Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.6 யானை டாக்டர் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.6 யானை டாக்டர்
நெடுவினாக்கள்
Question 1.
‘யானை டாக்டர்’ கதை வானலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
யானைகளின் பண்பும்
யானைகள், தம் இனத்தோடு சேர்ந்து கூட்டமாக வாழும். இவை, அதிக நினைவாற்றல் கொண்டவை. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் என்னும் மூன்று சிற்றின யானைகளே, உலகில் காணப்படுகின்றன. இவை, ஏறத்தாழ எழுபதாண்டுகள் உயிர் வாழும்.
காட்டின் பயன்கள் :
யானைகள், ஓர் அற்புதமான படைப்பு. என்றைக்கேனும் தமிழ்நாட்டில் யானை இல்லாமல் போனால் அதற்கப்பன் நம் பண்பாட்டுக்கே அர்த்தமில்லாமல் போகும் என்பது, யானை மருத்துவரின் துணிவு. நாட்டுவளம் செழிக்கக் காட்டு விலங்குகள் தேவை. காட்டுயிரிகளால் காடுகளில் பல அரியவகை மரம், செடி, கொடிகள் தழைத்து வளர்கின்றன. பலவகைகளில் நற்பயனளிக்கும் காடுகளை, மக்கள் பாதுகாக்க வேண்டும்.
மனிதனின் விதைப்பால் விலங்குகள் அறுவடை செய்கின்றன :
மனிதனின் கீழ்மையான செயல்களால் யானைகளின் மரணங்கள் நிகழ்கின்றன. சுற்றுலா என்னும் பெயரில் காட்டுக்குள் புகுவோர், படித்தவர்கள்கூடக் குடித்துவிட்டுக் குப்பிகளை எறிகின்றனர். நெகிழிப் பொருள்களை வீசிவிட்டு வருகின்றனர். மென்மையான பாதத்தை உடைய யானைகள், உடைந்த குப்பிகளின்மேல் கால்பதித்து, உடைந்த புட்டிகள் கால்களுக்குள் புதைவதால், கால் வீங்கிச் சீழ் பிடித்து இறக்கின்றன.
யானை வைத்தியம் :
பழகிய யானைகள், அசையாமலிருந்து வைத்தியம் செய்து கொள்ளும். கூடி வாழும் இயல்புடைய யானைகள், இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்தே இருக்கும் என்பதை, மருத்துவர் சுட்டுவதால் அறியமுடிகிறது. யானைகள், முகாமில் துதிக்கைகளை உயர்த்தி ஒலி எழுப்பி வரவேற்பது, அவை நன்றி மறவாதவை என்பதை உணர்த்தும். குட்டியானை ஒன்று 300 கிலோமீட்டர் கடந்து தேடி வந்து மருத்துவம் செய்து கொண்டதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. சிறுதகவல்களைக் கூட யானை மறப்பதில்லை. வன உயிர்களின் பண்பு, பாராட்டத்தக்க செயல்பாடுகளை உடையன. இப்படிப்பட்ட கதைகளை, வரலாறுகளைப் படித்த பின்னராவது மனிதன் மரங்களை வெட்டுவது, விலங்குகள் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பது, அவற்றின் வாழ்விடங்களை மாசுபடுத்துவது என்னும் செயல்களைக் கைவிட வேண்டும். நாம் நலமாக வாழ விரும்புவதுபோலப் பிற உயிரினங்களையும் மகிழ்ச்சியாக வாழவிட வேண்டும். உலகின் நல வாழ்வுக்கு விலங்குகளின் வாழ்வும் இன்றியமையாதது என்பதை, யானை டாக்டர் கதை வாயிலாக அறியமுடிகிறது.
கூடுதல் வினா
Question 2.
