Students can Download 6th Tamil Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்
கற்பவை கற்றபின்
Question 1.
‘அறிவியலால் ஆள்வோம்’ கவிதையை உரிய ஓசையுடன் படிக்க.
Answer:
ஆழக் கடலின் அடியில் மூழ்கி
ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்
நீல வானின் மேலே பறந்து
நிலவில் வாழ நினைக்கின்றான்
செயற்கைக் கோளை விண்ணில் ஏவி
செய்தித் தொடர்பில் சிறக்கின்றான்
இயற்கை வளமும் புயலும் மழையும்
எங்கே என்று உரைக்கின்றான்
எலும்பும் தசையும் இல்லாது இயங்கும்
எந்திர மனிதனைப் படைக்கின்றான்
இணைய வலையால் உலகம் முழுமையும்
உள்ளங் கையில் கொடுக்கின்றான்
உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
உடலும் உயிரும் காக்கின்றான்.
அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து
அனைத்தும் செய்து பார்க்கின்றான்.
நாளை மனிதன் கோள்களில் எல்லாம்
நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்
வேளை தோறும் பயணம் செய்ய
விண்வெளிப் பாதை அமைத்திடுவான்.
Question 2.
உங்களைக் கவர்ந்த அறிவியல் சாதனங்கள் நான்கினை எழுதுக.
Answer:
துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், கைப்பேசி, வானொலி, மின்விசிறி, விமானம், கணினி, மின் அடுப்பு, இயந்திர மனிதன்.
Question 3.
‘அலைபேசியால் நன்மையே’ என்னும் தலைப்பில் வகுப்பில் கலந்துரையாடல் செய்க.
Answer:
மாணவன் 1 : வணக்கம். மனிதன் தோன்றிய காலத்திலேயே தகவல் பரிமாற்றம் தோன்றிவிட்டது. தீ, ஒலி, சைகை என்பவற்றின் மூலம் தகவல் தொடர்பை ஆரம்பித்தான் மனிதன். பின்பு வளர்ந்து அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தபால், தந்தி, வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி என்றுவளர்ந்துள்ளது. மின்னணுவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கருவியே அலைபேசியாகும். இதனை ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் இன்று எல்லோர் கையிலும் அலைபேசி நடனமாடுகிறது இதன் நன்மைகள் ஏராளம்.
மாணவன் 2 : செல் பேசி, செல்லிடப்பேசி எனப் பல பெயர்களில் அழைக்கப்படும். அலைபேசியின் நன்மைகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைக் – கூறுகிறேன் கேள். முன்பெல்லாம் ஒரு செய்தியை உறவினர்க்கோ , நண்பர்களுக்கோ தெரிவிக்க வேண்டுமெனில், அது மிகவும் கடினம். கடிதம் மூலமாகத் தெரிவிக்க வேண்டுமெனில் ஒரு வாரக்காலம் ஆகும். ஆனால் இன்று ஒரு நொடியில் செல்பேசியின் மூலம் தெரிவித்து விடுகின்றோம்.
மாணவன் 1 : ஆமாம்! சரியாகச் சொன்னாய். இப்போது செல்பேசி இல்லாதவர்களே
இல்லை என்ற நிலை வந்துவிட்டது. தத்துவமேதையான தந்தை பெரியார் “இனி எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்” என்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து பேர் எனில் செல்பேசியின் எண்ணிக்கை ஏழு, எட்டு என்று உள்ளது.
மாணவன் 2 : நீ கூறுவதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவெனில் பல நன்மைகள் இருப்பதால்தான் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். செய்தியை உடனுக்குடன் தெரிவிக்கப் பயன்படுகிறது. பல குற்றச் செயல்களைக் கண்டறியவும் குற்றவாளிகளின் இருப்பிடத்தைக் கண்டறியவும் காவல்துறைக்கு மிகவும் உறுதுணையாகவும் உள்ளது. விபத்து நேர்ந்தாலோ பயணங்களில் இடையூறுகள் ஏற்பட்டாலோ அவற்றிற்குத் தீர்வு காண முடிகின்றது. வெளிநாடுகளில் உள்ள நம் உறவினர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
மாணவன் 1 : அது மட்டுமா… பள்ளிப் பருவத்தோடு பிரிந்த மாணவ நண்பர்களுடனும், கல்லூரி நண்பர்களுடனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து விழா எடுக்கவும் செல்பேசி பயன்படுகிறது. இதுபோலதொலைந்து போன நட்பை மீட்டுக் கொள்ளவும் செல்பேசி பயன்படுகிறது. இதுமட்டுமின்றி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் செல்பேசி எண்களைப் பதிவு செய்து வைத்துள்ளோம். திடீரென நேரும் விபத்துகளில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் மருத்துவச் செலவிற்கு உதவி கேட்டல் பொருட்டு செய்தியைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு உதவி கிடைக்கிறது.
