Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 16 திருக்குறள் கதைகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 16 திருக்குறள் கதைகள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

வாங்க பேசலாம்

Question 1.
நாவைக் காக்காவிட்டால் ஏற்படும் துன்பம் குறித்து பேசுக.
Answer:
பேச்சைக் குறைத்து, கேட்பதை அதிகரிக்க வேண்டும். தெரிந்ததைப் பேசு. தெளிவாகப் பேசாமல் இருந்தால் நல்லது’ என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது பொருள். பேச்சுத் தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது தன்னுடைய சப்தத்தினால், தன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறி விடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும், அழிவும் ஏற்படும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும்.

இப்படி – நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும்கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு.

மனித சமூகம் நாவைக் காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர். கதையில் ஒன்றைத் தெரிவு செய்து நண்பர்களுடன் இணைந்து நாடகமாக நடித்துக் காட்டுக. மாணவர்களே தாங்களாகவே செய்ய வேண்டும்.

சிந்திக்கலாமா?

அனுவும், பானுவும் சாலையைக் கடக்க, நின்று கொண்டு இருந்தனர். அப்போது மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அனு சாலையைக் கடக்கத் தொடங்கினாள். பானு, பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே கடக்க வேண்டும். பொறுமையாக இரு என்றாள். எது சரியான செயல்?
Answer:
பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். பச்சை விளக்கு ஒளிரும்போது சாலையில் பிற திசைகளிலிருந்து வண்டிகள் வராது. ஆகையால் பானு கூறியதே சரியானது. சாலைவிதிகளைப் பின்பற்றுவதே சிறந்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பொறை’ என்பதன் பொருள் ………………………
அ) முழுமை
ஆ) வளமை
இ) பொறுமை
ஈ) பெருமை
Answer:
இ) பொறுமை

Question 2.
நிறையுடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நிறை + யுடைமை
ஆ) நிறை + உடைமை
இ) நிறைய + உடைமை
ஈ) நிறையும் + உடைமை
Answer:
ஆ) நிறை + உடைமை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

Question 3.
‘மெய் + பொருள்’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………….
அ) மெய்பொருள்
ஆ) மெய்யானபொருள்
இ) மெய்ப்பொருள்
ஈ) மெய்யாய்ப்பொருள்
Answer:
இ) மெய்ப்பொருள்

Question 4.
வெகுளாமை – இச்சொல்லின் பொருள்…………………..
அ) அன்பு இல்லாமை
ஆ) பொறாமை கொள்ளாமை
இ) சினம் கொள்ளாமை
ஈ) பொறுமை இல்லாமை
Answer:
இ) சினம் கொள்ளாமை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

Question 5.
போற்றி ஒழுகப்படும் பண்பு…………………………..
அ) சினம்
ஆ) பொறையுடைமை
இ) அடக்கமில்லாமை
ஈ) அறிவில்லாமை
Answer:
ஆ) பொறையுடைமை

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
பொறையுடைமை எப்போது போற்றப்படும்?
Answer:
நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். அப்போது பொறையுடைமை போற்றப்படும்.

Question 2.
மெய்ப்பொருள் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறக் காரணம் என்ன?
Answer:
எப்பொருளையார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே, எடுத்துக் கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

Question 3.
நாவைக் காக்காவிடில் ஏற்படும் துன்பம் என்ன?
Answer:
நாவைக் காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Question 4.
சினம் எப்போது ஒருவரை அழிக்கும்?
Answer:
ஒருவன் தன்னைத்தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு காத்துக் கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.

