Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

Question 1.
1. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
2. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:

  1. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தருவேன்.
  2. எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணத்திற்காக, தன்மானம் இழந்த நிலை போக்க அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருவேன்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையினைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை
சுப்ரபாரதிமணியன் இயற்றிய ‘பள்ளி மறுதிறப்பு’ சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம். மதிவாணனும் கவினும்

மதிவாணனும் கவினும்
ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடைவிடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். கவின் தான் மீண்டும் பள்ளிக்குப் போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டா, வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான்.

மதிவாணனின் சிந்தனை
படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவரைப் போல உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

படிக்காதவரின் நிலை
பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர். அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தப் பேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாதா என்றார் பெரியவர்.

அதற்கு ஒருவன் ஏன் உங்களுக்குப் படிக்கத் தெரியாத என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது. போகும் பேருந்து வரும் போது சொல்கின்றேன் என்றான். இதையெல்லாம் பார்த்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தான் மதிவாணன்.

முடிவுரை
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதைப் புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.4 பள்ளி மறுதிறப்பு

சுப்ரபாரதிமணியன்
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகிய கருத்துகளை மையமாக வைத்து தம் படைப்புகளைப் படைப்பவர். கனவு என்னும் இதழை நடத்தி வருபவர்.

படைப்புகள் : பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை முதலியன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 1.
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக.
(எ.கா.) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
Answer:

  1. இளமையில் கல்.
  2. கேடில் விழுச்செல்வம் கல்வி.
  3. கற்க கசடற.
  4. ஓதுவது ஒழியேல்!
  5. கல்விக்கு அழகு கசடற மொழிதல்
  6. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக்
  7. கடலின் பெருமை கடவார்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ………………
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
Answer:
ஆ) காலம் அறிதல்

Question 2.
கல்வியில்லாத ………………….. நாடு
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
Answer:
அ) விளக்கில்லாத

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 3.
‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ………………
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) பாரதியார்

Question 4.
‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
Answer:
ஈ) உயர்வு + அடைவோம்

Question 5.
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………..
அ) இவை எல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Answer:
ஆ) இவையெல்லாம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. செல்வம் – கல்விச்செல்வம் என்றும் அழியாதது.
2. இளமைப்பருவம் – இளமைப்பருவம் கல்விக்கு உரிய பருவம் ஆகும்.
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

குறு வினா

Question 1.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச்சொல்ல முடியும். ஆனால், மனிதப் பிறவியின் எதிர்காலத்தைக் கூறவே முடியாது. இதுவே மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

Question 2.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

Question 3.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
Answer:
படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆழ்ந்து ,ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

சிறு வினா

Question 1.
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
Answer:

  1. உலகில் எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும்.
  2. இருபது இருபத்தைந்தாண்டுக்கு முன் இங்கு இருந்த ஆலமரம் எங்கே என்றால் புயலில் விழுந்துவிட்டது என்போம்.
  3. இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால், மழையால் இடிந்து விட்டது என்பர்.
  4. 10 ஆண்டுக்கு முன் 2 இலட்சம் ரூபாய் வைத்திருந்தவர். இன்று இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்போம்.

எல்லாம் அழியும். ஆனால் கல்வி அப்படியன்று. 10 ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்றவர் இன்று 10ம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கல்வி அழியாதது. வள்ளுவரும் ”கேடில் விழுச்செல்வம் கல்வி …..” என்கின்றார்.

Question 2.
கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Answer:
கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாதவீடு. விளக்கில்லாதவீட்டில் யார்குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சிந்தனை வினா

Question 1.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:

  1. உண்மைப் பொருளை விளக்க வேண்டும்.
  2. நன்னெறிப் பாதை காட்ட வேண்டும்.
  3. அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.
  4. எளிமை, தெளிவு ஆகியவை கொண்ட நடையில் இருத்தல் வேண்டும். –
    ஆகியன நல்ல நூலின் இயல்புகளாக நான் கருதுவன ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திருக்குறளனார் என்று அழைக்கப்படுபவர் ……………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூ ல்களை எழுதியவர் …………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Question 3.
உலகில் மிகவும் அருமையானது ……………..
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 4.
………………… ஓர் ஒளி விளக்கு.
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 5.
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்று கூறியவர் ………….
அ) வீ.முனிசாமி
ஆ) திருவள்ளுவர்
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
ஆ) திருவள்ளுவர்

குறுவினா

Question 1.
திருக்குறளார் வீ.முனிசாமி இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. வள்ளுவர் உள்ளம்
  2. வள்ளுவர் காட்டிய வழி
  3. திருக்குறளில் நகைச்சுவை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள் விளங்கும் என்பதற்கு திருக்குறளனார் கூறும் ஒப்புமை யாது?
Answer:
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள்விளங்கும் என்பதற்குதிருக்குறளனார் கூறும் ஒப்புமை கத்தரிக்காய், வாழைக்காய், கீரை இவை எல்லாம் பூமிக்கு மேல் விளையும். சில மண்ணுக்குள்ளே இருக்கும் அதை நாம் தான் தோண்டி எடுக்க வேண்டும் என்பதாகும்.

Question 3.
திருக்குறளனாரின் புகழ்பெற்ற நூல் எது?
Answer:
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

Question 4.
பள்ளி பற்றி பாரதியாரின் கருத்து யாது?
Answer:
நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். அதனால் தான் ”பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்றார்.

Question 5.
விளக்கில்லாத வீடு எது?
Answer:
கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு ஆகும்.

Question 6.
கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் யார்?
Answer:
திருவள்ளுவரே கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் ஆவார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 7.
எவை அழியும் என்பதற்குத் திருக்குறளனார் கூறும் உவமைகள் எவை?
Answer:

  1. ஆலமரம்
  2. பெரிய கட்டடம்
  3. இரண்டு இலட்ச ரூபாய் பணம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.2 அழியாச் செல்வம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.2 அழியாச் செல்வம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 1.
கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
Answer:

  1. ஓதுவது ஒழியேல்! – ஔவையார்
  2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன்
  3. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார். – நன்னெறி
  4. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. – திருக்குறள்

Question 2.
கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றினை அறிந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்காமல் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும் இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது என்றார். இந்த நீரைக்குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றார். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் …………………..
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்வியைப் போல் ……………… செல்லாத செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
Answer:
அ) விலையில்லாத

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 3.
‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
அ) வாய்த்து + ஈயின்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
Answer:
அ) வாய்த்து + ஈயின்

Question 4.
‘கேடில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) கேடி + இல்லை
ஆ) கே + இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
Answer:
ஈ) கேடு + இல்லை

Question 5.
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) எவன் ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
Answer:
இ) எவனொருவன்

குறுவினா

Question 1.
கல்விச் செல்வத்தின் இயல்புகளாகி நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் பிறரால் கொள்ளப்படாது. கொடுத்தாலும் குறையாது, அரசரால் கவர முடியாது.

சிறுவினா

Question 1.
கல்விச்செல்வம் குறித்த நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

சிந்தனை வினா

Question 1.
கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்? – சிந்தித்து எழுதுக.
Answer:

  1. நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
  2. திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.
  3. கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.
    – எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ………………
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Question 2.
நாலடியார் …………….. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேல்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 3.
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் ……………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

Question 4.
திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் …………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) பழமொழி
ஈ) திரிகடுகம்
Answer:
ஆ) நாலடியார்

Question 5.
விச்சை என்பதன் பொருள் ……………
அ) கல்வி
ஆ) பொருள்
இ) களவு
ஈ) அரசர்
Answer:
அ) கல்வி

சிறுவினா

Question 1.
நாலடியார் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  1. சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார்.
  2. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  3. 400 வெண்பாக்களால் ஆனது.
  4. அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்பு கொண்டது.
  5. இது நாலடி நானூறு, வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படும் நூல்.
  6. திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத் தக்க நூல் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.2 அழியாச் செல்வம்

சொல்லும் பொருளும்

1. வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்
2. கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
3. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
4. விச்சை – கல்வி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.4 ஆறாம் திணை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.4 ஆறாம் திணை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

நெடுவினா

Question 1.
தமிழர் வாழ்வோடும் புலம்லெர் நிகழ்வுகளோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு
இணைக்கப்படுகிறது? (அல்லது) புலம் பெயர்ந்த வலியையும் வாழ்வையும் ஆறாம் திணை வாயிலாக நீவிர் அறிவதைத் தொகுத்து எழுதுக.
Answer:
அகதிகள் முகாம் வாரிக்கை :
இலங்கை, மவண்லவினியாவில் வாடகை வீட்டில் வாழ்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, இனக் கலவரத்தின்போது வீட்டுக்காரரான சிங்களவரால் அன்று இரவு காப்பாற்றப்பட்டு, மறுநாள் அகதிகள் முகாமுக்குச் சென்றது. அங்கே யாரோ அணிந்த மேல்சட்டையை மட்டும் ஒருவர் மாற்று உடையாகப் பெற்றார். தன் அக்காகத் தட்டு ஏந்தி நின்றபோது, இப்படி ஒருகணம் தம் வாழ்வில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து, உறுதியாக இருந்துள்ளார். பலவருடம் பல தேசங்களில் சுற்றி அலைந்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

பலம் பெயர்தல் காரணம் :
புலம்பெயர்தல் என்பது, புதிதன்று. சங்ககாலத்தில் ஐந்நிலத்தில் வாழ்ந்த தமிழர், புலம்பெயர்ந்து வாழ்ந்ததை, இலக்கியங்களில் காணமுடிகிறது. அவர்கள் உயிர்க்காகவும், பொருள் தேடவும் புலம்பெயர்ந்தபோதும், ‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்பாழ்’ எனத் தனிமகனார் பாடியுள்ளார். அக்காலத்தில் அரசனின் சீற்றத்திற்கு அஞ்சிப் புலம்பெயர்ந்ததுபோலச் சமீப காலங்களில் தம்மைப் போன்றோர் புலம் பெயர நேரிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீய சிந்தனையைச் சாக அடித்தவர்கள் :
கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், சில வருடங்களில் தமிழ்ப் பத்திரிகைககள் தொடங்கி, கோரிக்கைகள் வெற்றி பெறாதநிலையில் நிரந்தர வேலையும் அடுத்தவேளை உணவும் நிச்சயமில்லா நிலையிலும், தங்கள் புதுவாழ்வைப் பதிவு செய்கின்றனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

புலம்பெயர்ந்தோர் சாதனை :
புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழைக் கைவிடும் என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கி, கணினி யுகத்தில் தமிழ்கற்று உயர் இலக்கியங்களைப் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துகிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை புலம் பெயர்ந்த தமிழர்கள், பத்துலட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள். ஒருகாலத்தில் சூரியன் மறையாத பிரிட்டிஷ் ராச்சியம் என்று சொன்னதுபோல், இன்று ‘சூரியன் மறையாத தமிழ்ப்புலம்’ என்று, புலம் பெயர்ந்த தமிழர்கள் தோற்றுவித்துள்ளனர்.

