Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 7 குப்தர்
Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 7 குப்தர்
11th History Guide குப்தர் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அ) இலக்கியச் சான்றுகள்
ஆ) கல்வெட்டு சான்றுகள்
இ) நாணயச் சான்றுகள்
ஈ) கதைகள், புராணங்கள்
Answer:
ஈ) கதைகள், புராணங்கள்
Question 2.
பொருத்துக.
எழுதியவர் – இலக்கியப் படைப்பு
1) சூரிய சித்தாந்தா – தன்வந்திரி
2) அமரகோஷா – வராஹமிகிரா
3) பிருஹத்சம்ஹிதா – ஆர்யபட்டர்
4) ஆயுர்வேதா – அமரசிம்மா
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 2, 1, 3
ஈ) 4, 3, 2, 1
Answer:
ஈ) 4, 3, 2, 1
Question 3.
…………………. க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது?
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) சமுத்திரகுப்தர்
இ) இரண்டாம் சந்திரகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
ஆ) சமுத்திரகுப்தர்
Question 4.
……………………… -என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
அ) இட்சிங்
ஆ) யுவான் – சுவாங்
இ) பாஹியான்
ஈ) வாங்-யுவான்-சீ
Answer:
இ) பாஹியான்
Question 5.
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை?
அ) உதயகிரி குகை (ஒடிசா)
ஆ) அஜந்தா-எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
இ) எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
ஈ) பாக் (மத்தியப் பிரதேசம்)
Answer:
இ) எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
Question 6.
தர்க்கம் குறித்த முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர் ………………………
அ) திக்நாகர்
ஆ) வசுபந்து
இ) சந்திரகாமியா
ஈ) வராகமிகிரர்
Answer:
ஆ) வசுபந்து
Question 7.
…………………… என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்.
அ) சாகுந்தலம்
ஆ) ரகுவம்சம்
இ) குமாரசம்பவம்
ஈ) மேகதூதம்
Answer:
அ) சாகுந்தலம்
கூடுதல் வினாக்கள்
Question 1.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி …………………..
அ) இட்சிங்
ஆ) யுவான் சுவாங்
இ) பாஹியான்
ஈ) அ-வுங்
Answer:
இ) பாஹியான்
Question 2.
33 வரிகளில் அலகாபாத் தூண் கல்வெட்டில் சமுத்திர குப்தரின் ஆட்சியைப் பற்றி பொறித்தவர் ………………….
அ) காரவேலர்
ஆ) ஹரிசேனர்
இ) வாகடக
ஈ) ஈரண்
Answer:
ஆ) ஹரிசேனர்
Question 3.
நாளந்தா பல்கலைக் கழகத்தை நிறுவியவர்………………………..
அ) தம்மபாலர்
ஆ) குமாரகுப்தர்
இ) சமுத்திரகுப்தர்
ஈ) சந்திரகுப்தர்
Answer:
ஆ) குமாரகுப்தர்
Question 4.
குப்த மரபில் தலை சிறந்தவர்…………………………….
அ) குமாரகுப்தர்
ஆ) சந்திரகுப்தர்
இ) சமுத்திரகுப்தர்
ஈ) 2ம் சந்திரகுப்தர்
Answer:
இ) சமுத்திரகுப்தர்
Question 5.
குப்த மரபின் கடைசி பேரரசர்…………………………………..
அ) குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
ஆ) ஸ்கந்த குப்தர்
Question 6.
குப்த வம்சத்தின் கடைசி அரசர். …………………………….
அ) குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
இ) விஷ்ணுகுப்தர்
Question 7.
குப்த வம்சத்தின் முதல் அரசர்…………………………….
அ) குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
Answer:
ஈ) ஸ்ரீகுப்தர்
Question 8.
“விக்ரமாதித்யன்” என்று அழைக்கப் பட்ட குப்தபேரரசர் ………………………….
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) சமுத்திரகுப்தர்
இ) இரண்டாம் சந்திரகுப்தர்
ஈ) ராமகுப்தர்
Answer:
இ) இரண்டாம் சந்திரகுப்தர்
Question 9.
சரியான வரிசையைக் கண்டறிக.
அ) சந்திரகுப்தர், ஸ்ரீகுப்தர், சமுத்திரகுப்தர், கடோத்கஜர்
ஆ) சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்
இ) சந்திரகுப்தர், கடோத்கஜர், ஸ்ரீகுப்தர், சமுத்திரகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர், கடோத்கஜர், சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர்
Answer:
ஈ) ஸ்ரீகுப்தர், கடோத்கஜர், சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர்
Question 10.
