணர்வு உண்டாகிறது. விட்டுக் கொடுக்கும் பழக்கம் வளர்கிறது. தன்னம்பிக்கை கூடுகிறது. உடல் உறுதியடைகிறது. மனவலிமை பெறுகின்றனர். திட்டமிட்டுச் செயல்படக் கற்றுக் கொள்கின்றனர். ஒழுக்கத்துடன் இருக்க விளையாட்டு பயன்படுகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

படித்து அறிக

வங்கனூர் வாழ் பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி… டம்… டம்… டம்…
இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், வரும் பொங்கல்
திருவிழா அன்று மாலை 4.00 மணியளவில் பூங்கா நகர்
மைதானத்தில் சிலம்பாட்டம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள்
திரு. மணி அவர்களிடம் பெயரைப் பதிவு செய்யுமாறு ஊராட்சி சார்பில் தெரிவிக்கலாகிறது.
டம்… டம்… டம்
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள் - 2

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
ஏறுதழுவுதலுக்கு உகந்த நிலம் ……….
அ) நெய்தல்
ஆ) முல்லை
இ) பாலை
ஈ) குறிஞ்சி
Answer:
ஆ) முல்லை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

Question 2.
ஏறுதழுவுதல் மறுபெயர் …..
அ) சிலம்பாட்டம்
ஆ) சிலம்பம்
இ) மற்போர்
ஈ) மஞ்சுவிரட்டு
Answer:
ஈ) மஞ்சுவிரட்டு

Question 3.
சிலம்பு என்பதன் பொருள்
அ) கொம்பு
ஆ) சுருள்பட்டா
இ) ஒலித்தல்
ஈ) வளரி
Answer:
இ) ஒலித்தல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.2 தமிழர்களின் வீரக்கலைகள்

விடையளி :

Question 1.
சிலம்பக் கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • மான்கொம்பு
  • பிச்சுவா கத்தி
  • சுருள் பட்டா
  • வளரி

Question 2.
மற்போரில் வெற்றிப் பெற்றவர்களை எவ்வாறு அழைப்பார்கள்?
Answer:
மற்போரில் வெற்றிப் பெற்றவர்களை ‘மல்லன்’ என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. மற்போரில் சிறந்து விளங்கியமையாலேயே மாமல்லன் என்று அக்கால அரசர்கள் போற்றப்பெற்றனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 5.1 திருக்குறள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 5.1 திருக்குறள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள்………………..
அ) உயர்ந்த
ஆ) பொலிந்த
இ) அணிந்த
ஈ) அயர்ந்த
Answer:
அ) உயர்ந்த

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

Question 2.
பெருஞ்செல்வம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
அ) பெருஞ் + செல்வம்
ஆ) பெரும் + செல்வம்
இ) பெருமை + செல்வம்
ஈ) பெரு + செல்வம்
Answer:
இ) பெருமை + செல்வம்

Question 3.
பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பண் + புடைமை
ஆ) பண்பு + புடைமை
இ) பண்பு + உடைமை
ஈ) பண் + உடைமை
Answer:
இ) பண்பு + உடைமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

Question 4.
அது + இன்றேல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………
அ) அது இன்றேல்
ஆ) அதுயின்றேல்
இ) அதுவின்றேல்
ஈ) அதுவன்றேல்
Answer:
இ) அதுவின்றேல்

Question 5.
பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் ……………
அ) நயன்
ஆ) நன்றி
இ) பயன்
ஈ) பண்பு
Answer:
அ) நயன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக. இவ்விரண்டும்
அ) இவ்விரண்டும் = …………………… + ………………………….
ஆ) மக்கட்பண்பு = …………………… + ………………………….
Answer:
அ) இவ்விரண்டும் – இ + இரண்டும்
ஆ) மக்கட்பண்பு – மக்கள் + பண்பு

இ. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள் - 5
Asnwer:

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள் - 1

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

ஈ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள் - 6
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள் - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

உ. அன்புடைமை, பண்புடைமை போல் ஈற்றில் ‘மை’ என முடியும்படி நான்கு சொற்கள் எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள் - 7
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள் - 3

ஊ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பண்புடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் யாவை?
Answer:
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயலாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

Question 2.
‘மரம் போன்றவர்’ எனத் திருக்குறள் யாரைக் குறிப்பிடுகிறது?
Answer:
அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், மரத்தைப் போன்றவர் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது.

Question 3.
பண்பில்லாதவன் பெற்ற செல்வம் எவ்வாறு பயனிலாது போகும்?
Answer:
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால் திரிவது போன்று பயனில்லாமல் போகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

எ. சிந்தனை வினா.

ஒருவரின் பண்புகளைக் கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
Answer:

  • ஒருவரின் பண்புகளைக் கொண்டே, இந்த உலகம் அவரை மதிக்கிறது.
  • ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று புறநானூறு கூறும்.
  • ஒருவர் நற்செயல்களைச் செய்து, அன்புடன் பேசுதல், பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணுதல், இன்சொல் பேசுதல் ஆகிய நற்பண்புகளுடன் செயல்புரிந்தால் அவரை இவ்வுலகம் மதிக்கும் என்பதில் ஐயமில்லை \

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைச் சரியான ஒலிப்புடன் படித்து மகிழ்க.
Answer:

Question 2.
நம்மிடம் இருக்கவேண்டிய நற்பண்புகளைப் பட்டியலிடுக.
Answer:

  • இரக்கம்
  • ஈகை
  • நடுவுநிலை
  • கருணை
  • சான்றாண்மை (நெறி பிறழாமல் வாழ்வது)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

Question 3.
பண்பா, பணமா எதற்கு முதன்மையளிக்க வேண்டும்? பட்டிமன்றத்திற்கு உரை தயாரித்துப் பேசுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள் - 4
Answer:
நடுவர் – கமலநாதன் :
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு பண்பா, பணமா எதற்கு முதன்மையளிக்க வேண்டும்? ஒரு மனிதன் தொழிலில் சிறப்படைய வேண்டும்; குடும்பத்துக்கு நல்ல தலைவனாக இருக்க வேண்டும்; சமுதாயத்தில் சிறந்த மதிப்போடு வாழ வேண்டும். இம்மூன்றும் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவன் சிறந்த வாழ்க்கையை வாழ்வதாக அர்த்தம். இவ்வுலகத்தில் குறையே இல்லாத மனிதன் யாருமே கிடையாது. அனைவரிடத்திலும் ஏதோ ஒரு குறை இருந்தே தீரும். இப்போது பண்பே என்ற தலைப்பில் பேச கண்ணனை அழைக்கிறேன்.