கனடாவில் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பெயரை மாற்றவோ, சிதைக்கவோ முடியாது. 2012முதல் ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவை ஈழத் தமிழரின் புலம்பெயர்ந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

ஆறாம் திணையும் ஆறுமணிக் குருவியும் :
ஆசிரியரின் ஈழத்துக் கொக்குவில் கிராமத்தில் காகமும் ஆறுமணிக் குருவியும் இருந்தன. காகம் பறக்க இரண்டு மைல் தூரமே எல்லை. ஆறுமணிக் குருவி, இமயத்தைக் கடந்தும் சென்று தரும்புமாம். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்த ஆறுமணிக் குருவிபோல, அவர்களுக்கு பொலை கிடையாது. இனி அந்தத் தமிழர்களின் புலம், பனியும் பனிசார்ந்த நிலமும். அதுவே ஆறாம்திணை என, அ. முத்துலிங்கம் பாகுபடுத்திக் கூறியுள்ளது சிறப்பாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.3 நன்னூல் பாயிரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

குறுவினா

Question 1.
பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
Answer:
நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
பவணந்தி முனிவர் – குறிப்புத் தருக.
Answer:

* ‘நன்னூல்’ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்.
* தம்மை ஆதரித்த சிற்றரசன் சீயகங்கனின் வேண்டுதலால், இந்நூலைப் பாடியதாகப் பாயிரம் கூறுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 3.
பாயிரம் எதற்கு உதவுகிறது?
Answer:
நூலைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கும், நூலைப் புரிந்துகொள்வதற்கும், நூலின் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்பதற்கும் பாயிரம் உதவுகிறது.

Question 4.
பாயிரத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புணர்ந்துரை என்பன, பாயிரத்தின் வேறு பெயர்கள்.

Question 5.
நன்னூல் எழுத்ததிகாரப் பகுதிகள் யாவை?
Answer:
எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என்னும் ஐந்தும், நன்னூல் எழுத்ததிகாரப் பகுதிகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 6.
நன்னூல் சொல்லதிகாரம் உணர்த்தும் பகுதிகள் எவை?
Answer:
பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என்னும் ஐந்தும், நன்னூல் சொல்லதிகாரம் உணர்த்தும் பகுதிகளாகும்.

Question 7.
எது சிறந்த நூலாக மதிக்கப்படாது?
Answer:
ஆயிரம் முகத்தைப் பெற்றிருந்தாலும், பல்வேறு துறைசார்ந்த செய்திகளை விரிவாகப் பெற்றிருந்தாலும், அந்த நூலுக்குப் பாயிரம் இல்லை என்றால், அது சிறந்த ந வராக மதிக்கப்படாது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

சிறுவினா

Question 1.
நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:
நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

நெடுவினா

Question 1.
நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.
Answer:
பாயிரம் :
நூலை உருவாக்கும் ஆசிரியரின் திறம் வாயும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் (1) பொதுப்பாயிரம், ம சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

(i) பொதுப்பாயிரம் :
எல்லா நூல்களின் முன்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும்.

நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை
மாணவரின் இயலபு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

(ii) சிறப்புப்பாயிரம் :
தனிப்பட்ட பல நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும்.
நூல் சிரியரின் பெயர்
நூல் பின்பற்றிய வழி
நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு;
நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு;
நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்;
இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்;
இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

இலக்கணக் குறிப்பு

மாநகர் – உரிச்சொற்றொடர்
காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்
கேட்போர், நுவல்வோன், கொள்வோன், ஆக்கியோன் – வினையாலணையும் பெயர்கள்
ஐந்தும் – முற்றும்மை
அமைதோள் – உவமைத்தொகை
மாடக்கு – ‘அத்து’ச் சாரியை தொக்கி நின்றது
ஆடமை (ஆடு அமை) – வினைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

உறுப்பிலக்கணம்

1. வைத்தார் – வை + த் + த் + ஆர்.
வை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

2. கொள்வோன் – கொள் + வ் + ஓன்.
கொள் – பகுதி, ‘வ்’ – எதிர்கால இடைநிலை, ஓன் – ஆண்பால் வினை சற்று விகுதி.

3. நின்ற – நில் (ன்) + ற் + அ.
நில் – பகுதி ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், அ – பெயயெச்ச விகுதி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

4. ஏற்றி – ஏற்று + இ
ஏற்று – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. அணிந்துரை – அணிந்து + உரை “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அணிந்து + உரை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்ரே’ அணிந்துரை )

2. பொதுச்சிறப்பு – பொது + சிறப்பு
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பொதுச்சிறப்பு)

3. பயனோடு – பயன் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (பயனோடு)

4. முன்னுரை – முன் + உரை
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (முன்ன் + உரை)
“உடல்மேல் உயிர்த்து ) ஒன்றுவது இயல்பே” (முன்னுரை )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

5. நூன்முகம் – நூல் + முகம்
“லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும் ஆகும்” (நூன்முகம்)

6. நூற்பெயர் – நூல் + பெயர்
“லௗ வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (நூற்பெயர்)

7. நன்னூல் – நன்மை + நூல்
நறுபோதல்” – நன் + நூல், “னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” (நன் + னூல்)

8. தந்துரை – தந்து + உரை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (தந்த் + உரை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தந்துரை )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

9. பொதுப்பாயிரம் – பொது + பாயிரம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பொதுப்பாயிரம்)

பலவுள் தெரிக

Question 1.
பாயிரம் இல்லது ……………. அன்றே
அ) காவியம்
ஆ) பனுவல்
இ) பாடல்
ஈ) கவிதை
Answer:
ஆ) பனுவல்

Question 2.
நன்னூலின் ஆசிரியர்………………
அ) தொல்காப்பியர்
ஆ) அகத்தியர்
இ) பவணந்தி முனிவர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
இ) பவணந்தி முனிவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 3.
நன்னூல் கூறும் இலக்கண வகை ………………..
அ) எழுத்து, பொருள்
ஆ) சொல், பொருள்
இ) யாப்பு, சொல்
ஈ) எழுத்து, சொல்
Answer:
ஈ) எழுத்து, சொல்

Question 4.
நன்னூலைப் பவணந்தி முனிவர், ………………..வேண்டுதலால் இயற்றினார்.
அ) பாரிவள்ளல்
ஆ) சீதக்காதி
இ) சீயகங்கன்
ஈ) சடையப்பர்
Answer:
இ) சீயகங்கன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 5.
நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை
அ) 4
ஆ) 3
இ) 5
ஈ) 2
Answer:
ஈ) 2

Question 6.
நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பதால், ……………………… எனப்பட்டது.
அ) முகவுரை
ஆ) புனைந்துரை
இ) புறவுரை
ஈ) அணிந்துரை
Answer:
அ) முகவுரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 7.
நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து உரைப்பது …………..
அ) முகவுரை
ஆ) நான்முகம்
இ) தந்துரை
ஈ) புறவுரை
Answer:
இ) தந்துரை

Question 8.
எல்லாவகை நூல்களுக்கும் அழகு சேர்ப்பது …………….
அ) அணிந்துரை
ஆ) தந்துரை
இ) சிறப்புரை
ஈ) பதிகம்
Answer:
அ) அணிந்துரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 9.
நூலின் முதன்மையான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதால் ……………….எனப்பட்டது.
அ) முகவுரை
ஆ) தந்துரை
இ) பதிகம்
ஈ) அணிந்துரை
Answer:
இ) பதிகம்

Question 10.
நூலுக்கு அணியாக அமைவது………………..
அ) முகவுரை
ஆ) நூன்முகப்பு
இ) புனைந்துரை
ஈ) அணிந்துரை
Answer:
ஈ) அணிந்துரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 11.
நூலின் கருத்தோடு அதன் வரலாற்றையும் எடுத்துரைப்பது………………..
அ) தந்துரை
ஆ) அணிந்துரை
இ) புறவுரை
ஈ) பதிகம்
Answer:
இ) புறவுரை

Question 12.
மாடங்களுக்கு அழகு தருவது ……………………..
அ) நகரங்கள்
ஆ) மகளிர்
இ) ஓவியங்கள்
ஈ) வண்ணங்கள்
Answer:
இ) ஓவியங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 13.
பெரிய நகாங்களுக்கு அழகு சேர்ப்பவை ………………
அ) மாடங்கள்
ஆ) நகரங்கள்
இ) வண்ணங்கள்
ஈ) கோபுரங்கள்
Answer:
கோபுரங்கள்

Question 14.
அனலன்கள் அழகு சேர்ப்பது………………..
அ) குழந்தைகளுக்கு
ஆ) அங்காடிகளுக்கு
இ) மகளிருக்கு
ஈ) சிலைகளுக்கு
Answer:
இ) மகளிருக்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 15.
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே – அடி எதுகையைத் தெரிவு செய்க.
அ) ஆயிரம் முகத்தான் – அகன்றது ஆயிரம்
ஆ) ஆயிரம் முகத்தான் – பாயிரம் இல்லது
இ) பாயிரம் இல்லது – பனுவல் அன்றே
ஈ) அகன்றது ஆயினும் – பனுவல் அன்றே
Answer:
ஆ) ஆயிரம் முகத்தான் – பாயிரம் இல்லது

Question 16.
நன்னூலுக்குத் தொடர்பில்லாதது ……………..
அ) முகவுரை, பதிகம், அணிந்துரை
ஆ) நூன்முகம், புறவுரை, தந்துரை
இ) வேற்றுமையணி, வேற்றுப்பொருள்வைப்பணி
ஈ) பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம்
Answer:
இ) வேற்றுமையணி, வேற்றுப்பொருள்வைப்பணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 17.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம் - 1
Answer:
i – ஈ,
ii – இ,
iii – ஆ,
iv – அ.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 18.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம் - 2
Answer:
i – ஆ,
ii – ஈ ,
iii – அ,
iv – இ.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

குறுவினாக்கள்

Question 1.
பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
Answer:
எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 2.
இந்திரனின் பிற நூல்கள் யாவை ?
Answer:
இந்திரனின் பிற நூல்கள் : முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தம் அழகியல், நவீன ஓவியம்.

