Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

11th History Guide தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக இணைக்கப் படவில்லை
அ) மூன்றாம் கோவிந்தன் – வாதாபி
ஆ) ரவிகீர்த்தி – இரண்டாம் புலிகேசி
இ) விஷயம் – ராஷ்ட்டிரகூடர்
ஈ) நம்மாழ்வார் – குருகூர்
Asnwer:
அ) மூன்றாம் கோவிந்தன் – வாதாபி

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
தேர்ந்தெடுத்துப் பொருத்துக .
1) சிம்மவிஷ்ணு – சாளுக்கியா
2) முதலாம் ஜெயசிம்மன் – பல்லவர்கள்
3) முதலாம் ஆதித்தன் – கப்பல் தளம்
4) மாமல்லபுரம் – சோழ அரசன்
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 4, 3
ஈ) 4,3,2,1
Answer:
இ) 2, 1, 4, 3

Question 3.
காம்போஜம் என்பது நவீன ………….
அ) அஸ்ஸாம்
ஆ) சுமத்ரா
இ) ஆனம்
ஈ) கம்போடியா
Answer:
ஈ) கம்போடியா

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 4.
……………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு சமய மையம். (மார்ச் 2019)
அ) சரவணபெலகொலா
ஆ) மதுரை
இ) காஞ்சி
ஈ) கழுகுமலை
Answer:
அ) சரவணபெலகொலா

Question 5.
அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை
நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு உள்ளது?
அ) ஐஹோல்
ஆ) வாதாபி
இ) மேகுடி
ஈ) பட்டாடக்கல்
Answer:
ஈ) பட்டாடக்கல்

Question 6.
அயல்நாட்டு வணிகர்கள் ………….. என்று அறியப்பட்டனர்.
அ) பட்டணசாமி
ஆ) நானாதேசி
இ) விதேசி .
ஈ) தேசி
Answer:
ஆ) நானாதேசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 7.
ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு …
அ) அத்வைதம்
ஆ) விசிஷ்டாத்வைதம்
இ) சைவசித்தாந்தம்
ஈ) வேதாந்தம்
விடை :
ஈ) வேதாந்தம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
கூற்று (1):முதலாம் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமண சமயத்தை சேர்ந்தவனாக இருந்தான்?
காரணம் (2) :திருநாவுக்கரசர் என்ற சைவப் பெரியாரால் அவன் சைவ சமயத்திற்கு மாற்றப் பட்டான்.
(i) கூற்றும் சரி, காரம் சரி
(ii) கூற்று சரி. காரணம் தவறு
(iii) கூற்றும் தவறு. காரணம் சரி
(iv) கூற்றும் காரணமும் சரி. கூற்றுக்கு காரணம் சரியான விளக்கமில்லை
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
ஈ) (iv)

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
ஐஹொல் கல்வெட்டை எழுதியவர் ……..
அ) சீத்தர்
ஆ) ரவகீர்த்தி
இ) மெய்கீர்த்தி
ஈ) முதலாம் புலிகேசி
Answer:
ஆ) ரவகீர்த்தி

Question 3.
ஆழ்வார்களின் பாடல்கள் …………….. எனப்பட்டது?
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
ஈ) பன்னிரு திருமுறை
Answer:
இ) நாலாயிரத்திவ்ய பிரபந்தம்

Question 4.
பல்லவர் கால மந்த விலாசப்பிரகசனம்’ என்ற நூலை எழுதியவர் ………………..
அ) முதலாம் மகேந்திரன்
ஆ) சிம்ம விஷ்ணு
இ) முதலாம் பரமேஸ்வரவர்மன்
ஈ) முதலாம் நந்திவரிமன்
Answer:
அ) முதலாம் மகேந்திரன்

Question 5.
“பெரிய புராணம்” என்ற நூலை எழுதியவர்
அ) அப்பர்
ஆ) சேக்கிழார்
இ) மாணிக்கவாசகர்
ஈ) சுந்தரர்
Answer:
ஆ) சேக்கிழார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 6.
களக்பிரர்களை அழித்த பல்லவமன்னர்
அ) விஷ்ணு கோபன்
ஆ) சிம்ம விஷ்ணு
இ) முதலாம் மகேந்திரன்
ஈ) முதலாம் நந்திவர்மன்
Answer:
ஆ) சிம்ம விஷ்ணு

Question 7.
யுவான் – சுவாங் காஞ்சிக்கு வருகைபுரிந்தபோது இருந்த பல்லவ மன்னன் ………
அ) முதலாம் மகேந்திர வர்மன்
ஆ) முதலாம் நரசிம்ம வர்மன்
இ) ராஜசிம்மன்
ஈ) இரண்டாம் புல்கேசி
Answer:
ஆ) முதலாம் நரசிம்ம வர்மன்

