Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11th History Guide அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் …………………..
அ) தாமஸ் சாண்டர்ஸ்
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்
இ) சர் ஜான் மார்ஷல்
ஈ) வில்லியம் ஜோன்ஸ்
Answer:
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்
Question 2.
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர். ஹர்யங்காவம்சத்தைச் சேர்ந்த ……………………
அ) பிம்பிசாரர்
ஆ) அஜதாசத்ரு
இ) அசோகர்
ஈ) மகாபத்ம நந்தர்
Answer:
அ) பிம்பிசாரர்
Question 3.
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் ………………….
அ) மகாபத்ம நந்தர்
ஆ) தன நந்தர்
இ) பிந்து சாரர்
ஈ) பிம்பிசாரர்
Answer:
ஆ) தன நந்தர்
Question 4.
……………………… என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்.
அ) மகாவம்சம்
ஆ) தீபவம்சம்
இ) பிரமாணம்
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) மகாவம்சம்
Question 5.
………………… என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.
அ) முத்ராராட்சசம்
ஆ) ராஜதரங்கிணி
இ) அர்த்தசாஸ்திரம்
ஈ) இண்டிகா
Answer:
அ) முத்ராராட்சசம்
Question 6.
மெகஸ்தனிஸ் எழுதிய ……………….. சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
அ) இண்டிகா
ஆ) முத்ராராட்சசம்
இ) அஷ்டத்யாயி
ஈ) அர்த்தசாஸ்திரம்
Answer:
அ) இண்டிகா
Question 7.
………………….. நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) ராஜதரங்கிணி
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) அர்த்தசாஸ்திரம்
கூடுதல் வினாக்கள்
Question 1.
மகதத்தின் தலைநகரம் ………………………
அ) ராஜகிருகம்
ஆ) உஜ்ஜயினி
இ) கோசலம்
ஈ) கோசாம்பி
Answer:
அ) ராஜகிருகம்
Question 2.
நந்தவம்சத்திற்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் ………………………
அ) மௌரியர்கள்
ஆ) சிசுநாகர்கள்
இ) ஹர்யாங்கர்கள்
ஈ) குப்தர்கள்
Answer:
ஆ) சிசுநாகர்கள்
Question 3.
16 மகாஜனபதங்களில் ………………… தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
அ) மகதம்
ஆ) கோசலம்
இ) காசி
ஈ) அவந்தி
Answer:
இ) காசி
Question 4.
குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு ……………….. காலத்தைச் சேர்ந்தது.
அ) பொ. ஆ. 130 – 150
ஆ) பொ. ஆ. 170 – 190
இ) பொ. ஆ. 150 – 170
ஈ) பொ. ஆ. 190 – 210
Answer:
அ) பொ. ஆ. 130 – 150
Question 5.
ஹரியங்கா வம்சத்தின் ………………………. மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
அ) பிந்து சாரர்
ஆ) பிம்பிசாரர்
இ) சந்திர குப்தர்
ஈ) அஜாகத் சத்ரு
Answer:
ஆ) பிம்பிசாரர்
Question 6.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து …………………….. வம்சம் ஆட்சிக்கு வந்தது.
அ) மௌரிய
ஆ) கனிஷ்க்
இ) வர்த்த ன
ஈ) சிசுநாக
Answer:
ஈ) சிசுநாக
Question 7.
பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து …………………. என்ற நகரை அழித்தார்.
அ) கபிஷா
ஆ) ஆக்கிமீனைட்
இ) கதாரா
ஈ) ஹராவதி
Answer:
அ) கபிஷா
Question 8.
அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர் ……………………
அ) ஜான் மார்ஷல்
ஆ) கபிஷா
இ) மித்ரா
ஈ) பாணினி
Answer:
ஈ) பாணினி
Question 9.
நாணயத்திற்கான இந்திய சொல்லான ………………… பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
அ) கசாய்
ஆ) லிடா
இ) கார்சா
ஈ) டிடா
Answer:
இ) கார்சா
Question 10.