Question 3.
வால்ட்விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதைநூல் எது?
Answer:
‘புல்லின் இதழ்கள், வால்ட் விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதை நூல்.

Question 4.
‘நான்’ உதயமானது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:
*உலகம்’ என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்டபிற்கு உலகத்திலிருந்து நான்’ என்பது தனித்துப் பிரிந்து உதயமானதாக இந்திரன் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 5.
சொற்கள் எதற்கு உதவும் ?
Answer:
உணர்ச்சியினால் நிரம்பி இருக்கிறபோது, அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும்.

Question 6.
புதுக்கவிதை என்பது எது?
Answer:
மரபு சார்ந்த செய்யுள்களின் இலக்கணக் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதையே, புதுக்கவிதையாகும்.

Question 7.
குறியீட்டுக்கவிதை என்பது எது?
Answer:
குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வது அன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

Question 8.
புதுக்கவிதையின் இருப்பு யாது?
Asnwer:

  • புதுக்கவிதை, தன்னைப் படிப்பவரின் ஆழ்மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப, விரிவடையும் பன்முகத் தன்மையும் கொண்டிருக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 9.
பேச்சுமொழி எழுத்துமொழிக் கவிதை குறித்து இந்திரன் கூறுவது யாது?
Answer:

  • “பேச்சுமொழியில் செய்யப்படுகிற கவிதைச் சொற்கள், உடம்பின் மேல்தோல் போல் இயங்குகின்றன.
  • எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் மூடிப் போர்த்தி விடுகின்றன’ என, இந்திரன் கூறுகிறார்.

Question 10.
எது கவிஞனின் கடமையாகிறது?
Answer:
கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், கவிதைக்கான உலகத்தைத் தட்டி எழுப்புகிறது. எனவே, எத்தகைய மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்துகிறோமோ, அதன் குணாம்சங்களையும், பேச்சு வழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது.

Question 11.
‘வால்ட்விட்மன்’ குறித்து எழுதுக.
Answer:

  • ‘வால்ட்விட்மன்’, அமெரிக்காவைச் சேர்ந்தவர்; ஆங்கிலக் கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; ‘புதுக்கவிதை’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
  • இவர் படைத்த ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of Grass) உலகப் புகழ்பெற்ற நூல்.

Question 12.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’ குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:

  • கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்; பிரெஞ்சுக் கவிஞர். இவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ‘சிம்பலிஸம்’ என்கிற ‘குறியீட்டியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 13.
‘பாப்லோ நெரூடா’ குறித்து நீ அறிவன யாவை?
Answer:
கவிஞர் பாப்லோ நெரூடா’, தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞர். தம் கவிதைகளுக்காக, 1971ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

சிறுவினாக்கள்

Question 1.
‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
Answer:
எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய மாட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளிமான மொழியைக் கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொரும் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 2.
கூற்று : குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
கவிதை : கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க
கூற்றில் ‘குறியீடு’ எனக் குறிப்பிடுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?
Answer:

  • குறியீட்டுக் கவிதை என்பது அந்த வேளையில் கண்டதன் நுண்பொருளைச் சிந்திக்கத் தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்)
  • பறவைகளைக் கூட்டில் அடைத்து வைத்துச் சோதிடம் பார்ப்பதை அனைவரும் அறிவர். கூட்டைத் திறப்பது பறவைக்குச் சுதந்தரம் தருவதற்காகவா? அன்று.
  • அது சிறகசைத்துப் புறதை மறக்க அடித்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள். அதற்கென ஒரு கொத்தடிமைத் தொழிலை முடிவு செய்கிறார்கள். இந்தக் குறியீடு, சமூக அவலத்தை வெளி ப்படுத்தும்; சுருக்கமாகச் சுட்டிக்காட்ட உதவும்.

கூடுதல் வினாக்கள்

Question 3.
மொழி அளித்த திறன்களாக இந்திரன் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • மொழி தோன்றியவுடன், உலகம் கவனிப்புக்கு உரியதாக மாறியது. மொழி என்னும் சாவியால் திறந்தபோதெல்லாம், பெயர் சூட்டப்படாத பலவற்றைக் காணவும், அவற்றிற்குத் தாம் விரும்பும் பெயரைச் சூட்டவும் முடிந்தது.
  • அவற்றை விதவிதமான அடுக்குகளில், அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப ஒருமை, பன்மை ‘ பிரித்து அடுக்கும் திறனையும் மொழி வழங்கியதாக இந்திரன் கூறியுள்ளார்.

Question 4.
‘மொழி அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்தது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:

  • வேலையில் மூழ்கியுள்ள தாயைக் குழந்தை ‘அம்மா’ என அழைத்தபோது கவனியாதவர், அவர் பெயரைச் சொல்லி அழைத்ததும் திடுக்கிட்டுத் திரும்பி வருகிறார்.
  • அப்போதுதான், பெயர்களிட்டு அழைக்கும்போது அவற்றின் மீது, ஓர் அதிகாரத்தை மொழி உருவாக்கிக் கொடுப்பதை உணரத் தலைப்பட்டதாக இந்திரன் கூறுகிறார்.

Question 5.
‘கவிதை என்பது எது’ என்பதற்கு இந்திரன் தரும் விளக்கம் யாது ?
Answer:

  • மொழிக்குள் உலகையும், உலகிற்குள் மொழியையும் முழுமையாக நுழைத்துவிட முயலும் தொடர் படைப்புச் செயல்பாடே கவிதை! எனவே, கவிதை என்பதே மொழிதான்.
  • கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கமே, கவிதைக்கான உலகத்தைக் கட்டி எழுப்புகிறது” என்பதே, ‘எது கவிதை’ என்பதற்கு, இந்திரன் தரும் விளக்கமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 6.
பாடத்துள் இடம்பெற்ற ‘வால்ட் விட்மன்’ கவிதையின் கருத்து யாது?
Answer:

  • என் கனவில் ‘நண்பர்கள் நகரம்’ என்றொரு புது நகரம் வந்தது! அந்த நகரத்தில் அன்பைவிடப் பெரியது என்று ஒன்றும் இல்லை.
  • அன்பு என்னும் வழித்தடத்தில் எல்லாமும் சென்றன. அதன்பின்னே மக்கள் எந்நேரமும் செய்வன எவை என்றாலும், அவற்றில் எல்லாம் அன்புதான் தெரிந்தது. மக்கள் தோற்றத்திலும், அவர் பேசிய மொழியிலும் அன்பு ஒன்றே புலப்பட்டது” என்பது, வால்ட் விட்மன் கவிதையின் கருத்தாகும்.

Question 7.
கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை கூறும் செய்தி யாது?
Answer:
பாய்மரங்களைத் தூக்கி எறிந்துவிட்டிருக்கும் நீராவிக் கப்பலே, தொலைவான தேசத்திலுள்ள இயற்கையை நோக்கிப் புறப்படு! இரக்கம் இல்லாத எதிர்பார்ப்புகளில் மனம் உடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்புதலுக்கான அசைவை நம்பிக் கொண்டிருப்பது வேதனையே தரும்!

பாய்மரமும் இல்லாமல், போய்ச் சேர்வதற்குத் தீவுகளும் இல்லாமல் மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து, புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை? ஆனால், என் நெஞ்சே, மாலுமிகளின் பாடலை இதோ கேள்!” என்பது, கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை றும் செய்தியாகும்.

Question 8.
‘பாப்லோ நெரூடா’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:

  • “திங்கள், செவ்வாய்க் கிழமைகளுடனும் ஆண்டு முழுவதுடன் வார மம் சிக்கிக்கொண்டு உள்ளன. உமது களைத்துப் போன கத்தரிக்கோலால் காலத்தை வெட்டித் துண்டுபோட முடியாது.
  • பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது. இரவில் உறங்கும்போது என்ன பெயர் சொல்லி அழைக்கின்றனர்? அல்லது, என்னவென்று அழைப்பதில்லை?
  • கண்மூடித் தூங்கும்போது நான் நானாக இல்லை என்றால், விழித்து எழுந்தபின் நான் யார்?” என்பது, கவிஞர் பாப்லோ நெரூடாவின் கவிதையால் பெறப்படும் செய்தியாகும்.

நெடுவினர்

Question 1.
நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
பேச்சு மொழி என்பது, திரவநிலையில் இருந்து நம் விருப்பத்திற்குக் கையாளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிறரை உணரச் செய்யவும் துணைபுரிகிறது. எழுத்தாகப் பதிவு செய்யப்படும் மொழி, உறைந்துபோன பனிக்கட்டி போன்று, திடநிலை பெற்றுவிடுகிறது. ஆகவே, கையாள எளிதாக இருப்பதில்லை .
AnsweR:
பேச்சுமொழிச் சிறப்பு :
எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்து மொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

எழுத்து மொழி இயல்பு :
எழுத்து பொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பாக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்துமொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது.