பண்பே – கண்ணன் :
பண்பு எல்லா உயிருக்கும் ஆன்மாவிற்கும் இன்றியமையாத ஒன்று. பிறர் மனம் நோகாமல் சொற்களை கையாள்வது ஒரு பண்பு! செயல்படுவது ஒரு பண்பு. அறிமுகம் ஆனவர்களுக்கு உதவும்போது, மனிதன் ஆகிறான். அதுவே, அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவும்போது இறைவன் ஆகிறான். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது.

பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள், பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது. இனிமையாக பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திரும்பிக் கிடைக்கும். நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியாரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். ஆகவே பண்பிற்கே முதன்மையளிக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

பணமே – நிரஞ்சனா :
வள்ளுவர் கூறும் அறம், பொருள், இன்பம் என்கின்ற மூன்றில் பொருளை மட்டும் பெற்றுவிட்டால் அறமும், இன்பமும் தானே வந்துவிடும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை ,பணம் பத்தும் செய்யும், பணம் இல்லாதவன் பிணம், பணம் பந்தியிலே- என்பன பணத்தின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் பழமொழிகள். இந்தக் கலியுகக் காலத்தில் பணம் இல்லாதவன் பிணமாகக் கருதப்படுவான்.

பணம் என்றால் என்ன? உங்கள் இமைக் கதவுகளை மூடி சிந்தனை என்னும் சன்னலைத் திறந்து பார்த்தால் பதில் கிட்டும். பணம் என்றால் ஒரு மதிப்புள்ள நாணயம் என்று பொருள்படும். பணம் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் முதல் இடத்தை வகிக்கிறது. ஆகவே பணத்திற்கே முதன்மையளிக்க வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

நடுவர் – கமலநாதன் :
கடவுளின் படைப்பில் திசைகள் எட்டு, ஸ்வரங்கள் ஏழு, சுவைகள் ஆறு, நிலங்கள் ஐந்து, காற்று நான்கு, மொழி மூன்று (இயல், இசை, நாடகம்), வாழ்க்கை இரண்டு (அகம், புறம்) என்று படைத்த இறைவன், ஒழுக்கத்தை ஒன்றாக மட்டுமே படைத்துள்ளான். நேர்மை, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், அவன் மனதை பிறர் படிப்பார்கள். அங்கே பண்பு ஓங்கும். எனவே, பண்பு கொண்டவனே சிறந்த மனிதனாகிறான்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
நன்பால் – பொருள் தருக .
அ) செல்வம்
ஆ) நல்ல பால்
இ) உரிய பண்பு
ஈ) திரிவது
Answer:
ஆ) நல்ல பால்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

Question 2.
திருக்குறள் ……………. எனப் போற்றப்படுகிறது.
அ) உலகப்பொதுமறை
ஆ) பதினெண்கீழ்க்கணக்கு
இ) அறத்துப்பால்
ஈ) பண்புடைமை
Answer:
அ) உலகப்பொதுமறை

விடையளி :

Question 1.
எப்பண்புகளை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்?
Answer:
நேர்மையையும் நன்மையையும் விரும்பி, பிறருக்குப் பயன்படும்படி வாழும் பெரியாரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.1 திருக்குறள்

Question 2.
உலகம் எதனால் மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும்?
Answer:
நற்பண்பு உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. இல்லையெனில், அது மண்ணோடு மண்ணாகி அழிந்து விடும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 4.4 மூவிடப்பெயர்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
………… எங்குச் சென்றீர்கள்?
அ) நீ
ஆ) நாங்கள்
இ) நீங்கள்
ஈ) அவர்கள்
Answer:
இ) நீங்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 2.
செடியில் பூக்கள் பூத்திருக்கின்றன ……………….. அழகாக இருந்தன.
அ) அது
ஆ) அவை
இ) அவள்
ஈ) அவர்
Answer:
ஆ) அவை

Question 3.
இந்த வேலையை ………………. செய்தேன்.
அ) அவன்
ஆ) அவர்
இ) நான்
ஈ) அவள்
Answer:
இ) நான்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

ஆ. பொருத்துக..
1. தன்மைப் பெயர் – அவர்கள்
2. முன்னிலைப் பெயர் – நாங்கள்
3. படர்க்கைப் பெயர் – நீங்கள்
Answer:
1. தன்மைப் பெயர் – நாங்கள்
2. முன்னிலைப் பெயர் – நீங்கள்
3. படர்க்கைப் பெயர் – அவர்கள்

இ. உரைப்பகுதியில் பொருத்தமான இடப்பெயர்களை நிரப்புக.

தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது…………………. எல்லோரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை அவர்களைக் கண்டதும் ……………………………யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் ………….. அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம்……………….யார்? இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்டான்.
Answer:
தென்றலும் அமுதனும் அறிவியல் கண்காட்சிக்குச் சென்றனர். அங்கு மனிதர்போன்ற வடிவத்துடன் ரோபோ சிலை ஒன்று இருந்தது. ரோபோ எல்லோரையும் இரு கைகூப்பி வரவேற்றது. அந்தச் சிலை அவர்களைக் கண்டதும் நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டது. உடனே, இருவரும் நாங்கள் அருகிலிருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் என்றனர். அமுதன், அந்தச் சிலையிடம் நீ யார்? இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்டான்.

ஈ . தொடர்களிலுள்ள பெயர்ச்சொற்களைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என வகைப்படுத்துக.
1. நீங்கள் எங்குச் சென்றீர்கள் – நீங்கள் – முன்னிலை
2. குழலி படம் வரைந்தாள் – ……………………………….
3. கதிர் நேற்று வரவில்லை – ……………………………….
4. நான் ஊருக்குச் சென்றேன் – ……………………………….
5. மயில் ஆடியது – மயில் – ……………………………….

1. நீங்கள் எங்குச் சென்றீர்கள் – நீங்கள் – முன்னிலை
2. குழலி படம் வரைந்தாள் – குழலி – படர்க்கை
3. கதிர் நேற்று வரவில்லை – கதிர் – படர்க்கை
4. நான் ஊருக்குச் சென்றேன் – நான் – தன்மை
5. மயில் ஆடியது – மயில் – படர்க்கை

கற்பவை கற்றபின்

Question 1.
மூவிடப்பெயர்கள் பயன்படும் இடங்களை அறிந்து கொள்க.
Answer:
ஒரு பெயர்ச்சொல்லை வேறொரு பெயர்ச்சொல்லால் குறிப்பது, மாற்றுப் பெயர்ச்சொல். இந்த மாற்றுப் பெயர்ச்சொல்தான் இடம் நோக்கித் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடப் பெயர்களாக அமைகிறது.

