Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை
11th History Guide அரபியர், துருக்கியரின் வருகை Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின்போது சிந்து அரசர் ……… ஆவார்.
அ) ஹஜா
ஆ) முகமது – பின்-காஸிம்
இ) ஜெயசிம்ஹா
ஈ) தாகிர்
Answer:
ஈ) தாகிர்
Question 2.
கஜினி மாமுது, இந்தியாவுக்குள் ……….. முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்.
அ) 15
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
ஆ) 17
Question 3.
பாலம் பவோலி கல்வெட்டு …………… மொழியில் இருக்கிறது.
அ) சமஸ்கிருதம்
ஆ) பாரசீக மொழி
இ) அரபி
ஈ) உருது
Answer:
அ) சமஸ்கிருதம்
Question 4.
உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலைக் கட்டியவர்கள்……
அ) ராஷ்டிரகூடர்
ஆ) டோமர்
இ) சண்டேளர்
ஈ) பரமர்
Answer:
இ) சண்டேளர்
Question 5.
மம்லுக் என்ற பெயர் ஒரு ………………. க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்.
அ) அடிமை
ஆ) அரசர்
இ) இராணி
ஈ) படைவீரர்
Answer:
அ) அடிமை
Question 6.
இப்ன் பதூதா ஒரு ……………… நாட்டுப் பயணி.
அ) மொராக்கோ
ஆ) பெர்சியா
இ) துருக்கி
ஈ) சீனா
Answer:
அ) மொராக்கோ
Question 7.
அரசப் பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் ……….
அ) முபாரக்ஷா
ஆ) ஆலம் ஷா
இ) கிசர் கான்
ஈ) துக்ரில் கான்
Answer:
ஆ) ஆலம் ஷா
Question 8.
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க.
1) ராமச்சந்திரர் – 1. காகதீயர்
2) கான் – இ-ஜஹான் – 2. பத்மாவத்
3) மாலிக் முஹமத் ஜெய்சி – 3. மான் சிங்
4) மன் மந்திர் – 4. தேவகிரி
(அ) 2, 1, 4, 3
(ஆ)1, 2, 3, 4
(இ) 4, 1, 2, 3
(ஈ) 3, 1, 2, 4
Answer:
(ஈ) 3, 1, 2, 4
கூடுதல் வினாக்கள்
Question 1.
டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்ட காலம்………………….
அ) 1200-1550
ஆ) 1250-1550
இ) 1150-1550
ஈ) 1250-1650
Answer:
அ) 1200-1550
Question 2.
அரேபிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ……………………
அ) பொ.ஆ.710
ஆ) பொ . ஆ.711
இ) பொ. ஆ.712
ஈ) பொ . ஆ.713
Answer:
இ) பொ. ஆ.712
Question 3.
கஜினி முகமதுவின் சோம்நாத் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு ………………..
அ) பொ.ஆ. 925
ஆ) பொ.ஆ. 1025
இ) பொ .ஆ. 191
ஈ) பொ .ஆ.1192
Answer:
ஆ) பொ.ஆ. 1025
Question 4.
கஜினி வம்சத்தின் கடைசி அரசர் …………..
அ) மாமுது
ஆ) கோரி
இ) சபுக்தஜின்
ஈ) குரவ்ஷா
Answer:
ஈ) குரவ்ஷா
Question 5.
கஜினி மாமுதுவுடன் இந்தியாவிற்கு வந்த வரலாற்று ஆசிரியர் ………………..
அ) ரோமியா தாப்பா
ஆ) ஆரியப்பட்டர்
இ) அல-பெரூனி
ஈ) பக்தியார் கில்ஜி
Answer:
இ) அல-பெரூனி
Question 6.
கோரி முகமதுவின் முல்டான் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு ……….
அ) பொ .ஆ.1025
ஆ) பொ .ஆ.1175
இ) பொ.ஆ.1125
ஈ) பொ .ஆ.1075
Answer:
ஆ) பொ .ஆ.1175
Question 7.
முதல் தரைப் போர் நடைபெற்ற ஆண்டு ……………
அ) பொ .ஆ.1911
ஆ) பொ .ஆ. 1191
இ) பொ.ஆ.1192
ஈ) பொ .ஆ. 1912
Answer:
ஆ) பொ .ஆ. 1191
Question 8.
