Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு
12th History Guide காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
அ ஜேவிபி குழு | 1 1928 |
ஆ சர் சிரில் ராட்கிளிஃப் | 2 மாநில மறுசீரமைப்பு ஆணையம் |
இ பசல் அலி | 3 1948 |
ஈ நேரு குழு அறிக்கை | 4 எல்லை வரையறை ஆணையம் |
Answer:
ஆ) 3 4 2 1
Question 2.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
அ) ii, i, iii
ஆ) i, ii, iii
இ) iii, ii, i
ஈ) ii, iii,i
Answer:
அ) ii,i, iii
Question 3.
பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ சீன மக்கள் குடியரசு | 1 பெல்கிரேடு |
ஆ பாண்டுங் மாநாடு | 2 மார்ச் 1947 |
இ ஆசிய உறவுகள் மாநாடு | 3 ஏப்ரல் 1955 |
ஈ அணிசேரா இயக்கத்தின் தோற்றம் | 4ஜனவரி 1, 1950 |
Answer:
இ ) 4 3 2 1
Question 4.
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க.
(i) சீன மக்கள் குடியரசு
(ii) சீனாவுடனான இந்தியப் போர்
(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
(iv) பஞ்சசீலக் கொள்கை
(v) நேரு – லியாகத் அலி கான் ஒப்புதல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
அ) i, ii, iii, iv,v
ஆ) iii, i, v, iv, ii
இ) iii, iv, i, v, ii
ஈ) i, iii, iv, v, ii
Answer:
ஆ) iii,i, v, iv, ii
Question 5.
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் …………….
அ) ஜனவரி 30, 1948
ஆ) ஆகஸ்ட் 15, 1947
இ) ஜனவரி 30, 1949
ஈ) அக்டோபர் 2, 1948
Answer:
அ) ஜனவரி 30, 1948
Question 6.
ஆந்திர மாநில கோரிக்கையினை முதன் முதலில் எழுப்பியவர் …………….
அ) பொட்டி ஸ்ரீராமுலு
ஆ) பட்டாபி சீத்தாராமையா
இ) கே.எம். பணிக்கர்
ஈ) டி.பிரகாசம்
Answer:
ஆ) பட்டாபி சீத்தாராமையா
Question 7.
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்
அ) இராஜேந்திர பிரசாத்
ஆ) ஜவகர்லால் நேரு
இ) வல்லபாய் படேல்
ஈ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
Answer:
ஆ) ஜவகர்லால் நேரு
Question 8.
பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது? (மார்ச் 20200 )
அ) அமேதி
ஆ) பம்பாய்
இ) நாக்பூர்
ஈ) மகவ்
Answer:
ஆ) பம்பாய்
Question 9.
கூற்று : ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது.
காரணம் : முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை இது
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி
Answer:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
Question 10.
அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
அ) மார்ச் 22, 1949
ஆ) ஜனவரி 26, 1946
இ) டிசம்பர் 9, 1946
ஈ) டிசம்பர் 13, 1946
Answer:
இ) டிசம்பர் 9, 1946
Question 11.
அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அ) ஜனவரி 30, 1949
ஆ) ஆகஸ்ட் 15, 1947
இ) ஜனவரி 30, 1949
ஈ) நவம்பர் 26, 1949
Answer:
ஈ) நவம்பர் 26, 1949
Question 12.
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் ……………
அ) காஷ்மீர்
ஆ) அஸ்ஸாம்
இ) ஆந்திரா
ஈ) ஒரிஸா
Answer:
இ ) ஆந்திரா
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது?
Answer:
- இந்திய அரசாங்கச் சட்டம் 1935 கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் ஆகும்.
- இந்த ஆவணமே பிரிவினையின் போது இந்திய சுதேச அரசர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டுடன் இணைவதற்கான ஒப்பந்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
Question 2.
அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக.
Answer:
- 1946 டிசம்பர் 9ல் அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- B.R.அம்பேத்கார் அரசமைப்பின் வரைவு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 395 சட்டப் பிரிவுகளையும் 8 அட்டவணைகளையும் கொண்ட அரசியல் அமைப்பை தயாரித்தது.
- 1950 ஜனவரி 26ல் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.
- நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இறைமையுடைய குடியரசை ஏற்படுத்த வழிவகுத்தது.
Question 3.
அரசமைப்பின் ஷரத்து 370ன் முக்கியத்துவம் என்ன?
Answer:
- 1949ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
- உதாரணமாக ஷரத்து 370ன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
- ஷரத்து 370ன் படி, சட்டசபை காலம் 6 ஆண்டுகள் இரட்டைக் குடியுரிமை, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்கள் தவிரவேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற முடியாது. அரசு அம்மாநிலத்தின் அனுமதி பெற்ற பின்னர் சட்டம் இயற்ற முடியும்.
Question 4.
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்துகிறது?
Answer:
- ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இராசாக்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி தெலுங்கான மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழி நடத்தினர்.
- இதன் காரணமாகஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு சட்டப்பூர்வமான காரணம் வாய்த்தது.
Question 5.
ஜே.வி.பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன?
Answer:
- மொழிவாரி மாகாணக் கோரிக்கையை ஆராய ஜவஹர்லால் நேரு வல்லபாய்படேல் மற்றும் பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவரையும் கொண்ட (J.V.P) ஜே.வி.பி. குழு அமைக்கப்பட்டது.
- இக்குழு மொழிவாரியாக மாநிலங்கள் அமைத்தால் நாட்டு ஒற்றுமை சிதறிவிடும் எனக்கருதியது.
- எதிர்காலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை மறுசீரமைக்கவும், இருக்கின்ற மாநிலங்களிலிருந்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான வழிவகைகளை திறந்து வைத்தது.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்?
Answer:
- இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப்பின் பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடிய போது
- காஷ்மீர் மகாராஜா ஹசிங்கால் அதை தடுக்க முடியவில்லை.
- காஷ்மீர் அரசர் இந்திய ராணுவ உதவியை நாடினார்.
- காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையொப்பமிட வல்லபாய்படேல் வற்புறுத்தினார்.
- இதனால் அரசர் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட இசைந்தார்.
- காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
Question 2.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?
Answer:
- வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றமுறை அடிப்படை உரிமைகள், அரசுநெறிமுறைக் கோட்பாடுகள் போன்ற அம்சங்களை இந்திய அரசியல் அமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கொள்ளலாம்.
- மத்தியில் ஒருமுகத்தன்மையும் கூட்டாட்சித் தலைமையும் ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- அரசாங்கத்தின் அதிகாரங்கள் மிகத் தெளிவாக மத்திய, மாநில பொது ஆகிய மூன்று பட்டியல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
Question 3.
பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான வி~~வுளைச் சுட்டிக் காட்டுக?
Answer:
- இருநாடுகளிலும் சிறுபான்மையினர் அந்தந்தநாடுகளில் தொடர்ந்து வாழ்ந்தசமயச்சிறுபான்மையினராகவும் குடிமக்களாகவும் வாழவேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இந்தியா பிரிவினை செய்யப்பட்டது.
- இந்து – முஸ்லீம் வன்முறைக்கு இடையே ஏற்பட்ட உயிர்க்கொலைகள் அதிகாரப்பரிமாற்றம் எதிர்பார்த்தது போல் மென்மையாக நடைபெறாது என்பதை உணர்த்தியது.
- வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவெங்கும் நடைபெற்றன குறிப்பாக வங்காளம் மற்றும் பஞ்சாப்பில் அவை அதிகமாக இருந்தன.
- இரண்டு தேசங்கள் உருவான பின்னும் பிரிந்தப் பகுதிகள் இருபக்கமும் வாழ்ந்த சிறுபான்மையின மக்களை பயமும் பாதுகாப்பின்மையும் ஆட்கொண்டிருந்தன.
Question 4.
பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.(மார்ச் 2020)
Answer:
பஞ்சசீலக் கொள்கைகள் :
- இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.
- இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல். - இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.
- சமாதான சகவாழ்வு ஆகியவை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்ட பஞ்சசீல கொள்கைகளாகும்,
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன?
Answer:
அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக.
- இந்திய அரசமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டு சுதந்திர அரசமைப்பு வரைவு பணி தொடங்கிய போதே தேசமும் அதன் தலைவர்களும் எதிர்கொள்ள வேண்டி புதிய சவால்கள் இருந்தன.