‘யானை டாக்டர்’ குறும் புதினக் கதையைப் பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக
Answer:
யானை டாக்டர் :
முதுமலையில் யானை ஒன்று கால் வீங்கி அலைவதாக அறிந்து, அதைத்தேன் யானை டாக்டரும் வனத்துறை அதிகாரி ஜெயமோகனும் வனக்காவலருடன் ஜீப்பில் சென்றனர். காட்டுக் குறும்பர் இனமக்கள் அந்த யானையின் இருப்பிடத்தை அறிந்து வைத்திருந்ததால், அவர்களையும் துணைக்கு ஏற்றிக்கொண்டு பயணம் செய்தனர். நெடுந்தூரம் சென்றதும் ஜீப்பை நிறுத்திவிட்டு மூங்கில் காட்டில் தரையின் வேர் முடிச்சுகளை மிதித்தேறி நடந்தனர். ஓரிடத்தில் யானைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்ட னர்.
யானை நோயுறுதல் :
நோய் பாதிப்பு உள்ள யானையைக் கண்டறிந்து, அதற்கு மருத்துவம் செய்ய, மயக்கம் தரும் மருந்தை உள்ளடக்கிய தோட்டாவைத் துப்பாக்கிக் கருவியில் பொருத்திக்கொண்டு, டாக்டர்மட்டும் தனித்துச் செல்கிறார். காட்டிற்கு வந்த எவனோ ஒருவன், குடித்துவிட்டு வீசி எறிந்த மதுக்குப்பி, காலில் தைத்ததால் பாதம் வீங்கி நடக்கமுடியாமல் தத்தளித்துக் கொண்டி தந்த யானையை மருத்துவர் கண்டுபிடிக்கிறார்.
யானைக் கூட்டத்தின் செயல் :
நோயுற்ற யானையை நெருங்கியபோது மற்ற யானைகள் பிளிறி அச்சுறுத்தின; எச்சரிக்கை செய்தன. இது இயற்கை என்பதை அறிந்திருந்தாலும், டாக்டர் கே, நோயுற்ற யானையை நெருங்கிய போது, வழி நடத்திய யானை பின்வாங்க, மற்றவை மூங்கில் காட்டுக்குள் மறைந்தன. குடும்பமாக நீண்ட காலம் வாழும் வலிமையான விலங்கான யானை, அதி ஞாபகசக்தி உடையது.
யானை டாக்டர் சேவை :
மற்ற கால்களைவிடப் பொதாக வீங்கிய பின்னங்காலை இழுத்து இழுத்து நடந்த யானையின் அருகில் சென்றதும், டாக்டர் மயக்க மருந்து தோட்டாவால் சுட்டார். சிறிதுசிறிதாகக் கால் மடித்து, மயக்க நிலையில் யானை பக்கவாட்டில் அசைவின்றி வீழ்ந்தது. மருத்துவர் தம் சேவையைத் தொடங்கி, அதன் காலில் தைத்திருந்த கண்ணாடித் குப்பியைப் பிடுங்கி எறிந்தார். சீழ் கட்டிய பகுதியைச் சிறுகோடரிக் கருவியால் வெட்டி, ஆழப்பதிந்த குப்பியை நீக்கினார். தலையணை அளவுப் பஞ்சில் மருந்தை நனைத்துக் காலில் திணித்தார்.
கால் தோலில் எவர்சில்வர் கிளிப்பை மாட்டி, துணியைச் சுற்றிக்கட்டி, சேற்றை வாரி அதன்மேல் பூசினால் வேலை முடிந்ததும் எல்லாரும் அங்கிருந்து நீங்கினர். மறைந்திருந்த யானைகள் வெளிவந்து அதை சூழ்ந்து நின்று பிளிறின. நன்றி சொல்வதுபோல் துதிக்கைகளை ஆட்டின. ஒரு குட்டிமட்டும் மஞ் சணத்தி மரத்தடியில் நின்று, மருத்துவரைப் பார்த்துக் கொண்டே இருந்தது.