Question 8.
மாணிக்கவாசிகர் இயற்றிய நூல் …………..
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) பெரிய புராணம்
ஈ) வேதாந்தம்
Answer:
ஆ) திருவாசகம்

Question 9.
தண்டி எழுதிய புகழ்பெற்ற சமஸ்கிருத இயக்கம் ……
அ) தசகுமாரசரிதம்
ஆ) மந்தவிலாசம்
இ) காவியதர்சா
ஈ) தேவாரம்
Answer:
அ) தசகுமாரசரிதம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 10.
எல்லோரா குகைகளை உலக பாரம்பரியமிக்க சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு …………
அ) 1953
ஆ) 1963
இ) 1937
ஈ) 1983
Answer:
ஈ) 1983

Question 11.
மாமல்லபுரக்கோயிலைக் கட்டியவர் ……………………….
அ) ராஜசிம்மன்
ஆ) ஜெயசிம்மன்
இ) சிம்மவிஷ்ணு
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
அ) ராஜசிம்மன்

Question 12.
ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர் …………….
அ) ஸ்ரீரங்கம்
ஆ) ஸ்ரீபெரும்புதூர்
இ) ஸ்ரீபுரம்
ஈ) ஸ்ரீவைகண்டம்
Answer:
ஆ) ஸ்ரீபெரும்புதூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 13.
ஆழ்வார்களில் சிறந்தவர் …………..
அ) பெரியாழ்வார்
ஆ)பேயாழ்வார்
இ) நம்ம
ஈ) நாதமுனி
Answer:
இ) நம்ம

II. சுருக்கமான விடையளி

Question 1.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன ?
Answer:

  • பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
  • முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன
  • பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜித வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
  • போரில் பல்லவர் வெற்றிபெற்றார்
  • சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றி பெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
ஐஹோல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.
Answer:

  • ஐஹொலே கல்வெட்டு சாளுக்கிய மரபின் ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசியின் ஆட்சிகாலத்தைப் பற்றி விவரமாக கூறுகிறது.
  • இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவர் ரவி கீர்த்தி என்பவர் ஐஹோல் கல்வெட்டைத் தொகுத்தார்.
  • இரண்டாம் புலிகேசியின் ஐ ஹொல் கல்வெட்டின்படி ஹர்சரை புலிகேசி முறியடித்தார் என்பதை அறிகிறோம்.

Question 3.
சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • கவிராஜமார்க்க்ம் , பம்ப-பாரதம், விக்ரமாஜன விஜயம் ஆகியவை சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கண நூல்களாகும்.
  • இவற்றின் மூலம் சாளுக்கியரின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

Question 4.
அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
Answer:

  • ஸ்ரீராமானுஜர், திருரங்கம் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு , கோவிலையும், மடத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
  • ராமானுஜர் கோவில் சடங்குகளை மாற்றி அமைத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி.
  • வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக்கொண்டார்.
  • ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடம் பக்தி கோட்பாட்டை பரப்புவதில் ஆர்வம் கொண்டார்.
  • கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார். இவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய மதமாகி வைணவத்தை மாற்றினார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
பல்லவர்களின் தோற்றம் பற்றி கூறுக.
Answer:

  • பல்லவர்களின் தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொன்றுமையில்லை.
  • தொடக்ககால அறிஞர்கள் சிலர் பார்த்தியர் எனும் அரச மரபின் மற்றொரு பெயரான பஹல்வ’ என்ற சொல்லின் திரிபே பல்லவ ஆகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
  • தக்காணத்தில் ஆட்சி புரிந்த வாகாடகர்கள் என்ற பிராமண அரச குலத்தின் ஒரு பிரிவினரே பல்லர்கள் என்ற கருத்து நிலவுகிறது.
  • இருப்பினும் பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தே அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
கூரம் செப்பும் பட்டயம் கூறும் செய்தி யாது?
Answer:

  • கூரம் செப்புப் பட்டயம் நரசிம்மவர்மனின் போர் வெற்றிகள் பற்றிக் கூறுகின்றது.
  • சோழர்கள், சேரர்கள், களப்பிரர்கள், பாண்டியர்களை மீண்டும் மீண்டும் தோற்கடித்துள்ளதை பற்றி குறிப்பிடுகின்றது.
  • பரியாலா, மணிமங்கலம், சுரபாரா போர்களில் வெற்றிச் சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் புலிகேசியின் முதுகில் பொறித்து பறமுதுகிட்டு ஓடச் செய்தார் எனக் கூறுகிறது.
  • குடமுனி அரக்கன் வாதாபியை அழித்தது போல் வாதாபி நகரை அழித்தார் என்ற செய்தியைக் கூறுகின்றது.