முதல் தரைன் போரில் தோல்வியுற்ற இசுலாமிய அரசர் ………
அ) கஜினி மாமுது
ஆ) கோரிமுகமது
இ) அலாவுதின் கில்ஜி
ஈ) முகமது பின் துகள்க்
Answer:
ஆ) கோரிமுகமது
Question 9.
அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் …………
அ) கில்டுவெல்
ஆ) குத்புதீன் ஐபக்
இ) பாஸ்பன்
ஈ) கஜினிமாமூது
Answer:
ஆ) குத்புதீன் ஐபக்
Question 10.
அடிமை வம்சத்தின் மற்றொரு பெயர் ………………….
அ) துக்ளக் வம்சம்
ஆ) இல்பாரி வம்சம்
இ) மம்லுக் வம்சம்
ஈ) கில்ஜி வம்சம்
Answer:
இ) மம்லுக் வம்சம்
Question 11.
குதுப்பினாரின் உயரம் ………………………
அ) 143
ஆ) 243
இ) 233
ஈ) 234
Answer:
(ஆ) 243
Question 12.
அலாவுதீன் கில்ஜியின் தக்காண தளபதி ……….
அ) துக்ரில் ஜான்
ஆ) மாலிக் காபூர்
இ) குவாஸி
ஈ) குத்புதீன் ஐபக்
Answer:
ஆ) மாலிக் காபூர்
Question 13.
தேவகிரிக்கு முகமது-பின்-துக்ளக் சூட்டிய பெயர்
அ) தௌலதாபாத்
ஆ) அகமதாபாத்
இ) ஜூனகாத்
ஈ) அலகாபாத்
Answer:
அ) தௌலதாபாத்
Question 14.
லோடி வம்ச கட்சியை நிறுவியவர் ………………..
அ) பஹயோல் லோடி
ஆ) சிக்கந்தர் லோடி
இ) கான்ஜஹான் லோடி
ஈ) இப்ராஹிம் லோடி
Answer:
அ) பஹயோல் லோடி
Question 15.
அமீர் குஸ்ரு எழுதிய நூல்……………………..
அ) கிதாம்-உல்-ஹிந்த்
ஆ) பெதிஷ்மா
இ) ஒன்பது வானங்கள்
ஈ) தாரிக்-அல்-ஹிந்த்
Answer:
இ) ஒன்பது வானங்கள்
Question 16.
ஃபிரோஷ் துக்ளக் நடத்திய ஒரே பெரிய படையெடுப்பு
அ) தேவகிரி
ஆ) வங்கம்
இ) சிந்து
ஈ) மால்வா
Answer:
இ) சிந்து
Question 17.
கூற்று : 2ஆம் தனரன் போரில் பிருதிவிராஜ் தோல்வி அடைந்தார்.
காரணம் : அவர் தமது அமைச்சர் சோமேஸ்வராவின் ஆலோசனையை நிராகரித்தார்.
அ) கூற்றும் காரணமும் சரி
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி
Question 18.
மம்லுக் வம்சம் என்பது ………
அ) கில்ஜி வம்சம்
ஆ) கோரி வம்சம்
இ) அடிமை வம்சம்
ஈ) கில்பாரி வம்சம்
Answer:
இ) அடிமை வம்சம்
Question 19.
முதல் தரைன் போரில் கோரி முகமதுவை எதிர்த்து போட்டியிட்டவர் ………………
அ) பிருத்விராஜ்
ஆ) கீர்த்திவர்மன்
இ) யசோதா வர்மன்
ஈ) ராமச்சந்திரன்
Answer:
அ) பிருத்விராஜ்
Question 20.
டெல்லி அரியணையை அலங்கரித்த முதல் பெண்மணி……………
அ) ராணி பத்மினி
ஆ) ஜான்சிலட்சுமி பாய்
இ) ரஸியா சுல்தானா
ஈ) இந்திராகாந்தி
Answer:
இ) ரஸியா சுல்தானா
Question 21.
இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என அறிவித்தவர் ……………… (மார்ச் 2019)
அ) பானபட்டர்
ஆ) அமிர்குஸ்டு
இ) அஸ்வகோவா
ஈ) தான்சேன்
Answer:
ஆ) அமிர்குஸ்டு
II. சிறுகுறி வரைக
Question 1.
கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்.
Answer:
- இந்தியாவில் இசுலாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுப்படுத்த சபுக்தஜின் நடவடிக்கை எடுத்தார்.