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய்! ஆனால் செல்பேசியினால் நன்மைகள் மட்டுமா
உள்ளன? தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.
மாணவன் 1: நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து அறிவியல் சாதனங்களினாலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நாம்தான் அதை நன்மைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நன்றி!
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
அவன் எப்போதும் உண்மையையே ………………
அ) உரைக்கின்றான்
ஆ) உழைக்கின்றான்
இ) உறைக்கின்றான்
ஈ) உரைகின்றான்
Answer:
அ) உரைக்கின்றான்
Question 2.
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ + கடல்
ஈ) ஆழம் + கடல்
Answer:
ஈ) ஆழம் + கடல்
Question 3.
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) விண் + ஒளி
ஈ) விண் + வொளி
Answer:
ஆ) விண் + வெளி
Question 4.
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) நீலம்வான்
ஆ) நீளம்வான்
இ) நீலவான்
ஈ) நீலவ்வான்
Answer:
இ) நீலவான்
Question 5.
இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) இல்லாது இயங்கும்
ஆ) இல்லாஇயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஈ) இல்லதியங்கும்
Answer:
இ) இல்லாதியங்கும்
நயம் அறிக
Question 1.
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
Answer:
ஆழ்க்கடல் – ஆய்வுகள்
நீல – நிலவில்
எலும்பு – எந்திர மனிதன்
உறுப்பை – உயிரும்
அணுவை – அகிலம்
உலகம் – உள்ளங்கை
செயற்கை – செய்தி
நாளை – நகரம்
வேளை – விண்
Question 2.
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
Answer:
நீல – நிலவில்
உலகம் – உள்ளங்கையில்
செயற்கை – செய்தி – இயற்கை
Question 3.
பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
Answer:
பார்க்கின்றான், பதிக்கின்றான், படைக்கின்றான்
காக்கின்றான், இயக்குகிறான், அடக்குகிறான்
சிறக்கின்றான், சொல்கின்றான்,
வாழ்ந்திடுவான், அமைத்திடுவான்
சிறுவினா
Question 1.
செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
Answer:
(i) செயற்கைக் கோள்களின் உதவியுடன் செய்தித் தொடர்பு மிகவும் எளிமையடைந்துள்ளது. விரைவில் செய்திகளை அறிய முடிகிறது.
(ii) இயற்கை வளங்களையும், புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிய முடிகிறது.
Question 2.
நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
Answer:
நாளைய மனிதன் விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்று வருவதற்கான விண்வெளிப் பாதைகளையும் அமைத்திடுவான்.
சிந்தனை வினா
Question 1.
எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer:
1. மருத்துவம்
2. விவசாயம்
3. கல்வி
4. இராணுவம்
5. போக்குவரத்து நெரிசல்
6. மீட்புப் பணிகள்
7. வனவிலங்குகள் நடமாட்டங்களை அறிய
8. இயற்கை முறையில் மின்சார உற்பத்தி
9. கட்டிட வேலைபாடுகளில் மனிதன் இல்லாமல் இயந்திரம் செய்ய புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
10. விண்வெளியில் மனிதன் வாழ விண்வெளி ஆய்வு
11. ஆழ்கடலில் மனிதன் செல்லாமல் ஆய்வு செய்ய வேண்டும்.
12. விண்ணில் உள்ள கோள்கள் ஆய்வு.
Question 2.
இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
Answer:
விண்ணில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை – 9
அவை:
1. செவ்வாய்,
2. புதன்,
3. வியாழன்,
4. வெள்ளி,
5. சனி,
6. பூமி,
7. யுரேனஸ்,
8. நெப்டியூன்,
9. புளூட்டோ .
Question 3.
இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் யாது?
Answer:
இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோள் சந்திராயன் – 2.
அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை. மண்ணில் விண்ணில் கடலில் காற்றில் என எங்கும் ஆய்வு நிகழ்கிறது. மனிதனின் நகலாக எந்திர மனிதனை மனிதரே படைக்கின்றனர். மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர். கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை. நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான். இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் நனவாக்குவோம் வாருங்கள்.