வியப்பான வரவேற்பு :
யானைகளைச் சோதித்து அறிக்கை தயாரிக்க மருத்துவர் கே. மறுமுறை வந்தபோது, முகாமிலிருந்த 48 யானைகள் துதிக்கை உயர்த்தி அவரை வரவேற்றன. அவர் அவற்றுடன் கொஞ்சிக் குலவியபடி வேலைகளில் மூழ்கினார். வனத்துறை அதிகாரி, இரவு அவருடனேயே தங்கினார். அரைமணி நேரத்தில் சமைத்து முடித்து, அதிகாரியை விருந்தினராக உபசரித்தாராம் மருத்துவர். அசதியில் இரவு பத்துமணிக்கு அதிகாரி படுத்து உறங்கிவிட்டார்.
குட்டி யானைக்கு மருத்துவம் :
அறையில் வெளிச்சம் இருந்ததால் கண் விழித்த வனத்துறை அதிகாரி, டாக்டர் கம்பளிச் சட்டை அணிந்து புறப்படுவதைக் கண்டார். “வெளியில் யானை வாசம் அடிக்குது” எனக் கூறி, இருளில் டார்ச்சுடன் டாக்டர் புறப்பட, அதிகாரியும் உடன் சென்றார். இரண்டுவயதான குட்டியானை தனியே வந்திருப்பதை அறிந்த மருத்துவர், வெளிச்சம் அடிக்காமல் இருளிலேயே நடந்தார். யானைக்குட்டி துதிக்கை தூக்கி மோப்பம் பிடித்தபோது, மருத்துவர் குரல் கேட்டு அருகில் நெருங்கி வந்து, ஜெர்ஸி பசு கத்தும் ஒலியில் பிளிறியது. குட்டியானையின் செயல்கள் மருத்துவரை வரவேற்பதுபோல் இருந்ததாம்.
தேடி வந்தது குட்டியானை :
டாக்டர் சொன்னபடி வனத்துறை அதிகாரி மருத்துவப் பெட்டியை எடுத்து வந்தார். குட்டியின் வாயில் ஊசிபோடவும் அது தளர்ந்து சாய்ந்தது. அதன் கால் நுனியில் மதுக்குப்பி குத்தி, வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. அதைப் பிடுங்கியதும் டாக்டரின் கை ரத்தத்தால் நனைந்தது. கையால் தடவிக் கண்ணாடிப் பிசிர் எதுவும் மீதம் ஒட்டிக்கொண்டு இல்லாததை மருத்துவர் உணர்ந்தபின், பஞ்சில் மருந்தை நனைத்து உள்ளே செலுத்திக் கட்டினார்.
“ஒருமணி நேரத்தில் எழுந்து காலையில் முதுமலைக்குப் போய்விடும்” என்று, ருத்துவர் கூறியதைக் கேட்டு, வனத்துறை அதிகாரி வியந்தார். அந்தக் குட்டி யானை தனக்கும் பொருத்துவம் செய்துகொள்ள, முந்நூறு கிலோ மீட்டர் தூரம் தேடி வந்துள்ளது என்ற தகவலைக் கூறித் திகைக்க வைத்தார் டாக்டர். சிறு தகவலைக்கூட யானை மறப்பதில்லை என்பது வியப்பல்லவா? இதைப் படிக்கும்போது வன உயிரினங்களின் பண்பு நமக்கு வியப்பைத் தருகிறது.
யானைகளின் நன்றி உணர்வு :
பேசிக்கொண்டே வீட்டை அடைந்தபோது, இருளில் ஏதோ அசைவது தெரிந்தது. உற்றுப் பார்த்தபோது, யானைக்கூட்டம். அவை காதுகளை அசைத்துக்கொண்டு நன்றன. அங்கே கால் ஊனமான யானையை, அதன் மெல்லிய கோணல் நடையால் அடையாளம் காணமுடிந்தது. “வந்து கூட்டிக்கொண்டு போய்விடும் வா” என்றார் டாக்டர். இருபதுக்கு மேற்பட்ட யானைகள் பிளிறின. துதிக்கைகளை வீசி மீண்டும் மீண்டும் பிளிறின. இக்காட்சியைக் கண்ட வனத்துறை அதிகாரி, உடல் சிலிர்க்க, கண் பொங்கிப் பெருக நின்றார்.