Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக.
Answer:
(எ.கா.) பேச்சுமொழி – அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி – அம்மா பசிக்கின்றது. எனக்குச் சோறு வேண்டும்.
1. பேச்சுமொழி – வூட்டுக்கு போகனும்.
எழுத்துமொழி – வீட்டிற்குப் போக வேண்டும்.
2. பேச்சுமொழி – வவுறு நிறையா சாப்புடு
எழுத்துமொழி – வயிறு நிறைய சாப்பிடு.
3. பேச்சுமொழி – இன்னிக்கு காத்தால வாங்கிட்டு வந்தே
எழுத்துமொழி – இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன்.
4. பேச்சுமொழி – தண்ணி கொண்டா
எழுத்துமொழி – தண்ணீர் கொண்டு வா.
Question 2.
பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.
Answer:
(எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மொழியின் முதல்நிலை பேசுதல் …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
Answer:
ஆ) கேட்டல்
Question 2.
ஒலியின் வரிவடிவம் …………… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answer:
ஆ) எழுத்து
Question 3.
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று …………………
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
Answer:
இ) தெலுங்கு
Question 4.
பேச்சுமொழியை …………………… என்றும் கூறுவர்
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
Answer:
ஆ) உலக
சரியா தவறா என எழுதுக.
1. மொழி காலத்திற்கேற்ப மாறுகிறது.
2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத் தாழ்வு அவசியம்.
Answer:
1. சரி
2. சரி
3. சரி
4. தவறு
5. சரி
ஊடகங்களை வகைப்படுத்துக.
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
குறு வினா
Question 1.
மொழின் இருவடிவங்கள் யாவை?
Answer:
- பேச்சுமொழி
- எழுத்துமொழி
Question 2.
பேச்சுமொழி என்றால் என்ன?
Answer:
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும்.
Question 3.
வட்டாரமொழி எனப்படுவது யாது?
Answer:
இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.
சிறு வினா
Question 1.
பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.
Answer:
Question 2.
கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Answer:
(i) ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.
(ii) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
(iii) அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே ‘கிளைமொழி’ என்பர்.
(iv) கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி ஆகும்.
சிந்தனை வினா
Question 1.
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
Answer:
(i) இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தாம் தோன்றிய காலச் சூழலைக் காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
(ii) வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதிநெறிகளை முன்வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பேசுவதும் கேட்பதும் மொழியின் ……………….. நிலை
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
அ) முதல்
Question 2.
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது ………………. ஆகும்.
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
ஆ) பேச்சுமொழி
Question 3.
கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………..
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்துமொழி
Question 4.
எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் …………… நிலை
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்
Question 5.
நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க உதவுவது
அ) எழுத்து மொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்து மொழி
Question 6.
மனிதனின் சிந்தனை காலம் கடந்தும் வாழ்வதற்குக் காரணம்
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்துமொழி
Question 7.
மொழியின் உயிர் நாடியாக விளங்குவது
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
ஆ) பேச்சுமொழி
Question 8.
பேச்சுமொழியில் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க என்று கூறும்போது ‘கவனி என்னும் சொல்தரும் பொருள்
அ) பேணுதல்
ஆ) கவனித்துச்செல்
இ) பாதுகாப்புப் பொருள்
ஈ) பாருங்கள்
Answer:
அ) பேணுதல்
Question 9.
‘நான் பறவையைப் பார்த்தேன் – இத்தொடர் ‘பறவையைப் பார்த்தது யார்?’ என்ற வினாவாக அமையும் போது அழுத்தம் கொடுக்கவேண்டிய சொல் எது?
அ) பறவை
ஆ) நான்
இ) பார்த்தது
ஈ) யார்
Answer:
ஆ) நான்
Question 10.
மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்……….. என்பர்.
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) வட்டார மொழி
Answer:
ஈ) வட்டார மொழி
Question 11.
பொருந்தாதவற்றைத் தேர்ந்தேடுக்க.
அ) தமிழ் – கிளை மொழி
ஆ) கன்னடம் – கிளை மொழி
இ) மலையாளம் – கிளை மொழி
ஈ) தெலுங்கு – கிளை மொழி
Answer:
அ) தமிழ் – கிளை மொழி
Question 12.
பொருத்துக
1. தமிழ் – அ) இரட்டை வழக்கு
2. கன்னடம் – ஆ) நல்லாச் சாப்ட்டான்
3. வட்டார மொழி – இ) கீது
4. பேச்சு வழக்கு – ஈ) கிளை மொழி
அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ
ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4- அ
இ) 1- ஈ, 2 – இ, 3-அ, 4-ஆ
ஈ) 1- அ, 2-இ, 3-ஆ. 4-ஈ
Answer:
அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. உலக வழக்கு , செய்யுள் வழக்கு பற்றிக் குறிப்பிடுபவர் ………………..
