Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை ?
அ) நூரெம்பெர்க்
ஆ) ஆன்ட்வெர்ப்
இ) ஜெனோவா
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
Answer:
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?
அ) மறுமலர்ச்சி
ஆ) சமயச் சீர்திருத்தம்
இ) புவியியல் கண்டுபிடிப்பு
ஈ) வர்த்தகப் புரட்சி
Answer:
அ) மறுமலர்ச்சி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?
அ) ஐந்தாம் நிக்கோலஸ்
ஆ) இரண்டாம் ஜூலியஸ்
இ) இரண்டாம் பயஸ்
ஈ) மூன்றாம் பால்
Answer:
ஈ) மூன்றாம் பால்

Question 4.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?
அ) மார்க்கோ போலோ
ஆ) ரோஜர் பேக்கன்
இ) கொலம்பஸ்
ஈ) பார்தோலோமியோ டயஸ்
Answer:
இ) கொலம்பஸ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
கூற்று : காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.
காரணம் : நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

Question 6.
பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
அ) பகுத்தறிவுவாதம்
ஆ) ஐயுறவுவாதம்
இ) அரசில்லா நிலை
ஈ) தனித்துவம்
Answer:
இ) அரசில்லா நிலை

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பிளாட்டோ
இ) ரோஜர் பேக்கன்
ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Question 8.
மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் யார்?
அ) தாந்தே
ஆ) மாக்கியவல்லி
இ) ரோஜர் பேக்கன்
ஈ) பெட்ரார்க்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?
அ) ஜியோவனி அவுரிஸ்பா
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) கொலம்பஸ்
Answer:
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்

Question 10.
கூற்று : கலிலியோ கலிலிதேவாலய விரோத போக்குக்காக கிறித்தவதிருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காரணம் : சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
அறிக்கை I : இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
அறிக்கை II : துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
அறிக்கை III : கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
அறிக்கை IV : பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.
அ) I, II மற்றும் III
ஆ) II மற்றும் III
இ) 1 மற்றும் III
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஆ) II மற்றும் III

Question 12.
கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை?
அ) வர்ஜின் ஆஃப் ராக்ஸ்
ஆ) இறுதி விருந்து
இ) மோனலிசா
ஈ) மடோனாவும் குழந்தையும்
Answer:
ஈ) மடோனாவும் குழந்தையும்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 13.
போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
அ) டோனடெல்லா
ஆ) ரபேல்
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ
Answer:
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ

Question 14.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?
அ) மார்லோவ் – டிடோ
ஆ)ஷேக்ஸ்பியர் – கிங் லியர்
இ) பிரான்சிஸ் பேக்கன் – நோவும் ஆர்கனும்
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 15.
கூற்று : துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
காரணம் : கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி – வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு கட்ட ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 16.
மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?
அ) சாண்டா மரியா
ஆ) பிண்ட்டா
இ) நினா
ஈ) விட்டோரியா
Answer:
ஈ) விட்டோரியா

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 17.
ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?
அ) பெட்ரோ காப்ரல்
ஆ) கொலம்பஸ்
இ) ஹெர்னன் கார்ட்ஸ்
ஈ) ஜேம்ஸ் குக்
Answer:
இ) ஹெர்னன் கார்ட்ஸ்

Question 18.
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1519
ஆ) 1532
இ) 1533
ஈ) 1534
Answer:
ஈ) 1534

Question 19.
கூற்று : கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
காரணம் : போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 20.
ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?
அ) ஏழாம் ஹென்றி
ஆ) எட்டாம் ஹென்றி
இ) இரண்டாம் ஹென்றி
ஈ) ஆறாம் ஹென்றி
Answer:
ஈ) ஆறாம் ஹென்றி

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்?
Answer:
எராஸ்மஸ் :

  • எராஸ்மஸ், தேவாலாய வழக்கங்கள் மற்றும் போதனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
  • இவரது சிறந்த படைப்பு “மடமையின் புகழ்ச்சி” என்பதாகும்.
  • இது கிறித்துவ துறவிகள் மற்றும் இறையியல் போதகர்களையும் கேலி செய்தது.

Question 2.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
Answer:
மெடிசி குடும்பம் :

  • இத்தாலிய நகரங்களில் ஒன்றான பிளாரன்ஸில் சக்தி வாய்ந்த வர்த்தக குடும்பம் மெடிசி குடும்பம்.
  • காசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தினார்.
  • மைக்கேல் ஆஞ்சிலோ, லியானர்டோ டாவின்சி உள்ளிட்ட பல ஓவியக் கலைஞர்களுக்கு மெடிசி குடும்பம் ஆதரவு அளித்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
Answer:

  • ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவிய போட்டியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் போப் ஆறாம் அலெக்சாண்டர் ஒரு ஆணையை வெளியிட்டார்.
  • அது போப்பின் ஆணை என்றழைக்கப்பட்டது.
  • அதன்படி உலகை கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரித்து, மேற்குப் பகுதியில் உரிமை கொண்டாட ஸ்பெயினுக்கும், கிழக்குப் பகுதியில் உரிமை கொண்டாட போர்ச்சுகல் நாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

Question 4.
ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?
Answer:

  • 1588இல் ஸ்பெயினின் அரசர் இரண்டாம் பிலிப் ஸ்பெயின் நாட்டு கப்பல் படையை 130 கப்பல்கள் மற்றும் 31,000 படைவீரர்களுடன் இங்கிலாந்து மீது போர் தொடுக்க அனுப்பினார்.
  • எனினும் ஆங்கிலேயர்கள் எளிதாக கையாளக்கூடிய தங்கள் படைகளின் நடவடிக்கையால் ஸ்பெயின் நாட்டுப் படையை வீழ்த்தினார்கள்.
  • நவீன உலகில் ஒரு வலுவான சக்தியாக பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.
Answer:

  • போப்பிற்கும், மார்டின் லூதருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
  • மார்டின் லூதரின் புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
  • வோர்ம்ஸ் சபையால் லூதர் சட்டத்திற்கு புறம்பானவர் என்று அறிவிக்கப்பட்டார்.

Question 6.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

  • பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
  • நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இந்தப் பெயர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
Answer:

  • இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய் பிரபுத்துவ ஆட்சியை அதன் நடைமுறையை வலுவிழக்கச் செய்தது.
  • பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து பிரபுக்கள் தங்கள் வேலையாட்களை இழந்ததோடு வரிவருமானத்தையும் இழந்தனர்.
  • சிலுவைப் போர்களின் போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர்.
  • புதிய மன்னராட்சியை உறுதிப்படுத்துவதில் நிலப்பிரபுத்துவ முறையின் வீழ்ச்சி முக்கியப் பங்காற்றியது.

Question 8.
ரொட்டியும் திராட்சை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.
Answer:

  • இயேசு நாதரின் புனித இறுதி விருந்தை ஒத்த புனித சமயச் சடங்கை கத்தோலிக்கர்கள் தங்கள் தேவாலயங்களில் பின்பற்றினார்கள்.
  • இயேசு கிறிஸ்து மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூறும் வகையில் இந்தச் சடங்கில் கத்தோலிக்க கிறித்தவர்கள் பங்கேற்றனர்.
  • ரொட்டியும், திராட்சை ரசமும் இயேசுவின் சதையும், இரத்தமும் என்று அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்கின்றனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
ஸ்பெயினில் சமய விசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
Answer:

  • ஸ்பெயின் நாட்டின் நீதிவிசாரணை அமைப்பை அரசர் அமைத்தார்.
  • அதன் மூலம் மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
  • சமய நம்பிக்கை அற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.

Question 10.
யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் – என்று அழைக்கப்பட்டது? இந்தப் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
Answer:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.
Answer:

  • டிரென்ட் சபை 18 ஆண்டுகளில் மூன்று முறை சந்தித்துபைபிள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
  • தேவாலய போதனைகள் மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திருவிருட்சாதனங்கள் குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது.
  • போப்பாண்டவரின் அதிகாரத்தை உறுதி செய்வது, பாதிரிமார்களின் பிரம்மச்சர்யம் ஆகியன நிலைநிறுத்தப்பட்டன.
  • அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து மற்றும் மேரியின் உருவ வழிபாட்டையும் சபை ஆதரித்தது.
  • இந்த டிரென்ட் சபையால் கத்தோலிக்க சமயம் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

Question 12.
வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?
Answer:

  • பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • எனவே ஆர்லியன்ஸின் பணிப்பெண் என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
  • 1920ஆம் ஆண்டு அவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் வழங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
Answer:

  • லத்தீன் கிறித்தவ உலகத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் இத்தாலியில் பெருமளவுக்கு சமயச்சார்பின்மை கலாச்சாரம் நடைமுறையில் இருந்தது.
  • ஏதென்ஸ் நகர மக்களின் பெரிகிளிஸ் காலத்து படைப்புகளையும், கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களின் கடந்த கால படைப்புகளையும் கண்டுபிடித்தனர்.
  • சட்டம் மற்றும் தத்துவயியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
  • கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தை புத்துயிர் பெறச் செய்ததில் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்ட இத்தாலிய நகரங்கள் அதிக செல்வம் ஈட்டின.

Question 2.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
Answer:

  • இங்கிலாந்தின் இலக்கியவாதிகளில் முக்கியமானோர்கள் வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மர்லோவ, பிரான்சிஸ் பேக்கன் ஆகியோராவர்.
  • ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும், மனிதர்களின் பல்வேறு உணர்வுகள் குறித்த பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
  • ஏஸ் யூ லைக் இட், தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ, மிட் சம்மர் நைட்ஸ் டிரீம் போன்ற நகைச்சுவை நாடகங்களும் ஒத்தெல்லோ, ஹாம்லெட், கிங்லியர். ரோமியோவும் ஜூலியட்டும் போன்ற சோகமயமான் நாடகங்களும் சில உதாரணங்களாகும்.
  • ஆங்கில நாடக ஆசிரியரான கிறிஸ்டோபர் மார்லோவ், டிடோ, தி குயீன் ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட் ஆகிய முக்கிய படைப்புகளை அளித்துள்ளார்.
  • ‘அனுபவ வாதத்தின் தந்தை’ என்று அழைக்கக்கூடிய பிரான்சிஸ் பேக்கன் தூண்டல் பகுத்தறிவே விஞ்ஞானத்தின் அடிப்படை என்றார்.
  • இவரது படைப்பான “நோவும் ஆர்கனும்” என்ற நூல் முக்கியப் படைப்பாக விளங்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல்பயணிகளின் சாதனைகள் என்ன?
Answer:

