Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.4 முதல்கல் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.4 முதல்கல்
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்று ஒன்று தருவதாக முடிவு செய்துள்ளீர்கள். மரக்கன்று வாங்கும் நோக்கங்களையும் அதனைப் பயிரிடுவதால் ஏற்படும் பொது நன்மைகளையும் கொண்ட இருபக்கச் சிற்றேட்டை உருவாக்குக.
Answer:
மரக்கன்று வழங்குதன் நோக்கம் :
- மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழல்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குதல்.
- பழம், பட்சணம், வெற்றிலை போன்றவற்றைப் பையிலே போட்டுக் கொடுப்பதைவிட மரக்கன்றுகள் கொடுப்பது சாலச்சிறந்தது.
- சுற்றுச்சூழலை நல்லமுறையில் அமைக்கவே மரக்கன்றுகள் வழங்குதல்.
பொது நலன்கள் :
- மரக்கன்றுகள் வளர்ப்பதால் நல்ல தூய காற்று கிடைக்கும்.
- கோடையில் நிழல் உருவாகும்.
- மரங்கள் மாசுக்களைக் கட்டுப்படுத்தும்
- மரங்கள் குளிர்ச்சி தரும்
- குளிர்ச்சியால் மழை உண்டாகும்.
- மழை பொழிந்தால் மண் மகள் சிலிர்ப்பாள்.
- மழையால் பயிர்வளம் பெருகும்.
- பயிர்வளத்தால் விவசாயம் பெருகும்.
- விவசாயம் பெருகினால் வீடு நலம் பெறும்.
- வீடு நலம் பெற்றால் நாடு தானே வளம் பெறும்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
Answer:
முன்னுரை :
உலக உயிர்களை வாழவைப்பது மழை. அந்த மழையை நாம் முறையாகப் பாதுகாக்காமல் சில உயிர்களையும், பயிர்களையும் நாசமாக்குகிறோம். அதைக் கண்டு மனம் நொந்து தனி மனிதனாக இருந்து தம் ஊரைப் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்பு நலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மழையின் கோரம் :
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. நாற்றுப் பிடுங்கி, உரம் போட்டு நட்டு ஒரு வாரமே ஆன குழந்தை போல் காட்சியளித்த பயிர்கள் எல்லாம் மழையில் மூழ்கியது. உபரி நீர் வெளியேறவில்லை இப்படியே போனால் அழுகிவிடும் என்ன செய்வது என்று ஏங்கினான் மருதன்.
உபரிநீர் வெளியேற்றம் :
காற்றையும், மழையையும் பொருட்படுத்தாமல் கரை வழியே வந்தான். உபரித் தண்ணீர் வெளியேற வேண்டிய மதகை எட்டிப் பார்த்தான். மதகைச் சுற்றி மட்டுமல்லாமல் ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மண்டிக்கிடந்த நெய்வேலி காட்டாமணக்கு தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்.
மருதனின் நல்யோசனை :
மருதன், பயிர்கள் மூழ்காமலும் மொத்த கிராமங்களும் தப்பிக்க நல்ல வழியை யோசித்தான். தன் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி செடியைப் பிடுங்கி அரிந்தான்.
மாரி வருதல் :
மாரி இந்தச் சனியன்பிடிச்ச செடியாலதான் தண்ணி வடிய மாட்டேங்குது; நீ வாடா கொஞ்ச உதவி செய் என்றான் மருதன். அவன் மறுத்ததை எண்ணி மருதன் கோபம் அடைந்தான்.
மருதனின் ஆக்கம் :
இப்படியே போனால் ஊரே நாற்றம் எடுத்து விடும் என்று ஏக்கத்தோடு செடிகளைப் பிடிங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கிழவன் காளியப்பனிடம் கூறினான். அவர் பெரிய நிலக்கிழார் என்பதால் வீட்டு ஒருவர் வந்து செடிகளைப் பிடிங்கி பயிரையும், உயிரையும் காப்பாற்ற முடியும் என்று எண்ணி அவரிடமும் கூறினான். அவரும் பின் வாங்கினார். பிறகு பிரேம்குமாரைச் சந்தித்தான்; அவனும் பல காரணம் கூறிவிட்டு நகர்ந்தான்.
மருதனின் புலம்பல் :
வீடு திரும்பிய மருதன் ஊருக்கு ஏற்படும் ஆபத்தை யாரிடமும் சொல்லி பலன் இல்லை. மன 112 வலியால் துடித்தான் உண்ணவில்லை, உறங்கவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு மீண்டும் இரவோடு இரவாக காட்டாமணக்கு செடி பிடுங்க கிளம்பினான்.