Question 3.
‘உருக்காட்டுக் கோட்டம்’ செப்புப் பட்டயம் குறிப்பு தருக?
Answer:

  • இப்பட்டயம் 1879-ல் புதுச்சேரிக்கு அருகே ‘உருக்காட்டுக் கோட்டம்’ எனும் இடத்தில் கண்டறியப்பட்டது.
  • இங்கு லிங்கம், நந்தி பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில், பதினோறு செப்புப் பட்டயங்கள் கோர்க்கப்பட்டுள்ளன.
  • இதில் அரசன் நந்திவர்மன் 22 ஆண்டில் மானியமாக வழங்கிய கிராமம் குறித்த செய்திகளை இது கூறுகின்றது.
  • அரசரை சமஸ்கிருத மொழியில் புகழ்ந்து, மானிய விவரங்களை தமிழில் கூறி சமஸ்கிருத செய்யுளோடு முடிகிறது.

Question 4.
பல்லவப் படைகள் பற்றி குறிப்பு தருக.
Answer:

  • அரசர் நிலையான படையொன்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தார்.
  • படைகள் காலாட்படை, குதிரைப்படை, சிறிய அளவிலான யானைப்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தன.
  • தேர்ப்படைகளால் பயனுள்ள வகையில் செயல்பட இயலவில்லை .
  • பல்லவர்களிடம் கப்பல்படையும் இருந்தது. அவர்கள் மாமல்லபுரத்திலும் நாகப்பட்டினத்திலும் கப்பல் தளங்களைக் கட்டினார்.
  • இருந்த போதிலும் பின்வந்த சோழர்களின் கப்பற்படையை வலிமையோடு ஒப்பிட்டால் பல்லவர்களின் கப்பற்படை சிறியதேயாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

III. சிறுகுறிப்பு வரைக :

Question 1.
பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.
Answer:

  • பல்லவர்கால அரசில் நிர்வாகப் பிரிவின் தலைவர் அரசர் ஆவார்.
  • அரசருக்கு உதவ ‘மந்திரி மண்டல என்ற அமைச்சர் குழு இருந்தது.
  • மாநில ஆளுநர்களுக்கு அமைச்சர் குழு ஆலோசனை வழங்கியது.
  • கிராமங்களில் கிராமமன்றங்கள் நிர்வாகம் செய்தன.
  • ரகஸ்யதிகிரா, கொடுக்காபிள்ளை , கோச அதீயஷா, தர்மாதிகாரி போன்றவர்கள் நிர்வாகத்தினை நடத்தும் மற்ற அதிகாரிகளாவார்.
  • மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர்.

Question 2.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக் கோயில்.
Answer:

  • எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற கோவில் கைலாசர் கோவில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
  • மூலக்கோவில், நுழைவுவாயில், நந்திமண்டபம், வாடி , முக மண்டபம் என நான்கு பகுதிகளையுடைய – இக்கோவில் 25 அடி உயரமுள்ள மேடையில் கட்டப்பட்டுள்ளது.
  • மேடையின் முகப்பில் யானைகளும், சிங்கங்களும் மேடையைத் தாங்குவது போல் உள்ளது.
  • 16 சதுர தூண்கள் கொண்ட மண்டபம், துர்க்கை எருதுமுக அரக்கனை கொல்வது போன்ற சிற்பம், ராவணன் கைலாய மலையை தூக்க முயற்சிப்பது போன்று சிற்பங்கள் உள்ளன.
  • அவர்களின் இராமாயணக்காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கைலாசர் கோவிலின் பொதுபண்பு திராவிட கலைப்பாணியைச்
    சேர்ந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 3.
புகழ்பெற்ற சைவ மூவர்கள்.
Answer:

  • 1. திருஞான சம்பந்தர், 2. அப்பர், 3. அந்தரர் ஆகியோர் புகழ்பெற்றசைவ மூவர்கள் ஆவர்.
  • முதல் ஏழு நூல்களில் உள்ள தேவாரப் பாடல்கள் இம்மூவரால் இயற்றப்பட்டது.
  • பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறை களாகத் தொகுத்தார்.