தன்மை – நான், நாம், யான், யாம், நாங்கள்
முன்னிலை – நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள்
படர்க்கை – அவன், அவள், அவர், அது, அவை

தற்போதைய வழக்கில், அவர் என்பது, ஒருவரைக் குறிக்கிறது; அவர்கள் என்பது, பலரைக் குறிக்கிறது. எ.கா. அவர் பேசினார்/அவர்கள் பேசினார்கள். ஆனால், அது வந்தது, அவை வந்தன என்று இருப்பதைப்போல், அதுகள் வந்தது, அவைகள் வந்தன என்பன வழக்கில் இல்லை. அவை வழூஉச்சொற்களாகக் (பிழையானவையாகக் கூறப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 2.
ஒருமையிலும் பன்மையிலும் மூவிடப்பெயர்கள் மாற்றம் அடைவதைக் கண்டறிக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 1

Question 3.
உங்கள் பெற்றோரிடம் பேசும்போதும் உங்கள் நண்பர்களிடம் பேசும்போதும் நீங்கள் பயன்படுத்தும் மூவிடப்பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
(i) நான் நேற்று கடற்கரைக்குச் சென்றேன்.
(ii) நாம் ஒன்றாகச் சேர்ந்து படிப்போம்.
(ii) நாங்கள் எல்லோரும் நண்பர்கள்.
(iv) நீங்கள் ஏன் அலுவலகம் செல்லவில்லை ?
(v) நீ என்ன செய்கிறான்
(vi) அவன் எங்குச் சென்றான்.
(vii) அவள் என் வகுப்பில்தான் படிக்கிறாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
மான்விழி, கலையரசி ஆகிய இருவரைத் தவிர மற்றவற்றை /மற்றவர்களைக் குறிப்பது…………
அ) தன்மை
ஆ) முன்னிலை
இ) படர்க்கை
ஈ) பெயர்ச்சொல்
Answer:
இ) படர்க்கை

Question 2.
தன்னைக் குறிப்பது …..
அ) வினை மரபு
ஆ) தன்மை
இ) பெயர்ச்சொல்
ஈ) முன்னிலை
Answer:
ஆ) தன்மை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

விடையளி :

Question 1.
முன்னிலை என்றால் என்ன?
Answer:
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.

மொழியை ஆள்வோம்

அ. கேட்டல் :

Question 1.
ஏன்? எதற்கு? எப்படி? எங்கே போன்ற வினாக்களை எழுப்பக்கூடிய அறிவியல் விழிப்புணர்வுப் பாடல்களைக் கேட்டறிக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 2.
அறிவியல் மன்றங்களின் சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டு, விடை காண்க
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

ஆ. பேசுதல் :

Question 1.
அறிவியல் வளர்ச்சி ஆக்கத்திற்கா/அழிவிற்கா பட்டிமன்ற உரை தயாரித்துப் பேசுக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 2
நடுவர் – திருமதி. சந்தியா :
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு அறிவியல் வளர்ச்சி ஆக்கத்திற்கா/அழிவிற்கா? மனிதன் ஆதிகாலத்தில் வாழ்ந்த முறைக்கும் இப்பொழுது வாழும் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதற்கான காரணம் அறிவியல் முன்னேற்றந்தான் என்று கூறினால் அது மிகையாகாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

“பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்,
எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்”

இக்கூற்றிற்கேற்பக் காலந்தோறும் விஞ்ஞானிகள் பலர் தோன்றிப் பல புதுமைகளைக் கண்டுபிடித்து வந்துள்ளனர். அக்கண்டுபிடிப்புகள் பிற்கால அறிவியல் முன்னேற்றத்திற்குப் பெரிதும் வழிவகுத்தன. அதன் விளைவுகள் தாம் இன்று நாம் காணும் வானொலியும், தொலைக்காட்சியும், கணினியும், இயந்திர மனிதனும் ஆகும். இவற்றைப் போன்ற கண்டுபிடிப்புகளால் நாம் இன்று பல நன்மைகளை அடைந்திருக்கின்றோம். அதே சமயத்தில் தீமைகளை அடையவில்லை என்று கூறிவிட முடியாது. இப்போது அறிவியல் ஆக்கத்திற்கே என்ற குழுவிலிருந்து வந்து பேசுமாறு அழைக்கிறேன்.

ஆக்கத்திற்காக – மதியழகன் :
வணக்கம்! வானொலி, தொலைக்காட்சி ஆகியவை மக்களுக்குப் பல வகைகளிலும் நன்மை புரிந்துள்ளன.

மக்களின் பொது அறிவை மேம்படுத்தவும், உடனுக்குடன் செய்திகளைத் தெரிவிக்கவும், மொழியைக் கற்பிக்கவும், மக்கள் பொழுது போக்கவும் உதவியிருப்பதை நாம் மறுக்க இயலாது. இன்றைய நவீன உலகத்தில் தொழிற்சாலைகள் இல்லாத நாடே இல்லை எனக் கூறும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கணினி, இயந்திர மனிதன் போன்ற சாதனங்களின் அறிமுகத்தால் இன்று தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறன் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இச்சாதனங்கள் தொழிற்சாலையில் மட்டுமல்லாமல் பள்ளிகள், பொருளகங்கள், விமான நிலையங்கள், ஏன் நம்மில் சிலரது வீடுகளில் கூடப் பயன்படுகின்றன. ஆகவே அறிவியல் ஆக்கத்திற்கே என்று கூறி விடை பெறுகிறேன்.

அழிவிற்காக – சுந்தர் ;
வணக்கம்! வானொலி, தொலைக்காட்சி மூலம் பல நன்மைகள் கிடைத்தாலும், இவற்றில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் சில, வன்செயல்களைத் தூண்டுபவையாகவும் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

இதனால் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருக்கின்றது. மேலும், கணினி, இயந்திர மனிதன் போன்ற சாதனங்கள் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுவதால் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கின்றது.

வேலையில்லாத் திண்டாட்டத்தினால் நாட்டில் அரசியல், பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் போன்றவை தலையெடுக்கின்றன. ஆகவே அறிவியல் அழிவிற்கே என்று கூறி விடை பெறுகிறேன்.

ஆக்கத்திற்காக – காயத்ரி :
வணக்கம்! விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் மலர்ந்த துணி துவைக்கும் இயந்திரம், மின் அடுப்பு, மின்விசிறி, கணினி மயமான துணி தைக்கும் இயந்திரம் போன்றவை நம் வாழ்க்கையை சிரமமின்றி நடத்தத் துணை புரிகின்றன. அநேகமான வீட்டு வேலைகளை இயந்திரங்களே செய்து முடித்து விடுவதால் குடும்ப மாதர்கள் பலர் வெளியில் வேலை செய்ய நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நன்மைதானே.

அழிவிற்காக – விமலா : வணக்கம்! சிலருக்கு இன்பத்தை அளிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அணுவாயுதங்கள். 1945-இல் ஹுரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை அணுகுண்டு அழித்தது. அந்த நகரங்களை மட்டுமல்லாமல், அவ்வணுகுண்டு அங்கு வாழ்ந்த ஆயிரங்கணக்கான மக்களையும் துடைத்தொழித்துக் கொன்றது. ஆகவே அறிவியல் அழிவிற்கே என்று கூறி விடை பெறுகிறேன்.