- ஆப்கன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்து அங்கு தனது மூத்த மகன் மாமூதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
- 997ல் சபுக்தாஜின் இறந்தபோது மாமுது 7 குரசனில் இருந்ததால் இளைய மகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
- பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து எழு வயதில் கஜினியின் அரசராக மாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
(iv) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து எழு வயதில் கஜினியின் அரசராகமாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
Question 2.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்.
Answer:
- கஜினி முகமது இந்தியா வரும் போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
- அல்பெருனி ஹிதாப் – இ – ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
- பாரசீக கவிஞரான பிர்தௌசி, ஷாநாமாவை இயற்றினார்.
- மேலும் வரலாற்று அறிஞர் உத்பி. சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
Question 3.
துருக்கியப் படையெடுப்பின் போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ராஜபுத்திர வம்சாவளிகள்.
Answer:
- துருக்கிய படையெடுப்பின் போது வட இந்தியாவில் பல ராஜபுத்திர அரசர்கள் ஆட்சிபுரிந்தனர்.
- முக்கிய ராஜபுத்திர அரசுகளாக சௌகான், கடவாலா, பரமர் மற்றும் சந்தேலர்கள் இருந்தனர்.
- இதில் விக்ரகராஜ். பிருத்திவிராஜ் போன்றோர் சிறந்தவர்களாக திகழ்ந்த னர்.
- பரமர் வம்சத்தில் போஜரும், கடவாலாவில் ஜெயசந்திராவும், சந்தேலர்களில் யாசோவர்மனும், கீர்த்திவர்மனும் றுமையுடன் காணப்பட்டனர்.
Question 4.
நாற்பதின்மர் அமைப்பு.
Answer:
- டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
- இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
- கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
- வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.
Question 5.
இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்படுத்திய இசைக்கருவிகள்.
Answer:
- ராய்ஸாரங்கி போன்ற இசைக்கருவிகளை இசுலாமியர் கொண்டு வந்தனர்.
- இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார்.
- சுஸ்பி துறவி பிர் போதன் இக்காலத்தின் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார்.
- ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக் தர்பன் என்ற இந்திய இந்திய சமஸ்கிருத இசை நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்தனர்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
தில்லி சுல்தானியர்களின் வரலாற்றை அறிய உதவும் சாக்சகர் சிலவற்றைக் கூறுக.
Answer:
- அல்பெருனி : தாரிக் – அல் – ஹிந்த் (இந்திய தத்துவ ஞானமும் மதமும்)
- ஜியாவுத்தின் பாரனி : தாரிக்-இ-பெரோஷ்ஷாஹி (பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு.
- அமிர் குஸ்ரு : மிஃப்தா உல்ஃபுதூ (ஜலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள்).
- துக்ளக் நாமா : பாரசீக மொழியில் துக்ளக் வம்சவரலாறு.
Question 2.
பிராமணாபாத் குறிப்பு தருக.
Answer:
- சிந்து பகுதியில் தாஹிர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
- பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியை தாகீரின் முன்னோர்கள் பௌத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி நடத்தி வந்தனர்.
- ராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் பிராமணர்களே இருந்தனர்.
- இதனால் இந்நகர் “பிராமணாபாத்” எனப்பட்டது.
Question 3.
குத்புதீன் ஐபக் – குறிப்புத்தருக.
Answer:
குத்புதீன் ஐபக் :
- குத்புதீன் ஐபக், சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
- அவரது திறமையையும், விசுவாசத்தையும் கண்ட முகமது கோரி, இந்தியாவில் தான் வெற்றி பெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார்.
- குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206 – 1210) ஆட்சி புரிந்தார்.
- அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். 1210ல் லாகூரில் சௌகான் எனும் விளையாட்டின் போது நடந்த ஒரு விபத்தில் இறந்தார்.
Question 4.
ஜிஸியா – குறிப்புத்தருக.
Answer:
- ஜிஸியா என்பது இசுலாமிய அரசுகளால், இசுலாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வரி வசூலிப்பதாகும்.
- இதன் மூலம் அவர்கள் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.
- இந்தியாவில் முதன் முறையாக இசுலாமியர் அல்லாதோர் மீது ஜிஸியா வரி விதித்தவர் குத்புதீன் ஐபக் ஆவார்.
- முதலாம் அக்பர் ஜிஸியா வரியை ஒழித்தார். இருப்பினும் ஔரங்கசீப் மன்னர் காலத்தில் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
Question 5.
குறிப்பு வரைக : அல் – பெருனி.