குப்தர்கள் ஏற்படுத்திய ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு
அ) பதகா
ஆ) விஜ்யா
இ) ஆயுத்கா
ஈ) துடகா
Answer:
ஈ) துடகா
Question 11.
குஜராத் கிர்கார் மலை அடிவாரத்தில் உள்ள குப்தர் கால ஏரி ………………………..
அ) சோழகங்கம்
ஆ) வராஹஏரி
இ) சுதர்சன ஏரி
ஈ) இந்திரஏரி
Answer:
இ) சுதர்சன ஏரி
Question 12.
மகாபாஷ்யம் என்ற நூலை எழுதியவர் ……………………………..
அ) மெகஸ்தனிஸ்
ஆ) விஷ்ணுகுப்தர்
இ) பாணினி
ஈ) பதஞ்சலி
Answer:
ஈ) பதஞ்சலி
Question 13.
கயாவில் பௌத்தமடம் கட்ட அனுமதி கோரிய இலங்கை அரசர்………………………….
அ) கயவாகு
ஆ) மானவர்மன்
இ) மேகவர்மன்
ஈ) திருமாறன்
Answer:
இ) மேகவர்மன்
Question 14.
குப்த பேரரசில் பாகா என்பது விளைச்சலில் ………………………..
அ) 1/3, பங்கு
ஆ) 1/4 பங்கு
இ) 1/6 பங்கு
ஈ) 1/8 பங்கு
Answer:
இ) 1/6 பங்கு
II. குறுகிய விடை தருக.
Question 1.
ஸ்கந்த குப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக.
Answer:
- ஸ்ரீகுப்தர் – பொ.ஆ. 240-280
- கடோத்கஜர் – பொ .ஆ. 280-319
- முதலாம் சந்தரகுப்தர் – பொ.ஆ. 319 – 335
- சமுத்திரகுப்தார் – பொ.ஆ. 335 – 370
- ராமகுப்தர் – பொ.ஆ. 370 – 375
- இரண்டாம் சந்திரகுப்தர் – பொ.ஆ. 375 – 415
- முதலாம் குமாரகுப்தர் – பொ.ஆ. 415 – 455
- ஸ்கந்தகுப்தார் – பொ.ஆ. 455-467
Question 2.
ஹீணர் குறித்து நீங்கள் அறிவது என்ன?
Answer:
- ஹீணர்களின் தோற்றம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை
- ரோமானிய வரலாற்றாளர் டாசிடஸின் கூற்றுப்படி அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள்.
- ரோமாபுரிப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். அட்டில்லாவின் தலைமையில் திரண்ட இவர்கள் ஐரோப்பாவில் கொடுங்கோண்மைக்குப் பெயர் பெற்றவர்கள்.
வெள்ளை ஹீணர்கள் என்று அழைக்கப்பட்ட ஹீணர்களின் ஒரு பிரிவு மத்திய ஆசியவிலிருந்து இந்தியா நோக்கி நகர்ந்தது. இவர்களது படையெடுப்பு குஷாணர்கள் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பமானது.
Question 3.
மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதைச் சுருக்கமாக எழுதுக.
Answer:
- இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிகாலத்தில் சீன அறிஞர் பாஹியான் இந்தியாவிற்கு வந்தார். மதுராவைப் பற்றி சில தகவல்களை அளிக்கிறார்.
- மதுராவில் மக்கள் தொகை அதிகம் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
- அவர்கள் தமது குடும்பத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை .
- அரசருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும்தான் தானியத்தில் ஒரு பகுதியை அரசருக்கு தரவேண்டும்.
- சூழலைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ, கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது என சுட்டிக் காட்டுகிறார்.
Question 4.
பௌத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக.
Answer:
- தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலிமொழியில் இருந்தன.
- பின்னர் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
- ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
- தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டது.
- வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினார்.
Question 5.
அலகாபாத் தூண் கல்வெட்டுக் குறித்துக் கூறுக.
Answer:
- மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
- அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
- இதனைப் பொறித்தவர் ஹரிசேனர்.
- இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
குப்தர்கால விவசாயிகளின் நிலையை விளக்குக.
Answer:
- விவசாயிகளின் நிலைமை கீழ் நிலையில் இருந்தது.