நடுவர் – சந்தியா :
எந்த ஒரு விஞ்ஞானச் சாதனமும் தீய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டுபிடிக்கப்படவில்லையாயினும், இக்கண்டுப்பிடிப்புக்களைப் பயன்படுத்தும் மனிதனே அவற்றைத் தகாத முறைகளில் பயன்படுத்தி அழிவை உண்டாக்குகிறான். ஒரு நாணயத்திற்கு எப்படி இரு பக்கங்கள் உண்டோ , அதுபோலவே, எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் நன்மை, தீமை இருப்பது நிச்சயம். இருப்பினும் அறிவியல் முன்னேற்றத்தால் தீமைகளைவிட நன்மையே அதிகம் என்று கூறுவதில் தவறில்லை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 2.
அறிவியலறிஞர் ஒருவரின் கண்டுபிடிப்பு குறித்து 5 மணித்துளி பேசுக.
Answer:
பெரியசாமி தூரன் (1908- 1987) :
பெரியசாமி தூரன், தமிழின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கித் தந்த அறிவியல் அறிஞர். இவர் பெரியார் மாவட்டம் ஈரோடு வட்டத்தில் உள்ள மொடக்குறிச்சியை அடுத்த மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் பழனிவேலப்பன் – பாவாத்தாள் தம்பதியினருக்கு 1908ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26ஆம் நாள் பிறந்தார்.

கணிதப் பட்டதாரி ஆசிரியரான இவர் 1929 முதல் 1948 வரை ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர்த் தமிழின் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணியில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். பதினைந்து ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்தார்.

கலைக்களஞ்சியப் பணியில் பல்வேறு அறிஞர்கள் ஆங்கிலத்தில் தந்த கட்டுரைகளை எல்லாம் தூரனே முன்னின்று தமிழாக்கம் செய்தார். 1948 இலிருந்து ஆறாண்டு கால . கடுமையான உழைப்புக்குப் பின்னர் 1954 இல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.

தொடர்ந்து ஏறத்தாழ ஆண்டுக்கு ஒரு தொகுதியாகக் கொண்டுவரப்பட்டு 1963 ஜனவரி 4ஆம்நாள் ஒன்பதாம் தொகுதி குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் மக்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டது. இக்கலைக்களஞ்சியத் தொகுப்புப் பணி மட்டுமல்லாது பல்வேறு அறிவியல் நூல்களையும் தூரன் அவர்கள் தமிழுக்கு ஆக்கித் தந்துள்ளார்கள்.

அவருடைய அறிவியல் நூல்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு மரபணு தொடர்பானது. இவ்வகையில் அவர் மூன்று தமிழ் நூல்களைத் தந்துள்ளார். அவை பாரம்பரியம் (1949), பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954), கருவில் வளரும் குழந்தை (1956). நூலின் இறுதியில் கலைச்சொல் விளக்கங்களை இணைத்துத் தந்துள்ளார். பாரம்பரியம் நூலின் சுருக்கம்தான் பெற்றோர் கொடுத்த பெருங்கொடை என்ற நூல். இரண்டாம் பிரிவு உளவியல் தொடர்பானது. இவ்வகையில் அவர் ஏழு நூல்களைத் தந்துள்ளார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

1. குழந்தை உள்ளம் (1947),
2. குமரப்பருவம் (1954),
3. தாழ்வு மனப்பான்மை (1955),
4. அடிமனம் (1957),
5. மனமும் அதன் விளக்கமும் (1968),
6. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (1953) (குழந்தை உள்ளம் நூலின் விரிவாக்கம்),
7. மனம் என்னும் மாயக் குரங்கு (1956) (மனமும் அதன் விளக்கமும் நூலின் சுருங்கிய வடிவம்)

தமிழ்க் கலைக்களஞ்சியம் தந்த அறிவியலறிஞர் பெ.தூரனின் அறிவியல் தமிழ்ப்பணி அளப்பரியது. கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கலைக்களஞ்சியப் பதிவுகளில் அறிவியல் கட்டுரைகள் பல ஆயிரங்கள் ஆகும். காலத்திற்கும் நின்று புகழ்சேர்க்கும் அரும்பணியால் அறிவியல் தமிழுக்கு ஆக்கம் சேர்த்த வர் பெ.தூரன்.

இ. படித்தல் :

Question 1.
அறிவியல் சார்ந்த நூல்களை நூலகத்தில் தேடிப் படித்து மகிழ்க
Answer:
மாணவர்கள் தாங்களாகவே அறிவியல் சார்ந்த நூல்களைப் படிக்க வேண்டும்.

Question 2.
நீங்கள் விரும்பிப் படித்த அறிவியல் புனைகதையொன்றை வகுப்பில் கூறுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே விரும்பிப் படித்த அறிவியல் புனைகதையொன்றை வகுப்பில் கூற வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

ஈ. சொல்லக் கேட்டு எழுதுக
Answer:
1. பறவைகள் பறக்கின்றன.
2. ரோஜாப்பூ சிவப்பு நிறத்தில் உள்ளது.
3. கடலில் அலைகள் தோன்றுகின்றன.

உ. தொடரில் அமைத்து எழுதுக.
Answer:
1. பறவை – பறவைகளின் பின்புற வால் துடுப்புபோல் செயல்பட்டுத் திசைமாறிப் பறக்க உதவுகிறது.
2. விமானம் – விமானங்கள் குறைந்தது 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் தான் பறக்கின்றன.
3. முயற்சி – முயற்சி திருவினையாக்கும்.
4. வானவில் – வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.
5. மின்மினி – அமுதா மின்மினிப் பூச்சியை போல் பறக்க விரும்பினாள்.

ஊ. பொருத்துக.

1. மின்மினி – சிறகு இறகின்
தொகுப்பு – ஹைட்ரஜன் அணுக்கள்
3. வானவில் – பறவையின் இறகு
4. காற்றுப்பைகள் – லூசிஃபெரேஸ் என்சைம்
5. விண்மீன் – நீர்த்துளி எதிரொளிப்பு
Answer:
1. மின்மினி – லூசிஃபெரேஸ் என்சைம்
2. இறகின் தொகுப்பு – சிறகு
3. வானவில் – நீர்த்துளி எதிரொளிப்பு
4. காற்றுப்பைகள் – பறவையின் இறகு
5. விண்மீன் – ஹைட்ரஜன் அணுக்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

எ. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் அதிகரிக்கின்றன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

Question 1.
அமில மழை எங்கு அதிகமாகப் பெய்கிறது?
Answer:
தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும் மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்கிறது.

உ. தொடரில் அமைத்து எழுதுக.