Answer:
- கணிதவியலாளரும், வானவியலாரும், வரலாற்று ஆசிரியருமான அல்-பெருனி, கஜினி மாமுதுடன் இந்தியா வந்தார்.
- சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். இந்து மதநூல்களையும், தத்துவ நூல்களையும் கற்றார்.
- கிதாப் – உல் – ஹிந்த் என்ற நூலை இயற்றினார். யூக்ளிடின் என்ற கிரேக்க நூலை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்.
- ஆரியப்பட்டரின் முக்கிய நூலான ஆர்யபட்டியம் (புவி, அதன் அச்சில் சுழல்வது, இரவு பகலை ஏற்படுத்து கிறது போன்ற செய்திகளை உள்ளடக்கிய நூல்) என்பதை அவர் மேலை நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார்.
- அல்பெருலி இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார்.
III. சுருக்கமான விடை தருக
Question 1.
முகமது – பின்- காஸிமின் இராணுவப் படையெடுப்புகளுக்கான உடனடிக் காரணங்களை விவரி.
Answer:
- ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ் – பின் – யூசுஃப், கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி சிந்து அரசர் தாகீரை எதிர்த்து, தரைவழி, கடல்வழி என இரு தனித்தனி படைப்பிரிவுகளை அனுப்பினார்.
- ஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தாகிரால் தோற்கடிக்கப்பட்டு அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
- இதனால் கோபமுற்ற யூசுப் பெரும்படை ஒன்றை தன் மருமகன் முகமது – பின் – காசிம் தலைமையில் தாகீருக்கு எதிராக அனுப்பினார்.
- அரசர் தாகீர் அவரது முதன்மை அமைச்சர் ஆகியோருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. மக்களும் மன்னர் மீது அதிருப்தி அடைந்த சூழலில் முகமது – பின் – காசிம் பிராமணபாத்தை எளிதில் கைப்பற்றி, தாகிரை விரட்டிச் சென்று போரில் கொன்றார்.
- தேபல் துறைமுக நகரத்தை அழித்து கொள்ளையடித்தார். இதுவே முகமது – பின் – காசிமின் படையெடுப்பிற்கு உடனடிக் காரணமாகும்.
Question 2.
இந்தியாவில் கஜினி மாமூதின் இராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்கள் என்னென்ன?
Answer:
- கஜினி மாமுதுவின் முதன்மை நோக்கம் செல்வக் களஞ்சியமாக விளங்கிய இந்து கோயில்களை கொள்ளை அடிப்பதே ஆகும்.
- மதத்தின் பெயரால் போர் என கூறி பிறதே கோயில்களை இடித்து சிலைகளை உடைத்தார்.
- பிற மதத்தினரை வெட்டிக் கொன்றும் வழிபாட்டுத்தலங்களை அழித்தும் தன் – மதப்பற்றை வெளிப்படுத்தினார்.
- வழிபாட்டிடங்களை சூறையாடுதல், கடவுள் திருவுருவங்களை அழித்தல் என்பது பேரரசின் அதிகார வெளிப்பாடாகும்.
- தனது படைகளை பராமரிக்க, செலவுகளை ஈடுகட்ட கொள்ளையடித்தனர்.
- 32 ஆண்டுகள் ஆட்சி செய்த கஜினி மாமுது இந்தியாவின் மீது 17 முறை போர் தொடுத்தார்.
Question 3.
இரஸியா சுல்தானா அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது ஏன்?
Answer:
- ரஸியா பேரரசர் இல்துமிஷின் மகள்.
- ரஸியா அரியணை ஏறுவதற்கு துருக்கிய பிரபுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- ஏராளமான தடைகளை கடந்து ரஸியா பேரரசியாக பதவி ஏற்றார். பொதுமக்கள் ஆதரவும் அவருக்கு இருந்தது.
- “ஜலாலுதீன் யாகுத்” என்ற ஓர் அபீசினிய அடிமையை குதிரை லாயத் தலைவராக நியமித்தார். இதை துருக்கிய பிரபுக்கள் விரும்பவில்லை .
- யாகுத்துக்கும் அரசி ரசியாவுக்கம் இருந்த நெருக்கத்தை விரும்பாத பிரபுக்கள் அரசியை பதவி நீக்கம் செய்ய அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
- தெற்கு பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவைத் தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைச் சதிகாரர்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினர்.
Question 4.