பேச்சுமொழிக் கவிதை :
பேச்சுமொழியே ஒரு கவிஞனை நிகழ்காலத்தவனா, இறந்தகாலத்தவனா என, நிர்ணயம் செய்யும் ஆற்றலுடையது. பேச்சுமொழியில் ஒரு கவிதையைப் படைக்கின்றபோது, அது உடம்பின் ஒரு மேல்தோல்போல் உயர்வுடன் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் அழகுடையதானாலும், உணர்ச்சி இல்லாத ஆடைபோல் போர்த்திக்கொள்ள உதவுகிறது. பேச்சுமொழியை உடனே தாகம் போக்கும் நீர் என்றும், எழுத்துமொழி உறைந்த பனிக்கட்டியானாலும், என்றேனும் ஒருநாள் பயன்தரும் எனவும் நான் உணர்கிறேன்.

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
இ) சு. வில்வரத்தினம் – ஆறாம் திணை
ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
i. அ, ஆ
ii. அ, ஈ
iii. ஆ, ஈ
iv. அ, இ
Answer:
iii. ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 2.
“ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ) மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
Answer:
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.

கூடுதல் வினாக்கள்

Question 3.
“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம்” என்றும், அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர் ……………
அ) இராசேந்திரன் (இந்திரன்)
ஆ) கா. சிவத்தம்பி
இ) மகாகவி பாரதியார்
ஈ) ஆற்றூர் ரவிவர்மா
Answer:
இ) மகாகவி பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 4.
“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” எனக் கூறியவர் ………..
அ) இந்திரன்
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
இ) எர்னஸ்ட் காசிரர்

Question 5.
இந்திரனின் இயற்பெயர் -…………….
அ) முத்துலிங்கம்
ஆ) இராசேந்திரன்
இ) ஜெயபாலன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
ஆ) இராசேந்திரன்

Question 6.
உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி …………….
அ) இலக்கியபொழி
ஆ) கவிதைமொழி
இ) பேச்சுமொழி
ஈ) எழுத்துமொழி
Answer:
இ) பேச்சுமொழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 7.
“பறவைகளை ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” – கவிதை ஆசிரியர்.
அ) டைஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ. பாபலோ நெரூடா
ஈ) மனோரமா பிஸ்வாஸ்
Answer:
ஈ) மனோரமா பிஸ்வாஸ்

Question 8.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) ஸ்டெஃபான் மல்லார்மே
இ) சிவத்தம்பி
ஈ) வால்ட் விட்மன்
Answer:
ஈ) வால்ட் விட்மன்

Question 9.
‘வால்ட் விட்மன்’, ………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) பிரான்சு
ஆ) அமெரிக்கா
இ) சிலி
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) அமெரிக்கா

Question 10.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’,…………………நாட்டவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) நார்வே
Answer:
இ) பிரான்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 11.
‘பாப்லோ நெரூடா’, ……………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) சிலி

Question 12.
இலத்தீன் அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ) பாப்லோ நெரூடா
ஈ) சிவத்தம்பி
Answer:
இ) பாப்லோ நெரூடா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 13.
‘தமிழின் கவிதையியல்’ நூலின் ஆசிரியர் …………….
அ) இந்திரன்
ஆ) பாரதியார்
இ) கா. சிவத்தம்பி
ஈ) ரவிவர்மா
Answer:
இ) கா. சிவத்தம்பி

Question 14.
1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் …………….
அ) வால்ட் விட்மன்
ஆ) பாப்லோ நெரூடா
இ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஈ) கா. சிவத்தம்பி
Answer:
ஆ) பாப்லோ நெரூடா

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்பது,………. மொழி பெயர்க்கப்பட்டது.
அ) ஆங்கில மொழியிலிருந்து
ஆ) பிரெஞ்சு மொழியிலிருந்து
இ) இலத்தீன் மொழியிலிருந்து
ஈ) ஒரிய மொழியிலருந்து
Answer:
ஈ) ஒரிய மொழியிலிருந்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 16.
2011ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’யின் விருது பெ நூல் …………….
அ) முப்பட்டை நகரம்
ஆ) சாம்பல் வார்த்தைகள்
இ) தமிழ் அழகியல்
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
Answer:
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

Question 17.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்……………..
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) பாப்லோ நெரூடா
இ) வால்ட் விட்மன்
ஈ) இந்திரன்
Answer:
இ) வால்ட் விட்மன்

Question 18.
குறியீட்டுக் கவிதையை இருவ,க்கியர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) வால்ட் விட்மன் V
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
ஈ) ஸ்டெபான் மல்லார்மே

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 19.
வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றிப் பேசும் கவிதை படைப்பவர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) பாடலோ நெரூடா
ஈ) வால்ட் விட்மன்
Answer:
இ) பாப்லோ நெரூடா பாம்)

Question 20.
கீழ் உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
ஆ) குறியீட்டுக் கவிதையைப் பதிவு செய்தவர்
இ) தேசியக் கவியாகப் போற்றப்படுகிறவர்
ஈ) இலக்கியத்திற்கு நோபல் பரிசுபெற்றவர்
1) வால்ட் விட்மன்
2) மகாகவி பாரதியார்
3) பாப்லோ நெரூடா
4) ஸ்டெஃபான் மல்லார்மே
அ) 1 3 4 2
ஆ) 1 4 2 3
இ) 4 3 2 1
ஈ) 2 143
Answer:
ஆ) 1 4 2 3

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 21.
பொருத்துக
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும் - 1
Answer:
i – ஆ, ii – ஈ, iii – அ, iv – இ.

Question 22.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும் - 2
Answer:
i – இ, ii – ஈ, iii – அ, iv – ஆ.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும், ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன.
வினா : ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்வது எப்போது?

2. வால்ட் விட்மனைப் போன்றவருடைய கவிதைகளில், ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கியமானதாகி விடுவதில்லை.
வினா : எவர் போன்றவருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கிய மானதாகி விடுவதில்லை ?

3. குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவு கூரத்தக்க தருணங்களைப்
பதிவு செய்வதாகும்.
வினா : குறியீட்டுக் கவிதை என்பது எதைப் பதிவு செய்வதன்று? எவற்றைப் பதிவு செய்வது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

4. கவிதைக்குள் உலவும் மொழியில் தாக்கம், கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது.
வினா : கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், எதற்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது?

5. மொழி என்ற ஒன்று எனுள் தோன்றியவுடன்தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது.
வினா : எந்த என்று என்னுடன் தோன்றியவுடன், உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது?

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 1.
இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.
Answer:
“பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே!
நீலக் கடலாய் அலங்கரித்தவளே!
கதிரவன் காட்சியில் …. பொன் தகடானவளே!
உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”

Question 2.
‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பதை வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
ஆங்கல வழிக்கல்வி படித்தால் மட்டுமே உயர முடியும் என்றெண்ணிக் கொண்டிருப்போரே! கவனியுங்கள். வாழ வந்த ஆங்கிலேயரைக்கூட விரட்டினோம். ஆனால், ஆங்கில மொழியை விரட்டாமல் அதன் மீது மோகம் கொண்டு அதன் வழியில் கற்க அலைகின்றோம். இது எப்படி இருக்கின்றது தெரியுமா?

தன் தாயைப் புறந்தள்ளிவிட்டு, அயலாம் தாயைப் போற்றுவது போலத்தான். எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு.ஔவையாரும் கம்பரும் சேக்ஸ்பியரும் காந்தியடிகளும் தாகூரும் எப்படிச் சிறந்தனர் தெரியுமா? அனைவரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……………..
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்
Answer:
அ) மயில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 2.
பின்வருவனவற்றுள் ‘மலை’யைக் குறிக்கும் சொல
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி
Answer:
அ) வெற்பு

Question 3.
‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது, ……………….
அ) ஏடே + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
Answer:
இ) ஏடு + எடுத்தேன்

Question 4.
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
Answer:
அ) துயின்று + இருந்தார்

Question 5.
என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது …………….
அ) என்று உரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்
Answer:
ஈ) என்றுரைக்கும்

பொருத்துக.

1. கழனி – கதிரவன்
2. நிகர் – மேகம்
3. பரிதி – சமம்
4. முகில் – வயல்
Answer:
1. கழனி – வயல்
2. நிகர் – சமம்
3. பரிதி – கதிரவன்
4. முகில் – மேகம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

குறு வினா

Question 1.
பாரதிதாசனின் மனதைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
Answer:

  1. வானம்
  2. நீரோடை
  3. தாமரை
  4. காடு
  5. வயல்
  6. மேகம்
  7. தென்றல்
  8. மயில்
  9. அன்னம்
  10. கதிரவன்

Question 2.
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்?
Answer:

  1. தமிழ்நாட்டு மக்களின் அறியாமை தூக்கம் களையும்,
  2. வாழ்வில் துன்பங்கள் நீங்கும்,
  3. நஞ்சில் தூய்மை உண்டாகும், வீரம் வரும்.
    – ஆகியவற்றைத் தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகளாகப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.

சிறு வினா

Question 1.
‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை நும் சொந்த நடையில் எழுதுக.
Answer:
பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நீங்க இன்பத்தமிழ்க் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும். மனதில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:

  1. எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.
  2. பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.
  3. தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம்.
  4. விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்
அ) பாண்டியன் பரிசு
ஆ) அழகின் சிரிப்பு
இ) பிசிராந்தையார்
ஈ) குடும்பவிளக்கு
Answer:
இ) பிசிராந்தையார்

Question 2.
பின்வருவனவற்றுள் கதிரவனை’க் குறிக்கும் சொல்
அ) நிகர்
ஆ) பரிதி
இ) முகில்
ஈ) கழனி
Answer:
ஆ) பரிதி

Question 3.
பின்வருவனவற்றுள்‘மேகம்’ என்பதைக் குறிக்கும் சொல்
அ) நிகர்
ஆ) பரிதி
இ) முகில்
ஈ) கழனி
Answer:
இ) முகில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 4.
வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது
அ) மயில்
ஆ) மேகம்
இ) தாமரை
ஈ) மலை
Answer:
ஈ) மலை

Question 5.
பசுமையான தோகைளை உடையது …………….
அ) தாமரை
ஆ) பெண்கள்
இ) மயில்
ஈ) சோலை
Answer:
இ) மயில்

குறு வினா

Question 1.
என்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது?
Answer:
வானம், தன்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது.