1. பறவை – ………………………………………….
2. விமானம் – ………………………………………….
3. முயற்சி – ………………………………………….
4. வானவில் – ………………………………………….
5. மின்மினி – ………………………………………….
Answer:
1. பறவை – பறவை களின் பின்புற வால் துடுப்பு போல் செயல்பட்டுத் திசைமாறிப் பறக்க உதவுகிறது.
2. விமானம் – விமானங்கள் குறைந்தது 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் தான் பறக்கின்றன.
3. முயற்சி – முயற்சி திருவினையாக்கும்.
4. வானவில் – வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.
5. மின்மினி – அமுதா மின்மினிப் பூச்சியை போல் பறக்க விரும்பினாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

ஊ. பொருத்துக.
1. மின்மினி – சிறகு
2. இறகின் தொகுப்பு – ஹைட்ரஜன் அணுக்கள்
3. வானவில் – பறவையின் இறகு
4. காற்றுப்பைகள் – லூசிஃபெரேஸ் என்சைம்
5. விண்மீன் – நீர்த்துளி எதிரொளிப்பு
Answer:
1. மின்மினி – லூசிஃபெரேஸ் என்சைம்
2. இறகின் தொகுப்பு – சிறகு
3. வானவில் – நீர்த்துளி எதிரொளிப்பு
4, காற்றுப்பைகள் – பறவையின் இறகு
5. விண்மீன் – ஹைட்ரஜன் அணுக்கள்

எ. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் அதிகரிக்கின்றன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாகக் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அமிலமழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதி மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 1.
அமில மழை எங்கு அதிகமாகப் பெய்கிறது?
Answer:
தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும் மோட்டார் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்கிறது.

Question 2.
அமில மழையின் பாதிப்பு எங்கு அதிகமாக இருக்கும்?
Answer:
நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்குக் குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

Question 3.
மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும், உயிரை இழக்கக் காரணம் என்ன?
Answer:
அமில மழை அடிக்கடிபெய்யும் இடங்களில் மீன்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும் உயிரிழக்க நேரிடுகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 4.
பொருள் தருக. அதிகரித்தல் …………. பிரதேசம் ……………. பாதிப்பு…………..
Answer:
பெருகுதல், நாடு, அழிதல்.

ஏ. வண்ண எழுத்திலுள்ள பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் எழுதுக.

1. நான் தபால் நிலையத்திற்குச் சென்றேன். ………………………………
Answer:
அஞ்சல்

2. ஓய்வு நேரத்தில் ரேடியோ கேட்பேன். ………………………………
Answer:
வானொலி

3. பஞ்சாயத்துக் கூட்டம் நாளை கூடுகிறது. ………………………………
Answer:
நியாய சபை

4. ஹோட்டலில் உணவு தயராக உள்ளது. ………………………………
Answer:
உணவகம்

5. அலமாரியில் துணிகள் உள்ளன. ………………………………
Answer:
நிலைப்பேழை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

ஐ. பாடலை நிறைவு செய்க.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 11
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 3

மொழியோடு விளையாடு

Question 1.
ஒரே ஓசையில் முடியும் பெயர்களைக் கொண்ட படங்களை இணைக்க
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 12 3
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 4Answer:
1. வலை, இலை, மலை
2. மரம், அரம், கரம்
3. பானை, யானை, பூனை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 2.
சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குவோம்
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 13
Answer:
பட்டுக்கோட்டை
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 5

3. குறிப்புகளைப் படித்து, விடை கண்டறிக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 14
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 6

1. பறக்கவிட்டு மகிழ்வோம்.
Answer:
பட்டம்

2. நீல நிறத்தில் காட்சியளிக்கும்
Answer:
வானம்

3. கடற்பயணத்திற்கு உதவும்
Answer:
கப்பல்

4. படகு செலுத்த உதவும்
Answer:
துடுப்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

5. உயிரினங்களுள் ஒன்று.
Answer:
குதிரை

6. இதன் உதவியால் வானில் பயணிக்கலாம்.
Answer:
விமானம்

7. பறவைகள் இதுபோன்ற உடலமைப்பு கொண்டுள்ளது
Answer:
படகு

8. ஏழு நிறங்கள் கொண்டது.
Answer:
வானவில்

9. இராமன் இதன் மூலம் எதிரொளிப்பு விளையாட்டு விளையாடினான்.
Answer:
கண்ணாடி

10. பொழுது விடிவது
Answer:
காலை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 4.
பாடப்பகுதியில் ‘சுற்றும்முற்றும்’, ஓட்டமும்நடையுமாய்’ என்று சொற்கள்
இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு இணைச்சொற்கள் என்று பெயர். இவைபோன்று நான்கு சொற்கள் எழுதுக.
1. ……………………
2. ……………………
3. …………………..
4. …………………..
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 7

Question 5.
ஒரே ஓசையுடைய சொற்களின் பொருள் எழுதுக.

1. தேநீர் – தேயிலையைக் கொண்டு கொதிக்க வைத்த நீர் (டீ)
தேனீர் – தேனும் நீரும் கலந்த நீர்

2. பரவை -……………………………….
பறவை -……………………………..

3. கோரல் – ……………………………..
கோறல் – ……………………………..

4. வன்னம் – ……………………………..
வண்ண ம் – ……………………………..

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

5. எதிரொலி – ……………………………..
எதிரொளி – ……………………………..
Answer:
1. தேநீர் – தேயிலையைக் கொண்டு கொதிக்க வைத்த நீர் (டீ)
தேனீர் – தேனும் நீரும் கலந்த நீர்

2. பரவை – கடல்
பறவை – பறக்கும் உயிரினம்

3. கோரல் – கூறுதல்
கோறல் – கொல்லுதல்

4. வன்னம் – எழுத்து
வண்ண ம் – நிறம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

5. எதிரொலி = சுவர், மலை போன்றவற்றில் பட்டு மீண்டும் கேட்குமாறு திரும்பி வரும் ஒலி.
எதிரொளி = கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி

Question 6.
ஒரு சொல்லைப் பிரித்து இரு பொருள் எழுதுக.

1. பலகை = மரப்பலகை
பல + கை = பல கைகள்

2. அந்தமான் = ………………………….
அந்த + மான் = ………………………….

.3. தாமரை = ………………………….
தா + மரை = ………………………….

4. பழம்பால் = ………………………….
பழம் + பால் = ………………………….

5. மருந்துக்கடை = ………………………….
மருந்து + கடை = ………………………….
Answer:
1. பலகை = மரப்பலகை
பல + கை = பல கைகள்

2. அந்தமான் = தீவு
அந்த + மான் = அந்த மான் (விலங்கு)

.3. தாமரை = தாமரை மலர்
தா + மரை = தாவுகின்ற மான்

4. பழம்பால் = பழைய பால்
பழம் + பால் = பழமும் பாலும்

5. மருந்துக்கடை = மருந்து விற்கும்  கடை
மருந்து + கடை = மருந்தினைக் கடைவது

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

நிற்க அதற்குத் தக

1. அறிவியல் சார்ந்த தமிழ்ச் சொற்களை அறிந்துகொண்டு பயன்படுத்துவேன்.
2. ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கு விடை காண்பேன்.