மாலிக் காஃபூரின் தென்னிந்தியத் தாக்குதல்கள் குறித்து எழுதுக.
Answer:
அலாவுதீன் கில்ஜியின் தக்காண படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தென்னிந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூரே ஆவார்.
- தேவகிரி அரசர் ராமச்சந்திர தேவருக்கு எதிராக 1307ல் மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தார். அடிப்பணிந்த அந்நாட்டு அரசர் ஏராளமான செல்வத்தை நிறையாகவும் செலுத்தினார்.
- 1309ல் மாலிக்காபூர் வாராங்கல் மீது படையெடுத்து அதன் அரசர் பிரதாபருத்ர தேவன் தோற்கடிக்கப்பட்டான். ஏராளமாக செல்வம் கைப்பற்றப்பட்டது.
- மாலிக்காபூர் 1310ல் துவாரசமுத்திர அரசன் மூன்றாம் வீரவல்லிளானை தோற்கடித்தான். பெரும் செல்வத்தைக் கைப்பற்றி டெல்லிக்கு அனுப்பிவைத்தான்.
- பிறகு மாலிக்காபூர் தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவரங்கம் ஆகிய நகரங்களை கொள்ளையடித்தான்.
- பின்னர் மதுரைமீது படையெடுத்தார். தலைநகர் மதுரையை விட்டு தப்பி ஓடினான்.
- 1311ல் ஏராளமான செல்வக்குவியலுடன் மாலிக்காபூர் தில்லி திரும்பினார்.
Question 5.
முகமது துக்ளக்கின் சோதனை முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் என்னென்ன?.
Answer:
முகமது – பின் – துக்ளக், கற்றவர், நற்பண்பு நிறைந்தவர். திறமை வாய்ந்த அரசர் என்ற போதிலும் இரக்கமற்றவர், கொடுரமானவர் நியாயமற்றவர் என்றும் பெயர் பெற்றிருந்தார். முகமது பின் துக்ளக்கின் சோதனை முயற்சிகள்:
(i) தலைநகர் மாற்றம்
(ii) அடையாள நாணயங்கள்
(iv) வேளாண் விரிவாக்கத்திட்டம்
(i) தலைநகர் மாற்றம் :
தில்லியிலிருந்து தென்னிந்திய அரசுகளை ஆள்வது கடினம் என எண்ணிய துக்ளக் தலைநகரை இந்தியாவின் மையத்திலிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றினார். இங்கிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்று உணர்ந்த பிறகு மீண்டும் தில்லிக்கே தலைநகரை மாற்றினார். இத்திட்டம்
தோல்வியில் முடிந்தது.
(ii) நாணயச் சீர்திருத்தம்:
வெள்ளி நாணயத்திற்கு பதில் வெண்கல நாணயங்களை வெளியிட்டார். ஆனால் வெண்கல நாணயங்களை பலர் போலியாக அச்சிட்டனர். இது அரசு கஜானாவை காலி செய்தது. எனவே துக்ளக் அரசாங்கம் புதிய நாணயங்களை திரும்ப பெற்று மீண்டும் வெள்ளி நாணயங்களை அச்சிட வேண்டியதாயிற்று. இத்திட்டமும் தோல்வியில் முடிந்தது.
(iii) வேளாண் விரிவாக்கத் திட்டம்:
தோவாப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவிய போது முறையற்ற நிலவரி விதிக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பு இவற்றை சீர் செய்ய கால்நடை, விதைகள், கிணறு வெட்ட கடன் தரப்பட்டது. அலுவலர்கள் திறம்பட செயல்படவில்லை ஆதலால் இதுவும் பயன்தரவில்லை . முகமது பின் துக்ளக்கின் திட்டங்கள் புதுமையானது என்றாலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
III. கூடுதல் வினாக்கள்
Question 1.
குதுப்பினாரைப் பற்றி கூறுக.
Answer:
- 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பிரமாண்டமான கட்டிடம் குதுப்பினார்.
- குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டு, கில்டுமிஷால் கட்டி முடிக்கப்பட்டது.
- கில்டுமிஷால் கட்டி முடிக்கப்பட்ட போது 72.5மீட்டர் உயரமாக இருந்தது.
- ஃபைரோஸ்ஷா துக்ளக் மேற்கொண்ட பழுது நீக்கும் பணிகளால் 74 மீட்டராக உயர்ந்தது.
- இந்த கோபுரம் சூஃபித் துறவி குத்புத்தீன் பக்தியார் காகி என்பவரது நினைவாக எழுப்பப்பட்டது.