  • இத்தாலிய கடற்பயணி ஜான் கேபட் கனடாவை கண்டுபிடித்து ஆங்கில காலனியாக்கினார்.
  • ஜியோவனி டா வெர்ராசானோ என்பவர் பிரான்ஸ் நாட்டுக்காக கிழக்கு கனடா மாகாணங்களை இணைத்தார்.
  • ஆங்கிலேய கடற்பயணி ஹென்றி ஹட்சன் வடஅமெரிக்காவிலிருந்து பசிபிக்கடல் பகுதிக்கு பாதைகாண பாட முயன்றார்.

Question 4.
வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன?
Answer:

  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அமைந்தது அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றதே ஆகும்.
  • ஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலேயே காலனிகளில் சுரங்கம் மற்றும் தோட்ட விவசாயம் வளர்ச்சி கண்டதையடுத்து அடிமைகளை திறமையற்ற தொழிலாளர்களாக ஆளெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
  • டிரான்ஸ் அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் மூலமாக 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோசமான கதை நவீன உலகை உருவாக்குவதில் ஒரு அவமானச் செயலாக பதிவுபெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் ஆற்றிய பங்கை ஆராய்க.
Answer:

  • பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஒருவர் ஜான் கால்வின் ஆவார்.
  • கிறித்தவ சமய நிறுவனங்கள் என்ற அவரது லத்தீன் மொழிப் புத்தகம் அவரது கருத்துக்களை உள்ளடக்கியது.
  • கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
  • கால்வீனியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.

Question 6.
ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும். –
Answer:

  • இக்னேஷியஸ் லயோலா என்பவரால் இயேசு சபை தோற்றுவிக்கப்பட்டது.
  • பாரிஸ் என்ற இடத்தில் புதிய தேவாலய முறைமையை 1534 ஆகஸ்டு 15இல் ஏற்படுத்தினார்.
  • பிரம்மச்சர்யம், வறுமை, கீழ்ப்படிதல் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடித்தனர்.
    இயேசு சங்கம் தேவாலயத்துக்கு உண்மையான சிறந்த தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. இச்சபையின் தொண்டர்கள் ஜெசூட்டுகள் உலகெங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்கினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
1441.2இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • 1492ல் கொலம்பஸ் ஸ்பானிய ஆட்சியாளர்களின் உதவியுடன் கடற்பயணம் மேற்கொண்டார்.
  • இவர் 1492 ஆகஸ்ட் 3ல் பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று கப்பல்களில் பயணித்தார்.
  • 2 மாதங்களுக்கு பின் இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை அடைந்தார்.
  • ஆனால் அது உண்மையில் அமெரிக்கா என்னும் புதிய கண்டமாகும்.

Question 8.
போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.
Answer:

  • வாஸ்கோடகாமா சென்ற வழியைப் பின்பற்றி இந்தியா வந்தடைந்தார். சாமரின் ஒரு கோட்டை கட்டி
    வர்த்தகம் செய்ய காப்ரலை அனுமதித்தார். அரபு வணிகர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்ப டதால் மோதல் நிகழ்ந்தது.
  • கொச்சினில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டார். கண்ணனூரில் துறைமுகத்தை நிறுவினார்.
  • இறுதியாக 1501 ஜூன் 23ல் போர்ச்சுக்கல் திரும்பினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
Answer:
“தாந்தே, பெட்ரார்க் என்ற இரண்டு பெரும் இத்தாலிய மொழி கவிஞர்களை பிளாரன்ஸ் உருவாக்கியிருந்தது”.
தாந்தே:
தாந்தேயின் தெய்வீக இன்பியல், இறை அருள் மூலமாக மனித குலம் இரட்சிப்பு பெறமுடியும் என்பது அதன் கருப்பொருளாகும்.
பெட்ரார்க்:

  • ‘இத்தாலிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தந்தை’ என்று கருதப்படுகிறார்.
  • கிரேக்க மற்றும் ரோமானிய கையெழுத்துப் பிரதிகளைத்தேடி, சமயத்துறவிகள் நூலகங்களுக்குச் சென்றார்.
  • கடிதங்களை அவர் மறுபடியும் கண்டுபிடித்தார்.