- அவற்றுள் இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.
சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் :
காஷ்மீர், ஜூனகாத், ஹைதராபாத் ஆகியவைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டன.
சேரமறுத்த சுதேச அரசுகளை இணைத்தல் :
- விடுதலையின் போது 566 சுதேச அரசுகளும் 11 பிரிட்டிஷ் மாகாணங்களும் இருந்தன. வல்லபாய் படேல் தனது திறமையினால் இவ்வரசுகளை ஒன்று இணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
- ஜூனகாத், காஷ்மீர், ஹைதராபாத் ஆகிய மூன்று சுதேச அரசுகள் இந்திய யூனியனுடன் இணைய மறுத்தன.
ஜூனகாத் :
- ஜூனகாத் ஆட்சியாளர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார்.
- வல்லபாய் படேல் இந்திய துருப்புகளை அங்கு அனுப்பி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்.
- அதன் ஜூனகாத் இந்திய யூனியனுடன் இணைந்தது.
காஷ்மீர் :
- காஷ்மீர் அரசர் ராஜாஹரிசிங் ஆரம்பத்தில் தன்னைசுதந்திர அரசாக எண்ணிக்கொண்டார். பாகிஸ்தானிய ராணுவம் காஷ்மீர் மீது படையெடுத்த போது ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
- காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே, இந்தியா பன்னாட்டுச் சட்டப்படி தனது துருப்புகளை உதவிக்கு அனுப்ப முடியும் என்று பிரதமர் நேரு எடுத்துக் கூறினார்.
- எனவே 1947 அக்டோபர் 26ல் ராஜாஹரிசிங் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டார். இதன்படி காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆயிற்று.
ஹைதராபாத் :
- ஹைதராபாத் ஆட்சியாளர் நிசாம் இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்தார்.
- பலமுறை எடுத்துக் கூறியும் நிசாம் பணிய மறுத்தமையால் 1948ல் இந்திய துருப்புகள்ஹைதராபாத்துக்குச் சென்றது. நிசாம் சரணடைந்தார்.
- இறுதியாக ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.
Question 2.
1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக. (மார்ச் 2020 )
Answer:
- 1920 ஆம் ஆண்டு முதலே இந்திய விடுதலை இயக்கத்தோடு, மொழிவாரி மாநில கோரிக்கை ஒன்றிணைந்திருந்தது. நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மொழிவாரியான மாகாண காங்கிரஸ் குழுக்கள் அமைக்கப்படுவதன் மூலம் மொழி அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது.
- 1928இல் வெளியான நேரு அறிக்கையில் “நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களில் மொழி வாரியாக சீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.
- 1946 ஆகஸ்ட் 31 இல் பட்டாபி சீதாராமையா ஆந்திர மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையின் முன் வைத்தார். ஆனால் அரசமைப்பு வரைவுக்குழு ஆந்திராவிற்கான புவியியல் மாகாண எல்லைகள் வகுக்கப்படும் வரை ஆந்திராவைதனி அலகாக குறிப்பிட முடியாது என்று கருதியது.
- எனவே 1948ஜூன் 17ல் ஜவஹர்லால் நேரு, வல்லபாய்படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் அடங்கிய ஜே.வி.பி. குழுவை அமைத்தது.
- இந்த குழுவும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை .
- நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரி மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன.
- ஆந்திராவில் இத்தகைய இயக்கம் தீவிரமடைந்தது. எனவே 1953 ஆம் ஆண்டு ஆந்திரா தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
- சென்னை மாநிலமும் தமிழ் பேசும் மாநிலமாக ஏற்கப்பட்டது.
- 1953ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நீதிபதி பசல் அலி தலைமையிலான மாநிலங்கள் சீரமைப்புக்குழுவை நியமித்தார். இதில் பண்டிட் குன்ஸ்ரூ . சர்தார் K.M.பணிக்கர் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
- 1955 செப்டம்பர் 30ல் இக்குழுதனது அறிக்கையை அளித்தது. இதன் அடிப்படையில் 1956ல்நாடாளுமன்றம் மாநிலங்கள் சீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
- 16 மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் இச்சட்டத்தில் இடம் பெற்றன.