செயல் திட்டம்

Question 1.
அறிவியல் தமிழ்ச் சொற்களுள் 20 எழுதி வருக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 8

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

Question 2.
அறிவியலறிஞர்களுள் எவரேனும் ஐவரின் படத்தை ஒட்டியும் அவர்களின் கண்டுபிடிப்புகளை எழுதியும் தொகுப்பேடு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 9
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள் - 10

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

விண்ண ப்பம் எழுதுதல்

பிர்லா கோளரங்கத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதி வேண்டி விண்ணப்பித்தல்

திருவள்ளூர்,
07.10.2019.

அனுப்புநர்
செல்வன் ந. பூங்குன்றன்
பள்ளி மாணவர் தலைவர்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
திருவூர், திருவள்ளூர் மாவட்டம்.

பெறுநர்
இயக்குநர்,
பிர்லா கோளரங்கம்,
சென்னை
மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : அறிவியல் தொழில்நுட்பக் கூடத்தைச் சுற்றி பார்க்க, அனுமதி வேண்டுதல் – சார்பு

வணக்கம். தலைமையாசிரியரின் இசைவுடன் எங்கள் பள்ளியின் மகிழ் உலா குழு, பிர்லா கோளரங்கத்தை 09.10.2019 அன்று, சுற்றிப் பார்க்க விரும்புகிறது. அக்குழுவில், ஆசிரியர்கள் மூவரும் 40 மாணவர்களும் இருப்பர். ஆகையால், அன்பு கூர்ந்து எங்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டுகிறேன். அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளை விளக்குவதற்கு அலுவலர் ஒருவரையும் ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.4 மூவிடப்பெயர்கள்

தங்கள் உண்மையுள்ள,
செல்வன் ந. பூங்குன்றன்
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, திருவூர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தன்னால் பறக்க முடியாததற்கு அமுதா கூறிய காரணம் என்ன?
Answer:
பறவையைவிட அதிக எடையுடன் இருப்பதால்தான் தன்னால் பறக்க முடியவில்லை என்று அமுதா கூறினாள்.

Question 2.
பறப்பதற்கு ஏற்றவகையில் பறவையின் உடலமைப்பு எவ்வாறு உள்ளது?
Answer:
பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன்

Question 3.
பறக்கும் விமானத்தைக் கண்டறிந்வர்கள் யார் , யார் ?
Answer:
ரைட் சகோதரர்கள்.

சிந்தனை வினா.

Question 1.
பறவைகளைப்போல் பறக்க முடிந்தால், நமக்கு எத்தகைய உடலமைப்பு இருக்க வேண்டும்?
Answer:
பறவைகளைப் போல் பறக்க முடிந்தால் நமக்கு படகைப் போல் உடலமைப்பு இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன்

கற்பவை கற்றபின்

Question 1.
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டனர்? நூலகத்தில் தேடிப் படிக்க. .
Answer:
வானில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது, ரைட் சகோதரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றதற்கு மூன்று தொழில்நுட்பங்கள் உதவின. முதன்முதலாக, இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் ‘முன்னூந்தல்’ (Thrust), ‘மேலெழுச்சி'(Lift), ‘திசைதிருப்பி'(Rudder) எனப்படும் ‘முப்புற உந்தல் கட்டுப்பாடு’ என்ற நுணுக்கத்தை ரைட் சகோதரர்கள் கையாண்டனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன்

ரைட் சகோதரர்கள் இரண்டாவது ஊர்திக்கு முன்னூந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெயிலியங்கும் எரிபொருள் இயந்திரத்தைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில்ரைட், வில்பர்ரைட் இருவரும் Wind Tunnel ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

முயற்சிகளும் வெற்றியும் :
வாஷிங்டன் டி. சி. யில் உள்ள தேசிய வானாய்வு அருங்காட்சியகக் கூடத்தில் (National Air and Space Museum in Washington, D.C) வைக்கப்பட்டுள்ளது, 1903 இல் ரைட் சகோதரர்கள் பறந்த விமானம்.

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் (Kitty Hawk, North Carolina)1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள் பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள்.

வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட, 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாக பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901 ஆம் ஆண்டில், மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரர்களின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது.

Question 2.
நீங்களே கண்டறிந்த எளிய கண்டுபிடிப்பை விளக்கப்படமாக வரைந்து காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.3 நானும் பறக்கப் போகிறேன்

Question 3.
எவரேனும் அறிவியலறிஞர் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாடகமாக நடித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Question 4.
கற்பனையாக அறிவியல் புனைகதையொன்றை எழுதி, வகுப்பில் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கற்பனையாக அறிவியல் புனைகதையொன்றை எழுத வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 4.2 அறிவின் திறவுகோல் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 4.2 அறிவின் திறவுகோல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
அறிவியலறிஞர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) அறிவியல் + அறிஞர்
ஆ) அறிவு + அறிஞர்
இ) அறிவியல் + லறிஞர்
ஈ) அறவியல் + அறிஞர்
Answer:
அ) அறிவியல் + அறிஞர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

Question 2.
பேருண்மை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) பேர் + உண்மை
ஆ) பெரிய + உண்மை
இ) பேரு + உண்மை
ஈ) பெருமை + உண்மை
Answer:
ஈ) பெருமை + உண்மை

Question 3.
பத்து + இரண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………
அ) பன்னிரெண்டு
ஆ) பன்னெண்டு
இ) பன்னிரண்டு
ஈ) பன்னண்டு
Answer:
இ) பன்னிரண்டு

Question 4.
வேகமாக – இச்சொல்லுக்குரிய பொருள் ………………….
அ) மெதுவாக
ஆ) விரைவாக
இ) கவனமாக
ஈ) மெலிதாக
Answer:
ஆ) விரைவாக

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

Question 5.
மரப்பலகை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) மரப் + பலகை
ஆ) மர + பலகை
இ) மரம் + பலகை
ஈ) மரப்பு + பலகை
Answer:
இ) மரம் + பலகை

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) நீராவி – ………………… + …………………………
ஆ) புவியீர்ப்பு – ………………… + …………………………
Answer:
அ) நீராவி – நீர் + ஆவி
ஆ) புவியீர்ப்பு – புவி + ஈர்ப்பு

இ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
அ) சமையல் + அறை – ………………..
ஆ) இதயம் + துடிப்பு- ………………..
Answer:
அ) சமையல் + அறை – சமையலறை
ஆ) இதயம் + துடிப்பு – இதயத்துடிப்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

ஈ. பொருத்துக
1. ஐசக் நியூட்டன் – நீராவி இயந்திரம்
2. இரேனே லென்னக் – புவியீர்ப்பு விசை
3. ஜேம்ஸ் வாட் – ஸ்டெதஸ்கோப்
Answer:
1. ஐசக் நியூட்டன் – புவியீர்ப்பு விசை
2. இரேனே லென்னக் – ஸ்டெதஸ்கோப்
3. ஜேம்ஸ் வாட் – நீராவி இயந்திரம்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மனிதனின் சிந்தனையால் எது வளரத் தொடங்கியது?
Answer:
மனிதனின் சிந்தனையால் அறிவியல் வளரத் தொடங்கியது.

