Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 7.1 சிறுபஞ்சமூலம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
வனப்பு – இச்சொல்லின் பொருள் ………………..
அ) அறிவு
ஆ) பொறுமை
இ) அழகு
ஈ) சினம்
Answer:
இ) அழகு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

Question 2.
நன்றென்றல் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) நன் + றென்றல்
ஆ) நன்று + என்றல்
இ) நன்றே + என்றல்
ஈ) நன்றே + என்றல்
Answer:
ஆ) நன்று + என்றல்

Question 3.
என்று + உரைத்தல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ………….
அ) என்று உரைத்தல்
ஆ) என்றுயுரைத்தல்
இ) என்ற உரைத்தல்
ஈ) என்றுரைத்தல்
Answer:
ஈ) என்றுரைத்தல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

Question 4.
கண்ணுக்கு அழகு …….
அ) வெறுப்பு
ஆ) பொறுமை
இ) இரக்கம்
ஈ) பொறாமை
Answer:
இ) இரக்கம்

ஆ. பொருத்துக

1. கண்ணுக்கு அழகு – கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
2. காலுக்கு அழகு – இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
3. ஆராய்ச்சிக்கு அழகு – நாட்டு மக்களை வருத்தாமை
4. இசைக்கு அழகு – பிறரிடம் சென்று கேட்காமை
5. அரசனுக்கு அழகு – இரக்கம் காட்டல்
Answer:
1. கண்ணுக்கு அழகு – இரக்கம் காட்டல்
2. காலுக்கு அழகு – பிறரிடம் சென்று கேட்காமை
3. ஆராய்ச்சிக்கு அழகு – இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
4. இசைக்கு அழகு – கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
5. அரசனுக்கு அழகு – நாட்டு மக்களை வருத்தாமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
…………………………., ………………………..
…………………………., ………………………..
Answer:

  • ண் வனப்பு
  • ண் வனப்பு
  • கேட்டார்
  • வாட்டான்

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கண்ணுக்கு எது அழகு?
Answer:
கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளும் பண்பாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

Question 2.
காலுக்கு எது அழகைத் தருகிறது?
Answer:
பிறரிடம் பொருளை வேண்டிச் செல்லாமல் இருப்பது காலுக்கு அழகைத் தருகிறது.

Question 3.
இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
Answer:
இசையைக் கேட்போர் அதனை நன்று என்று கூறுதல், இசைக்கு அழகாகும்.

Question 4.
அரசனுக்கு அழகைத் தருவது எது?
Answer:
தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல் அரசனுக்கு அழகைத் தரும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

உ. சிந்தனை வினா.

நம்மைப் பிறர் பாராட்ட வேண்டுமெனில், நம்மிடம் எத்தகைய பண்புகள் -3 இருக்கவேண்டும்?
Answer:

  • மனித நேயம்.
  • பிறருடைய நலத்தைப் பற்றி அறிதல்.
  • பகைவனிடமும் அன்பு காட்டுதல்.
  • பிறர் செய்யும் தவற்றை மன்னித்து விட்டு அவருக்கே உதவியும் செய்தல்.
  • தம்மைவிட எளியவரிடமும் பணிவுடன் இருத்தல்.
  • பிற உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுதல்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை …………. அழகு தரும்.
அ) கைக்கு
ஆ) காலுக்கு
இ) கண்ணுக்கு
ஈ) காதுக்கு
Answer:
ஆ) கால்

Question 2.
இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல் …………. அழகு தரும்.
அ) ஆராய்ச்சிக்கு
ஆ) இசைக்கு
இ) காலுக்கு
ஈ) கண்ணுக்கு
Answer:
அ) ஆராய்ச்சிக்கு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

Question 3.
சிறுபஞ்சமூலம் ………………நூல்க ளுள் ஒன்று.
அ) பதினென் கீழ்க்கணக்கு
ஆ) பத்துப்பாட்டு
இ) எட்டுத்தொகை
ஈ) சங்க இலக்கியம்
Answer:
அ) பதினென் கீழ்க்கணக்கு

Question 4.
சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் ………..
அ) கம்பர்
ஆ) பாரதியார்
இ) காரியாசான்
ஈ) கபிலர்
Answer:
இ) காரியாசான்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

விடையளி :

Question 1.
சிறுபஞ்சமூலத்தில் குறிப்பிடப்படும் வேர்கள் யாவை?
Answer:
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி.

Question 2.
சிறுபஞ்சமூலம் குறிப்பு வரைக.
Answer:

  • சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் காரியாசான். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்கள் உடல் நோயைத் தீர்க்கும்.
  • அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகள் மக்கள் மனநோயைத் தீர்ப்பனவாக உள்ளன.
  • ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.1 சிறுபஞ்சமூலம்

Question 3.
சிறுபஞ்சமூலம் கூறும் அழகுகளை எழுதுக.
Answer:

  • கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளுதல்.
  • காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச் செல்லாமை.
  • ஆராய்ச்சிக்கு அழகு, இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்.
  • இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல்.
  • அரசனுக்கு அழகு, தன் நாட்டு மக்களை வருத்தமாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.