அல்லி வருதல் :
முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் அல்லி. தன்னந்தனியே தண்ணீரில் மருதன் படும்பாட்டைக் கண்டு திகைத்தாள். அவளை அறியாமலேயே புடவையை : வரிந்துக்கட்டி வாய்க்காலில் இறங்கினாள்.
மாமா நீ சொல்றது நிஜம்தான். ஊரு நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். நீயும் நானும் சேர்ந்து செய்வோம் என்று செய்தாள்.
ஊர் மக்கள் வரல் :
நொடி நேரத்தில் ஊர் மிராசு காளியப்பன் வண்டியிலிருந்து குதித்து வேட்டியைக் கரையில் போட்டுவிட்டு வாய்க்காலில் இறங்கினார். வண்டிக்காரன் மூலம் செய்தி பரவியது. ஊரே கூடி வாய்க்காலை நோக்கி ஓடியது .
முடிவுரை :
”அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்”
என்பதற்கு ஏற்பவாழும் ஊருக்கு எவ்விதத்திலாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி ஆராய்ந்து செயல்பட்டு ஊரையே செயல்பட வைத்த மருதனின் பண்புநலன் பாராட்டத்தக்கது.
Question 2.
புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
ஊர்ப் பொது மக்கள்,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி.
பெறுநர்
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
திருநெல்வேலி.
ஐயா,
பொருள் : மின் இணைப்புகளைச் சரி செய்ய வேண்டுவது தொடர்பாக.
வணக்கம்.
கடந்த மாதம் நான்காம் நாள் பாளையங்கோட்டையில் வீசிய தானே புயலால் மரங்கள் மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவில் வெளியே செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. ஆதலால் அருள்கூர்ந்து அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைச் சரிசெய்து மின் இணைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி,
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப் பொது மக்கள்.
பாளையங்கோட்டை.
உறைமேல் முகவரி:
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
திருநெல்வேலி.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர்
அ) செல்வன்
ஆ) செயராஜ்
இ) செல்வராஜ்
ஈ) செல்லத்துரை
Answer:
இ) செல்வராஜ்
Question 2.
‘முதல்கல்’ சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு
அ) ஆரம்பம் இப்படித்தான்
ஆ) சிந்து டீச்சர்
இ) தஞ்சை சிறுகதைகள்
ஈ) குருவி மறந்த கூடு
Answer:
இ) தஞ்சை சிறுகதைகள்
Question 3.
‘முதல்கல்’ சிறுகதையின் ஆசிரியர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) உத்தம சோழன்
இ) ஜானகிராமன்
ஈ) சுஜாதா
Answer:
ஆ) உத்தம சோழன்
Question 4.
காளியப்பன் தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்ததாகக் கூறிய ஊர்
அ) வானமாதேவி
ஆ) உலகளந்தாள் தேவி
இ) சூரப்பள்ளம்
ஈ) கிழக்குக்கரை
Answer:
அ) வானமாதேவி
Question 5.
கூற்று 1 : வீட்டுக்கு ஒரு ஆள் அரிவாள், மண்வெட்டியுடன் வடிவாய்க்கால் கரைக்கு வர வேண்டும்.
கூற்று 2 : நீ சொல்வது நிஜம்தான் மாமா. ஊர் நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்கலாம்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி
Question 6.
கூற்று 1 : “இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரிந்து எறிவது லேசான காரியமா ?”
கூற்று 2 : ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால், ஒரே நாளில் வாய்க்காலும் தூய்மையாகிவிடும்.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி
Question 7.
சரியானதைத் தேர்க.
அ) மருதன் – குமுதம்
ஆ) பிரேம்குமார் – நாகூர்பிச்சை
இ) காளியப்பன் – வேலையாள்
ஈ) மாரிமுத்து – விவசாயி
Answer:
ஆ) பிரேம்குமார் – நாகூர்பிச்சை
Question 8.
சரியானதைத் தேர்க.
அ) 60 வேலி – ஊரின் மொத்த நிலம்
ஆ) அல்லி – மருதனின் அம்மா
இ) முல்லையம்மா – காளிப்பனின் தாய்
ஈ) காளியப்பன் – வசதியற்றவர்
Answer:
அ) 60 வேலி – ஊரின் மொத்த நிலம்
Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) வடிவாய்க்கால் – காட்டாமணக்குச் செடி
ஆ) பூவரச தழை – மாட்டுக்கு உணவு
இ) காளியப்பன் – வில் வண்டி
ஈ) மருதன் – அல்லி
Answer:
இ) காளியப்பன் – வில் வண்டி
Question 10.
பொருத்துக.