அலெக்ஸாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர் ………………………
அ) அம்பி
ஆ) போரஸ்
இ) பிரசேனஜித்
ஈ) கோசலம்
Answer:
அ) அம்பி
Question 11.
அலெக்ஸாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர் …………………. எனப்படுகிறது.
அ) ஜீலம்
ஆ) பாரசீக
இ) ஹைடாஸ்பஸ் போர்
ஈ) தட்சசீல
Answer:
இ) ஹைடாஸ்பஸ் போர்
Question 12.
……………………. தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.
அ) பிந்துசாரர்
ஆ) அஜாத சத்ரு
இ) மகாபத்ம நந்தர்
ஈ) போரஸ்
Answer:
ஆ) அஜாத சத்ரு
Question 13.
முதல் நந்த அரசர் …………………..
அ) அஜாத சத்ரு
ஆ) மகாபத்ம நந்தர்
இ) பிம்பிசாரர்
ஈ) பிந்து சாரர்
Answer:
ஆ) மகாபத்ம நந்தர்
Question 14.
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு …………………..
அ) பொ. அ. மு. 236
ஆ) பொ. அ. மு. 232
இ) பொ. அ. மு. 326
ஈ) பொ. அ. மு. 362
Answer:
இ) பொ. அ. மு. 326
Question 15.
சந்திரகுப்தர் …………………. ல் மௌரிய பேரரசை அமைத்தார்.
அ) பொ. அ. மு. 297
ஆ) பொ. அ. மு. 272
இ) பொ. அ. மு. 321
ஈ) பொ. அ. மு. 231
Answer:
இ) பொ. அ. மு. 321
Question 16.
மெகஸ்த னிஸ் எழுதிய நூல் ………………………
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) முத்ராராட்சசம்
இ) இண்டிகா
ஈ) தீபவம்சம்
Answer:
இ) இண்டிகா
Question 17.
கூற்று : அலெக்ஸாண்டர் பேரரசிடம் நாட்டை திரும்ப அளித்தார்.
காரணம் : போரஸ் கண்ணியமாக அலெக்ஸாண்டரிடம் நடந்து கொண்டார்.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஈ) கூற்றும் காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
Question 18.
கௌடில்யர் எழுதிய நூல் …………………………
அ) முத்ராராட்சசம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) தீபவம்சம்
ஈ) மகாவம்சம்
Answer:
ஆ) அர்த்தசாஸ்திரம்
Question 19.
விஷ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர் ……………………..
அ) சாணக்கியர்
ஆ) விசாகதத்தர்
இ)சந்திரகுப்தர்
ஈ) பிந்து சாரர்
Answer:
அ) சாணக்கியர்
Question 20.
ஹதிகும்பா கல்வெட்டு …………………. பேரரசைப் பற்றி குறிப்பிடுவது.
அ) ஹரியங்கா
ஆ) மௌரியர்கள்
இ) நந்தர்கள்
ஈ) சிசுநாகம்
Answer:
இ) நந்தர்கள்
Question 21.
“இந்து” என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு ……………………….
அ) அய்கோப்ன கல்வெட்டு
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு
இ) ஜீனாகத் கல்வெட்டு
ஈ) சாரநாத் கல்வெட்டு
Answer:
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு
Question 22.
பாடலிபுத்திரத்தில் அசோகரால் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்ட ஆண்டு
அ) பொ. ஆ. மு. 350
ஆ) பொ. ஆ. மு. 450
இ) பொ. ஆ. மு. 250
ஈ) பொ. ஆ. மு. 400
Answer:
அ) பொ. ஆ. மு. 350
II. குறுகிய விடை தருக :
Question 1.
பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
Answer:
- ஹரியங்கா வம்சத்தில் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
- அவர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
- கோசல அரசர் பிரசேனஜித்திற்கு தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம் காசியை வரதட்சணையாகப் பெற்றார்.
- லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக்கொண்டார். இவ்வாறு பிம்பிசாரர் மகதப் பேரரசை விரிவு படுத்தினார்.
Question 2.
மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக.
Answer:
- மகாபத்ம நந்தர் நந்த பேரரசின் முதல் அரசர்.
- சிசுநாக அரசரைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினார்.
- நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது.
- நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் இவர் காலத்தில் பெருகியது. எதிரிகளுக்கு அச்ச மூட்டுவதாக இருந்தது.
Question 3.
எதன் காரணமாக மகா அலெக்சாண்டர் போரஸின் அரியணையைத் திருப்பித் தந்தார்?
Answer:
- போரஸ் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டார்.
- அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைடாஸ்பெஸ் போர் போரஸ் மன்னனுக்கு எதிராக நடைபெற்றது.
- போரின் முடிவில் அலெக்சாண்டரால் போரஸ் கைது செய்யப்பட்டார்.
- பின்னர் போரஸின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் தனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரது அரியணையைத் திருப்பி தந்தார்.
Question 4.
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
Answer:
- கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள்.
- மையப்படுத்தப்பட்ட அரசு என்றால், பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என பொருள் கொள்ள வேண்டும்..
- ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைகள் இருந்திருக்க வேண்டும்.
Question 5.
மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.
Answer:
- கெளடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியரின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக விளக்குகின்றது.
- மெகஸ்தனிஷ் எழுதிய இண்டிகா – சந்திரகுப்தரின் – அரசு நிர்வாகத்தைப் பற்றி கூறுகிறது.
- விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல்.
- பிராமணங்கள் மற்றும் மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும் உள்ளன.
Question 6.
அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகளில் இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக அமைகிறது?
Answer:
- அலெக்சாண்டரின் படையெடுப்பு பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் இந்தியா மற்றும் மேற்கு உலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பமாக அமைந்தது.
- நான்கு வணிகப் பெருவழிகள் வாயிலாக கிரேக்க வணிகர்களும், கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
- இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்றபடி இது உதவியது.
- இது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் ஒரு புதிய பாணியை உருவாக்கியது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
குறிப்பு தருக : முத்ராராட்சசம்
Answer:
- முத்ராரர்ட்சசம்’ என்பது விசாகத்தத்தரால் எழுதப்பட்ட நாடக நூல்.
- இந்நூல் மகத அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் ‘சாணக்கியர் அல்லது ‘கௌடில்யா’ தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது.
Question 2.
ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.
Answer:
- குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்தில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
- ருத்ரராமன் என்ற மன்னர் இக்கல்வெட்டை செதுக்கினார்.
இக்கல்வெட்டு இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.
- மேற்கே குஜராத் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்ததை உறுதி செய்கிறது.
- சந்திர குப்தரின் புகழ் அவர் இறந்து நான்கு நூற்றாண்டு ஆன பின்னரும் தொடர்ந்தது என்பகைக் கூறுகிறது.
Question 3.
குறிப்பு வரைக. தட்சசீலம் :
Answer:
- தட்சசீலம் கல்வி மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் முக்கிய மையமாகும். 1940ல் சர்ஜாண் மார்ஷல் இந்த நகரைக் கண்டறிந்தார்.
- இங்கு கல்வி கற்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வந்துள்ளார்கள்.
- எந்த ஒரு நாகரீகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக தட்சசீலம் கருதப்படுகிறது.
- பாணினி தனது புகழ்பெற்ற “அஷ்டத்யாயி” என்ற இலக்கிய நூலை இங்கு தான் எழுதினார்.
Question 4.
குறிப்பு வரைக. பிந்துசாரர்
Answer:
- சந்திர குப்தரின் புதல்வர் பிந்துசாரர் பொ.ஆ.மு. 297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆட்சியில் அமர்ந்தார்.
