Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

12th History Guide இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
அ) மார்ச் 23, 1940
ஆ) ஆகஸ்ட் 8, 1940
இ) அக்டோபர் 17, 1940
ஈ) ஆகஸ்ட் 9, 1942
Answer:
இ) அக்டோபர் 17, 1940

Question 2.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. இந்து – முஸ்லீம் கலவரம்1. மோகன் சிங்
ஆ ஆகஸ்ட் கொடை2. கோவிந்த் பல்லப் பந்த்
இ. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்3. லின்லித்கோ பிரபு
ஈ இந்திய தேசிய இராணுவம்4. நவகாளி

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 1

Answer:
இ) 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) இவர்களில் யாருமில்லை
Answer:
இ) மௌண்ட்பேட்டன் பிரபு

Question 4.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்1. டோஜா
ஆ. சீனக் குடியரசுத் தலைவர்2. வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ பிரிட்டிஷ் பிரதமர்3. ஷியாங் கே ஷேக்
ஈ. ஜப்பான் பிரதமர்4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 2

Answer:
இ) 4321

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?
அ) 1938
ஆ) 1939
இ) 1940
ஈ) 1942
Answer:
ஆ) 1939

Question 6.
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?
அ) சட்டமறுப்பு இயக்கம்
ஆ) ஒத்துழையாமை இயக்கம்
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

Question 7.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?
அ) உஷா மேத்தா
ஆ) பிரீத்தி வதேதார்
இ) ஆசப் அலி
ஈ) கேப்டன் லட்சுமி
Answer:
அ) உஷா மேத்தா

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 8.
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மோதிலால் நேரு
இ) இராஜாஜி
ஈ) சுபாஷ் சந்திர போஸ்
Answer:
அ) ஜவஹர்லால் நேரு

Question 9.
1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
Answer:
ஆ) லின்லித்கோ பிரபு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 10.
கூற்று : வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.
காரணம் : அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு –
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 11.
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
அ) ஜெர்மனி
ஆ) ஜப்பான்
இ) பிரான்ஸ்
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Answer:
ஆ) ஜப்பான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 12.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.
அ) சுபாஷ் படைப்பிரிவு
ஆ) கஸ்தூர்பா படைப்பிரிவு
இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு
Answer:
ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு

Question 13.
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
அ) இரங்கூன்
ஆ) மலேயா
இ) இம்பால்
ஈ) சிங்கப்பூர்
Answer:
ஈ) சிங்கப்பூர்

Question 14.
இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?
அ) செங்கோட்டை, புதுடெல்லி
ஆ) பினாங்
இ) வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா
ஈ) சிங்கப்பூர்
Answer:
அ) செங்கோட்டை, புதுடெல்லி

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 15.
1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) கிளமண்ட் அட்லி –
Answer:
அ) வேவல் பிரபு

Question 16.
1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இ) ராஜேந்திர பிரசாத்
ஈ) வல்லபாய் படேல்
Answer:
அ) ஜவஹர்லால் நேரு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 17.
சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
அ) ii, i, iii, iv
ஆ) i, iv, iii, ii
இ) iii, iv, i, ii
ஈ) iii, iv, ii, i
Answer:
அ) ii, i, iii, iv

Question 18.
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) ஆகஸ்ட் கொடை
(iv) தனிநபர் சத்தியாகிரகம்
அ) i, ii, iii, iv
ஆ) iii, i, ii, iv
இ) iii, iv, i, ii
ஈ) i. iii, iv, ii
Answer:
இ) iii, iv, i, ii

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 19.
இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
அ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
ஆ) மௌண்ட்பேட்டன் பிரபு
இ) கிளமண்ட் அட்லி
ஈ) F.D.ரூஸ்வெல்ட்
Answer:
இ) கிளமண்ட் அட்லி

Question 20.
பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
அ) ஆகஸ்ட் 15, 1947
ஆ) ஜனவரி 26, 1950
இ) ஜூன், 1948
ஈ) டிசம்பர், 1949
Answer:
இ) ஜூன், 1948

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
Answer:
1929-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில்

  • முதன் முறையாக, முழு விடுதலை வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.
  • பூர்ண சுதந்திரம் அடைவதே, காங்கிரசின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது.
  • உப்பு வரியை எதிர்த்து சட்டமறுப்பு இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Question 2.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?
Answer:
லின்லித்கோ பிரபுவால் ஆகஸ்ட் கொடை 8 ஆகஸ்ட் 1940 அன்று அறிவிக்கப்பட்டது.

  • வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு செயற்குழுவை விரிவாக்கம் செய்தல்.
  • இந்திய உறுப்பினர்களை கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்கல்
  • சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல்
  • போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு வாய்ப்பளிக்க உறுதியளித்தல் இதுவே ஆகஸ்ட் நன்கொடையின் சிறப்பாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
Answer:
கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தல் :

  • டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
  • அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் அரசாட்சி நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோர் பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
  • இவை அனைத்துக்கும் மேலாக ஓங்கி நின்றது இந்தியப் பிரிவினை பற்றிய குழப்பமாகும். எனவே கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தது.

Question 4.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
Answer:
சிம்லா மாநாடு:

  • வைஸ்ராய் வேவல் பிரபு ஜூன் 1945இல் பிரதமர் சர்ச்சிலின் ஒப்புதல் பெற்று சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
  • வைஸ்ராய்வைத்த முன்மொழிவின்படிவைஸ்ராய், முப்படைகளின் தளபதி இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லீம்கள் சமஅளவில் முக்கியத்துவம் அளித்து பிரதிநிதித்துவமும், பட்டியல் இனங்களுக்கென்று தனிப்பிரதித்துவமும் வழங்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் பற்றிய உரையாடலைத் துவங்கத் திட்டமிடப்பட்டது.
  • இம்முன்மொழிவு யாருக்கும் திருப்தியாய் இல்லை.
  • தீர்மானமெனத்தையும் எட்டாமலேயே 25 ஜூன் முதல் 14 ஜூலை வரை நடந்த சிம்லா மாநாடு முடிவுந்தது.
  • குறிப்பாக வைஸ்ராயின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரஸிற்கும், முஸ்லீம்
    லீகிற்கும் இருந்த உரிமைப் பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய இராணுவத்தை ஏற்படுத்தினார்?
Answer:

  • தென்கிழக்கு ஆசியாவில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படை வீரர்களால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடு கொடுத்து நிற்க முடியவில்லை.
  • பிரிட்டிஷ் இந்திய படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படை வீரர்களை போர்க் கைதிகளாக
    விடுவித்துவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
  • மலேயாவில் இவ்வாறு கைவிடப்பட்ட பட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் ஜப்பானியர்களின் உதவியை நாடினார்.
  • ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கைதிகள் யாவரும் மோகன் சிங்கின் தலைமையின் கீழ் விடப்பட்டனர்.
  • ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல போர்க் கைதிகள் உருவானதில் மோகன்ராஜ் சிங்கின்
    கட்டுப்பாட்டில் 45,000 போர்வீரர்கள் வந்தனர்.
  • இவர்களில் 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை கேப்டன் மோகன் சிங் ஏற்படுத்தினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.
Answer:

  • முஸ்லீம் லீக்
  • ஷிரோமணி அகாலிதல்
  • இந்து மஹாசபா ஆகிய அமைப்புகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை.

Question 2.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
Answer:

  • இந்தியாவை பொறுத்தமட்டில் விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசு முறையை நிறுவுதல் என்று மொழிந்திருந்தார். ஆனால் அவர் வெளியிட்ட வரைவில் விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை .
  • அரசியல் சாசன வரைவுக்குழு – மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும், அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களாலும் ஏற்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
  • ஏதாவது ஒரு மாகாணத்திற்கு புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாக கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இதில் பழைய வரைவுகளிலிருந்து மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
  • இது பற்றி நேரு, “நான் முதன் முறையாக இவ்வரைவை வாசித்தபோது கடுமையான மனஅழுத்தத்திற்கு
    உட்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்குக.
Answer:

  • இந்திய தேசிய காங்கிரஸில் சுபாஷ் சந்திரபோஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
  • காங்கிரஸிற்குள் சுபாஷ் சந்திரபோஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் போஸ் இராஜினாமா செய்தார்.
  • பின்னர் ஃபார்வர்டு பிளாக் கட்சியை துவக்கியதோடு அதைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தையும்
    உருவாக்கி காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தனித்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எனவே ஆகஸ்ட் 1939ல் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Question 4.
1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?
Answer:
முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலிகான், முகமது இஸ்மாயில்கான் மற்றும் குவாஜா சர் நிஜாமுதீன் ஆகியோர் 1946ல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம் பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் ஆவர்.