Question 2.
ஐசக் நியூட்டன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிய எந்த நிகழ்ச்சி காரணமாக இருந்தது?
Answer:
சர் ஐசக் நியூட்டன் ஆப்பிள் மரத்தினடியில் உட்கார்ந்தபோது ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து 6 கீழே விழுந்தது. இந்த நிகழ்ச்சி ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிய காரணமாக இருந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

Question 3.
ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமான நிகழ்வு எது?
Answer:
1. பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுள் ஒருவன்’ஸீஸா’ என்ற ஒருவகை மரப்பலகையின் மீது ஒரு முனையில் குண்டூசியால் கீறிக் கொண்டிருந்தான். பலகையின் மறுமுனையில் தன் காதைப் பொருத்தி, எழும் ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்தான் மற்றொரு சிறுவன்.

2. பலகையின் ஒரு முனையில் குண்டூசியால் மெதுவாகக் கீறும்போது எழுந்த ஒலி, மறுமுனையில் மிகத் தெளிவாகக் கேட்பதைக் கண்டான் அச்சிறுவன். இந்நிகழ்ச்சி ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

Question 4.
நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
Answer:
ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் வாட்.

Question 5.
அறிவியலறிஞர்களிடம் உற்றுநோக்கும் திறன் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:

  • மரத்திலிருந்து கீழே விழுந்த ஆப்பிளை உற்று நோக்கியதால் உருவானது ‘ஐசக் நியூட்டனின்’ புவி ஈர்ப்புச் சக்தி.
  • ‘ஸீஸா’ என்ற மரப்பலகையில் விளையாடிய சிறுவர்களின் செயல்பாட்டினால் உருவானது ‘இரேனே லென்னக்’ என்ற மருத்துவர் கண்டறிந்த ஸ்டெதஸ்கோப்.
  • நீர் கொதிக்கும்போது வெளியேறும் ஆவியை ஜேம்ஸ் வாட் பார்த்ததால் உருவானது நீராவி இயந்திரம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

ஊ. சிந்தனை வினாக்கள்.

Question 1.
ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் ஓர் அறிவியல் உண்மை உள்ளதா? உங்களால் விளக்க இயலுமா?
Answer:

  • இரயில் தண்டவாளங்கள் அமைக்கும்போது இரு தண்டவாளங்களின் இணைப்புக்கிடையில் சிறிது இடைவெளி விடப்படுகிறது.
  • காரணம் : கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகமாகும்போது, தண்டவாளங்கள் நீள்பெருக்கம் அடையும். இதனால் இடைவெளி விடப்படுகிறது.

Question 2.
நீரில் நீந்தும் மீனால், நிலத்தில் வாழ முடியவில்லையே, ஏன்?
Answer:
நீரில் நீந்தும் மீனால் நிலத்தில் வாழ முடிவதில்லை .

காரணம் : மீன்களுக்கு நுரையீரல் இல்லை. அவற்றிற்குள்ள செவுள்களின் மூலம் அவை சுவாசிக்கின்றன. இந்த செவுள்கள் நீரில் உள்ள ஆக்ஸிஜனை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். காற்றிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள முடியாது. ஆதலால், மீன்களால் நீரில் மட்டுமே வாழ முடியும்.

கற்பவை கற்றபின்

Question 1.
நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களை உற்றுநோக்கிக் காரணகாரியம் கண்டறிக.
Answer:
உலகிலுள்ள அனைத்துமே ஏதோ ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இவை இடம், வடிவம், உருவம், நிலை, வண்ண ம், வெப்பநிலை மற்றும் இயல்பில் நிகழலாம். வேகமான மாற்றம் – குறுகிய கால அளவில் நடைபெறும். மெதுவான மாற்றம் – அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

மீள் மாற்றம் – மீண்டும் தன் ஆரம்ப நிலையை அடையும். மீளா மாற்றம் – மீண்டும் தன் ஆரம்ப நிலையை அடையாது. விரும்பத்தக்க மாற்றம் – சுற்றுச் சூழலுக்குப் பயன் தரக்கூடியது மற்றும் ஆபத்து அற்றது. விரும்பத்தகாத மாற்றம் – சுற்றுச் சூழலுக்குப் பயன்தராது மற்றும் ஆபத்தானது
.
இயற்கையான மாற்றம் – இயற்கையில் தன்னிச்சையாக நடைபெறக்கூடியது. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் – மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தியது. ஏரிகள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் நாம் பெறும் நீரை தேக்கி வைக்க முடிவதில்லை . காடுகள் அழிக்கப்படுதால், உலகம்
வெப்பமயமாகிறது, மழை பொழிவு இல்லாமல் போகிறது.

Question 2.
அறிவியல் அறிஞர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக.
Answer:

சர்.சி.வி.ராமன்

இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சர். சி. வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறலுக்கு, சி. வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இந்தியாவிலேயே முழுமையாக படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிவியல் அறிஞர் என்ற பெருமைப் பெற்றவர் சர். சி. வி. ராமன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

சர்.சி.வி. ராமனின் ஆராய்ச்சிகள் :
இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் – சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

விருதுகளும், அங்கீகாரங்களும் :
1917ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சர். தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார்.

அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924-ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு நைட் – ஹூட் என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப்பட்டது.

1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு ராமன் விளைவு என்று.. பெயரிடப்பட்டது. இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா’ விருது 1954-இல் அவருக்கு வழங்கப்பட்டது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

அப்துல் கலாம்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது 9 குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, 9 சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக திகழ்ந்தவர்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.

இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கத்தக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்தவர். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

விருதுகள் :
1981 – பத்ம பூஷன், 1990 – பத்ம விபூஷன், 1997 – பாரத ரத்னா , 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது, 1998 – வீர் சாவர்கர் விருது, 2000 – ராமானுஜன் விருது, 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், 2007 – கிங் சார்லஸ்-II பதக்கம், 2008- பொறியியல் டாக்டர் பட்டம், 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, பட்டம். 2014 சீனாவின் பீஜிங் பல்கலைக்கழக கௌரவ பேராசிரியர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்: அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

Question 3.
‘அறிவுக்கு விருந்தாகும் அறிவியல்’ என்னும் தலைப்பில் 5 மணித்துளி பேசுக.
Answer:
அறிவியல் என்பது அறிந்து கொள்ளுதல் எனப் பொருள்படும். அறிவியலில் நாம் எச்செயலையும் ஆய்ந்தறிந்து “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற வினாக்களுக்கு விடை கண்டறிவதாகும்.

