Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்
கற்பவை கற்றபின்
Question 1.
வேற்றுமை அணி பயின்று வரும் இரு பாடல்களை விளக்கத்துடன் எழுதி வருக.
Answer:
பாடல் : 1
அங்கண் விசும்பின் அகனிலாப் பாறிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமருத்து
தெய்வர் ஒரு மாசுறின். – நாலடியார்
இப்பாடலில், திங்களுக்கும் சான்றோருக்கும் முதலில் ஒப்புமைக்கூறி பின்னர் வேறுபடுத்தப்பட்டுள்ளது.
அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும். விளக்கம்:
திங்கள் தேயும், சான்றோன் தேயார் (மனநிலை மாறார்) என்பதேயாகும்.
பாடல் : 2
அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
சான்று :
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – குறட்பா
பொருத்தம்:
தீயினால் உண்டான புண் உள் ஆறிவிடும்.
நாவினால் உண்டான புண் உள்ளத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.
Question 2.
‘தன்னேர் இலாத தமிழ்’ என்னும் தலைப்பில் சொற்போரில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை உருவாக்குக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பழமையும், பெருமையும் கொண்டது. இலக்கண, இலக்கியங்கள், சிறுகாப்பியம், பெருங்காப்பியம், தொகை, பாட்டு, ஆற்றுப்படை என எண்ணிலடங்கா நூல்கள் உருவாகி தமிழின் சிறப்பை உலகே தொழும் வகையில் அமைந்துள்ளது.
முதல் இடை கடைச்சங்கம் கொண்டது. தன்னிகரில்லா தன்மொழியாக விளங்கியது. தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது, பிறமொழி உதவி இல்லாமல், இடர்ப்பாடுகள் இல்லாமல் இயங்கும் ஆற்றல் கொண்டது.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் கொண்ட என் தமிழின் உதவியில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இயங்க முடியாது. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத மொழியாய் விளங்குகிறது.
நன்றி! வணக்கம்!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடியோனை
Answer:
இ) அடி எதுகை, சீர் மோனை
சிறுவினா
Question 1.
‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.
பொருள் :
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.
கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.
இலக்கணக் குறிப்பு
வெங்கதிர் – பண்புத்தொகை
உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இலாத – இடைக்குறை
உறுப்பிலக்கணம்
புணர்ச்சி விதி
1. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
- ‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்’ என்ற விதிப்படி, ஆங்க் + அவற்றுள் என்றானது.
- உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = க ) ஆங்கவற்றுள் என்று புணர்ந்தது.
2. தனியாழி = தனி + ஆழி
- ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, தனி + ய் + ஆழி என்றானது,
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ய் + ஆ = யா) ‘தனியாழி’ என்று புணர்ந்தது.
3. வெங்கதிர் = வெம்மை + கதிர்
- ‘ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ கெட்டு வெம் + கதிர் என்றானது.
- ‘முன்னின்ற மெய் திரிதல்’ என்ற விதிப்படி (‘ம்’ ‘ங்’ – ஆகத் திரிந்து) வெங்கதிர்’ என்று புணர்ந்தது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
அ) முத்துவீரியம்
ஆ) வீரசோழியம்
இ) மாறவைங்காரம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) மாறவைங்காரம்
Question 2.
கீழ்க்காண்பவற்றுள் ‘வினையாலணையும் பெயர்’ எது?
அ) உயர்ந்தோர்
ஆ) வந்தான்
இ) நடப்பான்
ஈ) உயர்ந்து
Answer:
அ) உயர்ந்தோர்
Question 3.
‘ஈறுபோதல்’, ‘முன்னின்ற மெய்திரிதல்’ எச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதி?
அ) கருங்குயில்
ஆ) வெங்கதிர்
இ) நெடுந்தேர்
ஈ) ழுதுமாம்
Answer:
ஆ) வெங்கதிர்
Question 4.
‘விளங்கி’ – இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு
அ) விள + ங் + இ
ஆ) விளங்கு + க் + இ
இ) வி + ளங்கு + இ
ஈ) விளங்கு + இ
Answer:
ஈ) விளங்கு + இ
Question 5.
கருத்து 1 : மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ்மொழியாகும்.
கருத்து 2 : புற இருளைப் போக்க கதிரவன் உதவும்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) கருத்து 1 சரி 2 தவறு
இ) கருத்து 1 தவறு 2 சரி
ஈ) இரண்டு கருத்தும் தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் சரி
Question 6.
கருத்து 1 : ‘தொன்னூல் விளக்கம்’ அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்.
கருத்து 2 : ‘குவலயானந்தம்’ என்னும் நூல் முழுமையான இலக்கண நூல்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) இரண்டு கருத்தும் தவறு
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) இரண்டு கருத்தும் தவறு
Question 7.
சரியானதைத் தேர்க.
அ) வீரசோழியம் – நாவல்
ஆ) முத்து வீரியம் – சிறுகதை
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்
ஈ) மாறனலங்காரம் – பொருளிலக்கணம்
Answer:
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்
Question 8.
சரியானதைத் தேர்க.
அ) வந்து – பெயரெச்சம்
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இ) இலாத – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) வெங்கதிர் – வினைத்தொகை
Answer:
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
Question 9.
பொருந்தாததைக் தேர்க.
அ) தமிழ்மொழி – பொதிகை மலை
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்
இ) தண்டியலங்காரம் – தண்டி
ஈ) காவியதர்சம் – வடமொழி இலக்கணம்
Answer:
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்
Question 10.
