Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 1.
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக.
(எ.கா.) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
Answer:

  1. இளமையில் கல்.
  2. கேடில் விழுச்செல்வம் கல்வி.
  3. கற்க கசடற.
  4. ஓதுவது ஒழியேல்!
  5. கல்விக்கு அழகு கசடற மொழிதல்
  6. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக்
  7. கடலின் பெருமை கடவார்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ………………
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
Answer:
ஆ) காலம் அறிதல்

Question 2.
கல்வியில்லாத ………………….. நாடு
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
Answer:
அ) விளக்கில்லாத

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 3.
‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ………………
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) பாரதியார்

Question 4.
‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
Answer:
ஈ) உயர்வு + அடைவோம்

Question 5.
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………..
அ) இவை எல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Answer:
ஆ) இவையெல்லாம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. செல்வம் – கல்விச்செல்வம் என்றும் அழியாதது.
2. இளமைப்பருவம் – இளமைப்பருவம் கல்விக்கு உரிய பருவம் ஆகும்.
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

குறு வினா

Question 1.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச்சொல்ல முடியும். ஆனால், மனிதப் பிறவியின் எதிர்காலத்தைக் கூறவே முடியாது. இதுவே மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

Question 2.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

Question 3.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
Answer:
படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆழ்ந்து ,ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

சிறு வினா

Question 1.
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
Answer:

  1. உலகில் எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும்.
  2. இருபது இருபத்தைந்தாண்டுக்கு முன் இங்கு இருந்த ஆலமரம் எங்கே என்றால் புயலில் விழுந்துவிட்டது என்போம்.
  3. இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால், மழையால் இடிந்து விட்டது என்பர்.
  4. 10 ஆண்டுக்கு முன் 2 இலட்சம் ரூபாய் வைத்திருந்தவர். இன்று இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்போம்.

எல்லாம் அழியும். ஆனால் கல்வி அப்படியன்று. 10 ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்றவர் இன்று 10ம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கல்வி அழியாதது. வள்ளுவரும் ”கேடில் விழுச்செல்வம் கல்வி …..” என்கின்றார்.

Question 2.
கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Answer:
கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாதவீடு. விளக்கில்லாதவீட்டில் யார்குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சிந்தனை வினா

Question 1.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:

  1. உண்மைப் பொருளை விளக்க வேண்டும்.
  2. நன்னெறிப் பாதை காட்ட வேண்டும்.
  3. அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.
  4. எளிமை, தெளிவு ஆகியவை கொண்ட நடையில் இருத்தல் வேண்டும். –
    ஆகியன நல்ல நூலின் இயல்புகளாக நான் கருதுவன ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திருக்குறளனார் என்று அழைக்கப்படுபவர் ……………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூ ல்களை எழுதியவர் …………….
அ) வீ.முனிசாமி
ஆ) மு.வ
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
அ) வீ.முனிசாமி

Question 3.
உலகில் மிகவும் அருமையானது ……………..
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 4.
………………… ஓர் ஒளி விளக்கு.
அ) காலம்
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) செல்வம்
Answer:
அ) காலம்

Question 5.
நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்று கூறியவர் ………….
அ) வீ.முனிசாமி
ஆ) திருவள்ளுவர்
இ) திரு.வி.க
ஈ) கவிமணி
Answer:
ஆ) திருவள்ளுவர்

குறுவினா

Question 1.
திருக்குறளார் வீ.முனிசாமி இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. வள்ளுவர் உள்ளம்
  2. வள்ளுவர் காட்டிய வழி
  3. திருக்குறளில் நகைச்சுவை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள் விளங்கும் என்பதற்கு திருக்குறளனார் கூறும் ஒப்புமை யாது?
Answer:
மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் பொருள்விளங்கும் என்பதற்குதிருக்குறளனார் கூறும் ஒப்புமை கத்தரிக்காய், வாழைக்காய், கீரை இவை எல்லாம் பூமிக்கு மேல் விளையும். சில மண்ணுக்குள்ளே இருக்கும் அதை நாம் தான் தோண்டி எடுக்க வேண்டும் என்பதாகும்.

Question 3.
திருக்குறளனாரின் புகழ்பெற்ற நூல் எது?
Answer:
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

Question 4.
பள்ளி பற்றி பாரதியாரின் கருத்து யாது?
Answer:
நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். அதனால் தான் ”பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்றார்.

Question 5.
விளக்கில்லாத வீடு எது?
Answer:
கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு ஆகும்.

Question 6.
கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் யார்?
Answer:
திருவள்ளுவரே கல்வி அறிவுல்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் ஆவார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.3 வாழ்விக்கும் கல்வி

Question 7.
எவை அழியும் என்பதற்குத் திருக்குறளனார் கூறும் உவமைகள் எவை?
Answer:

  1. ஆலமரம்
  2. பெரிய கட்டடம்
  3. இரண்டு இலட்ச ரூபாய் பணம்