அ) முல்லையம்மா – 1. வலைபோடுபவர்
ஆ) நாகூர் பிச்சை – 2. அல்லி
இ) மாரிமுத்து – 3. காளியப்பன்
ஈ) மருதன் – 4. பிரேம்குமார்
அ) 3, 1, 2, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
இ) 3, 4, 1, 2
Question 11.
தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பினுக்கு உரியவர்
அ) செல்வராஜ்
ஆ) சோலை சுந்தரப் பெருமாள்
இ) மேலாண்மை பொன்னுசாமி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) சோலை சுந்தரப் பெருமாள்
Question 12.
உத்தம சோழனின் ஊர்
அ) கும்பகோணம் அருகே சிவபுரம்
ஆ) திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்
இ) கடலூர் அருகே மஞ்சக்குப்பம்
ஈ) மயிலாடுதுறை அருகே தேரழந்தூர்
Answer:
ஆ) திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்
Question 13.
மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) சோலை சுந்தரப் பெருமாள்
ஆ) உத்தமசோழன்
இ) மேலாண்மை பொன்னுச்சாமி
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) உத்தமசோழன்
Question 14.
உத்தமசோழன் எழுதாத சிறுகதையைக் கண்டறிக.
அ) தொலைதூர வெளிச்சம்
ஆ) கசக்கும் இனிமை
இ) கனல்பூக்கள்
ஈ) காவல்கோட்டம்
Answer:
ஈ) காவல்கோட்டம்
Question 15.
உத்தமசோழன் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வரும் திங்களிதழ்
அ) கிழக்கு வாசல் உதயம்
ஆ) மேற்கு வாசல் மறைவு
இ) வடக்கு வாசல் வாடை
ஈ) தெற்குவாசல் தென்றல்
Answer:
அ) கிழக்கு வாசல் உதயம்
Question 16.
‘முதல் கல்’ கதையில் இடம்பெறும் கிழவி ………….. கிழவன் …………………..
அ) முல்லையம்மாள், காளியப்பன்
ஆ) காளியம்மாள், முல்லையப்பன்
இ) மாரியம்மாள், மருதன்
ஈ) பார்வதி, சிவக்கொழுந்து
Answer:
அ) முல்லையம்மாள், காளியப்பன்
Question 17.
‘முதல் கல்’ கதையில் கிராமத்தின் முதல் பட்டதாரியாகக் குறிப்பிடப்படுபவர்
அ) மருதன்
ஆ) மாரி
இ) பிரேம்குமார்
ஈ) அல்லி
Answer:
இ) பிரேம்குமார்
Question 18.
‘முதல் கல்’ கதையில் பிரேம்குமாருக்குப் பெற்றோர் இட்ட பெயர்
அ) அமாவாசை
ஆ) பிச்சைமுத்து
இ) மாரியம்மாள், மருதன்
ஈ) நாகூர்பிச்சை
Answer:
ஈ) நாகூர்பிச்சை
Question 19.
‘முதல் கல்’ கதையில் மருதன் தொடங்கிய பணி
அ) நெல் அறுவடை
ஆ) வடிவாய்க்கால் தூய்மை
இ) கல் அறுத்தல்
ஈ) குளம் வெட்டுதல்
Answer:
ஆ) வடிவாய்க்கால் தூய்மை
Question 20.
‘முதல் கல்’ கதையின் நாயகன் மருதனின் மனைவி
அ) முல்லையம்மாள்
ஆ) மாரியம்மாள்
இ) அல்லி
ஈ) வள்ளி
Answer:
இ) அல்லி
நெடுவினா
Question 1.
‘ஊர்கூடித் தேர் இழுக்கும் போதும்’ தேர் வடத்தைப் பிடிக்கும் முதல்கரமான இருந்த மருதனின் பண்பு நலத்தை விவரி.
Answer:
முன்னுரை :
செல்வராஜ் என்னும் இயற்பெயருடைய உத்தம சோழன் எழுதிய முதல்கல்’ என்ற கதையில் வரும் மருதன் ஊர் மீது அதிக அக்கறை உடையவன். பெருமழை பொழிந்து வெள்ளமானது ஊரைச் சூழ்ந்து இருக்கும் நீரை வடிய வைத்து பயிர்களைக் காப்பாற்றும் முனைப்புடன் செயல்படும் மருதனின் பண்பு நலன்களை இக்கட்டுரை மூலம் அறிவோம்.