- ஹைதராபாத் உள்ளடக்கிய ஆந்திர பிரதேசம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப், ஹரியான, இமாசல பிரதேசம் போன்ற மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
- இதன் மூலம் 1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட மொழிவாரி மாகாண சீரமைப்பு முடிவுக்கு வந்தது.
Question 3.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.
Answer:
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் :
- காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல்.
- இனவெறியை எதிர்த்தல்.
- வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை.
- ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை
- பிற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
- பிறநாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
- ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்.
- உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
- நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலை நிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படாவண்ணம் இருநாடுகளும் -சமநீதியைப் பாதுகாத்தல்.
அணி சேராக் கொள்கையில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் :
- இரண்டாம் உலகப்போருக்குப் பின், அமெரிக்கா (USA) மற்றும் சோவியத் ஒன்றியம் (USSR) ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா அணிசேராக் கொள்கை மூலம் தீர்வு கண்டது.
- உலகுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இந்திய சீன உறவு மற்றும் பஞ்சசீலக் கொள்கையுடன் மட்டும் நிறைவடையவில்லை. வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேராத அணி சேராமை என்ற கருத்தாக்கம் வலுப்பெறவும் பாண்டுங் மாநாடு உதவியது.
ஆசிய உறவுக்கான மாநாடு:
- மார்ச் 1947இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்த கொண்டன. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்.
- இத்தகைய மாநாடு மீண்டும் ஒருமுறை டிசம்பர் 1948இல் இந்தோனேசியாவில் மறுகாலனியாக்கத்திற்கு உட்படுத்த விரும்பிய டச்சுக்காரர்களுக்குப் பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது.
- காலனி ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954 இல் கொழும்பில் நடைபெற்ற ஆசிய தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுக்கப்பட்டது.
பாண்டுங் மாநாடு :
1955ல் இந்தோனேஷிய நாட்டின் பாண்டூங்மாநாட்டில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. பின்னாளில், பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணி சேரா இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்தி கொடுத்தது.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. அடையாள அரசியல் தொடர்பான சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்க சிறப்புக் கூட்டங்களை நடத்துக,
2. ஆசிரியர்கள் கோவிந்த் நிகலானியின் தொலைக்காட்சி படமான Tamas மற்றும் எம்.எஸ். சத்யுவின் “Garam Hawa” படத்தையும் ஆங்கில துணை தலைப்புகளுடன் திரையிடலாம்.
3. குஷ்வந்த்சிங்கின் Trainto Pakistan என்ற சிறப்பான புத்தகத்தை இப்பாடப்பகுதி கருத்துகள் தொடர்பாக வாசிக்கலாம். சாரா
12th History Guide காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Additional Questions and Answers
1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
மவுண்ட் பேட்டன் பிரபு அரசப் பிரதிநிதியாக பதவி ஏற்ற நாள் …….
அ) 1947 பிப்ரவரி 20
ஆ) 1947 மார்ச் 22
இ) 1947 ஜூன் 3
ஈ) 1947 ஜூன் 14
Answer:
ஆ) 1947 மார்ச் 22
Question 2.
இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ….
அ) 1947 ஜூன் 3
ஆ) 1947 மார்ச் 22
இ) 1947 ஜூன் 14
ஈ) 1947 ஆகஸ்ட் 15
Answer:
இ) 1947 ஜூன் 14
Question 3.
மௌண்ட்பேட்டன் பிரபுக்கு முன்பு அரசப் பிரதிநிதியாக இருந்தவர்………………..
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) கானிங் பிரபு
ஈ) கர்சன் பிரபு
Answer:
அ) வேவல் பிரபு
Question 4.
எது பொருந்தவில்லை .
அ 1946 ஆகஸ்ட் 31 – பட்டாபி சீதாராமையா ஆந்திர கோரிக்கை
ஆ 1962 செப்டம்பர் 8 – பாகிஸ்தான் இந்தியா மீது போர்
இ1952 டிசம்பர் 15 – பொட்டி ஸ்ரீ ராமுலு காலமானார்
ஈ 1950 ஜனவரி 1 – சீன மக்கள் குடியரசை இந்தியா அங்கீகரித்தது
Answer:
ஆ) 1962 செப்டம்பர் 8 – பாகிஸ்தான் இந்தியா மீது போர்
Question 5.