பொருத்துக.
அ) வெங்கதிர் – 1. இடைக்குறை
ஆ) இலாத – 2. வினையெச்சம்
இ) வந்து – 3. வினையாலணையும் பெயர்
ஈ) உயர்ந்தோர் – 4. பண்புத்தொகை
அ) 4, 2, 3, 1
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 3, 1, 4
Answer:
இ) 4, 1, 2, 3
Question 11.
தமிழ் தோன்றிய மலை
அ) குடகு
ஆ) பொதிகை
இ) இமயமலை
ஈ) விந்தியமலை
Answer:
ஆ) பொதிகை
Question 12.
தன்னேர் இலாத தமிழ் பாடப்பகுதியல் இடம்பெற்றுள்ள பாடல்
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
ஆ) இறையனார்களவியல் உரை மேற்கோள் பாடல்
இ) நம்பியகப்பொருள் உரை மேற்கோள் பாடல்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை உரை மேற்கோள் பாடல்
Answer:
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
Question 13.
இருளைப் போக்கும் இரண்டு
அ) கதிரவன், நிலவு
ஆ) கதிரவன், தமிழ்
இ) அறிவு, தமிழ்
ஈ) அறிவு, ஞானம்
Answer:
ஆ) கதிரவன், தமிழ்
Question 14.
மின்னலைப் போன்று ஒளிர்வது
அ) கதிரவன்
ஆ) தமிழ்
இ) தமிழ்
ஈ) வானம்
Answer:
அ) கதிரவன்
Question 15.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூலைக் கண்டறிக.
அ) வீரசோழியம்
ஆ) இலக்கணவிளக்கம்
இ) முத்து வீரியம்
ஈ) குவலயானந்தம்
Answer:
ஈ) குவலயானந்தம்
Question 16.
தண்டியலங்காரம் ……………. இலக்கணத்தைக் கூறும் நூல்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) அணி
Answer:
ஈ) அணி
Question 17.
‘ஓங்கலிடை வந்து’ என்று தொடங்கும் பாடல் தண்டியலங்காரத்தின் ………….. பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அ) பொருளணியியல்
ஆ) பொதுவியல்
இ) சொல்லணியியல்
ஈ) ஒழிபியல்
Answer:
அ) பொருளணியியல்
Question 18.
காவியதர்சம் என்பது
அ) வடமொழி இலக்கண நூல்
ஆ) புராண நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) மலையாள இலக்கிய நூல்
Answer:
அ) வடமொழி இலக்கண நூல்
Question 19.
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) வீரசோழியம்
ஈ) முத்துவீரியம்
Answer:
அ) தண்டியலங்காரம்
Question 20.
தண்டியலங்காரத்தின் ஆசிரியர்
அ) தண்டி
ஆ) ஐயரினாதர்
இ) சமணமுனிவர்
ஈ) பவணந்தி
Answer:
அ) தண்டி
Question 21.
தண்டி …………. ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
அ) கி.பி. 11
ஆ) கி.பி. 12
இ) கி.பி. 13
ஈ) கி.பி. 14
Answer:
ஆ) கி.பி. 12
Question 22.
தண்டியலங்காரம் …………… பெரும் பிரிவுகளை உடையது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று
குறுவினா
Question 1.
தண்டியலங்காரம் – நூல், நூலாசிரியர் சிறுகுறிப்பு தருக.
Answer:
அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று தண்டியலங்காரமாகும். எழுதியவர் தண்டி ஆவார். இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. தண்டியலங்காரம் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
ஆசிரியர் : தண்டி
காலம் : 12ஆம் நூற்றாண்டு
தழுவல் நூல் : காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலை தழுவி எழுதப்பட்டது.
மூன்று பிரிவுகள் : பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்.
Question 2.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
Answer:
தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.
Question 3.
அணியிலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள் யாவை?
Answer:
அணி இலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் ஆகும்.
Question 4.
தண்டியலங்காரத்தின் மூன்று பெரும் பிரிவுகள் யாவை?
Answer:
பொதுவியல், மாறனலங்காரம், சொல்லணியியல்.
Question 5.
ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே – விளக்குக.
Answer:
பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே ஆகும்.
Question 6.
புற இருளைப் போக்குவது எது?
Answer:
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவனாகும்.
சிறுவினா
Question 1.
தன்னேர் இலாத தமிழின் சிறப்புக் குறித்துத் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் உணர்த்தும் செய்தி யாது?
Answer:
(i) இந்நில உலகில் வாழும் மக்கள் அனைவராலும் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவன்.
(ii) குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றி, சான்றோர்களால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதும் எதனோடும் ஒப்பிட்டுக் கூற முடியாததுமானது தமிழ்மொழி.
(iii) புற இருளைப் போக்கும் கதிரவனைப்போல அக இருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்று தண்டியலங்கார உணர மேற்கோள் பாடல் உணர்த்துகின்றது.
Question 2.
பொருள் வேற்றுமையணியைச் சான்று தந்து விளக்குக.
Answer:
அணி இலக்கணம் :
செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.
சான்று :
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.
அணிப்பொருத்தம் :
கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும்
கதிரவன் புற இருளை அகற்றும்;
தமிழ்மொழி அக இருளை அகற்றும்.
விளக்கம் :
கதிரவன்
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் : கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்.
தமிழ்:
குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும் அத்தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இல்லை.