Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.4 புறநானூறு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

குறுவினா

Question 1.
தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
Answer:

  • புகழ்: புதன் புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.
  • பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

கூடுதல் வினாக்கள்

Question 2.
தமிழர் எதனை உண்ணார், எதற்கு அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது?
Answer:

  • இந்திரனுக்குரிய அமிழ்தமே கிடைப்பதாயினும், தமிழர் தனித்து உண்ணமாட்டார்.
  • பிறர் அஞ்சுவனவற்றுக்குத் தாமும் அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது.

Question 3.
இளம்பெருவழுதி பாடல் எவ்விழுமியம் பற்றிப் பேசுகிறது?
Answer:
புறநானூற்றில் அமைந்த இளம்பெருவழுதி பாடல், வீரத்தையும் ஈரத்தையும் பற்றிப் பேசாமல், வாழ்வின் விழுமியமான, தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்னும் கருத்தைப் பேசுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

Question 4.
பொதுவியல் திணை – விளக்குக.
Answer:

  • புறப்பொருள்களாகிய வெட்சித்திணைமுதல் பாடாண்திணைவரை கூறப்பெறாத செய்திகளையும், பிற பொதுச்செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும்.
  • ‘உண்டாலம்ம’ எனத் தொடங்கும் புறப்பாடல், பொதுவியல் திணைக்குச் சான்றாக அமையும்.

Question 5.
பொருண்மொழிக்காஞ்சித் துறை – விளக்குக.
Answer:
மக்களுக்கு நலன்செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக்கூறுவது, பொருண்மொழிக்காஞ் சித்துறை யாகும். இவ்வுலகம் நிலைப்பதற்கான காரணங்களை உரைக்கும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல், ‘பொருண்மொழிக்காஞ்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
Answer:
i. “வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்”
(பழி நீங்கிப் புகழோடு வாழ்பவரே வாழ்பவராவார்; புகழின்றிப் பழியோடு வாழ்பவர் வாழாதவரே ஆவார்.)

ii. “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
(உலகம் அஞ்சும் செயல்களைச் செய்வது அறியாமை; உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல்.)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

கூடுதல் வினரக்கள்

Question 2.
புறநானூறு குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:
புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்ன. புறப்பொருள் சார்ந்த 400 பாடல்களைக் கொண்டது.

சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், படைத்தலைவர்கள் எனப் பலரின் சமூக வாழ்வைப்பற்றிப் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களை உள்ளடக்கியது. இந்நூலால், பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்தும் அறிய முடிகிறது.

Question 3.
கடலுள் மாய்ந்த இளம்பெருவபதி குறித்து அறிவன யாவை?
Answer:
‘பெருவழுதி’ என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும், அரிய குணங்கள் பலவற்றையும் இளலமுதலே பெற்றிருந்தமையால், இவரை ‘இளம்பெருவழுதி ‘ என மக்கள் போற்றினர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

கடற்செல ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால், ‘கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி’ என அழைக்கப்பெற்றார். இவர் பாடியனவாகப் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள் காணப்படுகின்றன. புறநானூற்றுப் பாடலில் வீரத்தைப் பேசாமல், ‘தனக்கென வாழாது பிற கவிகன வாழும் பிறவிப் பயன்’ பற்றிப் பேசுகிறார்.

Question 4.
இவலைகம் நிலைத்திருப்பதற்கான காரணங்களாக இளம்பெருவழுதி கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • அமிழ்தமே கிடைத்தாலும், அஃது இனிமையானது என எண்ணித் தனித்து உண்ணாதவர்கள்.
  • எவரையும் வெறுக்காதவர்கள்; சோம்பலின்றிச் செயல்படுபவர்கள்.
  • பிறர் அஞ்சுவனவற்றிற்குத் தாமும் அஞ்சுபவர்கள்.
  • புகழோடு வருவதாயின், உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள்.
  • பழியுடன் வருவதாயின், உலகமே கிடைத்தாலும் ஏற்க விரும்பாதவர்கள். எதற்கும் மனம் தளராதவர்கள்.

தமக்கென உழைக்காமல் பிறர்க்காகப் பெருமுயற்சிகளை மேற்கொண்டு உழைப்பவர்கள் எனப் பல சிறப்புகளைப் பெற்றோர் இருப்பதனால்தான், இவ்வுலகம் இன்றளவும் நிலைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, தம் பாடலில் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

இலக்கணக்குறிப்பு

உண்டு, இனிது – குறிப்பு வினைமுற்று
ஆல் – தேற்றம்
உண்டல், அஞ்சல் – தொழிற்பெயர்கள்
முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உலகம் – இடவாகு பெயர்
இந்திரர் அமிழ்தம் (இந்திரர்க்கு உரிய அமிழ்தம்) – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
அஞ்சுவது அஞ்சி – வினையாலணையும் பெயர்
உயிரும் கொடுக்குவர் – உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
கொடுக்குவர் – படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று
நோன்தாள் – உரிச்சொற்றொடர்
அம்ம – அசைநிலை
அனையர் – வினையாலணையும் பெயர்
அயர்விலர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

உறுப்பிலக்கணம்

1. துஞ்சல் – துஞ்சு + அல்
துஞ்சு – பகுதி, அல் – தொழிற்பெயர் விகுதி.