தொடக்க காலத்தில் எண்ணெய் ஊற்றி விளக்கெரித்தனர். அறிவியலின் துணையால் இன்று மின்விளக்கு இல்லாத இடமில்லை. இப்படித் தொடங்கிய அறிவியல், செல்பேசி, மடிக்கணினி, இணையம், கணினி, காணொலி மூலம் பேசும் வசதி, கூகுள் வரைபடங்கள் வரை அளவற்ற முறையில் வளர்ந்து நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டது.

அண்டவெளியான விண்வெளியைப் பற்றிய ஆராய்ச்சியில் பயணித்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் உணவைச் சமைக்கும் பிரஷ்ஷர் குக்கர்கள், குளிர்கருவிகள், அரைக்கும் எந்திரங்கள் முதலியன நம் நேரத்தையும், உடல் உழைப்பையும் குறைக்கின்றன.

ராக்கெட்டுகளும் செயற்கைக் கோள்களும் வானவெளியில் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டுள்ளன. குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் சரியான நேரங்களில் போடப்பட்டு நோய்கள் தடுக்கப்பட்டுள்ளன.
அறிவியலை சமூகத்தின் சொத்தாக மாற்ற வேண்டுமானால் அறிவியலின் தன்மை என்னவென்று மக்கள் அறிய வழி செய்யவேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

அறிவியல் வளர்ச்சி நம் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டமாக மேலே மேலே எடுத்துச் செல்கிறது.

வயிற்றுக்கு விருந்து உணவு, செவிக்கு விருந்து கல்வியறிவு, அறிவுக்கு விருந்து அறிவியல். அத்தகைய அறிவியலை நல்ல செயல்களுக்கு மட்டும் பயன்படுத்துவோம்.

Question 4.
எளிய கண்டுபிடிப்பு ஒன்றை வகுப்பில் நிகழ்த்திக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்ட றிந்தவர் …………….
அ) சர் ஐசக் நியூட்டன்
ஆ) சர். சி.வி. ராமன்
இ) ரைட் சகோதரர்கள்
ஈ) ஜேம்ஸ் வாட்
Answer:
அ) சர் ஐசக் நியூட்டன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.2 அறிவின் திறவுகோல்

Question 2.
நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் ……………
அ) சர் ஐசக் நியூட்டன்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) சர். சி.வி. ராமன்
ஈ) ஜேம்ஸ் வாட்
Answer:
ஈ) ஜேம்ஸ் வாட்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 4.1 எதனாலே, எதனாலே? Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 4.1 எதனாலே, எதனாலே?

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. பொருத்துக

1. விண்மீன் – உதிரும்
2. ரோஜாப்பூ – பறக்கும்
3. மேகம் – ஒளிரும்
4. இலை – சிவக்கும்
5. பறவை – கறுத்திருக்கும்
Answers:
1. விண்மீ ன் – ஒளிரும்
2. ரோஜாப்பூ – சிவக்கும்
3. மேகம் – கறுத்திருக்கும்
4. இலை – உதிரும்
5. பறவை – பறக்கும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

ஆ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
வானவில் எப்படி தோன்றுகிறது?
Answer:
வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும் போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.

Question 2.
கடலில் ஏன் அலைகள் உண்டாகின்றன?
Answer:
பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

இ. சிந்தனை வினா.

நாம் வாழும் பூமி, சுழன்று கொண்டேயிருக்கிறது. ஆனால், அதில் வாழும் நாம் சுழல்வதில்லை. ஏன்? விடை காண்போமா?
Answer:
(i) நாமும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் (பெருங்கடல்கள் மற்றும் காற்று மண்டலம் உட்பட) பூமியுடனேயே சேர்ந்து, பூமி சுழலும் அதே வேகத்திலேயே சுழல்வதால், நமது சுழற்சியை நாம் உணர்வதில்லை.

(ii) நாம் ஒரு காரில் வேகமாகச் செல்லும் போது, நாம் நமது இருக்கையிலிருந்து நகர்கிறோமா? பூமி சட்டென்று சுழல்வதை நிறுத்தினால் மட்டுமே, நம்மால் அதை உணர முடியும். ஆனால் அது முடியாத செயல்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைப் புரிந்து கொண்டு பாடுக.
Answer:
இப்பாடலைப் புரிந்து கொண்டு பாடிப் பழக வேண்டும்.

Question 2.
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வினாக்களுக்கு விடை அறிந்து கொள்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வினாக்களுக்கு விடை அறிந்து கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

Question 3.
பாடலில் உள்ளதுபோல், வேறு சில வினாக்களுக்குரிய விடைகளை அறிய முயல்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலில் உள்ளதுபோல், வேறு சில வினாக்களுக்குரிய விடைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
ரோஜாப்பூவில் ……………….. என்ற நிறமி இருக்கிறது.
அ) அல்ட்ராமெரைன்
ஆ) கருப்பு
இ) ஆந்தோசைனின்
ஈ) வெள்ளை
Answer:
இ) ஆந்தோசைனின்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

Question 2.
பூமியின் மீது சந்திரனின் ……………… விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.
அ) வளிமண்டலம்
ஆ) ஈர்ப்பு
இ) சுழற்சி
ஈ) மின்னிறக்கம்
Answer:
ஆ) ஈர்ப்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

விடையளி :

Question 1.
மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல மின்னுவதற்கு காரணம் என்ன?
Answer:
லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.

Question 2.
விண்மீன்கள் எவ்வாறு ஒளி வீசுகின்றன?
Answer:
விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன.

Question 3.
பறவைகள் பறப்பதற்கு உதவுவது எது?
Answer:
பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறவைகள் பறப்பதற்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 4.1 எதனாலே, எதனாலே?

Question 4.
மேகம் கறுப்பாக தோன்றக் காரணம் என்ன?
Answer:
மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.

பாடல் பொருள்

ஏன், எதற்கு, எப்படி என்னும் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைக் காரணகாரியங்களுடன் விளக்க முற்படுகிறது.

  • வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும் போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.
  • விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன.
  • ரோஜாப்பூவில் ‘ஆந்தோசைனின்’ என்ற நிறமி இருப்பதால், சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது.
  • கோடைக்காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன.
  • மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல் மின்னுகின்றன.  காரணம், லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.
  • பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறப்பதற்கு உதவுகின்றன.
  • மின்னிறக்கத்தால் மின்னல் மின்னுகிறது.
  • மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.
  • பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.