Question 5.
எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?
Answer:

  • துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். > போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் அவர்தம் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.
  • இதற்கிடையே ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலணிய அரசு இழுத்தடித்தது.
  • மறுபுறம் சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச்
    செல்ல நெருக்கடி கொடுத்தார்.
  • 1942ல் ஜெர்மனியில் இருந்து போஸ் ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்திய மக்களை தொடர்பு
    கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில்தான் காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பற்றி சிந்திக்கலானார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
Answer:
வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வியால் காந்தி ஏமாற்றமடைந்தார். இயக்கத் தலைமையைக் காந்தியடிகளிடத்துக் காங்கிரஸ் ஒப்படைத்தது.
  • ஆகஸ்டு 8, 1942ல் காங்கிரஸ் மாநாடு தீர்மானம் நிறைவேற்றி ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கூறியது. விடுதலைக்கான கடைசி போராட்டம் என்று காந்தி அறிவித்தார். அவர் நிகழ்த்திய உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்பதே முடிவு என அறிவித்தார்.
  • ஆங்கிலேயரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரும்படி காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.
  • எல்லா முதன்மை தலைவர்களும் கைதாயினர். அடக்கு முறையையும் கொடுங்கோண்மையையும் அப்பாவி மக்கள் மீது அரசு ஏவியது.
  • ஆகஸ்டு 9ல் மும்பை, அகமதாபாத் மற்றும் புனேயில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆகஸ்ட் 11ல் நிலைமை விரைந்து மோசமானது.

இயக்கத்தின் போக்கு:

  • தீவைப்பு, கொள்ளை, படுகொலை ஆகியவற்றில் மக்கள் இறங்கித் தண்டவாளங்களை பெயர்த்துக் காவல் நிலையம், புகைவண்டி நிலையம் ஆகியவற்றிற்குத் தீ வைத்தனர். இந்தியாவை விட்டு வெளியேறுக இயக்கம் தென்னிந்தியாவிலும் பெரும் ஆதரவு பெற்றது.
  • எதிர்ப்பின் ஆரம்பக்கட்டம் நகர்புறங்களை மையமாகக் கொண்டும் இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களிலும் பரவியது.
  • காங்கிரஸிற்குள் இருந்த சோசலிஷவாதிகள் தலைமறைவாக இருந்து கிராமத்து இளைஞர்களைக் கொரில்லா முறையில் ஒருங்கிணைத்தனர்.
  • காந்தியடிகளின் 10 பிப்ரவரி 1943ல் துவங்கி 21 நாட்கள் உண்ணாவிரதம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது இயக்கத்திற்கு வலுவேற்றியது.

இயக்கத்தின் தீவிரம் :

  • துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 1060 பேர். அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும், 332 இருப்பு பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.
  • 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்து புரட்சியாளர்களோடு கைகோர்த்தனர்.

வானொலி பயன்படுத்தப்படல் :

  • “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் வானொலி ஒலிபரப்பு முறையை நிறுவி இதன் ஒலிபரப்பு மெட்ராஸ் வரை கேட்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பவராவார்.
  • இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது.
  • இவ்வியக்கம் எந்நிலையிலும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டு வந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி காலனிய ஆட்சியாளர்களுக்கு தாங்கள் தவிர்க்க முடியாத பெரும் சக்தி என்ற உண்மையைப் பறை சாற்றியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 2.
சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?
Answer:

  • டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளை துறந்த ஜவஹர்லால் நேரு நீண்ட இடைவேளைக்குப் பின் தனது தொங்கலாடையை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார்.
  • காலனிய அரசின் பிடிவாதமான முரட்டுப்போக்கு மற்றுமொரு பேரியக்கத்திற்கு மேடையமைத்துக் கொடுத்தது.
  • இந்திய தேசிய காங்கிரசும் 25 ஜூன் முதல் 10 ஜூலை 1945 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தியது.
  • அண்மையில் இந்திய அரசியல் சட்டம் 1935இன் கீழ் தேர்தல் வருவதாக இருந்தாலும் இக்கூட்டங்களில்
  • ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணையைப் பற்றியே பேசப்பட்டது.
  • இப்பின்புலத்தில் காலனிய அதிகாரம் ஷா நவாஸ் கான், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லோம் ஆகிய
    மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.
  • கடையடைப்புகளும், ஊர்வலங்களும் பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் 1 கடைபிடிக்கப்பட்ட போது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.