Question 2.
பாரதிதாசனிடம் கவி ஓவியமாகத் தங்களைத் தீட்டுமாறு கூறியவை எவை?
Answer:

  1. நீரோடை
  2. தாமரை மலர்கள்

Question 3.
பெண்கள் எதனைக் கவிதையாக எழுதச் சொன்னனர்?
Answer:
பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதச் சொன்னனர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 4.
பாரதிதாசனிடம் வேல் ஏந்திய வீரர்கள் எதனை எழுதுமாறு வேண்டினர்?
Answer:
பாரதிதாசனிடம் வேல் ஏந்திய வீரர்கள் மலை போன்ற தங்களின் தோள்களின் அழகை எழுதுமாறு வேண்டினர்.

Question 5.
பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு.

சிறு வினா

Question 1.
பாரதிதாசன் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் – சுப்புரத்தினம்
பெற்றோர் – தந்தை – கனகசபை, தாய் – இலக்குமி
பிறப்பு – 1891 ஏப்பிரல் 29ம் நாள், புதுவை
சிறப்புப் பெயர் – பாரதிதாசன், பாவேந்தர், புரட்சிக்கவி.
படைப்புகள் – குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன.
பணி – புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

சொல்லும் பொருளும்

1. எத்தனிக்கும் – முயலும்
2. வெற்பு – மலை
3. கழனி – வயல்
4. நிகர் – சமம்
5. பரிதி – கதிரவன்
6. அன்னதோர் – அப்படி ஒரு
7. கார்முகில் – மழைமேகம்
8. துயின்றிருந்தார்- உறங்கியிருந்தார்
9. கவி – கவிதை, பாடல்
10. சித்திரம் – ஓவியம்
11. நிகர் – சமம், போல
12.இன்னல் – துன்பம்
13. ஆவி – உயிர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 1.
நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக்கொண்டு அதிலுள்ள நால் வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக.
Answer:
நாளிதழ் செய்தி : “இறைத்து ஊரும் கேணி போல கல்வி அறிவில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். இதழ் விரிந்து மணம் பரப்பும் புஷ்பம் போல மேன்மை பெற வேண்டும் என்று மாணவர்களைத் தலைவர்கள் வாழ்த்தினர்”.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் …………………
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
அ) இயற்சொல்

Question 2.
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது …………….
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஆ) திரிசொல்

Question 3.
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி …………….
அ) மலையாளம்
ஆ) கன்னடம்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
Answer:
இ) சமஸ்கிருதம்

பொருத்துக.

1) இயற்சொல் – பெற்றம்
2) திரிசொல் – இரத்தம்
3) திசைச்சொல் – அழுவம்
4) வடசொல் – சோறு
Answer:
1) இயற்சொல் – சோறு
2) திரிசொல் – அழுவம்
3) திசைச்சொல் – பெற்றம்
4) வடசொல் – இரத்தம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

குறு வினா

Question 1.
மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
Answer:
மண், பொன் என்பன பெயர்இயற்சொல்வகைச் சொற்கள் ஆகும்.

Question 2.
இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
Answer:

  1. பெயர்இயற்சொல்
  2. வினை இயற்சொல்
  3. இடைஇயற்சொல்
  4. உரி இயற்சொல்

Question 3.
குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
Answer:
குங்குமம், கமலம் என்பன தற்சமம் வகை வடசொற்கள் ஆகும்.

சிறுவினா

Question 1.
இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும். அவை யாவன:

  1. இயற்சொல்
  2. திரிசொல்
  3. திசைச்சொல்
  4. வடசொல்

Question 2.
திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
Answer:
திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு நிலையில் வரும். ஒரு பொருள் குறித்த பல திரிசொல், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
Answer:
பண்டிகை, கேணி என்பன திசைச்சொற்கள் ஆகும்.
விளக்கம் :
பண்டிகை, கேணி ஆகிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அன்று. வடமொழி தவிர பிறமொழிகளிலிருந்து வந்த சொற்கள் திசைச்சொற்கள் ஆகும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கடற்பயணம் தொடர்பான கதைகளைப் பெரியோரிடம் கேட்டு மகிழ்க.
Answer:
கப்பல் ஒன்றில் சுற்றுலா செல்ல இருபது பேர் ஆயத்தமானார்கள்.துறைமுகத்தை நோக்கி மகிழ்வுடன் அனைவரும் சென்றனர். கப்பல் வந்தவுடன் நான்கு குடும்பத்தாரும் கப்பலில் அமர்ந்தனர். கப்பல் சிறிது தூரம் செல்லுகையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திருவிழா போல இருந்தது. கபிலனின் குடும்பமும் தங்கள் ஐந்து வயது மகனிடம் கடலின் அழகைக் கூறி மகிழ்ந்து வந்தனர்.

கப்பல் ஒரு தீவை அடைந்தது. அங்கு அனைவரும் உணவு உண்டு விட்டு, ஓய்வெடுத்தனர். மாலை நேரம் ஆனவுடன் மீண்டும் கப்பல் பயணம் தொடங்கியது. இரவு வேகமாகச் சென்றது. காலையில் புத்துணர்வுடன் கப்பலில் இருந்து கடல் நீரைத் தொட்டு மகிழ்ந்தனர். கபிலனின் ஐந்து வயது மகன் கடல் நீரைத் தொட ஆசைப்பட்டான். கபிலன் தூக்க, மகன் தண்ணீரைத் தொட்டு மகிழ்ந்தான்.

திடீரென கப்பல் குலுங்கியது. ஏதோ ஒரு சத்தம் கப்பல் பயங்கரமாக ஆடத்தொடங்கியது. கபிலனின் மகன் கையை முதலை ஒன்று கவ்வி இழுத்தது. காப்பற்ற கதறி அழுது முயற்சித்தனர். மாலுமிகுழந்தையை விடவில்லை என்றால் இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகி மற்ற 19 பேரும் இறக்க நேரிடும் என்றார். கபிலன் தன் மகனுக்காக 19 பேர் சாக வேண்டுமா எனச் சொல்லி தன் மகனை முதலையிடம் காவு கொடுத்து 19 பேர் உயிரைக் காப்பாற்றி கதறி அழுதான்.

பின்வரும் தலைப்புகளில் இரண்டு நிமிடங்கள் பேசுக.

Question 1.
கப்பல்களின் வகைகளும் பயன்களும்
Answer:
தாயே! தமிழே! வணக்கம். கப்பல்களின் வகைகளும் பயன்களும் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். வர்த்தகக் கப்பல்கள், கடற்படை கப்பல்கள் என பல வகைக் கப்பல்கள் உள்ளன. வர்த்தகக் கப்பல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல், சிறப்பு தேவைக் கப்பல் ஆகியனவாகும். சரக்குக் கப்பல்கள் உலர் மற்றும் திரவ சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றது. பயணிகளுக்குப் பயன்படும் கப்பல் பயணிகள் கப்பல். கடல் பகுதி எல்லையைப் பாதுகாக்கும் கப்பல் கப்பற்படைக்கப்பல் ஆகும். நன்றி.

அறிந்து பயன்படுத்துவோம்

காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம்
2. நிகழ்காலம்
3. எதிர்காலம்

1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம்.
சான்று : பார்த்தான், ஆடினாள்.

2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம்.
சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள்.

3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
சான்று : காண்பான், ஆடுவாள்.

கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 2

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.

Question 1.
அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
Answer:
அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.

Question 2.
கண்மணி நாளை பாடம் படித்தாள்.
Answer:
கண்மணி நாளை பாடம் படிப்பாள்.

Question 3.
மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
Answer:
மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது.

Question 4.
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
Answer:
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.

Question 5.
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
Answer:
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

பயணங்களின் பலவகை

Question 1.
முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்பயணம் – வான்வழிவழிப் பயணம் – முடிவுரை
Answer:
முன்னுரை :
பயணம் என்பது சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகின்றது. நடைபயணமாகத் தொடங்கிய பயணத் தோற்றம் அறிவியல் வளர்ச்சியால் இன்று பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. பயண நேரம் இன்று மிகவும் சுருங்கிவிட்டது.

பயணத்தின் தேவை :
மனிதன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காவும், பண்டமாற்று முறைக்காகவும், பொருட்களைவாங்கவும் விற்கவும் சந்தைப்படுத்தவும். தம் உறவினர் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்கும், மருத்துவத் தேவைக்காகவும் பயணத்தின் தேவை ஏற்பட்டது. பயணத்தின் தன்மைக் கேற்ப தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிவழிப் பயணம் என வகைப்படுத்தப்பட்டது.

தரை வழிப்பயணம் :
பழங்காலம் முதல் தரைவழிப்பயணமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடைபயணமாகவே ஆரம்ப கால கட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.மாட்டு வண்டி, குதிரை வண்டியின் மூலம் நடைபெற்ற தரைவழிப் பயணம். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மிதிவண்டி, மகிழ்வுந்து, பேருந்து, சரக்குந்து, தொடர்வண்டி ஆகியவை மூலம் தரைவழிப்பயணம் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.

கடல்வழிப்பயணம் :
கப்பல் போன்றவற்றில் கடல்வழியாகச் செல்லும் பயணம் கடல்வழிப்பயணம் ஆகும். கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. தீவுகள் மற்றும் வெகு தொலைவு நாடுகளுக்குப் பொருட்களை அனுப்பவும் , அயல் நாடுகளுக்கு வணிகம் செய்யவும் கடல்வழிப்பயணம் பயன்பட்டது.