பயிர்களின் நேசன் :
பயிர் விளைச்சலுக்காக எந்த மழைக்காகக் காத்திருந்தார்களோ அந்த மழையே பயிர்களை மூழ்கடித்தால் எப்படி மனம் பொறுத்துக் கொள்ளும். பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவதைக் கண் டதும் மருதன் வருத்தம் அடைகின்றான். ஊரில் உள்ள பல நபர்களிடம் உதவியும் கேட்கின்றான். எதுவுமே நடக்கவில்லை என்றதும் வேதனை அடைகின்றான். தண்ணீரில் தத்தளித்துக் கொண் டிருந்த நெற்பயிர்கள் அத்தனையும், “என்னைக் காப்பாத்து, என்னைக் காப்பாத்து” என்று அவனைப் பார்த்து வேண்டுவதாக உணர்கிறான். இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.
ஊர் வளத்தைக் காப்பாற்றும் உயர்குணம் :
வடிவாய்க்கால் முழுவதும் இருபுறமும் சுவர்போல வளர்ந்திருந்த காட்டமாணக்குச் செடிகளை அப்புறப்படுத்தி விட்டால், பயிர்களைக் காப்பாற்றுவதுடன், ஊரையும் காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றியதும் மருதன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, வடிநீரை வடித்து ஊரைக்
காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணம் வந்ததும், தான் தனியாகச் செய்து மதிப்பு அடையலாம் என்று எண்ணாமல் அனைவருடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண் ணம் மேலிட ஒவ்வொருவரிடமும் உதவியைக் கேட்கும் உத்தம உயர்குணம் கொண்டவனாக மருதன் விளங்குகிறான்.
கடமையை உயிராகக் கருதியவன்
மருதன் காட்டாமணக்குச் செடிகளை அப்புறப்படுத்த மாரியிடம் உதவி கேட்கும் போதும் ; பெரிய மிரசாக வலம் வரும் காளியப்பனிடம் இது பற்றிப் பேசும் போதும் ; கிராமத்தின் முதல் பட்டதாரியான பிரேம்குமாரிடம் பேசி விவரத்தை விளக்கி ஏமாற்றம் அடையும் போதும் ; தன் ஆற்றாமையை தன் மனைவி அல்லியிடம் கூறிப் புலம்பும் போதும் மனம் தளராமல் தன் கடமையை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்ற அவனது மன உறுதிப்பாடு கூறிப் புலனாகும். தனியாளாகச் செய்ய முடியாத இச்செயலுக்காக எல்லோரின் உதவியையும் மருதன் நாடுவது அவனது பொதுநலனை வெளிப்படுத்துகின்றது.
மருதனின் பொதுநலன்
அந்த ஊரில் இருந்த அறுபது வேலி நிலத்தில் ஒரு ‘சக்கரைக்குழி’ அளவு கூட நிலம் இல்லாத மருதன் பொதுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு, எப்படியாவது நீரை வடித்துவிட வேண் டும் என்ற எண்ணத்துடனே மருதன் இருக்கின்றான். மருதன் அவனுக்குப் புகழ் கிடைக்க வேண் டுமென்று செயல்படவில்லை. நீரில் மூழ்கும் அத்தனை பயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; ஊரினைச் சூழ்ந்திருக்கும் நீரினை வடிய விட வேண்டும் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது.
ஊருக்கு வழிகாட்டிய தலைமைப்பண்புடையவன் :
இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்த மருதன் விடிவதற்குள் தனி ஒருவனாய் வடிவாய்க்காலில் இறங்கி இருபுறமும் சூழ்ந்திருந்த காட்டாமணக்குச் செடிகளை அரிந்து அப்புறப்படுத்தினான். இதனைக் கண்ட அவனது மனைவி அல்லியும் உதவிக்கு ஓடி வர,
வலைபோட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவும் அவனுடன் இணைய, செலவு வந்திடுமே என்ற எண்ணத்தால் மகள் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வில் வண்டியில் சென்று கொண்டிருந்த மிராசு 112 காளியப்பனும் வடிவாய்க்காலில் இறங்க ஊரே ஒன்றாகக் கூடிவந்து காட்டாமணக்குச் செடியை ஆர்வமாக அப்புறப்படுத்த மருதன், வழிகாட்டியாக விளங்கினான்.
முடிவுரை :
சுயநலம் இல்லாமல், பொதுநலனைக் கருத்தில் கொண்டு நாமே செயலில் இறங்கினால் வெற்றி பெறலாம் என்ற உயர்ந்த குணம் உடையவான மருதன் இருப்பதைக் காணலாம். நமக்கு :ஏன் வீண் வம்பு என்று ஒதுங்காமல் முதலில் நம்மால் முடிந்தததைச் செய்வோம் என்ற துணிவுடன் செயலில் இறங்கிய மருதன் தேர்வடத்தைப் பிடித்த முதல் கரமாக விளங்கினான்.