Question 3.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
Answer:

  • போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்கள் முழு பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயது தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.
  • ஒரு வேளை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதி செய்யப்பட்டால், அம்முக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத் தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.
  • எல்லையில் அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  • இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்ட பின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 4.
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?
Answer:

  • போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, விலைவாசி ஏற்றத்திலும், உணவு, தானிய பற்றாக்குறையிலும் போர்கால தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் வேலையில்லா திண்டாட்டத்தின் மூலமும் பிரிட்டிசாருக்கு எதிரான உணர்வாக கிளம்பி இந்திய தேசிய இராணுவ விசாரணை எதிர்ப்பு இயக்கங்களோடு கலந்தன.
  • HMIS தல்வார் என்ற போர் கப்பலில் மாலுமியாக பணியாற்றிய B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதினார்.
  • இதனையடுத்து அக்கப்பலில் மாலுமியாக பணியாற்றிய 1100 மாலுமிகள் உடனடியாக போராட்டத்தில் இறங்கினர்.
  • தத்தின் கைது நடவடிக்கை 18 பிப்ரவரி 1946 அன்று வெடித்து கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
  • அதன் மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் இருந்ததோடு, பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பினர்.
  • விரைவில் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவுப் போராட்டத்தில் இறங்கினர்.
  • போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரை சார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 18 பிப்ரவரிக்குப் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
  • மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பால நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப் படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.
  • பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.
  • இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் என்பதோடு ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. தமிழ் நாட்டிலுள்ள இந்திய தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த விவரங்களையும்
படங்களையும் குறிப்பேட்டில் வைக்கவும்.
2. உமது பகுதியிலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய நபர்களின் குடும்பப் பின்புலம் குறித்தப் பட்டியல் ஒன்றைத் தொகுக்கவும்.

12th History Guide இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்திய தேசிய காங்கிரஸில் ………………… தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அ) அன்னிபெசன்ட்
ஆ) G. சுப்ரமணிய அய்யர்
இ) சுபாஷ் சந்திரபோஸ்
ஈ) ரவீந்திரநாத் தாகூர்
Answer:
இ) சுபாஷ் சந்திரபோஸ்

Question 2.
அமெரிக்காவின் முத்து துறைமுகம் ஜப்பானால் தாக்கப்பட்ட நாள்
அ) 7 டிசம்பர் 1941
ஆ) 17 டிசம்பர் 1941
இ) 17 டிசம்பர் 1940
ஈ) 7 ஜூன் 1941
Answer:
அ) 7 டிசம்பர் 1941

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கூற்று : புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் இரகசியமாக வானொலி ஒலிபரப்பு முறைமையை நிறுவினார்கள்.
காரணம் : இந்த இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா, அதன் ஒலிபரப்பு மெட்ராஸ் வரை கேட்கப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் இல்லை
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமாகும்

Question 4.
ஆகஸ்ட் நன்கொடையை அறிவித்தவர் ………………………………..
அ) லின்லித்கோ பிரபு
ஆ) ஸ்ட்ராஃபோர்டு
இ) மோதிலால் நேரு
ஈ) லிட்டன் பிரபு
Answer:
அ) லின்லித்கோ பிரபு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு ……………………………….
அ) 1939
ஆ) 1942
இ) 1945
ஈ) 1947
Answer:
ஆ) 1942