வான் வழிப்பயணம் :
விமானம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வான்வழியில் பயணம் மேற்கொள்வது வான்வழிப்பயணம் ஆகும். தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒருசில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது வான்வழிப் பயணம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

முடிவுரை :
பயணம் செய்வதில் பாதுகாப்பான முறைகளை அறிந்து பயன்படுவது பயணிகளாகிய நம் கடமையாகும். பயணத்தில் வீண் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.
(“பயணத்தில் தேவை கவனம்”)

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 3

இடமிருந்து வலம்
1. அச்சான் – தந்தை
2. விஞ்ஞானம் – அறிவியல்
4. பரீட்சை – தேர்வு
10. லட்சியம் – இலக்கு

வலமிருந்து இடம்
6. அபாயம் – இடர்
8. தேகம் – உடல்
13. சரித்திரம் – வரலாறு
14. சத்தம் – ஒலி

மேலிருந்து கீழ்
1. அதிபர் – தலைவர்
3. ஆச்சரியம் – வியப்பு
7. ஆரம்பம் – தொடக்கம்
12. சதம் – நூறு

கீழிருந்து மேல்
5. ஆதி – முதல்
9. உத்தரவு – கட்டளை
11. தினம் -நாள்
15. சந்தோசம் – மகிழ்ச்சி

குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள் 4

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

நிற்க அதற்குத் தக..

கலைச்சொல் அறிவோம்

1. கலங்கரை விளக்கம் – Light house
2. பெருங்கடல் – Ocean
3. கப்பல் தொழில் நுட்பம் – Marine technology
4. கடல்வாழ் உயிரினம் – Marine creature
5. நீர் மூழ்கிக் கப்பல் – Submarine
6. துறைமுகம் – Harbour
7. புயல் – Storm
8. மாலுமி – Sailor
9. நங்கூரம் – Anchor
10. கப்பல் தளம் – Shipyard

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
கடல், கப்பல் என்பன ………………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
அ) இயற்சொல்

Question 2.
வங்கூழ், அழுவம் என்பன ………………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஆ) திரிசொல்

Question 3.
சாவி, சன்னல், பண்டிகை, இரயில் என்பன ………………….
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
இ) திசைச்சொல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 4.
வருடம், மாதம், கமலம் என்பன ……………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஈ) வடசொல்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நடந்தான், வந்தான் என்பது ……………….. இயற்சொல்.
2. அவனை, அவனால் என்பது ………………. இயற்சொல்.
3. மாநகர் என்பது ………………… இயற்சொல்.
4. இயம்பினான், பயின்றான் என்பது …………….. திரிசொல்.
5. அன்ன, மார் என்பது ……………. திரிசொல்.
6. இரயில், பெற்றம் என்பன ……………. சொற்கள்.
7. வடசொற்களை ……………, ……………….. என இரு வகையாகப் பிரிப்பர்.
Answer:
1. வினை
2. இடை
3. உரி
4. வினைத்
5. இடைத்
6. திசைச்
7. தற்சமம், தற்பவம்

குறுவினா

Question 1.
சொல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஓர் எழுத்த தனித்தும் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது சொல் எனப்படும்.
சான்று : பூ, அறம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 2.
சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் யாவை?
Answer:

  1. மொழி
  2. பதம்
  3. கிளவி

Question 3.
திரிசொல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
கற்றோர்க்கு மட்டும் விளங்குவதாகவும், இலக்கியங்களில் மட்டும் பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொல் ஆகும்.
சான்று : வங்கூழ் (காற்று), அழுவம்(கடல்)

Question 4.
திசைச்சொல் என்றால் என்ன?
Answer:
வடமொழி தவிர பிறமொழிகளிலிருந்து வந்த சொற்கள் திசைச்சொல் ஆகும்.

Question 5.
வடசொல் என்றால் என்ன?
Answer:
வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்கள் வடசொற்கள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.5 இலக்கியவகைச் சொற்கள்

சிறு வினா

Question 1.
இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவையாவன:

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.1 யுகத்தின் பாடல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.1 யுகத்தின் பாடல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

குறுவினாக்கள்

Question 1.
என் அம்மை ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! – இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
Answer:
தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.

Question 2.
இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
Answer:
“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

கூடுதல் வினா

Question 3.
கவிஞர் சு. வில்வரத்தினம் குறித்து எழுதுக.
Answer:

  • கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணம் புங்குடுத் தன் பிறந்தவர்.
  • கவிதைகள் இயற்றுவதிலும் சிறப்பாகப் பாடுவதிலும் திறனுடையவர்.
  • இவர் கவிதைகள், ‘உயிர்த்தெழும் காலத்துக்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறுவினா

Question 1.
சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
பல தலைமுறை கடந்தும் தனது திவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவள். தமிழ் மொழியாகிய யலினை அறிவு கொண்டு உழுது, நற்கருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உருவியவள்.

ஒலிக்கும் கடலையும் நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை தொன்மையான கபாடபுரங்களைப் பலிகொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமை சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி
எழுதக் தற்பாத்தவள்.

ஆதலால் தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எனப் பாடத்தான் வேண்டும் என் கபார் சு. வில்வரத்தினம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
வில்வரத்தினம் தமிழ்த்தாய்க்கு எவ்வாறு பல்லாண்டு பாடுகிறார் ?
Answer:
“என் அம்மையே” எனத் தமிழ்த்தாயை அழைத்து, “வழிவழி உனது அடியைத் தொழுதவர், உழுதவர், விதைத்தவர், உழைத்து வியர்த்தவர் என அனைவர்க்கும் நிறைமணி தந்தவளே, உனக்குப் பல்லாண்டு பாடத்தான் வேண்டும்” என்று, சு. வில்வரத்தினம் பாடுகிறார்.

Question 3.
சு. வில்வரத்தினம் தமிழன்னையை எவ்வாறு பாடவேண்டுமென்கிறார்?
Answer:
சுழன்றடிக்கும் காற்றையும், வீசும் அலைகடலையும், எழும் நெருப்பையும், மலையளவு எழும் பகை யையும் வென்று, தமிழ்த்தாயின் தொன்மத்தைக் காலத்தால் அழியாவகையில் வலிமை சேர்க்கப் பாட வேண்டுமென சு. வில்வரத்தினம் வேண்டுகிறார்.

இலக்கணக் குறிப்பு

வழிவழி, தீட்டித்தீட்டி – அடுக்குத்தொடர்கள்
தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர் – வினையாலணையும் பெயர்கள்
நிறைமணி, கனைகடல் – வினைத்தொகைகள்
சாகாத, எழுகின்ற – பெயரெச்சங்கள்
உரமெலாம் (உரமெல்லாம்) – தொகுத்தல் விகாரம்
மலைமுகடு (மலையின்கண் உள்ள முகடு) – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
விரல்முனை (விரலினது முனை) – ஆறாம் வேற்றுமைத் தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

உறுப்பிலக்கணம்

1. தீட்டி – தீட்டு + இ
தீட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

2. எழுகின்ற – எழு + கின்று + அ
எழு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. ஒற்றியெடுத்த – ஒற்றி + எடுத்த
“இ ஈ ஐ வழி யவ்வும்” (ஒற்றி + ய் + எடுத்த )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஒற்றியெடுத்து)

2. காற்றிலேறி – காற்றில் + ஏறி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காற் லேறி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

3. பல்லாண்டு – பல + ஆண்டு
“பல சில எனும் இவைமுன் பிறவரின் அகரம் ஏகலும்” (பல் + ஆண்டு )
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இருட்டும் (பல்ல் + ஆண்டு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பல்லாண்டு)

4. உரமெலாம் – உரம் + எலாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உரமெலாம்)

5. சுவரெலாம் – சுவர் + எலாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சுவரெலாம்)

பலவுள் தெரிக

Question 1.
“கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” – அடிமோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை – காவுகொண்ட
ஆ) காலத்தால் – கனிமங்கள்
இ) கபாடபுரங்களை – காலத்தால்
ஈ) காலத்தால் – சாகாத
AnsweR:
இ) கபாடபுரங்களை – காலத்தால்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு………………..
அ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
ஆ) தமிழனின் கவிதை இயல்
இ) புல்லின் இதழ்கள்
ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக
Answer:
ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக

Question 3.
கவிஞர் சு. வில்வரத்தினம் பிறந்த புங்குடுத்தீவு, …………………உள்ளது.
அ) அமெரிக்காவில்
ஆ) கனடாவில்
இ) இந்தியாவில்
ஈ) யாழ்ப்பாணத்தில்
Answer:
ஈ) யாழ்ப்பாணத்தில்

உரைநடை உலகம்
பேச்சுமொழியும் கவிதைமொழியும்
இந்திரன்
நம்மை அளப்போம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

குறுவினாக்கள்

Question 1.
பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
Answer:
எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 2.
இந்திரனின் பிற நூல்கள் யாவை ?
Answer:
இந்திரனின் பிற நூல்கள் : முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தம் அழகியல், நவீன ஓவியம்.

Question 3.
வால்ட்விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதைநூல் எது?
Answer:
‘புல்லின் இதழ்கள், வால்ட் விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதை நூல்.

Question 4.
‘நான்’ உதயமானது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:
*உலகம்’ என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்டபிற்கு உலகத்திலிருந்து நான்’ என்பது தனித்துப் பிரிந்து உதயமானதாக இந்திரன் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 5.
சொற்கள் எதற்கு உதவும் ?
Answer:
உணர்ச்சியினால் நிரம்பி இருக்கிறபோது, அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும்.

Question 6.
புதுக்கவிதை என்பது எது?
Answer:
மரபு சார்ந்த செய்யுள்களின் இலக்கணக் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதையே, புதுக்கவிதையாகும்.