அரசமைப்பு நிர்ணய சபைத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையம் அமைத்த நாள் …….
அ) 1948 ஜூன் 17
ஆ) 1948 டிசம்பர் 10
இ) 1948 ஆகஸ்ட் 31
ஈ) 1949 டிசம்பர் 10
Answer:
அ) 1948 ஜூன் 17
Question 6.
கூற்று : இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபின் வொரி மாநில மறு சீரமைப்புக் கொள்கை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
காரணம் : 1956இல் ஆந்திரப்பிரதேச உருவாக்கத்தில் தொடங்கி 1966ல் பஞ்சாப்மொழி பேசும் பஞ்சாப் மாநிலம் மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் என மூன்றாக பிரித்ததில் முற்றுப்பெற்றது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்றும் காரணமும் சரி, கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமாகும்.
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் சரி, கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமில்லை
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சரி, கூற்றிற்கு காரணம் சரியான விகமாகும்
Question 7.
ஆந்திராதனி மாநிலமாக பிரிக்கப்படவேண்டும் எனவலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்.
அ) பட்டாபி சீதாராமையா
ஆ) பசல் அலி
இ) பொட்டி ஸ்ரீராமுலு
ஈ) லியாகத் அலிகான்
Answer:
இ) பொட்டி ஸ்ரீராமுலு
Question 8.
பொருத்துக :- சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
அ. டாக்டர் இராசேந்திர பிரசாத் – i. சட்ட வடிவமைப்புக்குழு
ஆ. ஜவஹர்லால் நேரு – ii. இந்திய ஐக்கியம்
இ. டாக்டர் அம்பேத்கார் – iii. இந்திய வெளியுறவு கொள்கை
ஈ. வல்லபாய் பட்டேல் – iv அரசியல் நிருவை அவைத்தலைவர்
அ) (i), (ii), (iii), (iv)
ஆ) (iv), (ii), (i), (iii)
இ) (ii), (i), (iv), (iii)
ஈ) (iv), (iii), (i), (ii)
Answer:
ஈ) (iv), (iii), (i), (ii)
Question 9.
பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ சீனாவுடனான இந்தியப்போர் | 1 1947 ஆகஸ்ட் 9 |
ஆகிளமண்ட் அட்லி | 2 1962 செப்டம்பர் 8 |
இ கே.எம். பணிக்கர் | 3 இங்கிலாந்து பிரதமர் |
ஈ ராட்க்ளிஃப் அளித் திட்டம் | 4 மாநில சீரமைப்பு |
Answer:
ஈ) (2), (3), (4), (1)
Question 10.
ராட்க்ளிஃப் அளித்த திட்டத்தின்படி பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த …………….. சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
அ) 52000 சதுர மைல்
ஆ) 62,000
இ) 72,000
ஈ) 63,000
Answer:
ஆ) 62,000
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பது பற்றி அட்லி பிரபு கூறியது யாது?
Answer:
- இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதற்கு பிரிட்டன் எடுத்த விரைவான நடவடிக்கைகளின் போது இந்தியப் பிரிவினை சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
- இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லி, 1947 பிப்ரவரி 20ல்லண்டனில் வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் 1984ஜூன் 30க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம் அளித்துவிட்டு இந்தியாவைவிட்டு வெளியேறும் என்று தெரிவித்தார்.
Question 2.
இந்தியாவுடன் தாமாக இணைந்த அரசுகள் யாவை?
Answer:
பாட்டியாலா, குவாலியர், பரோடா போன்ற சுதேச அரசுகள் தாமாகவே இந்தியாவுடன் இரு சைவு தெரிவித்த அரசுகளாகும்.
Question 3.
மவுண்ட் பேட்டன் திட்டம் என்பது என்ன?
Answer:
- 1947 ஜூன்-ல் மௌண்ட் பேட்டன் பிரபு, அட்லி அறிவித்த தினத்திற்கு முன்னதாகவே 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
- வகுப்புவாதப் பிரச்சனை, இருநாடு கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம் பகிர்ந்து ஒப்படைப் மௌண்ட்பேட்டன் திட்டமாகும்.
Question 4.
கஃபிலா என்றால் என்ன?
