Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.2 தெய்வமணிமாலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.2 தெய்வமணிமாலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 1.
தெய்வமணிமாலைப் பாடல் கருத்துகளுக்கு இணையான திருக்குறள்களைத் தொகுத்துத் தருக.
Answer:
புறம்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும் (குறள் – 183)

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது (குறள் – 811)

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (குறள் – 6)

இனையர்இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. (குறள் – 790)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3)

அந்தணர் என்போர் அறவோர்மற்(று) எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறைப் பண்பு
ஆ) எதிர்மறைப் பண்பு
இ) முரண்பண்பு
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஆ) எதிர்மறைப் பண்பு

குறுவினா

Question 1.
‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ தொடருக்குப் பதவுரை எழுதுக.
Answer:
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

சிறுவினா

Question 1.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:
(i) சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

(iii) சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள்புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்.

(iv) நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும் என்று கந்தகோட்டத்துக் கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார்.

நெடுவினா

Question 1.
சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தக்கோட்டப்பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப் படுகின்றன?
Answer:
மயிலாப்பூர்:
(i) இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.

(ii) அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும்.

கந்தகோட்டம்:
(i) அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே!

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(iii) உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.

(iv) நல்ல அறிவும், கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தகோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார்.

இலக்கணக் குறிப்பு

மலரடி – உவமைத்தொகை
மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வளர்தலம் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ
நினை – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பேசுவார் = பேசு + வ் + ஆர்
பேசு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

வைத்து = வை + த் + த் + உ
வை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

புணர்ச்சி விதி

1. உள்ளொன்று = உள் + ஒன்று

  • ‘தனிக்குறில் முன் உயிர்வரின் ஒற்று இரட்டும்’ என்ற விதிப்படி, உள்ள + ஒன்று என்றானது.
  • ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ள் + ஒ = ளொ) உள்ளொன்று எனப் புணர்ந்தது.

2. ஒருமையுடன் = ஒருமை + உடன்

  • ‘இஈஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, ஒருமை + ய் + உடன் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ (ய் + உ = யு) ஒருமையுடன் என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவர்
அ) வள்ளலார்
ஆ) ஞானியாரடிகள்
இ) கிருபானந்த அடிகள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) வள்ளலார்

Question 2.
வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது
அ) வள்ளுவர் கோட்டம்
ஆ) கந்த கோட்டம்
இ) தில்லை கோட்டம்
ஈ) கணபதி கோட்டம்
Answer:
ஆ) கந்த கோட்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 3.
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம்
அ) சென்னை
ஆ) வடலூர்
இ) கடலூர்
ஈ) சிதம்பரம்
Answer:
அ) சென்னை

Question 4.
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் என்று பாடியவர்
அ) இராமலிங்க அடிகள்
ஆ) ஞானியாரடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
அ) இராமலிங்க அடிகள்

Question 5.
தெய்வமணிமாலையின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Answer:
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Question 6.
துறவுக்கு எதிரான ஆசை என்று வள்ளலார் குறிப்பிடுவது.
அ) மண்ணாசை
ஆ) பெண்ணாசை
இ) பொன்னாசை
ஈ) புகழாசை
Answer:
ஆ) பெண்ணாசை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) மலரடி – 1. பெயரெச்சம்
ஆ) மறவா – 2. வினையெச்சம்
இ) வளர்தலம் – 3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நினைக்கின்ற – 4. வினைத்தொகை
உ) வைத்து – 5. உவமைத்தொகை

அ) 5, 3, 4, 1, 2
ஆ) 4, 3, 5, 2, 1
இ) 2, 1, 3, 5, 4
ஈ) 5, 2, 1, 3, 4
Answer:
அ) 5, 3, 4, 1, 2

Question 8.
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ……………. திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்

Question 9.
இராமலிங்க அடிகள் பிறந்த ஊர்
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்
ஆ) கடலூரை அடுத்த வடலூர்
இ) தஞ்சையை அடுத்த வல்லம்
ஈ) மயிலாடுதுறையை அடுத்த தேரழந்தூர்
Answer:
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 10.
திருவருட்பா ………….. திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) பன்னிரு
ஈ) பதினாறு
Answer:
இ) பன்னிரு

Question 11.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிரியர்
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
ஆ) இராமலிங்க அடிகள்

குறுவினா

Question 1.
இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.

Question 2.
இராமலிங்க அடிகளாரின் சீர்த்திருத்த சிந்தனை யாவை?
Answer:
ஆன்ம நேயம், சமய ஒருமைப்பாடு, ஒளி வழிபாடு.

Question 3.
இராமலிங்க அடிகளார் திருவருட்பா மூலம் வெளிப்படுத்தும் செய்தி யாது?
Answer:

  • வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்.
  • ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 4.
வள்ளலார் தெய்வமணிமாலை எங்கு வீற்றிருக்கும் இறைவன் மீது பாடியுள்ளாா?
Answer:
சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமான் மீது பாடியுள்ளார்.

Question 5.
திருவருட்பா – குறிப்பு வரைக.
Answer:

  • திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • திருவருட்பா – 5818 பாடல்கள்.
  • பா – ஆசிரியவிருத்தம்.
  • தொகுப்பு – ஆறு திருமுறை.
  • பாடப்பகுதி – ஐந்தாம் திருமுறை – தெய்வமணிமாலை.

சிறுவினா

Question 1.
வள்ளலார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – இராமலிங்க அடிகளார்
பெற்றோர் – இராமையா – சின்னமை
உடன்பிறந்தோர் – சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை சுந்தராம்பாள்
பிறப்பு – அக்டோபர் 5, 1823
ஊர் – மருதூர் – சிதம்பரம்
சிறப்பு – ஆன்மீகவாதி, சத்திய ஞான சபையை நிறுவியவர்.
முழக்கம் – அருட்பெருஞ்ஜோதி-தனிபெருங்கருணை வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.