- கட்டிடத்திலிருந்து சற்று வெளியே நீட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடங்கள் அக்கால கட்டிடக் கலையின் சிறப்புக்கு சான்றாகத் திகழ்கின்றன.
Question 2.
இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூறுக.
Answer:
- இசுலாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள் அபகரிப்புகள் இருந்தாலும் இந்து மதத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான மனதுடன் காணப்பட்டனர்.
- இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி தனது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்.
- 1325ல் முகமது – பின் – துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு . ஆணையிட்டார்.
- இவரே கூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.
- பரணி என்ற வரலாற்று ஆசிரியர் தனது நூலில் குறிப்பிடும் போது “பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும், மங்கோலியர்களையும், நாத்திகர்களையும், பஞ்சணையில் அமரவைத்து சகல மரியாதைகளையும் செய்கிறார்” என்று குறிப்பிடுகிறார்.
- மேலும் ” இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோயில்கள் கட்டிக் கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இசுலாமிய வேலையாட்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்”.
- “ இசுலாமியர்களுக்கு நிகராக வாய், ராணா, தாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்படுகின்றன” என்றும் பரணி எழுதுகிறார். இவைகள் இசுலாமியர் ஆட்சியின் சிறப்பு வாய்ந்த முக்கியத்துவம் ஆகும்.
IV. விரிவான விடை தருக :
Question 1.
கஜினி மாமூதினுடைய கொள்ளைத் தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அதிகமும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவை – விவாதிக்கவும்.
Answer:
கஜினி மாமுது :
27வது வயதில் கஜினியின் அரசராகப் பொறுப்பேற்ற கஜினி கமது 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சி காலத்தில் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார். இப்படையெடுப்பு மத ஆதிக்கம் என்பதை விட அரசியல் பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதேயாகும்.
வட இந்தியத் தாக்குதல் :
- ஷாஹி அரசர் அனந்த பாலர் தோற்கடிக்கப்பட்டார். இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
- கங்கைச் சமவெளியைக் கடந்து பஞ்சாப், கன்னோகி சென்றடைவதற்கு முன் மதுரா சூறையாடப்பட்டது.
- 1025ல் குஜராத் கடற்கரையில் உள்ள சோம்நாத் கோயில் நகர படையெடுப்பாகும். ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்தார். படையெடுப்பின் தன்மை
- கஜினியின் இக்கொள்ளைகளை மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதை விட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டது என்பதே பொருந்தும்” என பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
- கஜினி மாமுதுவின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே, மேலும் கஜினி மாமுது கொள்ளை அடித்தது. அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடு செய்யும் தேவையினால் ஏற்பட்டது.
வரலாற்றறிஞரின்
கூற்று வரலாற்றுறிஞர் ரோமிலா தாப்பர் ”இத்தகைய திடீர் ராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்பு வாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர் முறைகளிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையுமே அவை வெளிப்படுத்துகின்றன” என்கிறார்.
எனவே இவரது தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவையே என்றால் மிகையாகாது.
Question 2.
இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?
Answer:
கோரி முகமதுவின் வட இந்திய போர்களில்
முக்கியமானது தரைன் போர்களாகும். தெற்கு ஆசிய இஸ்லாமிய ஆட்சி அமைய அடித்தள மிட்டவரும் இவரே.
முதல் தரைன் போர் 1191 :
அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகானுக்கும் கோரி முகமதுவுக்கும் இடையே 1191ல் முதல் தரைன் போர் நடைபெற்றது. இதில் கோரி முகமது தோல்வியுற்றார். காயம் அடைந்த கோரி முகமதுவை ஒரு குதிரை வீரன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றான்.
இரண்டாம் தரைன் போர் 1192:
- முதல் தரைன் போரில் தோல்வியுற்ற கோரி முகமது மீண்டும் பிருத்விராஜ் சௌகான் மீது 1192 ‘2வது தரைன் போர் நிகழ்த்தினார்.
- இம்முறை கோரியின் ஆற்றலை பிருதிவிராஜ் குறைத்து மதிப்பிட்டார். தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
- சிறிய படைக்குழுவுக்குத் தலைமை தாங்கி 2வது தரைன் போரில் ஈடுபட்டார்.
