Students can Download 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 1.
உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.
Asnwer:

கடின உழைப்பாளர்
(மாலையில் பூ விற்பவர், வீட்டு வேலை செய்பவர்)

எங்கள் ஊரில் விமலா என்றொரு பெண்மணி இருந்தார். மாலையில் பூ விற்பார், வீட்டு வேலை செய்வார். அவர் கல்வியாளரோ, எழுத்தாளரோ, போராட்டக்காரரோ அல்லர். கடின உழைப்பாளர்.

எவ்வாறெனில், திருமணமான நாள் முதல் கணவரால் பல இன்னல்களைத் துன்பங்களை அனுபவித்ததோடு, இளம் வயதிலேயே விதவையுமாகி சமூக அவலத்துக்கும், உள்ளானார்.

துன்பங்களைப் பெற்ற அவர் துன்பம் துடைத்தூன்றும் தூணாக மாறினார். உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டார். உழைப்பையே உயிர் மூச்சாய் மாற்றினார். வீட்டு வேலை முதல் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து. தன் பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறந்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

ஒரு குழந்தையை மருத்துவராகவும் மற்றொரு குழந்தையைப் பொறியாளராகவும் மாற்றிய விமலா உழைப்பின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.

சிறப்புமிக்கவர்
(நர்த்தகி நடராஜ்)

மதுரை மாநகரில் பிறந்து, உலகின் பல்வேறு பகுதிக்குச் சென்று தன் கலையை நடத்தி சிறப்பு செய்தவர் நர்த்தகி நடராஜ்.
இவர் யார் என்றால் நமக்கும் நம் எண்ணங்கள் எல்லாம் சிதறும். இவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர். செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, தன் ஆசிரியரால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே குருகுலமுறையில் பரதக் கலையை கற்றவர்.

தன் ஆசிரியரால் நர்த்தகி என்று அழைக்கப்பட்ட இவர் 30 ஆண்டுகளாக தன் பரதக் கலையை உலக அரங்கில் நடத்தி 2019-ஆம் ஆண்டு இந்தியா இவருக்கு பத்மஸ்ரீ விருதளித்தது. மனித இனத்தில் மற்றவரால் தாம் வெறுக்கப்பட்டாலும் தன்னையும், தமிழரின் பரதக்கலையையும் உலகிற்குக் கொண்டு சென்ற சிறப்புமிக்கவர் நர்த்தகி நடராஜ்

போற்றத்தக்கவர்
(சாலை ஓரம் உணவகம் நடத்துபவர்)

கோவை பேரூர் பகுதியில் வசிக்கும், பாட்டி பெயர் சொன்னாலே அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு இட்லியால் புகழ் பெற்றவர். இன்றும் ஒரு ரூபாய்க்கு ஆவி பறக்கும் இட்லி விற்பவர்.

நல்ல சுவையான சட்னியோடு 80 வயதிலும் இலாபத்தை நோக்காமல் பலரின் பசியாற்றியவர். அவர் தேவையை ஆட்சியர் கேட்டாலும் எதுவும் வேண்டாம் என்பார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

ஆட்சியர் அவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடும், அரசு அவரை கௌரவித்தும் வருகிறது. ஒரு ரூபாய் இட்லியால் ஓராயிரம் கோடி மக்களால் போற்றப்படுபவர்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே... - 1
Answer:

மகளிர் நாள் விழா

எம்பள்ளிக் கலையரங்கில் 08.03.2020 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவினைப் பற்றிய அறிக்கையாவது.

விழா நாள் : 08.03.2020
இடம் : பள்ளிக் கலையரங்கம்.