- பிந்து சாரர் நல்ல திறமையான அரசர், மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.
III. சுருக்கமான விடை தருக
Question 1.
தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.
Answer:
- தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத் தோற்றம் பற்றியும், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களின் கட்டுமானம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
- அக்கால மக்களுக்குத் தெரிந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்று மக்களின் தன்மையை அறிய முடிகிறது.
- கங்கைப் பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் அப்பகுதியில் உருவான நகர மையங்களின் தன்மை குறித்த சான்றுகளைத் தந்துள்ளன.
Question 2.
கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக.
Answer:
- பொ. ஆ. மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 3ம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கிய அரசியல் மாற்றங்களை கண்டது.
- கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்வதற்காக இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன.
- வெற்றி பெற்றவர் கங்கைச் சமவெளியில் முடியாட்சி தோன்றுவதற்கு காரணமாய் அமைந்தது.
- சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் என்ற உயர்ந்த பதவிகளால் அரசாட்சி செய்தனர்.
- முடியாட்சி அரசுகளுள் காசி முதலில் பலம் வாய்ந்ததாக இருந்தது.
- பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
Question 3.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
Answer:
- அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
- மேற்குலகிற்காக வணிகப் பெரு வழிகள் திறக்கப்பட்டன.
- இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
- இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
- மௌரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
- சிறு அரசுகள் என்ற முறை முடிவுக்கு வந்தது.
Question 4.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
Answer:
- மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
- அசோகரது ஆட்சிகாலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
- போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
- இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருந்திருக்க வேண்டும்.
- போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மௌரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.
Question 5.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
Answer:
- நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
- ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
- சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ரகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
- காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற
இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. - சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
Question 6.
இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:
- அர்த்தசாஸ்திரம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் விற்கப்பட்ட பொருள்களின் விவசாயப் பொருட்களின் பட்டியலைத் தருகிறது.
- இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சீனா, இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் வந்த துணி கம்பளி, பட்டு, வாசணை மரக்கட்டை, விலங்குத்தோல், நவரத்தினக் கற்கள் அடங்கும்.
- அவுரி (சாயம்), தந்தம்? ஆமை ஓடு, முத்து, வாசணை திரவியங்கள், அபூர்வ மரக்கட்டைகள் ஆகியன எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கூடுதல் வினாக்கள்
Question 1.
அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுப்படுத்தினார்?
Answer:
அஜாதசத்ரு தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார்.
இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்தது. பின்னர் கோசல நாட்டுடன் மகத நாடு இணைந்தது.
அஜாகத்சத்ரு லிச்சாவியரையும் மல்லர்களையும் வென்றார்.
பொ. ஆ. மு. 461 இல் அஜாகத் சத்ரு மறைந்த போது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசாகிவிட்டது.
Question 2.
இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?
Answer:
ஈரானில் உள்ள பெர்சிபோலிசிஸ் காணப்பட்ட முதலாம் டாரியஸின் கல்வெட்டில் தான் “இந்து” என்ற வார்த்தை முதன் முறையாகக் காணப்படுகிறது.
சிந்துநதியை குறிக்கும் “சிந்து” என்ற சொல் பாரசீகத்தில் “இந்து” வானது. கிரேக்கர்கள் ளுேைனர என்பதில் உள்ள ளு ஐ நீக்கிவிட்டு, ஐனேர என்றார்கள். அது பின்னர் ஹிந்து என்றானது. பின்னர் அதிலிருந்து ‘இந்தியா வந்தது.
Question 3.
சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
Answer:
ரிக் வேதத்திற்கும் அவஸ்தாவிற்கும் பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்கள் என்ற சொல்லைப் பண்டைக்கால பாரசீகர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மொழி பண்பாட்டு ஆய்வாளர் தாமஸ் பரோவின் கூற்றின்படி, உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறியிருக்கலாம்.