- சாதி காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
- அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல.
- மாறாக எப்போது வேண்டுமானாலும் குத்தகையை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள்.
- விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்ட வேண்டி இருந்தது.
Question 2.
குப்தர்கால இலக்கிய இலக்கணம் யாவை?
Answer:
- குப்தர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினார்கள்.
- அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும், பட்டயங்களும் அம்மொழியில் தான் எழுதப்பட்டன.
- இக்காலகட்டம் தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்.
- பாணினி எழுதிய அஷ்டத்யாமி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது.
- இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் ‘அமரகோசம்’ என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
- வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் ‘சந்திரவியாகரணம்’ என்ற இலக்கண நூலைப் படைத்தார்.
Question 3.
குப்தர்கால மருத்துவ அறிவியலைப் பற்றி கூறுக?
Answer:
மருந்துக்கள் தயாரிப்பதற்கு உலோகங்களைப் பயன்படுத்துதல் பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது குப்தர் ஆட்சிக்காலகட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
நவணி தகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது.
பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர் வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதைக் காட்டுகிறது.
Question 4.
ஹுணர்களின் படையெடுப்பைப் பற்றி கூறுக?
Answer:
- ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின்போது ஹுணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்.
- ஸ்கந்தகுப்தர் ஹுணர்களை விரட்டினாலும், குப்தர்களின் கருவூலம் காலியானது.
- ஆறாம் நூற்றாண்டில் ஹுணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
- ஹுணர்களின் படையெடுப்பால், நாட்டின் மீது குப்தர்களின் பிடி தளர்ந்தது.
III. சுருக்கமான விடை தருக
Question 1.
குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.
Answer:
குப்தரின் நிர்வாக முறை:
குப்தரின் ஆட்சியில் அரசியல் அதிகாரப் படிநிலைகள் காணப்பட்டன. வழங்கப்பட்டன. பட்டங்கள் மேலதிகாரம், கீழ்ப்படிதல் ஆகிய உறவுகளின் வழியாக அதிகார படிநிலைகளை அறிய முடிகிறது.
அமைச்சர்கள், அதிகாரிகள் :
முத்திரைகள் கல்வெட்டுகள் போன்றவற்றில் பதிவிடப்பட்டுள்ளவை அதிகாரிகளின் படிநிலைகளும் அவர்களது படிநிலைகளும் ஆகும்.
அமைச்சர் குழு:
குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது. அலகாபாத் கல்வெட்டு சபா என்ற ஒரு குழு குறித்துக் கூறுகிறது.
Question 2.
விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக.
Answer:
- விக்ரமசீலா பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது.
- பாலர் வம்சத்தை சேர்ந்த தர்மபாலர் விக்ரமசீலா என்ற பௌத்த மடாலயத்தை நிறுவினார்.
- இது பின்னாளில் விக்ரமசீலா பல்கலைக் கழகமாக உருவெடுத்தது.
- தர்மபாலர் புத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்த படியால், விக்ரமசீலாவில் பௌத்தை கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்க வழிவகை செய்தார்.
- இங்கு அதிஷா, சரகர், திலோபா போன்ற அறிஞர்கள் கல்வியைப் போதித்தனர்.
Question 3.
குப்தர் காலத்தில் சமண இலக்கியம் வளர்ந்தது குறித்து விவரிக்கவும்.
Answer:
சமண இலக்கியம் :
- சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
- குறுகிய காலத்திலேயே சமணமதம் பல பெரிய அறிஞர்களை உருவாக்கிவிட்டது.
- இவர்களது முயற்சியால் சமணமதக் கோட்பாடுகளைப் பரப்ப பல இந்து புராணங்களும், இதிகாசங்களும் சமணமதக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன.
- விமலா சமண இராமாயணத்தை எழுதினார்.
- சித்தசேன திவாகார சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.
Question 4.
குப்தர் காலத்தில் – அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
Answer:
சுழியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டு பிடித்தது இக்காலகட்டத்தின் அறிவியலார்களையே சாரும்.
ஆரியப்பட்டர்:
சூரிய சித்தாந்தா என்ற நூலில் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார். பூமி ஒரு அச்சில் தன்னைத்தானே சுற்று கிறது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தார்.
தனது ‘ஆரியபட்டீயம்’ என்ற நூலில் கணிதம் கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடுகிறது.