2. முனிவிலர் – முனிவு + இல் + அர்
முனிவு – பகுதி, இல் – எதிர்மறை இடைநிலை, அர் லாபால் வினைமுற்று விகுதி.

3. கொடுக்குவர் – கொடு + க் + கு + வ் + அர்
கொடு – பகுதி, க் – சந்தி, கு – சாரியை, வ் – எதிர்கால இடைநிலை,
அர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

4. அஞ்சி – அஞ்சு + இ
அஞ்சு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. இயைவதாயினும் – இயைவது ஆயினும்
“உயிர்வரின் உக்குறள் லேயவிட்டோடும்” (இயைவத் + ஆயினும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இயைவதாயினும்)

2. புகழெனின் – புகம் + எனின்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புகழெனின்)

3. முனிவினர் – மூனிவு + இலர்
“உயிர்களின் … முற்றும் அற்று” (முனிவ்+இலர்),
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (முனிவிலர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

4. அஞ்சுவதஞ்சி – அஞ்சுவது + அஞ்சி
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அஞ்சுவத் + அஞ்சி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அஞ்சுவதஞ்சி)

5. பழியெனின் – பழி + எனின்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (பழி + ய் + எனின்),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பழியெனின்)

6. உலகுடன் – உலகு + உடன்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் ” (உலக் + உடன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உலகுடன்)

7. தமக்கென – தமக்கு + என
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (தமக்க் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தமக்கென)

8. பிறர்க்கென – பிறர்க்கு + என
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (பிறர்க்க் + உடன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பிறர்க்கென)

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. வெள்ளிவீதியார் – அ. புறநானூறு
2. அண்ணாமலையார் – ஆ. வாடிவாசல்
3. சி.சு.செல்லப்பா – இ. குறுந்தொகை
4. இளம்பெருவழுதி – ஈ. காவடிச்சிந்து
i. அ ஆ இ ஈ
ii. ஆ ஈ அ இ
iii. இ ஈ ஆ அ
iv. இ ஈ அ ஆ
Answer:
iii. இ ஈ ஆ அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

Question 2.
‘இனிதென ‘ – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
ஆ) தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
Answer:
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

கூடுதல் வினாக்கள்

Question 3.
புறநானூறு என்பது, …………………. எனப் பிரியும்.
அ) புற + நானூறு
ஆ) புறநா + னூறு
இ) புறம் + நான்கு + நூறு
ஈ) புறம் + நாலு + நூறு
Answer:
இ) புறம் + நான்கு + நூறு

Question 4.
தமிழரின் வாழ்வியல் கருவலமாகக் கருதப்படுவது………………….
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

Question 5.
‘புறம்’, ‘புறப்பாட்டு’ என வழங்கப்படும் நூல்………………….
அ) பரிபாடல்
ஆ) பதிற்றுப்பத்து
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு
Answer:
பறநானூறு

Question 6.
கடலூர் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய மற்றொரு பாடல் அமைந்த நூல்………………….
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) பத்துப்பாட்டு
ஈ) பரிபாடல்
Answer:
ஈ) பரிபாடல்

Question 7.
உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும் புறப்பாடல்,…………………. வகையைச் சார்ந்தது.
அ ) இன்னிசை ஆசிரியப்பா
ஆ) நேரிசை ஆசிரியப்பா
இ) நிலைமண்டில ஆசிரியப்பா
ஈ) அடிமறி மண்டில ஆசிரியப்பா
Answer:
ஆ) நேரிசை ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

Question 8.
அடிக்கோடிட்ட தொடரின் பொருளைத் தெரிவு செய்து, சரியான விடையைத் தேர்க.
பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனில் உயிரும் கொடுக்குவர்
அ) போரிடுவதற்கு அஞ்சுதல்
ஆ) விலங்கினத்திற்கு அஞ்சுதல்
இ) பழிச்செயல் புரிய அஞ்சுதல்
ஈ) பிறர் புகழ்கண்டு அஞ்சுதல்
Answer:
இ) பழிச்செயல் புரிய அஞ்சுதல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.4 புறநானூறு

Question 9.
தவறான விடையைத் தேர்வு செய்க.
அ) காணலன் – காண் + அல் + அன்
ஆ) எழுதிலன் – எழுது + இல் + அன்
இ) வருந்திலன் – வருந்து + இல் + அன்
ஈ) நடந்திலன் – நடந்து + அல் + அன்
Answer:
ஈ) நடந்திலன் – நடந்து + அல் + அன்