பொக்காசியோ:
பிளாரன்ஸ் நகரை சேர்ந்தவரான ஜியோவனி பொக்காசியோ, பிளேக் என்ற கருங்கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிளாரன்ஸ் நகருக்கு வெளியே ஒரு குடியிருப்பில், ஏழு இளம்பெண்களும் மூன்று இளைஞர்களும் தங்கியிருந்தபோது கூறியதாக எழுதப்பட்ட 100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

நிக்கோலோ மாக்கியவல்லி:

  • இவரின் ‘தி பிரின்ஸ்’ என்ற படைப்பு ஆட்சியாளர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக அமைந்தது.
  • இந்த நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று இவர் கூறுகிறார்.
  • பக்திமானாக, உண்மையாக மனிதநேயத்துடன் பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்க குணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
Answer:
இங்கிலாந்து:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

பிரான்சு :

  • ஜோன் ஆப் ஆர்க் என்ற இளம் பெண் நூறாண்டு போரில் அரசர் சார்லசுக்காக போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • ஜோன் ஆப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூற்றாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு ஆங்கிலேயர்களை வெற்றி கண்டது.
  • ஏழாம் சார்லஸின் மகன் 11 ஆம் லூயி பர்கண்டி பகுதிக்கு திரும்பினார்.
  • 1483 ஆம் ஆண்டு இப்பகுதி பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • பிரான்சு ஒரு வலுவான மத்திய மன்ட்சி நடைபெறும் அரசாக உருவெடுத்தது.
  • பதினோறாம் லூயி பிரான்சை வலுப்படுத்தி ஒன்றுபடுத்தினார்.

ஸ்பெயின்:

  • அராபிய அரசர்களின் வழிதோன்றல்களாகிய முஸ்லீம் மன்னர்கள் மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
  • அராகன் மற்றும் காஸ்டைல் முக்கிய அரசுகள்.
  • அராகன் அரசர் பெர்டினாண்ட், காஸ்டைல் இளவரசியை மணம் முடித்து மூர்களை விரட்டவும், ஸ்பெயினை இணைக்கவும் கடினமாக உழைத்தனர்.
  • 1479ல் அரசரும் அரசியும் அதிகாரத்தைக் கைபற்றி, மன்னர் சபையில் இருந்த பிரபுகளை நீக்கியதன் மூலம் அரசர்களைக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார்.
  • ஸ்பெயின் தனி நாடாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
Answer:
போர்ச்சுக்கல் :

  • கடலாய்வின் முதலாவது தொடர் பயணங்களை போர்ச்சுக்கல் மேற்கொண்டது.
  • போர்ச்சுக்கல் அரசர் ஹென்றியின் முயற்சியால் மெடீரா மற்றும் அசோர் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவரது மாலுமிகள் எவர்டி தீவுகள் முனையைக் கண்டறிந்தனர்.
  • பார்தோலோமியோ டயஸ் என்பவர் ஆப்பிரிக்காவின் தென்முனை வரை சென்றார். இது கிழக்கு நோக்கி பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் “நன்னம்பிக்கை முனை” என்று அழைக்கப்பட்டது.
  • 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இதன் வழியே பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். வாஸ்கோடகாமாவின் இந்தியாவிற்கான புதிய கடல் வழி கண்டுபிடிப்பு ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
  • பெட்ரோ காப்ரல் பிரேசிலை கண்டுபிடித்து போர்ச்சுக்கல் காலனியாக்கினார். பின்னர் இந்தியாவில் கொச்சினில் வர்த்தகம் செய்து கண்ணனூரில் துறைமுகத்தையும் நிறுவினார்.

ஸ்பெயின்:

  • கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் ஆதரவுடன் பயணித்து இந்தியா என்று நம்பி அமெரிக்காவை கண்டு பிடித்தார்.
  • ஸ்பெயினின் ஹெர்னன் கார்ட்ஸ் என்பவர் ஸ்பெயினுக்காக மெக்சிகோவை கைப்பற்றினார்.
  • இவரே தென் அமெரிக்காவில் இன்கா அரசை வீழ்த்தி பெரு நாட்டை கைப்பற்றினார்.

முக்கியத்துவம் :

  • கடல் வழித்தடங்களை கண்டுபிடித்து காலனிகள் தோற்றுவித்த போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன் முயற்சிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் தூண்டு கோளாயிற்று.
  • ஐரோப்பிய கடல் கடந்த வாணிபம் பெரிதும் தழைக்கத் தொடங்கியது. குடியேற்ற ஆதிக்கமும் பேரரசு ஆதிக்கமும் தோன்றின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
Answer:

  • தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்தியவர்கள் பிராட்டஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
  • ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள் தேவாலயங்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஓர் ஊடகமாக செயல்படுவதை ஏற்றார்கள்.
  • ஆனால் தேவாலயங்களின் அதிகாரங்கள் பன்மடங்கு பெருகியதை மன்னர்களும் மக்களும் எதிர்க்க ஆதரித்தனர்.
  • பாவமன்னிப்பு வழங்க பணம் பெற்றது, வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது, தேவாலய
    பணிகளை பணத்துக்கு விற்பது போன்றவை பிராட்டஸ்டன்ட் வளர காரணமாயிற்று.