வராகமிகிரர் :
வராகமிகிரரின் பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலை களஞ்சியமாகும். பஞ்சசித்தாந்திகா. பிருஹத் ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும்.
பிரம்ம குப்தர் :
கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான ‘பிரும்மஸ்புத – சித்தாந்த, கண்டகதீயகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Question 5.
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.
Answer:
உள்நாட்டு பூசல்களும் அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்ததும் இவர்கள் பேரரசை விரிவுப்படுத்துவதிலோ ராணுவப் படையெடுப்புகளிலே கவனம் செலுத்தாததும் பேரரசைப் பலவினப்படுத்தியது.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின.
ஹுணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது, பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.
கூடுதல் வினாக்கள்
Question 1.
சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?
Answer:
சமுத்திர குப்தரே ‘கவிராஜா’ என்று புகழ்பெற்ற
காளிதாசர் இயற்கை அழகை எழுதிய கவிஞர். சகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விகரமோர் வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள், சூத்ரகரின் மிருச்சகடிகம்.
விசாகதத்தரின் முத்ராராட்சசம், தேவி சந்திரகுப்தர் ஆகிய படைப்புகள் வெளியாயின. (ைைன) அதே சமயம் அதிகம் புகழ் பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படைப்புகளுக்கு இலக்கிய மதிப்பீடுகளுக்கு பங்காற்றின.
Question 2.
நிலப்பிரபுத்துவம் பற்றி விளக்குக.
Answer:
நிலப்பிரபுத்துவம் என்ற சமூக அமைப்பு இந்தியாவின் மத்திய கால சமூகத்தின் ஒரு பண்பு நிலை அகும் வரலாற்றாளர் சு.ளு.சர்மா – நிலப்பிரபுத்துவப் பண்புகளைப் பட்டியலிடுகிறார்.
- அரசர் அளிக்கும் நிலமானியம், நிதி, நீதி உரிமைகளை பயனாளிகளுக்கு மாற்றித் தருதல்
- விவசாயிகள், கலைஞர்கள், வணிகர்கள் மீது நில உடைமையாளர்களுக்கு உரிமை அளித்தல்.
- அடிக்கடி நிகழ்ந்த கட்டாய உழைப்பு நிகழ்ச்சிகள்
- உபரியை அரசு எடுத்துக் கொள்ளல்
- வணிகத்திலும் நாணயம் அச்சடித்தலிலும் வீழ்ச்சி
- அதிகாரிகளின் ஊழியத்தை நிலவருவாய் வசூல் மூலம் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது.
- சமந்தா எனப்படும் நிலபிரபுத்துறை துணை நிலை ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் அதிகரித்தல் ஆகியன.
IV. விரிவான விடை தருக
Question 1.
“குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம்” விவாதிக்கவும்.
Answer:
பண்டைய இந்தியாவில் “குப்தர்களின் காலம் பொற்காலம் என்ற அழைக்கப்படுகிறது.
பொற்கால ஆட்சி :
எல்லாத் துறைகளிலும் சமமான வளர்ச்சி இருப்பின் அந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று அழைக்கலாம். குப்தர்காலத்தில் உலோகவியல், வணிகம், கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்கள், கல்வி, கணிதம், வானவியல் மற்றும் மருத்துவ அறிவியல் என அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சி காணப்பட்டது. எனவே குப்தர்கள் காலம் பொற்காலம் என உறுதியாகிறது.
உலோகக்கலை:
குப்தர்கள் காலத்தில் மிகச்சிறப்பாக வளர்ந்த தொழில் உலோகவியல் தொழிலாகும். இக்காலத்தில் உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்தது என்பதை நிறுவுவதற்கு தில்லி குதுப்மினார் வளாகத்தில் இருக்கும் “மெஹ்ரோலி” இரும்புத்தூணைக் கூறலாம். இன்றளவு அத்தூண் துருப்பிடிக்கவில்லை.
கட்டிடக்கலை:
குப்தர்கள் கட்டிடக்கலையில் புதிய பரிமானங்களை தொட்டனர். குடவரைக் கோயில்களை அமைத்து அதன் முகப்பு பகுதியில் அலங்காரத்திலும் உட்புறத் தூண் வடிவமைப்பிலும் விரிவான புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. உதாரணமாக அஜந்தா, பாக், எல்லோரா குகைகள்.
