Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 6.2 விதைத் திருவிழா Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 6.2 விதைத் திருவிழா

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
அனுமதி – இச்சொல் குறிக்கும் பொருள் ..adscanadian………
அ) கட்டளை
ஆ) இசைவு
இ) வழிவிடு
ஈ) உரிமை
Answer:
ஆ) இசைவு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 2.
விளம்பரத்தாள்கள் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) விளம்பர + தாள்கள்
ஆ) விளம்பரத்து + தாள்கள்
இ) விளம்பரம் + தாள்கள்
ஈ) விளம்பு + தாள்கள்
Answer:
இ) விளம்பரம் + தாள்கள்

Question 3.
ஆலோசித்தல் – இச்சொல்லுக்குரிய பொருள் ………………………
அ) பேசுதல்
ஆ) படித்தல்
இ) எழுதுதல்
ஈ) சிந்தித்தல்
Answer:
ஈ) சிந்தித்தல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 4.
தோட்டம் + கலை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………..
அ) தோட்டம்கலை
ஆ) தோட்டக்கலை
இ) தோட்டங்கலை
ஈ) தோட்டகலை
Answer:
ஆ) தோட்டக்கலை

Question 5.
பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் …………………….
அ) பழைய காலம்
ஆ) பிற்காலம்
இ) புதிய காலம்
ஈ) இடைக்காலம்
Answer:
இ) புதிய காலம்

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
அ) வழிபாடு + கூட்டம் = ……………………..
ஆ) வீடு + தோட்டம் = ……………………..
Answer:
அ) வழிபாடு + கூட்டம் – வழிபாட்டுக்கூட்டம்
ஆ) வீடு + தோட்டம் – வீட்டுத்தோட்டம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) அழைப்பிதழ்- …………. + ……………..
ஆ) விதைத்திருவிழா- …………. + ……………..
Answer:
அ) அழைப்பிதழ் – அழைப்பு + இதழ்
ஆ) விதைத்திருவிழா – விதை + திருவிழா

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

ஈ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை………..
Answer:
27

Question 2.
விதைகள் …………… ஆனவையாக இருத்தல் வேண்டும்.
Answer:
தரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 3.
கொண்டைக்கடலை என்பது ……………….. ஒன்று.
Answer:
நவதானியங்களுள்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்?
Answer:
மாணவர்களை அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்வதாக தலைமையாசிரியர் கூறினார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 2.
ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் என்ன செய்தி இருந்தது?
Answer:
ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் இருந்த செய்தி விதைத்திருவிழா தொடர்பான செய்தி’ ஆகும்.

Question 3.
‘பாதிப்பு’ என்று எழுதப்பட்ட அரங்கத்தில் என்ன செய்தி சொல்லப்பட்டது?
Answer:
இரசாயன விதைகள், இரசாயனப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைத்தாம் ‘பாதிப்பு’ என்று சொல்கிறார்கள். இதனால், மண்ணின் தன்மை கெடுகிறது. இதனைக் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 4.
நவதானியங்களுள் ஐந்தின் பெயரை எழுதுக.
Answer:

  • கொண்டைக்கடலை
  • தட்டைப்பயறு
  • மொச்சை
  • பாசிப்பயறு
  • கோதுமை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

ஊ. சிந்தனை வினாக்கள்.

செயற்கை உரங்கள், மண்ணின் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம்?
Answer:
செயற்கை உரங்கள், மண்ணன் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் செய்ய வேண்டுவன:

  1. இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  2. மண்புழு வளர்த்தல்.
  3. கால்நடைகள் வளர்த்து அவற்றின் சாணங்களை எருவாக்குதல்.
  4. அவுரிச் செடிகளை வளர்த்து வயலுக்கு எருவாக்குதல்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

கற்பவை கற்றபின்

Question 1.
இயற்கை வேளாண்மையின் சிறப்புகளைப் பற்றி, வழிபாட்டுக்கூட்டத்தில் பேசுக.
Answer:
வணக்கம். வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும். இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

பயனீட்டாளர்களுக்கும் உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது. விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தையும் பெறுகின்றனர். முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையைத் தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம்.

Question 2.
இயற்கை உணவுப் பொருள்களின் படங்களைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 3.
‘இயற்கை உரம் பயன்படுத்துவோம், இனிமையாய் வாழ்வோம்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
வளர்ந்துவரும் நவீனயுகத்தில் நாம் அனைவரும் இயற்கையை மறந்து செயற்கையைப் போற்றியதால் பல தீமைகளை எதிர்கொள்கிறோம். இந்நிலையை மாற்றுவதே இயற்கை வேளாண்மை. அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாசடைந்த நிலங்கள் :
நல்ல விளைச்சல், பார்ப்பதற்குப் பெரிய பெரிய காய்கறிகள், கனிகள், குறுகிய காலத்தில் நிறைய இலாபம் இதனை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தினோம். அதனால் வளம் இழந்தது மண் மட்டுமா? நாமும்தான். நீர்வளம், நிலவளம் குறைந்தது போல நமக்கும் புதிய புதிய நோய்கள் வந்து வலுவிழந்துவிட்டோம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

இயற்கை உரங்கள் :
மண்புழுக்களை உற்பத்தி செய்து உரமாகப் பயன்படுத்துதல், கால்நடைகளின் சாணங்களை எருவாக்குதல், பண்ணையில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளின் கழிவுகளை உரமாக்குதல், ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்குகளை உரமாக்குதல். இவையனைத்தும் இயற்கை உரங்கள். இவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவோம்.

நன்மைகள் :
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் விளைநிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கைபெருகுகிறது. பயிர்கள் நோய் எதிர்ப்புத்திறனைப் பெறுகின்றன. பயிர்கள் சத்துகளை எளிதாக எடுத்துக் கொள்கின்றன. பயிர்கள் சீராக விளைகின்றன. தரமான விளைச்சல் கிடைக்கின்றது. மிகவும் இன்றியமையாத நன்மை எதுவெனில் சுற்றுப்புறச் சூழல் தூய்மை ஆகிறது. உழவர்கள் உரங்களைத் தாங்களே தயாரிப்பதால் செலவும் குறைகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

முடிவுரை :
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் நல்ல சத்தான உணவுகள் கிடைக்கின்றன. அதனை உண்பதனால் நாம் நோயின்றி வாழலாம். ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

Question 4.
உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இயற்கை விதைப் பண்ணைகளுக்குச் சென்று, செய்தி திரட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா

Question 5.
உங்கள் பள்ளியில் நடைபெறும் ஏதேனும் ஒரு விழாவுக்கு மாதிரி அழைப்பிதழ்/துண்டு விளம்பரம் உருவாக்கி மகிழ்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.2 விதைத் திருவிழா - 1