- 2வது தரைன் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
- இந்திய வரலாற்றின் திருப்பு முனையயாக 2வது தரைன் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி பிருதிவிராஜ் ஜிடமே ஆட்சியை ஒப்படைத்தார். ஆனால் ராஜதுரோகம் குற்றம் சாட்டி அவரைக் கொன்றார்.
- தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப்பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார். இவ்வாறாக இரண்டாவது தரைன் போர் ராஜபுத்திர ஆட்சியின் வீழ்ச்சிக்கும் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சிக்கும் வழிவகை செய்தது. எனலாம்.
Question 3.
கஜினி மாமுதுவையும், கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக. (மார்ச் 2019)
Answer:
கஜினி முகமது
- ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினியின் ஆட்சியாளர்
- கஜினியின் படையெடுப்புகள் கொள்ளை * அடிக்கும் நோக்கம் கொண்டவை.
- படைவீரர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள்
- சிறந்த போர்திறமை பெற்றவர்.
இந்தியாவில் போர் தொடுத்த 17 முறையும் வென்றார். - போரில் ஈடுபட்ட வீரர்கள் பிற மதத்தினைரை வெட்டிக் கொல்வதன் மூலம் தனது மதப்பற்றினை வெளிப்படுத்தினார்.
- காவல் அரண்கள் ஏதும் அமைக்கப்படவில்லை
- படைவீரர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன
- இவரது கால முக்கிய படையெடுப்பு 1025ல் சோம்நாத் நகர கோயில்கள் படையெடுப்பு ஆகும்.
- இந்துக் கோயில்களைக் கொள்ளை அடித்தனர்.
- கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. புதிய அரசை உருவாக்க விரும்பவில்லை .
கோரி முகமது
- ஆப்கானிஸ்தானிலுள்ள கோரியின் ஆட்சியாளர்
- கோரிமுகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார்
- அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்
- குஜராத் போர், முதலாம் தரைன் போர் பயங்கர தோல்வியை சந்தித்தது.
- ஜிகாத் என்னும் மதத்தின் பெயரால் போர் நடத்தினார்
- நவீன, பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார்.
- ஏற்கனவே பயிற்சி பெற்ற படை வீரர்களாக இருந்தனர்.
- இவரது கால முக்கிய படையெடுப்புகள் 1வது, 2வது தரைன் படையெடுப்புகளாகும்.
- இவர் முக்கிய நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கினார்
- கோரிமுகமது தான் வென்ற பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய அரசை உருவாக்க எண்ணினார். தனது விசுவாசமிக்க அடிமை குத்புதீன் ஐபக் தலைமையில் புதிய ஆட்சியினை உருவாக்கினார்
Question 4.
அலா – உத் – தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்.
Answer:
அலாவுதின் கில்ஜியின் பரந்த நிலப்பரப்புகளை வென்றதைத் தொடர்ந்து அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
நிர்வாக சீர்த்திருத்தங்கள்:
- பிரபுக்கள் குவித்து வைத்திருந்த செல்வம் பறிமுதல் செய்தார். பிரபுக்கள் சதிகள் எய்வதற்கான வாய்ப்பை தடுக்க எடுத்த முதல் நடவடிக்கை இது.
- சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.
- கிராம அலுவலர்கள் அனுபவித்து வந்த மரபுரிமைகளை பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களை தடைச் செய்தார்.
- ஊழல் அரசு அலுவலர்களை கடுமையாகத் தண்டித்தார்.
சமூக சீர்திருத்தம் :
- உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டது.
- இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது.
- அலாவுதீன் விதித்த வரிசுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல.
- தனது பேரரசின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
சந்தை சீர்திருத்தங்கள் :
- படை வீரர்களுக்கு ஊதியத்தை பணமாக கொடுத்த முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார் குறைந்த ஊதியமும் அளிக்கப்பட்டது.
- அத்யாவசியப்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிக்கவும் ஒற்றர் முறையை பயன்படுத்தினார்.
- கொடுக்கல், வாங்கல், பேரங்கள் அனைத்து விபரங்களையும் ஒற்றர் மூலம் அறிந்து கொண்டனர்.
- அத்யாவசியப் பொருள்களின் விலை குறித்து அலுவலர்களும், ஒற்றர்களும் தினசரி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
தண்டனை :
(i) விலை ஒழுங்கு முறை விதிகளை மீறுவோர் கடமையாக தண்டிக்கப்பட்டனர்.
(ii) ஏதேனும் எடைக் குறைவு கொண்டு பிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண்முன்னே வீசப்பட்டது.
