Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.3 பேசும் ஓவியங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ……………….
அ) மண்துகள்
ஆ) நீர் வண்ண ம்
இ) எண்ணெய் வண்ணம்
ஈ) கரிக்கோல்
Answer:
அ) மண்துகள்

Question 2.
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ………….
அ) குகை ஓவியம்
ஆ) சுவர் ஓவியம்
இ) கண்ணாடி ஓவியம்
ஈ) கேலிச்சித்திரம்
Answer:
ஈ) கேலிச்சித்திரம்

Question 3.
‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) கோடு + ஓவியம்
ஆ) கோட்டு + ஓவியம்
இ) கோட் + டோவியம்
ஈ) கோடி + ஓவியம்
Answer:
ஆ) கோட்டு + ஓவியம்

Question 4.
‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) செப்பு + ஈடு
ஆ) செப்பு + ஓடு
இ) செப்பு + ஏடு
ஈ) செப்பு + யேடு
Answer:
இ) செப்பு + ஏடு

Question 5.
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) எழுத்து ஆணி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்துதாணி
ஈ) எழுதாணி
Answer:
ஆ) எழுத்தாணி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ………………..
2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது …………………..
3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ………………….. மீது பொறித்துப் பாதுகாத்தனர்.
Answer:
1. பாரதியார்
2. துணி ஓவியம்
3. செப்பேடுகளில்

குறு வினா

Question 1.
ஓவியங்களின் வகைகள் யாவை?
Answer:
1. குகை ஓவியம்
2. சுவர் ஓவியம்
3. துணி ஓவியம்
4. ஓலைச்சுவடி ஓவியம்
5. செப்பேட்டு ஓவியம்
6. தந்த ஓவியம்
7. கண்ணாடி ஓவியம்
8. தாள் ஓவியம்
9. கருத்துப்பட ஓவியம்
10. நவீன ஓவியம்

Question 2.
குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
Answer:
குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழர் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 3.
தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
Answer:
கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு தாள் ஓவியங்களை வரைவர்.

Question 4.
சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
Answer:
அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களாகும்.

Question 5.
செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
Answer:
நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்.

சிறு வினா

Question 1.
கேலிச்சித்திரம் என்றால் என்ன?
Answer:
மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவதைக் கேலிச்சித்திரம் என்பர்.

Question 2.
ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
Answer:

  1. ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்.
  2. இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்டு இருக்கும்.
  3. இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.

சிந்தனை வினா

Question 1.
தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
Answer:
யானையின் தந்தங்கள் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். இவ்வகை ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது. எனவே, தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆய கலைகள் மொத்தம் ……………….
அ) 62
ஆ) 96
இ) 64
ஈ) 63
Answer:
இ) 64

Question 2.
பழந்தமிழரின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம் ……………
அ) குகை ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) குகை ஓவியம்

Question 3.
தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஓவியம் ………………..
அ) சுவர் ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) சுவர் ஓவியம்

Question 4.
தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வரும் ஓவியம் ………………..
அ) சுவர் ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
ஆ) துணி ஓவியம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 5.
கேரளாவில் அதிகம் காணப்படும் ஓவியம் ……………..
அ) தந்த ஓவியம்
ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம்
ஈ) செப்பேட்டு ஓவியம்
Answer:
அ) தந்த ஓவியம்

Question 6.
கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் ……………….
அ) கோவை
ஆ) கேரளா
இ) தஞ்சாவூர்
ஈ) ஆந்திரா
Answer:
இ) தஞ்சாவூர்

Question 7.
கருத்துப்பட ஓவியம் முதன் முதலில் வெளிவந்த இதழ் ……………….
அ) எழுத்து
ஆ) இந்தியா
இ) விடுதலை
ஈ) கணையாழி
Answer:
ஆ) இந்தியா

குறுவினா

Question 1.
ஓவியம் வரையப் பயன்படும் துணியின் வேறுபெயர்கள் யாவை?
Answer:

  1. எழினி
  2. திரைச்சீலை
  3. கிழி
  4. படாம்

Question 2.
பசார் பெயிண்டிங் என்றால் என்ன?
Answer:
நாட்காட்டி ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்பர். இதன் முன்னோடி கொண்டையராஜு.

Question 3.
ஓவியத்தின் வேறுபெயர்கள் யாவை?
Answer:

  1. ஓவு
  2. ஓவம்
  3. சித்திரம்
  4. படம்
  5. படாம்
  6. வட்டிகைச் செய்தி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.3 பேசும் ஓவியங்கள்

Question 4.
ஓவியம் வரைபவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:

  1. கண்ணுள்வினைஞர்
  2. ஓவியப் புலவர்
  3. கிளவி வல்லோன்
  4. சித்திரக்காரர்

Question 5.
புனையா ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடும் இலக்கியங்கள் யாவை?
Answer:

  1. நெடுநல்வாடை
  2. மணிமேகலை
  3. ஓவமாக்கள்
  4. வித்தகர்