Question 4.
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.
Answer:

  • ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினர்.
  • ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்ய பிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
  • வைதீக இந்துக்களை ஒன்றிணைத்தார்.
  • பிராமணர் அல்லாதோரையும் ஆழ்வார்கள் வைணவத்தில் இணைத்துக் கொண்டனர்.
  • வைதீக சடங்குகளும், நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு வைணவம் தமிழகத்தில் பரவியது.

Question 5.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
Answer:

  • சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
  • விஜயபத்திரிகா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
  • அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
  • அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
  • கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
  • ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
பல்லவர் கால சமூக வாழ்க்கையைப் பற்றி குறிப்பு எழுதுக.
Answer:

  • பல்லவர் காலத்தில் தமிழ்ச் சமுதாயம் பெரும் மாற்றங்களை சந்தித்தது. ஜாதிமுறை கடுமையாக பின்பற்றப்பட்டது.
  • பிராமணர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த இடத்தில் இருந்தனர். அவர்களுக்கு அரசர்களும், உயர்குடியினரும், நிலக் கொடைகள் வழங்கினர்.
  • கோயில்களை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. பல்லவர் காலத்தில் வைணவமும், சைவமும் தழைத்தன. மாறாக புத்த சமயமும், சமண சமயமும் வீழ்ச்சியடைந்தன.
  • சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும், சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். இதற்கு பக்தி இயக்கம் என்று பெயர்.
  • பக்தியின் சிறப்பை இப்பாடல்கள் வெளிப்படுத்தின. பல்லவ அரசர்களால் கட்டப்பட்ட ஆலயங்களும் இவ்விரு சமயங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்தன.

Question 2.
குறிப்பு தருக : இரண்டாம் புலிகேசி (அல்லது) இரண்டாம் புலிகேசியின் சாதனைகளை சுருக்கி வரைக.
Answer:

  • சாளுக்கிய மரபின் முக்கிய ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசி. ஐஹோலே கல்வெட்டு அவரது ஆட்சிக்காலத்தைப் பற்றி கூறுகிறது.
  • பணவாசி கடம்பர்களையும், மைசூர் கங்கர்களையும் எதிர்த்து போரிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். கங்க அரசர் துர்விந்தன் அவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டு தனது மகளையும், இரண்டாம் புலிகேசிக்கே மணமுடித்து கொடுத்தார்.
  • நர்மதை ஆற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரை முறியடித்து 2ஆம் புலிகேசியின் மற்றொரு மகத்தான சாதனை ஆகும்.
  • பல்லவர்களுக்கெதிரான தனது முதல் படையெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் காஞ்சிக்கு அருகில் முதலாம் நரசிம்ம வர்மனிடம் படுதோல்வியை தழுவினார்.
  • பின்னர் சாளுக்கிய தலைநகரம் வாதாபி பல்லவர்களால் அழிக்கப்பட்டது.
  • 2ஆம் புலிகேசியின் ஆட்சிகாலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் அவரது நாட்டிற்கும் வருகை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 3.
“ஏரிப்பட்டி குறிப்பு தருக.
Answer:

  • ஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம் எனும் சிறப்பு வகை நிலத்தை தென்னிந்தியாவில் மட்டுமே அறிகிறோம்.
  • தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த அந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காகத் தனியாக ஒதுக்கி வைக்கப்படும்.
  • இந்த ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்படும். அந்நீரைக் கொண்டு வருடம் முழுவதும் வேளாண்மை செய்ய முடிகிறது.
  • ஏரிகள் அனைத்தும் கிராம மக்களின் கூட்டுழைப்பில் கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன.
  • ஏரி நீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்து கொண்டனர்.
  • ஏரிகளை பராமரிப்பது கிராமத்தின் பொறுப்பாகும்.

IV. விரிவான விடை தருக

Question 1.
பல்லவ அரசர்கள் வெளியிட்ட நிலக்கொடை ஆணைகளின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டு.
Answer:

  • நிலவுடைமை உரிமை அனைத்தும் அரசிடமே இருந்தது.
  • அவர் அதிகாரிகளுக்கு வருவாய் மானியங்களையும் பிராமணர்களுக்கு நில மானியங்களையும் வழங்கினார் அல்லது நிலபிரபுக்கள், சிறு விவசாயிகள் மூலம் நிலத்தை சாகுபடி செய்ய வைத்தார்.
  • அரசருக்குச் சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன.
  • குத்தகைக்கான கால அளவைப் பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடும்.
  • பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட கிராமங்கள் நிலவரி செலுத்தின.
  • பிரம்மதேய கிராமங்கள் ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்டன.
  • கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் தேவதான கிராமங்களாகும்.
  • இவற்றின் வருவாயை கோவில் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
  • பின் வந்த காலங்களில் கோயில்களில் கோயில்கள் கிராமம் சார்ந்த வாழ்க்கையின் மையமாக மாறிய போது தேவதான கிராமங்கள் தனி முக்கியத்துவம் பெற்றன.
  • 1879 ஆம் ஆண்டு புதுச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு பட்டயத்தில் பல்லவ அரசன் நந்தி வர்மன் தனது 22 வது ஆட்சியாண்டில் மானியமாகத் தரப்பட்ட கிராமம் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