Answer:
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இரு நாடுகளிலும் எல்லையை கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்! வரிசை கஃபிலா எனப்பட்டது.
Question 5.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் கோட்பாடுகள் யாவை?
Answer:
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு
- காலனி எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல், இனவெறியை எதிர்த்தல்.
- வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை,
- ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை.
- பிறநாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
- பிறநாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
- ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்.
- உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
- நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலைநிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படாவண்ணம் இருநாடுகளும் சமநீதியைப் பாதுகாத்தல்.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
சுதந்திர இந்தியாவின் முன்னின்ற சவால்கள் யாவை?
Answer:
- சுதந்திர இந்தியாவின் முன்னின்ற சவால்கள் பலவாகும். அவற்றுள் பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்வி முறையைச் சீரமைத்தல்
- இந்திய விடுதலைப்போராட்டத்தில் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல், 500க்கு அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை
இந்தியாவோடு ஒருங்கிணைத்தல். - தேசிய அரசின் தேவைகளை பூர்த்தி செய்கிற மக்களால் பேசப்படும் மொழிகள் அடிப்படையிலான வேறுபாட்டைத் தீர்த்து வைத்தல் போன்ற நாட்டின் தேவைகள் உள்ளடங்கும்.
- மேலும் மக்களாட்சி, இறையாண்மை , சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவால்கலும் அடங்கும்.
Question 2.
சுதேச அரசுகளின் இணைப்பில் முக்கிய பங்கு வகித்த போராட்டங்களைப் பற்றி கூறுக.
Answer:
- சுதேச அரசுகளின் இணைப்பில் முக்கிய பங்கு வகித்த போராட்டங்களாக மூன்று போராட்டங்களைக் குறிப்பிடலாம். அவை
- திருவாங்கூர்மாநிலத்தின் பொறுப்பரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவான் ஆகியசி.பி. இராமசாமியை எதிர்த்து நடத்தப்பட்ட புன்னப்புராவயலார் ஆயுத போராட்டம் முக்கியமானது.
- பிரஜா மண்டல் மற்றும் ஒடிசாவில் நடந்த பழங்குடியினர் கிளர்ச்சிகள் (நீலகிரி, தெங்கனால் மற்றும் தல்சர்) இந்தியாவில் நடந்த 2வது முக்கிய சுதேச எதிர்ப்பு போராட்டமாகும்.
- மைசூர் மகாராஜாவிற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய போராட்டங்களும் இந்திய சுதேச ப அரசுகளின் இணைப்புக்கு முக்கிய பங்காற்றின.
Question 3.
இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 3 (Article-3) கூறும் செய்தியாது?
Answer:
நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
- ஒருமாநிலத்திலிருந்து நிலப்பகுதியைப் பிரித்தோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை இணைத்தோ அல்லது ஏதேனும் நிலப்பகுதியை மாநிலப் பகுதிகளோடு இணைத்தோ புதிய மாநிலத்தை உருவாக்கலாம்.
- எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் அதிகரிக்கலாம்.
- எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் குறைக்கலாம்.
- எந்த மாநிலத்தின் எல்லையையும் மாற்றி அமைக்கலாம்.
Question 4.
‘அணி சேராமையின் முக்கியத்துவம் மற்றும் உலகத்துக்கு அதன் தேவை’ குறித்து நேரு கூறியவை யாவை?
Answer:
- பாசிசம், காலனித்துவம், இனவாதம் அல்லது அணுகுண்டு, ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை போன்ற அனைத்து தீய சக்திகளையும் பொறுத்தவரையில் நாம் மிகவும் உறுதியாகவும், ஐயமின்றியும் அவற்றை
எதிர்த்து நிற்கிறோம். - பனிப்போர் மற்றும் அது தொடர்பான ராணுவ ஒப்பந்தங்களிலிருந்து மட்டும் நாங்கள் விலகி நிற்கிறோம்.
- ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் புதிய நாடுகளைத் தங்களது பனிப்போர் இயந்திரத்திற்குக் கட்டாயப்படுத்தித் தள்ளும் முயற்சிகளை எதிர்க்கிறோம்.