பொ. ஆ. மு. 1380 ஐச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கும், மிட்டன்னி அரசனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பற்றிக் கூறுகிறது. அது சில ரிக்வேத கடவுளர்களின் இந்தரா, உருவ்னா (வருணா), மித்ரா, நஸதயா (அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது.
Question 4.
அசோகரின் மூன்றாம் பௌத்த சங்கம் பற்றிக் கூறுக.
Answer:
- அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று. பொ. ஆ.மு. 250 இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த சங்கத்தைக் கூட்டியது ஆகும்.
- அசோகரது ஆழமான பௌத்த ஈடுபாட்டால் பௌத்த மதத்திற்கு அரசு அதரவு கிட்டியது.
- பௌத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பௌத்த மதத்திற்கு மாற்ற பிரச்சாரகாரர்களை அனுப்பவும் வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கியமான முடிவாகும்.
- இவ்வாறாக பௌத்தம் மதமாற்றம் செய்யும் மதமாகவும் மாறியது.
IV. விரிவான விடை தருக :
Question 1.
மௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.
Answer:
மௌரிய பேரரசு பற்றி அறிந்துகொள்வதற்கு பல வகையான சான்றுகள் கிடைத்துள்ளன.
1. இலக்கிய ஆதாரங்கள்
2. தொல்லியல் சான்றுகள்
3. அசோகரின் கல்வெட்டுகள்
4. பிற சான்றுகள்
1. இலக்கிய ஆதாரங்கள் :
- இந்து மத இலக்கியமான பிராமணங்கள்
- இலங்கையில் கிடைத்த பாலி மொழி நூலான மகாவம்சம் ஆகியவைகளில் மௌரிய பேரரசு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது.
- சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியர்களின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக கூறுகிறது.
- விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல் மற்றொரு சிறந்த இலக்கிய சான்றாகும்.
2. தொல்லியல் சான்றுகள் :
- வரலாற்றின் தொடக்க காலம் பற்றி அறிந்துகொள்ள தரும் முக்கியமான சான்றாக விளங்குகிறது.
- தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத்தோற்றம், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களில் கட்டுமானம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
- அக்கால மக்களுக்குத் தெரிந்திருந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் அன்றாட வாழ்வியல் பண்பாடு குறித்த தகவல்களையும் அறிய முடிகிறது.
3. அசோகரின் கல்வெட்டுகள் :
- மௌரிய அரசின் அனைத்து கல்வெட்டு | கட்டளைகள் ஒரு பெரிய அரசரைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.
- பல கல்வெட்டுக் கட்டளைகளின் பொருளும் ஒவ்வொன்றாகக் கண்டறியப்பட்டபோது, பொ. ஆ. 1915 இல் அந்த அரசர் அசோகர் தான் என உறுதிசெய்யப்பட்டது. இது மௌரிய வரலாற்றை
மறு உருவாக்கம் செய்தவதை சாத்தியமாக்கியது.
4. பிற சான்றுகள் :
- குஜராத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் பாறைக்கல்வெட்டு – ருத்ரதாமன் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. இது தரும் செய்தி .
- மேற்கே வெகு தூரத்திற்கு குஜராத் வரை மௌரிய பேரரசு பரவி இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. .
- சந்திரகுப்தர் இறந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலும் நாட்டின் பல பகுதிகளில் அறியப்பட்டவராக இருந்திருக்கிறார்.
- வாய்மொழிக் கதையாடல் பாரம்பரியங்களின் முக்கியத்துதுவத்தினை உறுதிப்படுகின்றன. அவை தற்போது ஒரு நம்பகமான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்படுகின்றன.
Question 2.
மௌரிய ஆட்சியமைப்பின் முக்கியக் கூறுகளை விவரிக்கவும்.
Answer:
- கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்றும் பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
- அதிகாரமுறை என்பது கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என்ற படி நிலைகளைக் கொண்டதாக இருந்தது.