மார்டின் லூதரும் பிராட்டஸ்டன்ட் இயக்கமும் :

  • கிறிஸ்துவப் பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு சென்ற போது தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம் குறித்து வருந்தினார்.
  • ரோமானிய தேவாலயத்துக்கு எதிராக 95 குறிப்புகள் என்ற தலைப்பில் 95 புகார்களை எழுதி ஜெர்மனி விட்டன்பர்க்கில் உள்ள தேவாலயத்தின் கதவில் ஆணி அடித்து தொங்கவிட்டார்.
  • கடவுளின் மீது இருக்கும் ஒருவரது நம்பிக்கை மூலம்தான் இரட்சிப்பை அடைய முடியும் என்று கூறினார்.
  • மார்டின் லூதரின் முற்போக்கான கருத்துக்கள் பலரை ஈர்த்தன.
  • லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார்.
  • லூதரன் பிராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.
  • இதன் மூலம் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை மார்டின் லூதர் ஒருங்கிணைத்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பகுத்தறிவின் காலம் பற்றிய பொருள் மற்றும் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
2. உலக புறஎல்லை வரைபடத்தில் கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மெகல்லன் ஆகியோர் சென்ற கடல்வழித்தடங்களைக் குறிக்கவும்.
3. மறுமலர்ச்சி தொடர்பான வீடியோ பதிவுகளை மாணவர்கள் இணையத்தில் காணலாம்.
4. வட மற்றும் தென் அமெரிக்காவின் பூர்வகுடிகள் மீது ஐரோப்பியர்கள் நடத்திய இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள்/வீடியோ பதிவுகளை மாணவர்கள் காணலாம்.

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
…………. பெற்ற வெற்றியானது வெளிநாட்டு அமைப்புகளுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.
அ) பார்தோலோமியோ டயஸ்
ஆ) கொலம்பஸ்
இ) அமெரிக்கோ வெஸ்புகி
ஈ) மெகல்லன்
Answer:
ஆ) கொலம்பஸ்

Question 2.
“நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் ………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) பொக்காசியோ
ஈ) ரோஜர் பேக்கன்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ச்சியுற்ற ஆண்டு …………….
அ) 1543
ஆ) 1453
இ) 1345
ஈ) 1534
Answer:
ஆ) 1453

Question 4.
“தெய்வீக இன்பயியல்” என்ற நூலை எழுதியவர் ……………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) மாக்கியவல்லி
Answer:
அ) தாந்தே

Question 5.
100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவர்.
அ) ஜியோவனி பொக்காசியோ
ஆ) நிக்கோலோ மாக்கியவல்லி
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) வில்லியம் ஹார்வி
Answer:
அ) ஜியோவனி பொக்காசியோ

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 6.
“மறுமலர்ச்சி கால மனிதர்” என்று அழைக்கப்பட அனைத்து தகுதிகளையும் கொண்டு திகழ்ந்தவர்.
அ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஆ) லியானர்டோ டாவின்சி
இ) வில்லியம் ஹார்வி
ஈ) ரபேல்
Answer:
ஆ) லியானர்டோ டாவின்சி

Question 7.
சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றும் சூரிய மையக் கோட்பாட்டை அறிவித்த வானியல் நிபுணர் ……………………
அ) கலிலியோ கலிலி
ஆ) வில்லியம் ஹார்வி
இ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஈ) நியூட்டன்
Answer:
அ) கலிலியோ கலிலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 8.
“ஆங்கில இலக்கியத்தின் மூடிசூடா மன்னர்” ……
அ) பிரான்சிஸ் பேக்கன்
ஆ) வாஸ்கோடகாமா
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஈ) மாக்கியவல்லி
Answer:
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்

Question 9.
முதலாம் எலிசபெத் காலம் “ எலிசபெத் காலம்” என்று அழைக்கப்பட்ட ஆண்டுகள் …………………
அ) 1558-1603
ஆ) 1603-1658
இ) 1503-1558
ஈ) 1553-1608
Answer:
அ) 1558-1603

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 10.
கூற்று : இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்குப் பரவியது.
காரணம் : இத்தாலியர்கள் தாங்கள் ரோமானிய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாத்து வந்தனர்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் சரி
Answer:
ஈ) கூற்றும் காரணமும் சரி

Question 11.
கூற்று : நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவவில்லை .
காரணம் : ஆழம் அதிகம் இல்லாத நீர்ப்பகுதியில் செல்லக்கூடிய இலகு ரக காரவெல் கப்பல் கட்டமைப்பும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும்.
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்று சரி. காரணம் விளக்கவில்லை .
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று தவறு. காரணம் சரி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 12.
பொருத்துக

III
1 மோனலிசாஅ. ஜியோவனிடா வெர்ராசானோ
2 இரத்த ஒட்டம்ஆ. பிலிப்பைன்ஸ்
3 மெகல்லன்இ. இலியானர்டோ டாவின்சி
4 பிரான்ஸ் நாட்டுக்காக நிலப்பகுதிகளை ஆராய்ந்தவர்ஈ. வில்லியம் ஹார்வி


Answer:
இ) 3 4 2 1

Question 13.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
அ) போப்பின் ஆணை – 1493
ஆ) வாஸ்கோடகாமா – கோழிக்கோடு
இ) பெட்ரோ காப்ரல் – பிரேசில்
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்
Answer:
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 14.
இயேசு சங்கத்தை தோற்றுவித்தவர்
அ) போப் பத்தாம் லியோ
ஆ) ஜான் வைகிளிஃப்
இ) மார்டின் லூதர் .
ஈ) இக்னேஷியஸ் லயோலா
Answer:
ஈ) இக்னேஷியஸ் லயோலா