- நாம் தவறென கருதும் அல்லது உலகத்துக்கோ நமக்கோ தீங்கிழைக்கும் எந்த ஒரு வளர்ச்சியையும் கண்டனம் செய்யலாம்.
- அதற்கான சந்தர்ப்பம் எழும்போதெல்லாம் நாம் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவோம் என “அணி சேராமையின் முக்கியத்துவம் மற்றும் உலகத்துக்கு அதன் தேவை” குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிடுகிறார்.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
பாண்டூங் பேரறிக்கையை விவரி.
Answer:
பாண்டூங் பேரறிக்கை:
- உலக அமைதியையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் ஐ.நா. சாசனத்தின் 10 அம்சக் கோட்பாடுகளை உள்ளடக்கிய “பேரறிக்கை ”.
- அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை மதித்து நடத்தல்.
- அனைத்து நாடுகளில் இறையான்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளித்தல்.
- அனைத்து இனங்களின் சமத்துவத்தையும் பெரிய மற்றும் சிறிய அளவிலான அனைத்து நாடுகளின் சமத்துவத்தையும் அங்கீகரித்தல்.
- மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையீடு அல்லது தலையீடுகளில் இருந்து விலகுதல்.
- ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமையுண்டு தனியாகவோ அல்லது கூட்டாகவோ. ஐக்கிய நாடுகளில் சாசனத்திற்கு ஏற்ற விதத்தில் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- அ) வல்லரசுகளின் எந்தவொரு குறிப்பிட்ட நலன்களுக்கும் சேவை செய்வதற்கு கூட்டாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தவதில் இருந்து ஒதுங்கிக் கொள்ளல்.
- ஆ) எந்தவொரு நாடும் பிறநாடுகளின் மீது அழுத்தங்களைச் செலுத்தாமல் ஒதுங்கி இருத்தல் 7 ஆக்கிரமிப்பு அல்லது ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் அல்லது எந்த ஒரு நாட்டின் நில ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுயநிர்ணயத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் விலகி இருத்தல்.
- ஐக்கிய நாடுகள் சபையின்சாசனத்திற்கு இணங்க அனைத்து சர்வதேசமுரண்பாடுகளையும் சமாதானவழிகள், சமரசம், நடுவர் அல்லது நீதித்துறை தீர்வு போன்ற அமைதியான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ளுதல்.
- பரஸ்பர நலன்களையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்துதல்.
- நீதி மற்றும் சர்வதேசக் கடமைகளை மதித்தல்
ஆகியவை பாண்டூங் மாநாட்டின் பேரறிக்கையாகும்.
Question 2.
இந்திய – சீன உறவு முறைகளை விவரி. (அல்லது)
இந்திய – சீன போர்களுக்கான காரணங்கள் யாவை?
Answer:
- ஏப்ரல் 1955ல் நடைபெற்ற பாண்டூங் மாநாட்டில் சீனாவையும் அதன் தலைவரான சூ-யென்-லாயும் முன்னிலைப்படுத்த நேரு சிறப்பான முயற்சியெடுத்தார்.
- ஆனால் 1959ல் சீன அரசாங்கம் பௌத்தர்களின் கிளர்ச்சியை அடக்கியதால் பௌத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஆயிரக்கணக்கான அகதிகளுடன் திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுத்தார்.
- இந்தியா, தலாய்லாமாவிற்கு தஞ்சம் வழங்கியது சீனாவை வருத்தமடையச் செய்தது.
- இதனால் 1959 அக்டோபரில் லடாக்கில் இருந்த கொங்காய் கணவாயில் காவல் இருந்த இந்திய படைமீது சீனா தாக்குதல் நடத்தியது. இதில் 5 காவலர் கொல்லப்பட்டனர். 12 பேர் சிறைபிடித்துச் சென்றனர்.
- பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, ஏப்ரல் 1960ல் சூ-யென்-லாய்யை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் இந்திய சீன உறவில் முன்னேற்றம் இல்லை.
- 1962ல் மீண்டும் இந்திய சீனப்போர் ஏற்பட்டது.
- இதன்விளைவாக, இந்தியா-சீனாவோடு இணைந்து ஆசிய மண்டலத்தை உருவாக்கும் கனவு தகர்ந்து போனது.
காலக்கோடு
இந்திய தேசிய இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் (1900-1950)