மாகாண நிர்வாகம் :
- நாட்டின் நிர்வாகத்தலைவர் அரசர்.
- அரசருக்கு உதவியாக அமைச்சர்கள், மதகுரு. மகாமாத்தியர்கள் என்ற செயலாளர்கள் இருந்தனர்.
- தலைநக;ா பாடலிபுத்திரம் நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டது.
- எஞ்சியப் பகுதிகள் சுவர்ணகிரி, உஜ்ஜயினி, தட்சசீலம், தோசாலி என நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு அரசரின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டன.
- ஒரே மாதிரியான நிதி வருவாய் மற்றும் நிதி நிர்வாகம் இருந்தது. வரி வசூல் சமஹர்த்தா என்பவரின் பொறுப்பாக இருந்தது. இவர் நிதி அமைச்சர் போல் இருந்தார்.
- வரி வசூல் குறித்த ஆவணங்களை நிர்வகிப்பது கருவூல நிர்வாகியின் பொறுப்பு.
- ஒவ்வொரு துறையிலும், மத்திய மற்றும் உள்ளூர் நிர்வாகங்களோடு இணைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பாளர்களும் துணை அதிகாரிகளும் இருந்தனர்.
மாவட்ட, நகர மற்றும் கிராம நிர்வாகம்:
- மாவட்ட நிர்வாகம், ஸ்தானிகர் என்பவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. கோபா என்று அழைக்கப்பட்ட அதிகாரிகள் ஐந்து முதல் பத்து கிராமங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
- நகர நிர்வாகம் நகரகா என்பவர் வசம் இருந்தது.
- கிராமங்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்றிருந்தன. கிராமணி என்பவரின் அதிகாரத்தின் கீழ் ஒவ்வொரு கிராமமும் இயங்கியது.
வருவாய் ஆதாரம் :
- பொருளாதாரத்தில் மிக முக்கியமான வேளாண்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில், வேளாண்மை உற்பத்திகளை சேமிக்க கிடங்குகள் இருந்தன . கட்டுப்படுத்தப்பட்ட சந்தை வசதிகள் இருந்தன.
- நிலவரி, நீர்பாசன வரி, வீட்டு வரி, சுங்க வரி மற்றும் நுழைவு வரி உள்ளீட்ட பிற வரி வருவாய்களும் இருந்தன.
- காடுகள், சுரங்கங்கள் ஏகபோகமாக இருந்த உப்பு உற்பத்தி ஆகியவை வருவாய்க்கான முக்கியமான ஆதாரங்களாகும்.
நீதி ஆதாரம் :
நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்பட்டது. தர்மஸ்தியா, கந்தகோசந்தனா என்ற இரண்டு வகை நீதிமன்றங்கள் இருந்தன.
தர்மஸ்தியா :
திருமணம் வாரிசுரிமை உள்ளிட்ட குடியுரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தன. இதில் மதச்சட்டங்கள் நன்கு தெரிந்த மூன்று நீதிபதிகளும் மூன்று அமர்த்தியாக்களும் இருந்தன.
கந்தகோசந்தனா :
- இதன் பணி சமூக விரோதிகளையும், பல்வேறு விதமான குற்றங்களையும் அகற்றுதலாகும். இதிலும் மூன்று நீதிபதிகளும், மூன்று செயலாளர்களும் இருந்தனர்.
- சமூக விரோதச் செயல்களை அறிய ஒற்றர் முறை இருந்தது.
- குற்றங்களுக்கான தண்டனை மிகக் கடுமையாக இருந்தது.
- மனித நேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன்மாதிரி அரசாக மௌரியப் பேரரசு இருந்துள்ளது.
Question 3.
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
Answer:
பாரசீக தொடர்பு பண்டைய இந்தியாவின் கலை, எழுத்து முறை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எழுத்து முறை :
மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்து முறையின் வளர்ச்சியாகும். இந்த கரோஷ்டி எழுத்தை காந்தாரப்பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.
