Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

வாங்க பேசலாம்

Question 1.
நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.
Answer:
இந்திய நாட்டின் பெருமைகள் :

  • உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு.
  • பல்வேறு மக்கள் தொன்றுதொட்டு இன்றுவரை மகிழ்ச்சியுடன் வாழும் வளம் பெற்ற நாடு.
  • இயற்கை அரண்களான வடக்கே இமயமலை மூன்று பக்கம் நீராலும் சூழப்பட்ட நாடு.
  • பழமையான கலாச்சாரத்தைக் கொண்ட நாடு.
  • வேளாண் தொழிலில் சிறந்த நாடு.
  • விட்டுக்கொடுத்து வாழும் மிகப்பெரிய பண்பு கொண்ட நாடு.
  • காடுகளில் வாழும் கலாச்சாரத்திலும் புதிய நாகரிகம் கண்ட, வன்முறையில்லாத நாடு.
  • பல சாதி மத இனம் மொழி வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழும் நாடு.
  • விஞ்ஞானிகள் பலரையும் சான்றோர்கள் பலரையும் ஈன்றெடுத்த நாடு வீரம் பொதிந்த நாடு .
    இதனாலன்றோ பாரதியார்,
    பாருக்குள்ளே நல்ல நாடு
    நம் பாரத நாடு. – என்று பாடுகிறார்.

Question 2.
உங்கள் ஊரிலுள்ள சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக.
Answer:
எங்கள் ஊர் திருவண்ணாமலை. இங்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் முதலிடம் பெறுவது அருணாச்சலேஸ்வரர் கோயில்தான். கார்த்திகை தீபம், கிரிவலம் இவையிரண்டும் திருவண்ணாமலையுடன் பிணைந்தது. இது சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்று இது அக்னி தலமாகும். கார்த்திகை மாதத்தில் இங்குள்ள மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்படும். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மலையைச் சுற்றிவருவர். அவ்வாறு சுற்றும்போது மூலிகைக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று கூறுவர்.

அடுத்தது சாத்தனூர் அணை. பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இங்கு தொங்குபாலம் ஒன்று உள்ளது. சிறுவர்களுக்கான படகு சவாரியும் இரயில் வண்டியும் உள்ளன. ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், செஞ்சிக்கோட்டை இவையெல்லாம் திருவண்ணாமலைக்குப் பெருமை சேர்ப்பவை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்புடையது. செஞ்சிக்கோட்டையும் வரலாற்றுச் சிறப்புடைய கோட்டையாகும். விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலாவாசிகளால் அலங்கரிக்கப்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 1

கண்ணைப் போல காக்க வேண்டும் எவ்வாறு?
Answer:

  • வனவிலங்குகள், பறவைகள் வாழும் இடங்களில் உள்ள தாவரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • வனவிலங்குகளை வேட்டையாடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவை ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
  • அவை உள்ள இடங்களில் பெரிய நீர்த்தொட்டிகள் அமைத்துத் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்.
  • அவ்வப்போது, அவற்றிற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிப் போடலாம். அரசாங்கத்தின் உதவியுடன் வனத்துறையினர் மேலும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘இன்னல்’ இச்சொல்லின் பொருள் …………………………
அ) மகிழ்ச்சி
ஆ) கன்னல்
இ) துன்பம்
ஈ) இன்பம்
Answer:
இ) துன்பம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Question 2.
கும்மியடி – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………………
அ) கும்மி + யடி
ஆ) கும் + மியடி
இ) கும் + மடி
ஈ) கும்மி + அடி
Answer:
ஈ) கும்மி + அடி

Question 3.
ஆனந்தம் – இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………
அ) மகிழ்ச்சி
ஆ) வருத்தம்
இ) அன்பு
ஈ) கோபம்
Answer:
ஆ) வருத்தம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

Question 4.
ஒரே ஓசையில் முடியாத சொற்கள் ……………………….
அ) தேசமடி – பூமியடி
ஆ) போற்றிட்டி – காத்திட்டி
இ) கும்மியடி – கோடி
ஈ) போனதடி – போற்றிடவே
Answer:
ஈ) போனதடி – போற்றிடவே

Question 5.
கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 2
Answer:
ஈ)

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

மொழியோடு விளையாடு

படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

பொருத்துக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 8

அறிந்து கொள்வோம்

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்படாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.

செயல் திட்டம்

உமது ஊரில் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு, எழுதி வருக.
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி 9

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. சுகம் கோடி விளைய வேண்டும்.
2. நமது இன்னல் போனது.
3. நமது தேசம் இந்தியா.
4. மண்ணைத் தாயாய்ப் போற்ற வேண்டும்.
5. நமது தேசத்தைக் கண்ணைப் போலக் காக்க வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 22 ஆனந்தம் விளையும் பூமியடி

விடையளி :

Question 1.
கும்மியடி பாடல் மூலம் நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • நம் நாடு விடுதலை பெற்றதும் கோடி இன்பங்கள் விளைந்தது. நமது துன்பங்கள் போனதென்று மனம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
  • நம் பாரத தேசம் கவிஞர்கள் புகழ்ந்து பாடும் பூமியாகும்.
  • மகிழ்ச்சி விளைந்திடும் பூமி. புகழ்ச்சிகள் கொண்ட நாடு.
  • அறிவு சிறந்த அறிஞர்கள் வாழும் பூமி.
  • உயர்வில் மலையைப் போன்றது. அதிக வளம் கொண்ட பூமி.
  • நமது தேசம் இந்தியா என்று எண்ணி அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.
  • நம் நாட்டைத் தாயைப்போல் போற்றுவோம்; கண்ணைப் போல் காப்போம்.