Question 6.
சரியான கூற்றினை எடுத்து எழுதுக.
அ) லண்டனில் நடந்த 3வது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தியடிகளும் அம்பேத்காரும் சென்றனர்.
ஆ) காங்கிரஸின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அம்பேத்கார் கவலை அடைந்தார்.
இ) தீண்டத்தகாதோருக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை காந்தியடிகள் எதிர்க்கவில்லை.
ஈ) சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் தனித்தொகுதி இடம்பெறவில்லை .
Answer:
ஆ) காங்கிரஸின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அம்பேத்கார் கவலை அடைந்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 7.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை .
அ) பஞ்சாப் துணை ஆளுநர் – ரெஜினால்டு டையர்
ஆ) திராவிட இயக்கம் – தென்னிந்தியா
இ) மோதிலால் நேரு – கம்யூனிஸ்ட் கட்சி
ஈ) A.O. ஹுயூம் – காங்கிரஸ்
Answer:
இ) மோதிலால் நேரு – கம்யூனிஸ்ட் கட்சி

Question 8.
பின்வருவனவற்றுள் எது எவை சரியானவை அல்ல.
அ) அம்பேத்கார் ‘மஹத் சத்தியாகிரகம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார்.
ஆ) தீண்டத் தகாதோருக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை மகாத்மா காந்தி வரவேற்றார்
இ) 1932 ஆகஸ்டில் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
ஈ) 1909 இந்திய அரசியல் சட்டத்தின் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
Answer:
ஆ) தீண்டத் தகாதோருக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை மகாத்மா காந்தி வரவேற்றார்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

II. சுருக்கமான விடை தருக

Question 1.
தனிமனித சத்தியாகிரகம் என்பது என்ன?
Answer:

  • காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்ய விரும்பாததால் தனிமனித சத்தியாகிரகம் என்ற உபாயத்தைக் கைகொண்டார்.
  • காந்தியடிகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளை அவர்களின் பேச்சுரிமையை மையப்படுத்திப் போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தூண்டினார்.

Question 2.
தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல் பற்றி விவரி,
Answer:

  • தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல்களில் முக்கியமானதாக கருதப்படுவது முத்துத் துறைமுகம் என்ற அமெரிக்க துறைமுகம் 7 டிசம்பர் 1941ல் தாக்கப்பட்டதாகும்.
  • அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டும், சீனக் குடியரசுத் தலைவரான ஷியாங் கே ஷேக்கும் ஜப்பானின் அதிரடிப் போக்கை நிறுத்த முனைந்தார்கள்.
  • ஜப்பானியப் படைகள் 1941இன் முடிவில் பிலிப்பைன்ஸ், இந்தோ-சீனா இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற பகுதிகளை மண்டியிட வைத்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழையத் தயாராயின.
  • தென்கிழக்கு ஆசியாவின் வீழ்ச்சி பிரட்டிஷாரையும் இந்திய தேசியக் காங்கிரஸையும் கவலை கொள்ள செய்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

III. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இந்திய தேசியப் படை பற்றி எழுதுக.
Answer:
அ. இந்திய தேசியப் படை உருவாதல்:

  •  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாளர்களைத் திரட்டினார்.
  • 1942 இல் பர்மாவை அடைந்தார்.
  • அங்க ஜப்பானியர் சுமார் 20000 இந்தியர்களை போர்க் கைதிகளாக வைத்திருந்தனர். ஜப்பானின் துணையுடன் இக்கைதிகளை ஒன்றுபடுத்தி ‘இந்திய தேசியப் படை’ என்ற இராணுவ அமைப்பை உருவாக்கினார்.

ஆ. இந்திய மக்கள் புத்துணர்வு பெறுதல் :

  • இந்தியக் கைதிகளை ஒன்றுபடுத்தி இந்திய தேசியப்படை என்ற இராணுவ அமைப்பை உருவாக்கியதன் மூலம், நேதாஜி இந்திய மக்கள் புத்துணர்வு பெறக் காரணமாக விளங்கினார்.
  • இவரது தாரக மந்திரமான ‘ஜெய்ஹிந்த்’ இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
  • ‘டில்லியை நோக்கி செல்’ என்ற கோஷத்தையும் நேதாஜி எழுப்பினார்.
  •  இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மணிப்பூர் வரை இந்திய தேசியப் படை வந்தது.

இ. இந்திய தேசியப் படையின் தோல்வி:

  • 1946ஆம் ஆண்டு ஜப்பான் சரண்டையந்ததால் இந்திய இந்திய தேசியப் படையைச் சார்ந்த வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • அதே ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.