இவ்வாறாக எளியோர் மீது வரியை குறைத்து செல்வந்தர்கள் மீது அதிக வரியை புகுத்தி, தவறுகளுக்கு தக்க தண்டனை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தினார். ஃபெரோஸ்துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக. முகமது பின் துக்ளக் இறந்த போது அவரது மகன் குழந்தையாக இருந்ததால் பெரோஸ் துக்ளக் ஆட்சி பொறுப்பை பெற்றுக் கொண்டார்.
Question 5.
இவரது ஆட்சியைப் பற்றி ஆராய்வோம்.
Answer:
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை :
- பிரபுக்கள் வகுப்பாரிடமும் , மதத்தலைவர்களிடமும் பெரோஸ் துக்ளக் சமரசக் – கொள்கையைக் கடைப்பிடித்தார்.
- பிரிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
- அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையை ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
- பல வரிகளை குறைத்தனர். அதே நேரத்தில் அரசு நிதி வீணாக செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.
அடிமைகள் நலத்துறை :
- அடிமைகள் குறித்து ஃபெரோஸாக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது.
- முந்திய ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
- அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை உருவாக்கினார்.
- 1,80,000 அடிமைகளின் நல் வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது.
- கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின்
கொள்கை :
- ஃபெரோஸ் துக்ளக் போர்களை விரும்பவில்லை. ஆனால் கிளர்ச்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார்.
- அவரது காலத்திய ஒரே பெரிய படையெடுப்பு 1362ல் சிந்துவின் மீது படையெடுப்பு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
- இவரது காலத்தில் நடைபெற்ற இரண்டு மங்கோலியத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
மதக் கொள்கை:
- வைதீக இசுலாமை ஆதிரித்தார். தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
- மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
- இசுலாமியர் அல்லாதவருக்கு ‘ஜிஸியா என்றும் வரியை விதித்தார்.
- புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை தடைசெய்யவில்லை.
- இசுலாமியர் – அல்லாதோர் உள்படக் கற்றித்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார்.
பொதுப்பணிகள் :
(i) பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார்.
(ii) சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும்,
(iii) யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையை சுட்டுகின்றன. இவரது ஆட்சி பல வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரபுக்களுடன் மேற்கொண்ட சமரசக் கொள்கை பரம்பரை உரிமை, பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் ஆகியவை ஃபெரோஸ் துக்ளக் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச் சென்றது.
Question 6.
தில்லி சுல்தானியத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விவரணை தருக.
Answer:
சுல்தானிய ஆட்சியின் நிர்வாகம் :
அரசும் சமூகமும் :
சுல்தானிய அரசு முறையானதோர் இசுலாமிய அரசாகக் கருதப்பட்டது. சுல்தான்கள் பலரும் கலிபாவின் தலைமையை ஏற்பதாக
கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினர்.
நீதிமன்ற தலைவராக :
ராணுவத் தலைவர் என்ற வகையில் தலைமைத் தளபதியாக மன்னர் இருந்தனர்.
நீதி நிர்வாக தலைவர் என்ற வகையில் மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றமும் அவர்தான். சுல்தான்கள் தங்களை கடவுளின் பிரதிநிதியாகக் கருதினர்.
பேரரசு :
முகமது – பின் – துக்ளக் காலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளைத் தவிர காஷ்மீர் முதல் கேரளம் உள்பட இந்தியா முழுவதும் டில்லியின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டது.
வாரிசுரிமை : வாரிசுரிமை வரையறுக்கப்படவில்லை . வாரிசுரிமை போட்டி வழக்கமாக நடந்தது.
வரி : ‘இக்தா’ உரிமையாளர்கள் வரி வசூலித்தனர். குறிப்பிட்ட சில பகுதிகளை தங்களின் நேரடிக்கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக் கொண்டனர். உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது. இது விவசாயிகளை கிளர்ச்சி செய்ய வைத்தது.
முக்தி :
மாகாண ஆளுநர்கள் முக்தி எனப்பட்டனர்.
வாயுக்கள் :
தொடக்க காலத்தில் துருக்கியர்கள் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். மதத்திற்கு அப்பாற்பட்டு பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர்.
“இசுலாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, நாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்பட்டது” என்ற பரணியின் குறிப்பிலிருந்து அறியப்படுகிறது. இது இசுலாமியர்களின் நிர்வாகச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.