Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான் Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 3.3 தப்பிப் பிழைத்த மான்
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
Question 1.
நரி, காகத்திடம் இருந்து ஏன் மானைப் பிரிக்க எண்ணியது?
Answer:
காகமும் மானும் இணைபிரியாத நண்பர்கள், அவர்களைப் பிரித்து மானைக் கொன்று தின்றுவிட வேண்டும் என எண்ணி நரி, காகத்திடம் இருந்து மானைப் பிரித்தது.
Question 2.
நரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட மானிடம் காகம் கூறியதென்ன?
Answer:
நரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட மானிடம், “நண்பா, யாரையும் நம்பிவிடாதே! அது நமக்குத்தான் ஆபத்து” என்று காகம் கூறியது. மேலும் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்றது.
Question 3.
நரி, மானை எங்கு அழைத்துச் சென்றது?
Answer:
நரி, மானை விவசாயி ஒருவரின் விளைச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றது.
Question 4.
வலையில் மாட்டிக்கொண்ட மானைக் காகம் எவ்வாறு காப்பாற்றியது?
Answer:
விவசாயி அருகில் வரும் வரை நீ இறந்தது போல அசையாமல் இரு. விவசாயி உன்னை வலையில் இருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து ‘கா கா’ என்று குரல் கொடுக்கிறேன். உடனே தப்பித்து விடு என்றது காகம். அதன்படி மான் நடந்து கொண்டு நடித்தது. வேடன் விடுவித்தவுடன் காகம் கரைய மான் ஓடியது.
Question 5.
‘தப்பிப் பிழைத்த மான்’ கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நீதி யாது?
Answer:
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்.
சிந்தனை வினா.
Question 1.
நமக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம் என்னென்ன நற்குணங்கள் இருக்க வேண்டும்? பட்டியலிடுக.
Answer:
அன்பு, உண்மை , நல்லொழுக்கம், இரக்கம், மனிதநேயம், சகிப்புத் தன்மை , சினம் கொள்ளாமை, ஈகை குணம் ஆகிய நற்குணங்கள் இருக்க வேண்டும்.
கற்பவை கற்றபின்
Question 1.
ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
தமிழ்த் தாயே வணக்கம்!
ஆபத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். நட்பு என்பது சிரித்து பேசி மகிழ்வதற்கு மட்டுமே அல்ல. துன்பம் வருகின்ற போதும், ஆபத்து வருகின்ற போதும் உடன் இருப்பது தான் உண்மையான நட்பாகும். எதிர்பாராத விதமாக ஏதாவது சண்டையில் மாட்டிக் கொண்டால், நண்பனை இவன் யார் என்று எனக்குத் தெரியாது என்று ஓடிவிடுபவன் நண்பனா? இல்லவே இல்லை.
அருகில் இருந்து காப்பவன் தான் உண்மையான நண்பன். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையர் நட்பு, அதியமான் – ஔவையார் நட்பு. இவர்கள் நட்பு உலகம் போற்றும் நட்பு. ஆபத்தில் உதவிய நட்பு. ஆபத்தில் உதவுங்கள் அதுதான் உண்மையான நட்பு.
நன்றி!
Question 2.
தீயோருடன் கொள்ளும் நட்பு, தீமையே தரும் என்பதற்கு வேறொரு கதையைக் கூறுக.
Answer:
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அங்கு ஒரு கொக்கும் இருந்தது. அது அந்தக் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்துத் தின்று கொண்டிருந்தது. குளத்தில் தண்ணீர் வற்றத் தொடங்கியது.
மீன்கள் தவித்தன. கொக்கு நல்லவனைப் போல நடித்தது. தொலைவில் உள்ள ஒரு குளத்தில் நீர் இருப்பதாகவும் ஒவ்வொருவராகக் கொண்டு போய் பத்திரமாக விடுவதாகவும் சொன்னது. அதனை நம்பி மீன்களும் கொக்கு ஒவ்வொருவரையும் தினமும் கொண்டு சென்றது.
ஒருநாள் இந்தக் குளத்தில் வசித்த நண்டு மீன்களிடம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கொக்கிடம் நட்பு கொண்டன. கொக்கு “இந்த முறை என்னை அந்தக் குளத்தில் கொண்டுபோய் விட்டுவிடு” என்று கொக்கிடம் சொல்லி, அதன் மீது ஏறிக் கொண்டது. ஒரு மலையைத் தாண்டிச் செல்லும் போது கீழே மீன் முள்கள் நிறைய கிடந்தன. மீன்களைக் குளத்தில் விடாமல் கொக்கு தின்றதை அறிந்தது.
உடனே நண்டு கொக்கின் கழுத்தை அழுத்தி தப்பித்து ஓடி, குளத்திலுள்ள மீன்களிடம் நடந்ததைச் சொன்னது.
தீய நட்பை நினைத்து மீன்கள் வருந்தின.
தீயோருடன் கொள்ளும் நட்பு, தீமையே தரும் என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.