Question 15.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை (அல்லது) அறிக்கைகள்?
அறிக்கை 1 : தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அறிக்கை II : தேவாலயத்தின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி போட்டவர்கள் பிராட்ஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
அறிக்கை III : இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினை குழுக்களால் பாகம் உற்பத்தி முறை நன்றாக செயல்பட்டது.
அறிக்கை IV : உலகத்தின் பல புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக இத்தாலிய கடற்பயணியான ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது.
அ) I, II மற்றும் IV)
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) அனைத்தும் சரி
Answer:
அ) I, II மற்றும் IV

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

II. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் மாக்கியவல்லி கூறும் கருத்துக்கள் யாவை?
Answer:

  • ‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று மாக்கியவல்லி கூறுகிறார்.
  • எப்போது தமது செயல்பாடு தமக்கு எதிராக மாறக்கூடும் என்பது தெரியாது என்பதால் தனது வாக்கை ஒருவர் காப்பாற்ற முடியாது; அதனால் சொல்லவும் கூடாது என்கிறார்.
  • எப்போதும் நேர்மையாக இருப்பது என்பது மிகவும் அனுகூலமற்றது.
  • ஆனால் பக்திமானாக, உண்மையாக, மனிதநேயத்துடன், பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்ககுணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Question 2.
மைக்கேல் ஆஞ்சிலோ பற்றிய குறிப்பு தருக.
Answer:

  • மறுமலர்ச்சி காலத்தின் மிகப்பெரிய சிற்பி மைக்கேல் ஆஞ்சிலோ தாகம்
  • போப்புகளால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் இவரால் நவீனமயமானது.
  • புகழ் பெற்ற பியட்டா என்ற கன்னி மரியாளின் சிலையையும் அவர் வடித்துள்ளார்.
  • கிறிஸ்து உயிரிழந்ததை அடுத்து கன்னி மரியாள் அவரது உடலுக்கு அருகே சோகமே வடிவாக வைக்கப்பட்டிருக்கும் இந்த சிலை (கெர்ரோவிலிருந்து கொண்டுவரப்பட்ட) ஒரே பளிங்குக் கல்லிலானது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
எதிர் சீர்திருத்த இயக்கம் என்பது என்ன?
Answer:

  • விசுவாசமான ரோமானிய தேவாலய ஆதரவாளர்கள் தேவாலயத்துக்குள் நடந்த சீர்கேடுகளைக் களைய சீர்திருத்தங்களை உள்ளிருந்தபடியே நடத்தினார்கள்.
  • இந்த சீர்திருத்த இயக்கம் எதிர் சீர்திருத்த இயக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இது போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக உறுதியாக களம் கண்டது.

Question 4.
குறிப்பு தருக – ஜான் வைகிளிஃப்
Answer:

  • பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளர் ஜான் வைகிரிஃப்.
  • சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டார். –
  • அவர் தனது வாழ்நாளில் ரோமானிய தேவாலயத்தின் கோபத்தில் இருந்து தப்பித்தார்.
  • ஆனால் இவர் மறைந்து (1415) 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடலைத் தோண்டி எடுத்து அவரது எலும்புகளை எரியூட்டுமாறு கிறித்தவ திருச்சபை ஆணையிட்டது. வைகிளிஃபின் எலும்புகள் எரியூட்டப்பட்டாலும் அவரது கருத்துகளை ஒடுக்க முடியவில்லை .

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஏழு திருவருட் சாதனங்கள் யாவை?
Answer:

  • ஞானஸ்நானம்
  • உறுதி பூசுதல்
  • திருவிருந்து
  • பாவமன்னிப்பு
  • நோயில் பூசுதல்
  • குருத்துவ துறவறம்
  • திருமணம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • நவீன கால தொடக்கத்தின் அடையாளமாக மறுமலர்ச்சி விளங்குகிறது.
  • கேட்டு அறியும் உணர்வு அதனால் விளைந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின.
  • திசை காட்டும் கருவி மற்றும் வான இயல் குறித்த புதிய நம்பிக்கை புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவின.
  • மக்களின் அரசியல் பொருளாதார வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் மிகவும் ஆழமானதாகும்.
  • பகுத்தறியும் உணர்வினால் சமயச் சீர்த்திருத்த இயக்கம் தோன்றியது. சமயம் குறித்த மக்களின் கருத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
வாஸ்கோடகாமாவின் கடல்வழிப் பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • வாஸ்கோடகாமா கிழக்குப் பகுதி நோக்கி தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
  • லிஸ்பனில் இருந்து நான்கு கப்பல்களில் பயணம் மேற்கொண்ட அவர் மொசாம்பிக் தீவை சென்றடைந்தார்.
  • பின்னர் அவர் மேலும் தெற்கே பயணம் செய்து கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள ‘கப்பட் (கப்பக்கடவு) என்ற கடற்கரையை அடைந்தார்.
  • இந்தியாவின் ஒரு பகுதியை அடைந்த அவர் இந்தியாவுடனான நேரடி வர்த்தக வாய்ப்புகளை திறந்து விட்டார்.
  • இந்தப் பயணம் இந்தியாவின் சில பகுதிகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உதவியது.
  • கோவா அவ்வாறான ஒரு பகுதியாகும்.