எம் பள்ளி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக மாலை 3.30 மணி அளவில் விழா நிகழ்விடமான பள்ளிக் கலையரங்கிற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்வுடன் வந்து அமர்ந்தனர். சரியாக 4.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதழாளர் கலையரசி வருகை புரிந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஆரவாரம் செய்து கைதட்டி சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

தலைமையாசிரியரின் வரவேற்பு:
இதழியல் துறையில் பட்டம் பெற்று, பட்டப்படிப்புடன் அச்சுத்துறையில் முதுகலையும் பயின்று, நாளிதழ் வார இதழ் படிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இதழாளர் திருமதி. கலையரசி அவர்கள் தான் பணிபுரியும் இதழில் செய்திகளை வெளியிடுவது, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை எழுதுவது, குழந்தைகளுக்கான பகுதிகளை வடிவமைப்பது. கேலிச்சித்திரம் வாயிலாக சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இதழியல் துறையில் பன்முகத் திறமை பெற்றவர். அவரை இவ்விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதழாளரின் சிறப்புரை:
‘காரிருள் அகத்தில் கதிரொளி பாய்ச்சுவதும், துயில்பவர்கள் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்துவதும் இதழ்களே என்றால் மிகையில்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களால் இயலும் என்பதை மகாகவி நமக்கு ஒரு ஊக்க சக்தியாக தந்து சென்றிருக்கிறார். பெண்களே உங்களுக்கு முழுமையான கல்வி கட்டாயம் தேவை. எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வியை விட்டுக் கொடுக்காதீர்கள். கல்வியில்லா பெண் களர் நிலம்’ என்றார் புரட்சிக்கவி. நாம் களர்நிலமாக பயனற்றுப் போக பிறக்கவில்லை . ஞானச் செருக்கும் உடையவர்களாய், புதிய உலகம் படைக்கும் வலிமை பொருந்தியவர்களாய்ப் பிறந்திருக்கிறோம். எனவே நன்கு படியுங்கள்; புதிய சமுதாயம் படையுங்கள்; புதுமைப் பெண்ணின் மகிழ்வு கண்டு இம்மண்ணுலகம் வியக்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை:
நிறைவாக பள்ளியின் மாணவத் தலைவர் ‘மோகனா’ நன்றி கூறினார். அழைப்பிற்கிணங்கி வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும், அவரை அழைத்து வந்து விழாவினை ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும், உடன் ஒத்துழைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், அமைதி காத்த மாணவ நண்பர்களுக்கும் நன்றி கூறினாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத இணையைத் தேர்க.
அ) பாலசரஸ்வதி – மீரா
ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி – மகசேசே
இ) ராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர்
ஈ) சின்னப்பிள்ளை களஞ்சியம்
Answer:
அ) பாலசரஸ்வதி – மீரா

Question 2.
1954-ல் தாமரையணி விருது பெற்றவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) பாலசரசுவதி
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி
ஈ) ராஜம் கிருஷ்ணன்
Answer:
இ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 3.
எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர் ………………………..
அ) சரோஜினி நாயுடு
ஆ) கமலாநேரு
இ) ஹெலன் கெல்லர்
ஈ) மீரா
Answer:
இ) ஹெலன் கெல்லர்

Question 4.
வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ………………………..
அ) 1966
ஆ) 1963
இ) 1971
ஈ) 1976
Answer:
அ) 1966

Question 5.
இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது ………………………..
அ) நோபல் பரிசு
ஆ) தாமரை விருது
இ) மகசேசே விருது
ஈ) இந்தியமாமணி விருது
Answer:
இ) மகசேசே விருது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 6.
பொருத்துக. பெண்கள்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே... - 2
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 7.
கிருஷ்ணம்மாளுக்கு ‘வாழ்வுரிமை விருது’ வழங்கிய நாடு ………………………..
அ) சுவிட்சர்லாந்து
ஆ) சுவீடன்
இ) தாய்லாந்து
ஈ) மலேசியா
Answer:
ஆ) சுவீடன்