Question 7.
குறியீட்டுக்கவிதை என்பது எது?
Answer:
குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வது அன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

Question 8.
புதுக்கவிதையின் இருப்பு யாது?
Asnwer:

  • புதுக்கவிதை, தன்னைப் படிப்பவரின் ஆழ்மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப, விரிவடையும் பன்முகத் தன்மையும் கொண்டிருக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 9.
பேச்சுமொழி எழுத்துமொழிக் கவிதை குறித்து இந்திரன் கூறுவது யாது?
Answer:

  • “பேச்சுமொழியில் செய்யப்படுகிற கவிதைச் சொற்கள், உடம்பின் மேல்தோல் போல் இயங்குகின்றன.
  • எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் மூடிப் போர்த்தி விடுகின்றன’ என, இந்திரன் கூறுகிறார்.

Question 10.
எது கவிஞனின் கடமையாகிறது?
Answer:
கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், கவிதைக்கான உலகத்தைத் தட்டி எழுப்புகிறது. எனவே, எத்தகைய மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்துகிறோமோ, அதன் குணாம்சங்களையும், பேச்சு வழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது.

Question 11.
‘வால்ட்விட்மன்’ குறித்து எழுதுக.
Answer:

  • ‘வால்ட்விட்மன்’, அமெரிக்காவைச் சேர்ந்தவர்; ஆங்கிலக் கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; ‘புதுக்கவிதை’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
  • இவர் படைத்த ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of Grass) உலகப் புகழ்பெற்ற நூல்.

Question 12.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’ குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:

  • கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்; பிரெஞ்சுக் கவிஞர். இவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ‘சிம்பலிஸம்’ என்கிற ‘குறியீட்டியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 13.
‘பாப்லோ நெரூடா’ குறித்து நீ அறிவன யாவை?
Answer:
கவிஞர் பாப்லோ நெரூடா’, தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞர். தம் கவிதைகளுக்காக, 1971ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

சிறுவினாக்கள்

Question 1.
‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
Answer:
எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய மாட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளிமான மொழியைக் கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொரும் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 2.
கூற்று : குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
கவிதை : கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க
கூற்றில் ‘குறியீடு’ எனக் குறிப்பிடுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?
Answer:

  • குறியீட்டுக் கவிதை என்பது அந்த வேளையில் கண்டதன் நுண்பொருளைச் சிந்திக்கத் தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்)
  • பறவைகளைக் கூட்டில் அடைத்து வைத்துச் சோதிடம் பார்ப்பதை அனைவரும் அறிவர். கூட்டைத் திறப்பது பறவைக்குச் சுதந்தரம் தருவதற்காகவா? அன்று.
  • அது சிறகசைத்துப் புறதை மறக்க அடித்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள். அதற்கென ஒரு கொத்தடிமைத் தொழிலை முடிவு செய்கிறார்கள். இந்தக் குறியீடு, சமூக அவலத்தை வெளி ப்படுத்தும்; சுருக்கமாகச் சுட்டிக்காட்ட உதவும்.

கூடுதல் வினாக்கள்

Question 3.
மொழி அளித்த திறன்களாக இந்திரன் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • மொழி தோன்றியவுடன், உலகம் கவனிப்புக்கு உரியதாக மாறியது. மொழி என்னும் சாவியால் திறந்தபோதெல்லாம், பெயர் சூட்டப்படாத பலவற்றைக் காணவும், அவற்றிற்குத் தாம் விரும்பும் பெயரைச் சூட்டவும் முடிந்தது.
  • அவற்றை விதவிதமான அடுக்குகளில், அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப ஒருமை, பன்மை ‘ பிரித்து அடுக்கும் திறனையும் மொழி வழங்கியதாக இந்திரன் கூறியுள்ளார்.

Question 4.
‘மொழி அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்தது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:

  • வேலையில் மூழ்கியுள்ள தாயைக் குழந்தை ‘அம்மா’ என அழைத்தபோது கவனியாதவர், அவர் பெயரைச் சொல்லி அழைத்ததும் திடுக்கிட்டுத் திரும்பி வருகிறார்.
  • அப்போதுதான், பெயர்களிட்டு அழைக்கும்போது அவற்றின் மீது, ஓர் அதிகாரத்தை மொழி உருவாக்கிக் கொடுப்பதை உணரத் தலைப்பட்டதாக இந்திரன் கூறுகிறார்.

Question 5.
‘கவிதை என்பது எது’ என்பதற்கு இந்திரன் தரும் விளக்கம் யாது ?
Answer:

  • மொழிக்குள் உலகையும், உலகிற்குள் மொழியையும் முழுமையாக நுழைத்துவிட முயலும் தொடர் படைப்புச் செயல்பாடே கவிதை! எனவே, கவிதை என்பதே மொழிதான்.
  • கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கமே, கவிதைக்கான உலகத்தைக் கட்டி எழுப்புகிறது” என்பதே, ‘எது கவிதை’ என்பதற்கு, இந்திரன் தரும் விளக்கமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 6.
பாடத்துள் இடம்பெற்ற ‘வால்ட் விட்மன்’ கவிதையின் கருத்து யாது?
Answer:

  • என் கனவில் ‘நண்பர்கள் நகரம்’ என்றொரு புது நகரம் வந்தது! அந்த நகரத்தில் அன்பைவிடப் பெரியது என்று ஒன்றும் இல்லை.
  • அன்பு என்னும் வழித்தடத்தில் எல்லாமும் சென்றன. அதன்பின்னே மக்கள் எந்நேரமும் செய்வன எவை என்றாலும், அவற்றில் எல்லாம் அன்புதான் தெரிந்தது. மக்கள் தோற்றத்திலும், அவர் பேசிய மொழியிலும் அன்பு ஒன்றே புலப்பட்டது” என்பது, வால்ட் விட்மன் கவிதையின் கருத்தாகும்.

Question 7.
கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை கூறும் செய்தி யாது?
Answer:
பாய்மரங்களைத் தூக்கி எறிந்துவிட்டிருக்கும் நீராவிக் கப்பலே, தொலைவான தேசத்திலுள்ள இயற்கையை நோக்கிப் புறப்படு! இரக்கம் இல்லாத எதிர்பார்ப்புகளில் மனம் உடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்புதலுக்கான அசைவை நம்பிக் கொண்டிருப்பது வேதனையே தரும்!

பாய்மரமும் இல்லாமல், போய்ச் சேர்வதற்குத் தீவுகளும் இல்லாமல் மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து, புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை? ஆனால், என் நெஞ்சே, மாலுமிகளின் பாடலை இதோ கேள்!” என்பது, கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை றும் செய்தியாகும்.

Question 8.
‘பாப்லோ நெரூடா’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:

  • “திங்கள், செவ்வாய்க் கிழமைகளுடனும் ஆண்டு முழுவதுடன் வார மம் சிக்கிக்கொண்டு உள்ளன. உமது களைத்துப் போன கத்தரிக்கோலால் காலத்தை வெட்டித் துண்டுபோட முடியாது.
  • பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது. இரவில் உறங்கும்போது என்ன பெயர் சொல்லி அழைக்கின்றனர்? அல்லது, என்னவென்று அழைப்பதில்லை?
  • கண்மூடித் தூங்கும்போது நான் நானாக இல்லை என்றால், விழித்து எழுந்தபின் நான் யார்?” என்பது, கவிஞர் பாப்லோ நெரூடாவின் கவிதையால் பெறப்படும் செய்தியாகும்.

நெடுவினர்

Question 1.
நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
பேச்சு மொழி என்பது, திரவநிலையில் இருந்து நம் விருப்பத்திற்குக் கையாளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிறரை உணரச் செய்யவும் துணைபுரிகிறது. எழுத்தாகப் பதிவு செய்யப்படும் மொழி, உறைந்துபோன பனிக்கட்டி போன்று, திடநிலை பெற்றுவிடுகிறது. ஆகவே, கையாள எளிதாக இருப்பதில்லை .
Answer:
பேச்சுமொழிச் சிறப்பு :
எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்து மொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

எழுத்து மொழி இயல்பு :
எழுத்து பொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பாக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்துமொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது.

பேச்சுமொழிக் கவிதை :
பேச்சுமொழியே ஒரு கவிஞனை நிகழ்காலத்தவனா, இறந்தகாலத்தவனா என, நிர்ணயம் செய்யும் ஆற்றலுடையது. பேச்சுமொழியில் ஒரு கவிதையைப் படைக்கின்றபோது, அது உடம்பின் ஒரு மேல்தோல்போல் உயர்வுடன் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் அழகுடையதானாலும், உணர்ச்சி இல்லாத ஆடைபோல் போர்த்திக்கொள்ள உதவுகிறது. பேச்சுமொழியை உடனே தாகம் போக்கும் நீர் என்றும், எழுத்துமொழி உறைந்த பனிக்கட்டியானாலும், என்றேனும் ஒருநாள் பயன்தரும் எனவும் நான் உணர்கிறேன்.

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
இ) சு. வில்வரத்தினம் – ஆறாம் திணை
ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
i. அ, ஆ
ii. அ, ஈ
iii. ஆ, ஈ
iv. அ, இ
Answer:
iii. ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 2.
“ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ) மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
Answer:
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.