Question 3.
வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • மத்தியத் தரைக்கடல் வர்த்தகம் இத்தாலிய நகரங்களால் கைப்பற்றப்பட்டது.
  • இத்தாலிய நகரங்கள் மற்றும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள வர்த்தக அமைப்பான ஹன்சீடிக்லீக் எனும் அமைப்பை சேர்ந்த வர்த்தகர்கள் இடையே வர்த்தகம் செழிப்படைந்து மேம்பட்டது.
  • வெனிஸின் டூகா நாணயமும் பிளாரன்ஸின் ப்ளோரின் நாணயமும் அறிமுகம் செய்யப்பட்டது.
  • வர்த்தகம், கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் சுரங்கத்தொழில் மூலமாக ஈட்டப்பட்ட பெரும் தொகை சேர்ந்தது.
  • போர் சாதனங்களுக்கான தேவையும் அதிகம் வரி வசூலிக்கக்கூடிய சொத்தை உருவாக்கும் வகையில் வணிகத்தை மேம்படுத்த புதிய அரசர்கள் கொடுத்த ஊக்கம் ஆகியவை வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்திற்கு காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தகப் புரட்சியின் நேர்மறை விளைவுகள் யாவை?
Answer:

  • நடுத்தர வர்த்தகத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது, வர்த்தகப் புரட்சியின் இதர முக்கியமான முடிவுகளாகும்.
  • வணிகர்கள், வங்கியாளர்கள், கப்பல் முதலாளிகள், முதன்மை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை தொழில் முனைவோர் போன்ற பலரும் இந்த நடுத்தர வகுப்பு நிலையில் உள்ளடங்கினார்கள்.
  • அதிகரிக்கும் வளமையின் விளைவாகவும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக அரசரை ஆதரிப்பதன் விளைவாகவும் அவர்கள் அதிக அதிகாரம் பெற்றனர்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சிக்கான காரணங்களை விவரி?
Answer:

  • சிலுவைப் போர்களின் போது வெனிஸ், பிளாரன்ஸ், ஜெனோவா, லிஸ்பன், பாரிஸ், இலண்டன், ஆன்ட்வெர்ப், ஹாம்பர்க் மற்றும் நூரெம்பர்க் ஆகிய சுதந்திரமான, வர்த்தக நகரங்கள் உருவானது.
  • பிரான்ஸின் பாரிஸிலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டிலும் இத்தாலியின் போலோக்னோவிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டதும் மறுமலர்ச்சியின் பிறப்புக்குத் தேவையான தொடக்க நிலைமைகளை உருவாக்கின.
  • ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த ஆங்கிலப் பேராசிரியரான ரோஜர் பேக்கன் “நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என்றழைக்கப்படுவார்.
  • மனிதகுலமானது சமயமரபு மற்றும் அதிகாரத்தினால் ஆட்சி செய்யப்படாமல் காரண காரியங்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.
  • அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய அறிஞர்கள் பைசாண்டியத்தைச் சேர்ந்த கான்ஸ்டான்டிநோபிள் மற்றும் இதர நகரங்களுக்கு கையெழுத்துப் பிரதிகளைத் தேடி பயணம் மேற்கொண்டனர்.
  • 1413க்கும் 1423க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஜியோவனி அவுரிஸ்பா என்ற அறிஞர் மட்டும், சோபோகில்ஸ், யூரிபைட்ஸ், தூசிடைட்ஸ் ஆகியோரின் படைப்புகள் உள்பட 250 கையெழுத்துப் பிரதி நூல்களை இத்தாலிக்கு கொண்டு வந்தார்.
  • 1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டி நோபிளின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய செவ்வியல் அறிஞர்கள் மேற்கத்திய ஐரோப்பாவிற்கு சென்றதால் செவ்வியல் படைப்புகளை கற்கும் நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றன.
  • சீனாவில் காகிதம் தோன்றியிருந்தாலும், ஜெர்மனிக்கு காகிதம் பதினான்காம் நூற்றாண்டில்தான் அறிமுகமானது.
  •  அதன் பிறகு தான் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் நகரும் தட்டச்சு மற்றும் அச்சகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அச்சுப்பணிக்குப் பிறகே உலகின் அறிவு சார்ந்த வாழ்க்கை மேலும் உத்வேகம் பெற்று அறிவ விரைவாகப் பரவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் யாவை?
Answer:

  • ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தாலியர்களுடன் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
  • அந்தப் பொருட்களை வாங்கிய இத்தாலியர்கள் அவற்றை ஐரோப்பாவில் வர்த்தகம் செய்தனர். குறிப்பாக போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பின.
  • அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவை புதிய கடல்வழித் தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கம் தந்தன.
  • இந்த முடிவானப் பொருளாதாரக் காரணம்தான் புதிய வர்த்தக வழித்தடங்களை கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது.
  • கிழக்கத்திய நாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அதிக லாபம் ஈட்டவும் கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விரும்பின.
  • எனவே அவர்கள் கடல் வழி ஆய்வில் முதலீடுகளைச் செய்ய விரும்பினர்.
  • ‘முட்டாள்கள் தேர்தலில் போட்டியிடட்டும் சாதித்துக்காட்ட விரும்புபவர்கள் புது இடங்களுக்குச் சென்று ஆராயட்டும்’ என்ற அந்தக் காலகட்டத்தின் சிந்தனைக்கு ஏற்ப பணமும் புகழும் கிடைக்க வாய்ப்பாக இருந்த சாதனை முயற்சிக்கு பலர் தூண்டப்பட்டனர்.
  • சமயத்தை பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் புதிய நிலப்பரப்புகளை கண்டுபிடிக்க ஊக்கம் தந்தது. –
  • ஆரம்ப நாட்களில் இது முதன்மைக் காரணமாக இருக்கவில்லை .
  • அந்தக் காலத்தில் சீர்திருத்த இயக்கங்களின் கருத்துகளுடன் கடவுளைப் பற்றிய வார்த்தை பரவி முக்கியத்துவம் பெற்றது.
  • மறுமலர்ச்சியை அடுத்து தொழில்நுட்ப மேம்பாடு பல துறைகளில் ஏற்பட்டது.
  • அதில் ஒன்றாக வரைபடங்களை உருவாக்கும் “கார்ட்டோகிராபி” என்ற துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது.
  • நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவியது.
  • துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தியதனால் கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
  • ஐரோப்பாவில் மாலுமிகளுக்கான “திசைகாட்டி கருவி” (Mariner’s Compass) கண்டுபிடிக்கப்பட்டது. இது கடல் ஆய்வுக்கு மேலும் உதவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
சமய சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள் யாவை?
Answer:
ஐரோப்பிய நாடுகளில் பிரிவுகள்:

  • நாட்டின் சமயவழிபாடுகளில் பிரிவுகளை ஏற்படுத்தியது.
  • வடஜெர்மனி லூதரன் சபையாகவும் தென் ஜெர்மனி கத்தோலிக்கத்தை தொடர்வதையும் கொண்டன.
  • இங்கிலாந்து பிராட்டஸ்டன்ட் ஆகவும் ஸ்காட்லாந்தும் அயர்லாந்து மக்களும் தீவிர கத்தோலிக்க ஆதரவாளர்களாக மாறினர்.
  • கல்வியறிவு:
  • சீர்திருத்த இயக்கத்தின் பல்வேறு சமய போதனைகளை அச்சிட அச்சகம் உதவியது. பைபிளை படித்து புரிந்து கொள்ள மக்களுக்கு ஊக்கம் தரப்பட்டது.
  • உள்ளூர் மொழியை போதனைகளுக்குப் பயன்படுத்தியதும் பைபிளை வேறு வட்டார மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ததும் சாதாரண மக்களைச் சென்றடைவதற்கான புதிய வழிகளைக் காட்டின.
  • பெண்களின் நிலை :
  • தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
  • இதனால் வீட்டிலும் தேவாலயங்களிலும் பெண்களின் நிலை வலுப்பெற்றது.
  • பெண்கள் பிராட்டஸ்டன்ட் வழிமுறையில் குழந்தைகளை வளர்க்கவும் ஊக்கம் பெற்றனர்.
  • இதனால் பெண்களின் கல்வியறிவு மேம்பட்டது.

அரசர்களின் அதிகாரம்:
எட்டாம் ஹென்றி போன்ற சில அரசர்களுக்கு, தேவாலயம் மற்றும் அரசு இரண்டுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த இந்த சீர்திருத்த இயக்கம் அதிக அதிகாரங்களை வழங்கியது.

காலனிகளுக்கான போட்டி:
கத்தோலிக்கர்களும் பிராட்டஸ்டன்ட்களும் உலகின் இதர பகுதிகளில் வாழும் மக்களை தத்தமது பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய விரும்பினார்கள்.

கிறித்தவ சமயத்தின் பரவல்:
காலனிகளில் தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கடற்பயணிகளை உலகின் பல பகுதிகளுக்கு கிறித்தவ இயக்கத் தொண்டர்கள் என்ற போர்வையில் அனுப்பியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தக புரட்சியின் முக்கிய விளைவுகள் யாவை?
Answer:

  • வங்கித்துறை வளர்ச்சி என்பது வர்த்தகப் புரட்சிக்கான முக்கிய காரணியாகும்.
  • சுரங்கத்தொழில், உருக்குதல் தொழில் ஆகிய புதிய தொழில்கள் வளர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் மேலும் ஊக்கம் பெற்றன.
  • வணிக அமைப்புகளிலும் மாற்றம் வந்தது.
  • இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினைக் குழுக்களால் உருவாக்கப்பட்ட உற்பத்தி முறை செயலிழந்தது.
  • பதினேழாம் நூற்றாண்டில் நெறிப்படுத்தப்பட்ட கம்பெனி என்பது கூட்டுப் பங்கு நிறுவனங்களாக புதிய வகையில் உருமாற்றம் பெற்றது.
  • பிந்தைய கட்டங்களில், வர்த்தகப் புரட்சியின் ஒரு பகுதியாக வணிகவியற்கொள்கை என்றழைக்கப்பட்ட புதிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் ஏற்கப்பட்டன.
  • நடுத்தர வர்க்கத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது.
  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
  • பூர்வீக அமெரிக்கர்களை வேலை வாங்குவது கடினமாக இருந்ததால் அவர்களை அடிமை ஆக்கும் முயற்சி தோல்வி கண்டது.
  • இறுதியாக, வர்த்தகப் புரட்சி தொழிற்புரட்சிக்கு வழி அமைத்தது.