2. இரட்டை வழக்கு மொழி ………………..
3. எழுத்துமொழியில் பெரும்பாலும் ………………. பேணப்படுகின்றது.
4. ஒருமொழி உயிர்ப்போடு வாழ …………………….. யும், காலம் கடந்து வாழ்வதற்கு ……………….. யும் தேவைப்படுகின்றன.
5. ‘எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்’ என்று பாடியவர் ………………….
Answer:
1. தொல்காப்பியர்
2. தமிழ்
3. மொழித்தூய்மை
4. பேச்சுமொழி, எழுத்துமொழி
5. பாவேந்தர் பாரதிதாசன்.
குறுவினா
Question 1.
இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி ஆகும்.
சான்று : தமிழ் மொழி
Question 2.
குழந்தைகளுக்குத் தாய்மொழியும் பிறமொழியும் எவ்வாறு அறிமுகமாகின்றன?
Answer:
(i) கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.
(ii) படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் குழந்தைகளுக்குப் பிறமொழிகள் அறிமுகமாகிறது.
Question 3.
பேச்சுமொழி, எழுத்துமொழி என்பத்ை தொல்காப்பியர் எச்சொற்களால் குறிப்பிடுகிறார்?
Answer:
- பேச்சுமொழி – உலக வழக்கு,
- எழுத்துமொழி – செய்யுள் வழக்கு
Question 4.
தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் யாவை?
Answer:
- கன்னடம்,
- தெலுங்கு,
- மலையாளம்
Question 5.
பேச்சுமொழி, எழுத்து மொழி என்னும் இரு கூறுகளையும் கொண்ட மொழி எது?
Answer:
தமிழ் மொழி.
Question 6.
பழமையும் புதுமையும் நிறைந்து சிறந்த மொழி எது?
Answer:
தமிழ் மொழி.
Question 7.
மொழி என்பது யாது?
Answer:
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி என்பர்.
Question 8.
பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் யாவை?
Answer:
பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.
Question 9.
ஊடகங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:
- வானொலி
- தொலைக்காட்சி
- நாளேடுகள்
Question 10.
திருத்தமான தமிழை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும்?
Answer:
திருத்தமான தமிழையே ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும்
சிறு வினா
Question 1.
பேச்சு மொழி, எழுத்துமொழி, வட்டார வழக்கு ஆகியவற்றை விளக்கி சான்று தருக.
Answer:
பேச்சு மொழி : வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும். உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக்
கூறுகள் ஆகும்.
சான்று : குழந்தையை நல்லாக் கவனிங்க.
எழுத்துமொழி : பேச்சு மொழிக்கு நாம் தந்த வடிவமே எழுத்துமொழி – கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி. ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெற எழுத்து மொழியே காரணம்.
சான்று : நன்றாகச் சாப்பிட்டான்.
வட்டார வழக்கு : இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே
மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டாரமொழி என்பர்.
சான்று : ‘இருக்கிறது’ என்ற சொல்லை இருக்கு’, ‘கீது’ என வழங்குவது.
நெடு வினா
Question 1.
பேச்சுமொழியில் சொற்பொருள் வேறுபாடுகள் குறித்து எழுதுக.
Answer:
(i) பேசப்படும் சூழலைப் பொறுத்து பேச்சுமொழியில் பொருள் வேறுபடும்.
(ii) எடுத்துக்காட்டாகக் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க’ என்று கூறும்போது ‘கவனி’ என்னும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகின்றது. ‘நில்’, ‘செல்’, கவனி’ என்பதில் கவனி’ என்னும் சொல் கவனித்துச் செல் என்னும் பாதுகாப்புப் பொருளைத் தருகின்றது.
(iii) ஒலிப்பதன் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும்.
(iv) எடுத்துக்காட்டாக என்னால் போக முடியாது’ என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும் போது மறுப்பையும், மென்மையாக ஒலிக்கும் போது இயலாமையை உணர்த்துகின்றது.
(v) தொடரில் எச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்ப பேச்சுமொழியின் சொல் வேறுபடுகின்றது.
(vi) எடுத்துக்காட்டாக ‘நான் பறவையைப் பார்த்தேன்’ என்னும் தொடரில் ‘நான்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், பறவையைப் பார்த்தது யார்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.
(vii) ‘பறவையை’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ எதைப் பார்த்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.
(viii) ‘பார்த்தேன்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ பறவையை என்ன செய்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.