கூடுதல் வினாக்கள்

Question 3.
“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம்” என்றும், அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர் ……………
அ) இராசேந்திரன் (இந்திரன்)
ஆ) கா. சிவத்தம்பி
இ) மகாகவி பாரதியார்
ஈ) ஆற்றூர் ரவிவர்மா
Answer:
இ) மகாகவி பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 4.
“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” எனக் கூறியவர் ………..
அ) இந்திரன்
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
இ) எர்னஸ்ட் காசிரர்

Question 5.
இந்திரனின் இயற்பெயர் -…………….
அ) முத்துலிங்கம்
ஆ) இராசேந்திரன்
இ) ஜெயபாலன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
ஆ) இராசேந்திரன்

Question 6.
உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி …………….
அ) இலக்கியபொழி
ஆ) கவிதைமொழி
இ) பேச்சுமொழி
ஈ) எழுத்துமொழி
Answer:
இ) பேச்சுமொழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 7.
“பறவைகளை ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” – கவிதை ஆசிரியர்.
அ) டைஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ. பாபலோ நெரூடா
ஈ) மனோரமா பிஸ்வாஸ்
Answer:
ஈ) மனோரமா பிஸ்வாஸ்

Question 8.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) ஸ்டெஃபான் மல்லார்மே
இ) சிவத்தம்பி
ஈ) வால்ட் விட்மன்
Answer:
ஈ) வால்ட் விட்மன்

Question 9.
‘வால்ட் விட்மன்’, ………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) பிரான்சு
ஆ) அமெரிக்கா
இ) சிலி
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) அமெரிக்கா

Question 10.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’,…………………நாட்டவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) நார்வே
Answer:
இ) பிரான்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 11.
‘பாப்லோ நெரூடா’, ……………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) சிலி

Question 12.
இலத்தீன் அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ) பாப்லோ நெரூடா
ஈ) சிவத்தம்பி
Answer:
இ) பாப்லோ நெரூடா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 13.
‘தமிழின் கவிதையியல்’ நூலின் ஆசிரியர் …………….
அ) இந்திரன்
ஆ) பாரதியார்
இ) கா. சிவத்தம்பி
ஈ) ரவிவர்மா
Answer:
இ) கா. சிவத்தம்பி

Question 14.
1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் …………….
அ) வால்ட் விட்மன்
ஆ) பாப்லோ நெரூடா
இ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஈ) கா. சிவத்தம்பி
Answer:
ஆ) பாப்லோ நெரூடா

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்பது,………. மொழி பெயர்க்கப்பட்டது.
அ) ஆங்கில மொழியிலிருந்து
ஆ) பிரெஞ்சு மொழியிலிருந்து
இ) இலத்தீன் மொழியிலிருந்து
ஈ) ஒரிய மொழியிலருந்து
Answer:
ஈ) ஒரிய மொழியிலிருந்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 16.
2011ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’யின் விருது பெ நூல் …………….
அ) முப்பட்டை நகரம்
ஆ) சாம்பல் வார்த்தைகள்
இ) தமிழ் அழகியல்
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
Answer:
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

Question 17.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்……………..
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) பாப்லோ நெரூடா
இ) வால்ட் விட்மன்
ஈ) இந்திரன்
Answer:
இ) வால்ட் விட்மன்

Question 18.
குறியீட்டுக் கவிதையை இருவ,க்கியர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) வால்ட் விட்மன் V
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
ஈ) ஸ்டெபான் மல்லார்மே

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 19.
வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றிப் பேசும் கவிதை படைப்பவர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) பாடலோ நெரூடா
ஈ) வால்ட் விட்மன்
Answer:
இ) பாப்லோ நெரூடா பாம்)

Question 20.
missing உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
ஆ) குறியீட்டுக் கவிதையைப் பதிவு செய்தவர்
இ) தேசியக் கவியாகப் போற்றப்படுகிறவர்
ஈ) இலக்கியத்திற்கு நோபல் பரிசுபெற்றவர்
1) வால்ட் விட்மன்
2) மகாகவி பாரதியார்
3) பாப்லோ நெரூடா
4) ஸ்டெஃபான் மல்லார்மே
அ) 1 3 4 2
ஆ) 1 4 2 3
இ) 4 3 2 1
ஈ) 2 143
Answer:
ஆ) 1 4 2 3

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 21.
பொருத்துக
im
Answer:
i – ஆ, ii – ஈ, iii – அ, iv – இ.

Question 22.
பொருத்துக.
im
Answer:
i – இ, ii – ஈ, iii – அ, iv – ஆ.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும், ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன.
வினா : ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்வது எப்போது?

2. வால்ட் விட்மனைப் போன்றவருடைய கவிதைகளில், ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கியமானதாகி விடுவதில்லை.
வினா : எவர் போன்றவருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கிய மானதாகி விடுவதில்லை ?

3. குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவு கூரத்தக்க தருணங்களைப்
பதிவு செய்வதாகும்.
வினா : குறியீட்டுக் கவிதை என்பது எதைப் பதிவு செய்வதன்று? எவற்றைப் பதிவு செய்வது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

4. கவிதைக்குள் உலவும் மொழியில் தாக்கம், கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது.
வினா : கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், எதற்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது?

5. மொழி என்ற ஒன்று எனுள் தோன்றியவுடன்தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது.
வினா : எந்த என்று என்னுடன் தோன்றியவுடன், உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது?

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.4 ஆழ்கடலின் அடியில் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

Question 1.
ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில் 1

Question 2.
நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறைபற்றிய செய்திகளைத் திரட்டி தொகுத்து எழுதுக.
Answer:

  1. தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுள்ள நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் மிதக்கும் என்பது ஆர்க்கிமிடிஸ் தத்துவம்.
  2. அதன் அடிப்டையில் தான் நீர் மூழ்கிக்கப்பல்கள் இயங்குகின்றன.
  3. சரளைத் தொட்டிகள் நீர் மூழ்கிக் கப்பல்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
  4. இது காற்றால் நிரப்பப்பட்டு இருக்கும். சுற்றிக் காற்று இருப்பதால், நீரில் இருக்கும் காற்றை வெளியேற்றினால் இந்த இடத்தில் நீரானது நிரம்பும்.
  5. இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும் கப்பல் நீரில் மூழ்கும்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

‘ஆழ்கடலின் அடியில்’ கதையைச் சுருக்கி வரைக.

கதைமாந்தர் அறிமுகம்:
பியரி – விலங்கியல் பேராசிரியர்
ஃபராகட் – அமெரிக்கா நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட போர்க் கப்பலின் தலைவர்.
நெட் – ஈட்டி எறிந்து திமிங்கிலங்களை வேட்டையாடுவதில் வல்லவர்.
கான்சீல் – பியரியின் உதவியாளர்.

முன்னுரை
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில்’ என்ற புதினத்தின் கதையினைச் சுருக்கிக் காண்போம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

விலங்கைத் தேடிய பயணம்
கடலில் உலோகத்தால் ஆன உடம்பு கொண்ட ஒரு விலங்கு கடலில் செல்வோரைத் தாக்கியது. அதனைக் கண்டுபிடித்து அழிக்க பியரி, ஃபராகட்,நெட்,கான்சீல் ஆகியோர் கொண்ட குழு நியூயார்க் நகரில் இருந்து ஒரு போர்க்கப்பலில் செல்கின்றது.

அமெரிக்கா முதல் ஜப்பான் வரை மூன்று மாதங்களாகத் தேடியும் அந்த விலங்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த விலங்கு இவர்களின் கப்பலைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகளும், நெட்டின் ஈட்டியும் அந்த விலங்குகளை எதுவும் செய்ய முடியவில்லை. அது இவர்களைத் தூக்கி வீசியது.

நீர்மூழ்கிக் கப்பல்
அது விலங்கன்று. நீர் மூழ்கிக் கப்பல் என்பதை அவர்கள் அறிந்தனர். அவர்களை நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் சிறைபிடித்தனர். அந்த நீர் மூழ்கிக் கப்பல் பெயர் நாட்டிலஸ் என்றும், அதன் தலைவர் நெமோ என்பதையும், இக்கப்பலை விந்தையான விலங்கு என்று நம்ப வைத்ததையும் நேமோ கூறிவிட்டு, இச்செய்தி அறிந்த உங்களை வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான இந்தத் தனி உலகத்தில் தான் நீங்களும் இருக்க வேண்டும் என்றார். அனைவரும் அச்சப்பட்டனர்.

கப்பலின் இயக்கம்
கப்பலுக்குத் தேவையானவை எப்படி உங்களுக்குக் கிடைக்கின்று என்று பியரி, நெமோவிடம் கேட்டார். அதற்கு அவர் மின்சாரம் தயாரிக்க தவையான கருவிகள் உள்ளன, கப்பலில் மிகப்பெரிய நீர்த்தொட்டி உள்ளது. அதனை நிரப்பும் போது கப்பல் கடல் அடியிலும் நீர் வெளியேறும் போது மேல் செல்கின்றது. சில நாட்களுக்கு ஒரு முறை கப்பல் மேலே வரும் பொழுது சுவாசிக்கத் தேவையான காற்றைப் புதுப்பித்துக்கொள்ளும், காற்றுச் சேகரிக்கும் நிறைய பைகளும் உள்ளன என்றார்.

மணல் திட்டில் சிக்கிய கப்பல்
ஒரு நாள் மணல் திட்டில் கப்பல் சிக்கிவிட்டது. தூரத்தில் தெரிந்த தீவில் காய்கறி வாங்கி வர அவர்களை, நெமோ இசைவளித்தார். அவர்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பும் போது அத்தீவில் உள்ளவர்கள் துரத்தினார்கள். அவர்கிளிடம் மாட்டாமல் கப்பல் வந்து சேர்ந்தனர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.4 ஆழ்கடலின் அடியில்

அக்கப்பலை அவர்கள் முற்றுகையிட்டனர். கடலின் நீர்மட்டம் உயர கப்பல் மேலே வந்தது. ஆறு நாள் போராட்டத்திற்குப் பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது. கடலுக்கடியில் அவர்கள் செல்லும் போது, முத்துக்குளித்துக் கொண்டிருந்த இந்தியர் ஒருவரை சுறாவிடம் இருந்து காப்பாற்றினர்.கடலடியின் உன்னத காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தனர்.

முடிவுரை
பெரும் கடல் சுழலில் கப்பல் மாட்டிக் கொண்டது. மூவரும் தூக்கிவீசப்பட்டனர். மயக்கநிலையில் நார்வே நாட்டு மீனவர் குடிசையில் இருந்ததை விழித்துப் பார்த்தனர். நெமோவும் கப்பலும் என்ன ஆனது என்று தெரியவில்லை.