இது ஆக்கி மீனைட் பேரரசில் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும் வலது புறம் இருந்து இடது புறமாக எழுதப்படும் எழுத் முறையாகும்.
நாணயம் :
பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும் நாணயத்திற்கான இந்தியச் சொல்லான “கார்சா” பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
கல்வெட்டு :
அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் ஆக்கிமினைட் அரசர் டாரியஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கலாம்.
கட்டிடக்கலை:
மௌரியக் கலைகளும் கட்டிடக் கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களை கொண்டுள்ளன. மௌரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமினைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன.
தூண்களின் முகட்டில் உள்ள மணி போன்ற உச்சி குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உள்ளவை ஆக்கிமினைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஒத்தே உள்ளன.
Question 4.
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.
Answer:
- அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் மௌரியப் பேரரசு பற்றிய தகவல்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றுகளாகத் திகழ்கின்றன.
- 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும்.
- 2 கல்வெட்டுக் கட்டளைகள்
- 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள்
- சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள்
- மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டு கட்டளைகள் கிடைத்துள்ளன.
- இந்த மௌரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கில் பரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது.
இரண்டாவது அரசாணை அவரது பேரரசின் எல்லைக்கு வெளியேயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது. அவை; “சோழர்கள், பாண்டியர்கள், சத்திய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி, யோன (யவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகாஸ் அருகில் இருந்த நாடுகளின் அரசர்கள்.
இந்த அரசாணை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிகை, மக்களது நல்வாழ்வின் மீது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன.
வன்முறை, போர் ஆகியவற்றை நிராகரித்து, அமைதியையும் தர்மத்தையும் வலியுறுத்தியதன் மூலம் அசோகர் ஒரு பேரரசர் போர்கள் மூலம் தனது அரசை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும் என்று அக்காலத்தில் நிலவி வந்த கொள்கையை முற்றிலும் நிராகரித்தார்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.
Answer:
அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர். நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது.
அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜிக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு அறிவுறுத்தினார்.
எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும் அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும் நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசாகரின் கட்டளைகளாக இருந்தன.
தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.
அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்பட வேண்டும் என்று கூறினார்.
மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார்.
தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துக்களில் ஒன்று.
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன் மாதிரியாகக் கொள்ளத் தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம்.
Question 2.
பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.
Answer:
பாடலிபுத்திரம் மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரமாகும். இது கங்கையின் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைநகரத்தின் வடிவில் இருந்த பெரிய செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.
இது 14 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச்சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்க 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.
சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. பாாதுகாப்பிற்காகவும், கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன.
அதன் மக்கள்தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மானித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.
காலக்கோடு வரைக.
V. பேரரசு உருவாக்க காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து காலக்கோடு வரைக.
நிகழ்ச்சி | ஆண்டுகள் |
1. சைரஸ் (பாரசீகப் பேரரசர்) படையெடுப்பு | பொ.ஆ.மு. 530 |
2. நந்தர்கள் மகதத்தில் தங்களது பேரரசைத் தோற்றுவித்தல் | பொ. ஆ. மு. 362 |
3. அலெக்சாண்டரின் படையெடுப்பு | பொ. ஆ. மு. 326 |
4. சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தல் | பொ. ஆ. மு. 321 |
5. சந்திரகுப்தரால் செலியுகஸ் தோற்கடிக்கப்படுதல் | பொ. ஆ. மு. 301 |
6. சந்திரகுப்தருக்குப் பின் பிந்துசாரர் ஆட்சியில் அமர்தல் | பொ. ஆ. மு. 297 |
7. அசோகர் தலைமையில் மூன்றாம் பௌத்த சங்கம் கூடியது | பொ. ஆ. மு. 250 |
8. அசோகரின் மறைவு | பொ.ஆ. மு. 231 |