கைவினைக் கலை:
பெரிய அளவில் உலோகச் சிற்பங்களை வார்க்கும் கலையை குப்தர் காலத்து கைவினைக் கலைஞர்கள் மிகவும் கலை நுணுக்கங்களோடு செய்தனர். (எ.கா.) நாளந்தா 18 அடி புத்தர் சிலை.
ஓவியக்கலை:
குப்தர் கால ஓவியக்கலை வளர்ச்சி அபிரிமிதமானது. குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக், பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
இலக்கியம்:
குப்தர் கால இலக்கிய வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டால் ஏராளமான இலக்கியப் படைப்புகள் காணப்படுகின்றன. சமுத்திர குப்தரின் அவையை அலங்கரித்த “காளிதாசர்” மிகச் சிறந்த அறிஞர் ஆவார். சாகுந்தலம். மாளவிகாக்னி மித்திரம், விக்ரமோர்வசியம் போன்றவை அவருடைய புகழ்மிக்க நாடகங்கள் ஆகும். மேலும் சூத்ரகர், விசாகதத்தர் போன்ற அறிஞர்களும் பல படைப்புகளை வெளியிட்டனர்.
கல்வி:
குப்தர்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவம் அவர்கள் நாளந்தா பல்கலைகழகத்தை ஆதரித்தலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உலகின் பல்வேறு இடங்களிலிருந்து எல்லாம் மாணவர்கள் கல்வி பயில இங்கு வந்தனர்.
அறிவியல் :
பதின்ம இலக்க முறையை கண்டுபிடித்து இவர்கள் கணிதத்தின் மீது வைத்திருந்த ஆவலை காட்டுகின்றது. ஆரியபட்டர் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார். வராகமிரரின் பிருகத்சம்ஹதா நூல் வானவியல், புவியலின் கலைக் களஞ்சியமாகும்.
மருத்துவ அறிவியலில் முன்னேற்றம், தங்கம் நாணயங்கள் புழக்கம் முதலியவை மூலம் குப்தர் காலம் பொற்காலம் என்ற கூற்று மெய்பிக்கப்படுகிறது.
Question 2.
குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நில குத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்.
Answer:
குப்தர் ஆட்சிக் காலத்தில் – அரசு சார்பில் ஏராளமான பாசன பணிகள் மேற்கொள்ளப் பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது. பஹார்பூர் செப்பேடு அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் கூறுகிறது.
பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபலா என்ற அதிகாரி நில பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்தார். கிராமநிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராமகணக்கர் பராமரித்தார். குப்தர் காலத்தில் நிலம் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டிருந்தன.
பெயர் – நிலப்பிரிவு
- க்ஷேத்ரா – பயிரிடக் கூடிய நிலம்
- கிலா – தரிசுநிலம்
- அப்ரஹதா – காடு அல்லது தரிசுநிலம்
- வாஸ்தி – குடியிருக்கத் தகுந்த நிலம்
- கபடசஹாரா – மேய்ச்சல் நிலம்
பல்வேறு விதமான நிலகுத்தகை முறை :
- நிலகுத்தகை வகை – உரிமையின் தன்மை
- நிவி தர்மா – அறக்கட்டளை மூலம் நிலமான்யம்
- நிவிதர்ம அக்சயினா – நிரந்தர அறக்கட்டளை பெற்றவர் அதன் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அப்ரதா தர்மா – வருவாயை பயன் படுத்தலாம். தானம் செய்ய முடியாது நிர்வாக உரிமை கிடையாது.
- பூமி சித்ராயனா – தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றுபவருக்கு தரப்படும் உரிமை – குத்தகை விலக்கு
- அக்ரஹார மானியம் – பிராமணர்களுக்கு தரப்படுவது வரிகிடையாது.
- தேவக்கிரஹாரமானியம் – கோயில் மராமத்து வழிபாடு போன்றவற்றிற்காக கொடுக்கப்படுவது.
- சமயச் சார்பற்ற மானியம்- நிலப்பிரபுகளுக்கு தரப்பட்ட மானியம்
Question 3.
குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க.
Answer:
வணிகர்கள் :
“சிரேஷ்டி”, “சார்ந்தவஹா” என்ற இரு வேறுபட்ட வகைகளை சேர்ந்த வணிகர்கள் இருந்தனர். சிரோஷ்டி என்பவர் ஒரே இடத்தில் தங்கி இருந்து வாணிபம் செய்பவர் ஆவார். சார்த்தவஹா என்பவர் ஊர் ஊராக சென்று வாணிபம் செய்பவராக இருந்தார்.
