Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 6.1 உழவுப் பொங்கல் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 6.1 உழவுப் பொங்கல்

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
வையகம் என்பதன் பொருள்
அ) ஊர்
ஆ) வயல்
இ) உலகம்
ஈ) கிராமம்
Answer:
இ) உலகம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 2.
நலனெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) நலன் + எல்லாம்
ஆ) நல + னெல்லாம்
இ) நலன் + னெல்லாம்
ஈ) நலம் + எல்லாம்
Answer:
அ) நலன் + எல்லாம்

Question 3.
நிறைந்தறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) நிறைந்து + அறம்
ஆ) நிறைந்த + அறம்
இ) நிறை + அறம்
ஈ) நிறை + தறம்
Answer:
அ) நிறைந்து + அறம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 4.
‘இன்பம்’ – இச்சொல்லுக்குரிய எதிர்சொல் ……………
அ) மகிழ்ச்சி
ஆ) களிப்பு
இ) கவலை
ஈ) துன்பம்
Answer:
ஈ) துன்பம்

ஆ. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக
………………….,  …………………………

………………….,  ………………………..
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல் - 3

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

………………….,  …………………………

………………….,  ………………………..

Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல் - 2

ஈ. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

………………….,  …………………………

………………….,  ………………………..
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல் - 1

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் எது?
Answer:
அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில்.

Question 2.
உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?
Answer:
(i) எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது.
(ii) பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 3.
பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?
Answer:
பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவு பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்க வேண்டுமென கவிஞர் கூறுகிறார்.

ஊ. சிந்தனை வினா.

‘உழவர், சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும்’. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
Answer:
உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நாம் உணவின்றிதான் வாழ வேண்டும். உழவர்கள், பயிர்களை விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமைகிறது. எனவே, உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

கற்பவை கற்றபின்

Question 1.
உழவுத் தொழிலின் பெருமையை உணர்ந்து போற்றுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 2.
பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 3.
பாடலிலுள்ள நயங்களைப் பாராட்டுக.
எதுகை நயம் :
பொங்குக – எங்கணும்
வு – பம்
வு – பகு
ங்கம் – இங்கிதன்
வே – உவை
ழையும் – வாழி

மோனை நயம் :
பொங்குக – புதுவனம்
ங்கணும் – ர்த்தொழில்
ணவு – யிரோ
ணமும் – யிர்கள்
ழவும் – டையும்
ங்கம் – தானியம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

இயைபு :
பொங்குகவே – தங்குகவே
உணவுதரும் – அணியவரும்
உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம்

Question 4.
உழவு நடக்கும் இடத்திற்குச் சென்று, செய்தி திரட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
விழலாகும் என்பதன் பொருள்
அ) வீணாகும்
ஆ) எங்கும்
இ) பெருமை
ஈ) மகிழ்ந்து
Answer:
அ) வீணாகும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.1 உழவுப் பொங்கல்

Question 2.
நாமக்கல் வெ. இராமலிங்கனார் ………….. என்றும் போற்றப்படுகிறார்.
அ) தேசிய கவி
ஆ) காந்தியக் கவிஞர்
இ) உவமைக் கவிஞர்
ஈ) புரட்சிக் கவிஞர்
Answer:
ஆ) காந்தியக் கவிஞர்

Question 3.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் ……………
அ) பாரதிதாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ண தாசன்
ஈ) நாமக்கல் வெ. இராமலிங்கனார்
Answer:
ஈ) நாமக்கல் வெ.இராமலிங்கனார்

பாடல் பொருள்

உழவுத்தொழிலின் மேன்மையை இப்பாடல் விளக்குகின்றது. உழவின் சிறப்பால் பொங்குகின்ற பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் எனக் கூறுகின்றது. எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற தொழில் ஏர்த்தொழிலே. உணவுப்பொருள்கள் இல்லையென்றால் நாம் வாழ்வது அரிது. பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும். மற்ற தொழில்களைக் கற்றுக்கொண்டாலும், பயிர்த்தொழில் இல்லையெனில் எல்லாம் வீணாகும். தங்கம், வெள்ளி போன்றவற்றை நாம் உண்ண முடியாது. உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமையும். இன்பத்தைத் தருவதும் உழவுத்தொழிலே ஆகும். பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம்.

நூல் குறிப்பு

உழவுப் பொங்கலின் சிறப்பை விளக்கும் இப்பாடலை இயற்றியவர், நாமக்கல் வெ. இராமலிங்கனார். அவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து இப்பாடல் எடுத்தாளப் பெற்றுள்ளது. இந்திய விடுதலை குறித்தும், காந்தியடிகள் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளார். காந்தியக் கவிஞர் என்றும் போற்றப்படுகிறார். இவருடைய ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்னும் பாடல் வரி மிகவும் புகழ்பெற்றதாகும். ‘தமிழன் என்றோர் இனமுண்டு’ என்றும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் என்றும் நிலைத்திருப்பவை. இவர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.