Question 5.
நீங்கள் படித்த திருக்குறள் கதைகளுள் உங்களுக்குப் பிடித்த கதை எது? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த கதை ‘பொறுமையும் பொறுப்பும்’.
இக்கதை மூலம் பொறுமையின் சிறப்பை உணர முடிகிறது. எடிசன் தன் பணியாளரிடம் பொறுமையாக செயல்பட்டு, பணியாளருக்குப் பொறுப்பாக இருப்பதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார். அதனால் இக்கதை எனக்குப் பிடிக்கும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

பொருத்துக

1. பொறை – சொல் குற்றம்
2. மெய்ப்பொருள் – துன்பப்படுவர்
3. காவாக்கால் – பொறுமை
4. சோகாப்பர் – காக்காவிட்டால்
5. சொல்லிழுக்கு – உண்மைப்பொருள்
Answer:
1. பொறை – பொறுமை
2. மெய்ப்பொருள் – உண்மைப்பொருள்
3. காவாக்கால் – காக்காவிட்டால்
4. சோகாப்பர் – துன்பப்படுவர்
5. சொல்லிழுக்கு – சொல்குற்றம்

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக

1. ஆய்வகம் ……………………. இருந்தது. (மேல் தளத்தில்/ மேல் தலத்தில்)
Answer:
மேல் தளத்தில்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

2. வழியில் …………………… ஒன்று வந்தது. (குருக்குப்பாதை/ குறுக்குப்பாதை)
Answer:
குறுக்குப்பாதை

3. உனக்குக் காரணம் ……………. (புறியவில்லையா/ புரியவில்லையா)
Answer:
புரியவில்லையா

4. எடிசன் மின் …………….. உருவாக்கினார். (விளக்கு/ விலக்கு)
Answer:
விளக்கு

5. குற்றம் ……………. யாரிடம் இல்லை (குரை/ குறை)
Answer:
குறை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

சொல்லக் கேட்டு எழுதுக

1. மெய்ப்பொருள்
2. பொறையுடைமை
3. சோகாப்பர்
4. நிறையுடைமை

மொழியோடு விளையாடு

பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக.

1. உன்னுடைய ஊரின் பெயர் என்ன?
2. உனக்குப் பிடித்த வண்ணம் எது?
3. நீ பள்ளிக்கு எப்படி வருகிறாய்?
4. உன்னுடைய நண்பன் யார்?
5. கோடை விடுமுறைக்கு எங்கு சென்றாய்?
6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் யாது?
7. குறில் எழுத்துகள் யாவை?
8. சாருமதி யாருடைய வீட்டிற்குச் சென்றாள்?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 1
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 2
1. அன்பு
2. அடக்கம்
3. ஒழுக்கம்
4. ஈகை
5. வாய்மை
6. செய்ந்நன்றி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

கலையும், கைவண்ண மும்

சூரியகாந்திக்கு வண்ணமிடுவோமா?

இதழ்களுக்கு மஞ்சள் தூள், விதைகளுக்கு உலர்ந்த தேயிலைத்தூள்,., பயன்படுத்தி அழகாக்குக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள் 4

அறிந்து கொள்வோம்

1. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
2. திருக்குறள் அகர எழுத்தில் தொடங்கி னகர எழுத்தில் முடிகிறது.
3. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

செயல் திட்டம்

நீங்கள் நன்கு அறிந்த திருக்குறளுக்கு உம் சொந்த நடையில் கதை எழுதி வருக.
Answer:

கல்வியே நமது செல்வம்

ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கடினமாக உழைத்துச் செல்வந்தராக உயர்ந்தார். அவருக்குப் புகழினி, மதியழகன் என்ற இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவருக்கும் கல்விக்கு முதன்மை அளிக்காமல், தொழிலில் ஈடுபடுத்த எண்ணினார்.

ஆனால், தந்தையின் ஆலோசனையையும் மீறி கல்லூரி வரை இருவரும் படித்து முடித்தனர். முத்தனுக்குக் கல்வியின் மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது. ஆகவே, சரியாகக் கல்வி கற்காத முத்தனை அவரது வியாபாரக் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டனர்.

இதனால் வீடு, வயல், ஆடு, மாடுகள் எனச் செல்வத்தை இழந்து ஒருவேளை உணவுக்கே துன்பப்படும் நிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஆளாகினர்.

முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக் கூடாது என எண்ணிப் பல நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்ததால், இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது.

சில நாள்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது. முத்தன் கல்வியின் சிறப்பினை உணர்ந்து தமது கருத்தினை மாற்றிக்கொண்டார்.

குறள் : கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 16 திருக்குறள் கதைகள்

விளக்கம் :
ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.