வணிககுழுக்கள் :
குப்தர் காலத்தில் பொருள்களின் உற்பத்தி, அதிகரிப்பு வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகர் குழுக்களின் பங்கு அதிக அளவு இருந்தது. இக்குழுக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இருந்தன. இவர்களது சட்டத்திட்டங்கள் அரசாங்கம் மதித்தது. இந்த வணிக குழுக்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறித்து “நாரத ஸ்மிருதி” “பிருகஸ்பதி ஸ்மிகுதி” போன்ற நூல்கள் விளக்குகின்றன.
ஒரு குழுவில் ஒரு குழுத்தலைவர் மற்றும் ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவைக் குறிப்பிடுகின்றன. குழுச்சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குழு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் நலன்கள் :
பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள், சத்திரங்கள் கோயில்கள், தோட்டங்கள், மட்பாண்டங்கள் ஏற்படுத்தி தரும் கொடைநடவடிக்கைகளிலும் வணிகக் குழுக்கள் ஈடுபட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
வணிக வங்கிகள், கவிகை வண்டி வணிகக் குழுக்கள் கைவினைஞர்களின் குழுக்களின் குழுமங்கள் இயங்கியதாகவும் குறிப்புகள் உள்ளன வணிக குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது.
மேலும் வணிகத்தில் அதிகலாபம், ஈட்டுவதற்காகப் பணம் கடனாக பெறப்பட்டு அதிக வட்டிக்கு விடப்பட்டதற்கான குறிப்புகள் இக்கால கட்ட சான்றுகளில் காணப்படுகின்றன.
இவ்வாறு குப்தர் கால வணிகக்குழுக்கள் தங்களது பங்களிப்பினை வணிகத்தில் செலுத்தி வாணிபம் பெருக உதவி செய்தது. இதன் மூலம் குப்தர்களின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்தது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.
Answer:
குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் :
1, இலக்கியச் சான்றுகள்
2, கல்வெட்டுச் சான்றுகள்
3, நாணய ஆதாரங்கள்
இலக்கியச் சான்றுகள் :
- நாரதர், விஷ்ணு , பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள்.
- அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதி சாரம் என்ற தரும சாஸ்திரம் (பொ .ஆ. 400)
- விசாகதத்தரின் தேவி சந்திர குப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்கள் அளிக்கின்றன.
- புத்த, சமண இலக்கியங்கள்.
- காளிதாசர் படைப்புகள்
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப்பயணி பாஹியான் குறிப்புகள்.
2. கல்வெட்டுச் சான்றுகள் :
- மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது,
- அலகாபாத் தூண் கல்வெட்டு : சமுத்திர குப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் பொறித்தவர் ஹரிசேனர் இது 33 வரிகளில் நாகரி வரி வடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்டுள்ளது.
3. நாணய ஆதாரங்கள் :
- குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன,
- இந்தத் தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
Question 2.
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளைப் பற்றி விவரி.
Answer:
பொ.ஆ. 335 இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திர குப்தரைத் தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது.
இந்தக் கல்வெட்டு சமுத்திர குப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சி பகுதிகள் ஆகியன குறித்த மிகப் பெரும் பட்டியலைத் தருகிறது.
- முக்கியமாக தில்லி மற்றும் உத்திர பிரதேசத்தின் நான்கு அரசர்களை வென்றுள்ளனர்.
- தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் கப்பம் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- கிழக்குக் கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை இவர் படையெடுப்பு நீண்டது.
- கங்கை சமவெளியில் மேற்குப் பகுதியில் ஒன்பது அரசர்களை படை பலத்தால் வென்றார்.
- தக்காண பழங்குடியினைத் தலைவர்கள் கப்பம்
கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர். - காட்டு ராஜாக்களும் அஸ்ஸாம் வங்கம் போன்ற கிழக்குப் பகுதி அரசர்களும் நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- இராஜஸ்தான் பகுதியில் உள்ள ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபதியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அரசர்களும் கப்பம் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
- இவ்வாறு சமுத்திரகுப்தர் ஒரு வெற்றி வீரராக இருந்துள்ளது. சான்றுகள் மூலம் உறுதியாகிறது. இவர் தனது இராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய “அசுவமேதயாகம்” நடத்தினர்.