Question 2.
பல்லவரி கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
Answer:

  • பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகள் வாணிபம் சார்ந்தே இருந்தன.
  • பல்லவர் கால வணிகர்கள் வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு “நானாதேசி” ஆகும். “நானாதேசியின்” செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.
  • இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார். தண்ட நாயகன் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வாணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இக்காலத்திய காம்போஜா, சம்பா, ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.
  • மேற்கு கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரேபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
  • அயல் நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.
  • மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது. மேற்கண்டவாறு பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை வரையறுத்துக் கூறலாம்.

Question 3.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.
Answer:

  • பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ராஜசிம்மனின் (700-728) ஆட்சிகாலத்தில் எழுப்பியதாகும்.
  • மூன்று கருவறைகளைக் கொண்ட இக்கோயிலில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டன.
  • விஷ்ணுவின் கருவறையின் வெளிப்பக்கச் சுற்றுச் சுவர் தொடர் சிற்பங்களைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் இது முதன்மையானதாகும்.
  • கடற்கரை கோயில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுர பல்லவர் கோயில்களின் சிறப்பு பண்பாகும்.
  • ஒற்றைக்கல் தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. அர்ச்சுணன் ரதத்தில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு,
    துவாரபாலக சிலைகள் உள்ளன.
  • தர்மராஜ ரதம் சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது.
  • பீம ரதம் செவ்வக வடிவ அடித்தளத்தையும் அழகான ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு , ஸ்கந்தர், சிவன், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்களையும் கொண்டுள்ளது.
  • மாமல்லபுர சிற்பத்தில் முக்கியமானது கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் ஆகாய கங்கை காட்சியாகும்.
  • பாகீரதன் தவம், அர்ஜூணன் தவம் சிறந்தது. மனித மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக் கூறுகளை சீராகக் கலக்கும் கலைஞனின் திறமையை காட்டுகிறது.
  • கிருஷ்ண மண்டபச் சுவர்களில் மிக அழகாகவும் கலை நுணுக்கத்தோடும் செதுக்கப்பட்டுள்ள பசுக்கள், பசுக்கூட்டங்கள் போன்ற கிராமத்துக் காட்சிகள் ரசிப்பதற்கான மற்றொரு கலை அதிசயமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.
Answer:

சாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமான கோயில்களை கட்டுவதற்கு வேசர கலைப்பாணியை பின்பற்றினர். ஐஹோலே, பாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமான கோயில்களை காணலாம்.

அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களை காணலாம். பாதாமி, அஜந்தா, குகைக் கோயில்களில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காண முடிகிறது. 2ம் புலிகேசி ஒரு பாரசீக தூது குழுவிற்கு வரவேற்பளிப்பது போன்று ஓவியத்தில் சித்தரிக்கப்படுகின்றன.

சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம்:
முதல் நிலை:
ஐஹோலே மற்றும் பாதாமியில் முதல் நிலை கோயில்கள் உள்ளன. ஐஹோலேவில் உள்ள 70 கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.

  • லட்கான் கோயில் – சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ள து.
  • ஒரு யுத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கைக் கோயில்
  • ஹீச்சிமல்லி குடி கோயில்
  • மெகுதி என்ற இடத்தில் உள்ள சமண கோயில் பாதமியிலுள்ள முக்தீஸ்வரர் கோயிலும், மேலகுட்டி சிவன் கோயிலும் கட்டிடக்கலைக்கும், அழகிற்கும் பெயர் பெற்றவை.

இரண்டாம் நிலை :

  • பட்டாடக்கல் என்ற இடத்தில் பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வடஇந்திய கலைப்பாணி, ஆறு திராவிட கலைப்பாணியில் அமைந்தவை.
  • வட இந்திய கலைப்பாணியில் அமைந்துள்ள பாபநாதர் கோவில் திராவிட கலைப்பாணியில் அமைந்த – சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை.
  • இரண்டாம் விக்கிமாத்தித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது.
  • காஞ்சியில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டது என்று கருதப்பட்டது.