Question 8.
படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தைப் பேசும் புதினம் ………………………..
அ) கரிப்புமணிகள்
ஆ) வேருக்குநீர்
இ) சேற்று மனிதர்கள்
ஈ) குறிஞ்சித்தேன்
Answer:
ஈ) குறிஞ்சித்தேன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 9.
‘பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் ………………………..
அ) சின்னப்பிள்ளை
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) ராஜம் கிருஷ்ண ன்
ஈ) பாலசரசுவதி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

Question 10.
சமூக அவலங்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாக உலகுக்குக் காட்டியவர் ……………….
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சமி
Answer:
அ) ராஜம்கிருஷ்ணன்

Question 11.
‘களஞ்சியம்’ மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர்……………….
அ) சின்னப்பாப்பா
ஆ) சின்னத்துரை
இ) சின்னப்பிள்ளை
ஈ) சரசுவதி
Answer:
இ) சின்னப்பிள்ளை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 12.
‘உழுபவருக்கே நில உரிமை இயக்கம்’ தொடங்கியவர் …………………
அ) ராஜம்கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ணம்மாள்
இ) பாலசரசுவதி
ஈ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
Answer:
ஆ) கிருஷ்ணம்மாள்

Question 13.
எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பிரபலப்படுத்திய பாடல் அ) சுப்ரபாதம்………………………
ஆ) காற்றினிலே வரும் கீதம்
இ) இரகுபதி ராகவராஜாராம்
ஈ) மீரா பற்றிய பாடல்
Answer:
ஆ) காற்றினிலே வரும் கீதம்

Question 14.
பாலசரசுவதியின் நாட்டியக் கச்சேரியைப் புகழ்ந்தவர் ……………………
அ) பண்டிட் நேரு
ஆ) காந்தி
இ) பண்டிட் இரவிசங்கர்
ஈ) இயக்குநர் இரவிக்குமார்
Answer:
இ) பண்டிட் இரவிசங்கர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 15.
‘காந்தி அமைதி விருதை’ கிருஷ்ணம்மாளுக்கு வழங்கிய நாடு ………………….
அ) இந்தியா
ஆ) சுவிட்சர்லாந்து
இ) சிங்கப்பூர்
ஈ) சுவீடன்
Answer:
ஆ) சுவிட்சர்லாந்து

குறுவினா

Question 1.
எம்.எஸ் சுப்புலட்சுமியின் இசையைப் பாராட்டியோர் யாவர்?
Answer:

  • ஜவஹர்லால் நேரு
  • சரோஜினி நாயுடு
  • காந்தியடிகள்
  • ஹெலன் கெல்லர் – ஆவர்

Question 2.
ராஜம்கிருஷ்ணனின் புகழ்பெற்ற சமூக நாவல்களைப் பட்டியலிடுக.
Answer:

  • கரிப்பு மணிகள்
  • குறிஞ்சித்தேன்
  • அலைவாய்க் கரையில்
  • சேற்றில் மனிதர்கள்
  • வேருக்கு நீர் – ஆகியவையாகும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 3.
எம்.எஸ். சுப்புலட்சுமி தன் இசைத்திறனை எம்மொழிகளிலெல்லாம் வெளிப்படுத்தினார்?
Answer:
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

Question 4.
கிருஷ்ணம்மாள் களப்பணிபுரிந்த இயக்கங்கள் யாவை?
Answer:

  • ஒத்துழையாமை இயக்கம்
  • சட்டமறுப்பு இயக்கம்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • பூதான இயக்கம்
  • உழுபவருக்கே நில உரிமை இயக்கம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

Question 5.
களஞ்சியம் மகளிர் குழு மூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
Answer:

  • விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
  • கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
  • அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
  • கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
  • வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே...

Question 6.
மகளிர் குழுமூலம் செய்யப்பட்ட பணிகள் யாவை?
Answer:

  • விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தல்.
  • கூலிவேலைக்கு ஆட்களைச் சேர்த்தல்.
  • அவர்கள் மூலம் நடவு, களையெடுப்பு, அறுவடை வேலைகளைச் செய்தல்.
  • கூலியை சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தல்.
  • வயதானவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவையாகும்.