Students can Download 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
இ) வலிமையை நிலைநாட்டல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

குறுவினா

Question 1.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 1

சிறுவினா

Question 1.
அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
Answer:

  • இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை வஞ்சித்திணை’ ஆகும்.
  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.
  • அவந்தி நாட்டுமன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர் புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு வஞ்சித்திணைக்குப் பொருந்தி வருகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….
அ) புறத்திணை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறத்திணை

Question 2.
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஒன்பது
ஆ) பதினொன்று
இ) பன்னிரண்டு
ஈ) பதிமூன்று
Answer:
இ) பன்னிரண்டு

Question 3.
வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) மல்லிகைப்பூ
ஆ) இட்லிப்பூ
இ) சங்குப்பூ
ஈ) உன்னிப்பூ
Answer:
ஆ) இட்லிப்பூ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 4.
ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….
அ) பெருந்திணை
ஆ) பொதுவியல்
இ) கைக்கிளை
ஈ) கொடையை
Answer:
இ) கைக்கிளை

Question 5.
‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?
அ) போர்
ஆ) வெற்றி
இ) ஆநிரைமீட்டல்
ஈ) மதில் வளைத்தல்
Answer:
ஆ) வெற்றி

Question 6.
‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) முல்லை
ஈ) பாலை
Answer:
ஆ) மருதம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 7.
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….
அ) கோட்டையைக் காக்க
ஆ) மன்னனைக் காக்க
இ) ஆநிரைக் கவர
ஈ) வலிமையை நிலைநாட்ட
Answer:
அ) கோட்டையைக் காக்க

Question 8.
பாடாண் திணை பிரித்து எழுதுக.
அ) பாடாண் + திணை
ஆ) பாடாண் + ஆண் + திணை
இ) பாடு + ஆண் + திணை
ஈ) பாட + ஆண் + திணை
Answer:
இ)பாடு+ஆண்+திணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 9.
காஞ்சி என்பது ஒரு வகை …………………….
அ) நெடுமரம்
ஆ) குறுமரம்
இ) குறுஞ்செடி
ஈ) புதர்ச்செடி
Answer:
ஆ) குறுமரம்

Question 10.
போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….
அ) கோட்டை வளைத்தல்
ஆ) போரிடல்
இ) ஆநிரை கவர்தல்
ஈ) கோட்டை காத்தல்
Answer:
இ) ஆநிரை கவர்தல்

Question 11.
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.
அ) கோட்டையை
ஆ) ஆநிரைகளை
இ) நிலத்தை
ஈ) வீரத்தை
Answer:
ஆ) ஆநிரைகளை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 12.
மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….
அ) பாடாண் திணை
ஆ) பொதுவியல் திணை
இ) வாகைத் திணை
ஈ) நொச்சித் திணை
Answer:
அ) பாடாண் திணை

Question 13.
அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.
அ) அகப்பொருள்
ஆ) புறப்பொருள்
இ) நுண்பொருள்
ஈ) ஐவகைநிலம்
Answer:
அ) அகப்பொருள்

Question 14.
கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….
அ) வெட்சி
ஆ) வஞ்சி
இ) கரந்தை
ஈ) உழிஞை
Answer:
இ) கரந்தை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 15.
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்
2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்
3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 17.
பொருத்துக.
1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்
2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்
3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்
4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
அ) 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 19.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4

Question 20.
அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்
அ) கைக்கிளை, பெருந்திணை
ஆ) பொதுவியல், பாடாண்
இ) வெட்சி, கரந்தை
ஈ) நொச்சி, உழிஞை
Answer:
அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.
முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப் பூ
இ) வெட்சிப் பூ
ஈ) நொச்சிப் பூ
Answer:
அ) உழிஞைப் பூ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 22.
மருத நிலத்திற்குரியப்பூ …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப்பூ
இ) வெட்சிப்பூ
ஈ) நொச்சிப்பூ
Answer:
ஈ) நொச்சிப்பூ

Question 23.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்
ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்
இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்
Answer:
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்
ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்
இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி
Answer:
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

குறுவினா

Question 1.
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சி
  • கரந்தை
  • வஞ்சி
  • காஞ்சி
  • நொச்சி
  • உழிஞை
  • தும்பை
  • வாகை
  • பாடாண்
  • பொதுவியல்
  • கைக்கிளை
  • பெருந்திணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 2.
நொச்சிப் பூக்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answer:
மணிநொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெண் நொச்சி – போன்றவையாகும்.

Question 3.
தும்பைத் திணையை விளக்குக.
Answer:
பகை கொண்ட வேந்தர்கள் இருவரும் ‘தம் வலிமையே பெரிது’ என்பதை நிலை நாட்டும் பொருட்டு தம் வீரர்களுடன் தும்பைப் பூச்சூடி களம் குறித்துப் போரிடுதல் ஆகும்.

Question 4.
பாடாண் திணையை விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை எனப் பிரிக்கப்படும்.
  • பாடப்படும் ஆண்மகனது, கல்வி, வீரம், செல்வம், புகழ், ஈகை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது.
  • போரை மட்டும் சொல்லாது ஒருவரின் பிற மாண்புகளையும் குறிப்பிடுவதே பாடாண்திணையாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 5.
பொதுவியல் திணையை விளக்குக.
Answer:
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

Question 6.
புறத்திணை என்பது யாது?
Answer:
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணையாகும்.

Question 7.
ஆநிரை கவர்தல் நடைபெறக் காரணம் யாது?
Answer:

  • மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளை (மாடுகளை) சொத்தாகக் கருதினர்.
  • ஒரு குழுவினர் மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாயிற்று.
  • போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

Question 8.
போரிடும் அரசர்கள் இருவரும் ஒரே வகைப் பூவைச் சூடுவர் – எப்போது? எவ்வகைப்பூ?
Answer:
பகை மன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 9.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் : எட்டு

  • வெட்சிப்பூ – வெட்சித்திணை
  • கரந்தைப் பூ – கரந்தைத் திணை
  • வஞ்சிப்பூ – வஞ்சித்திணை
  • காஞ்சிப்பூ – காஞ்சித்திணை
  • நொச்சிப்பூ – நொச்சித்திணை
  • உழிஞைப்பூ – உழிஞைத்திணை
  • தும்பைப்பூ – தும்பைத்திணை
  • வாகைப்பூ – வாகைத்திணை

Question 10.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் : நான்கு.
அவை: பாடாண் திணை, பொதுவியல் திணை, கைக்கிளை, பெருந்திணை

Question 11.
தொல்காப்பியர் காலத்தில் அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள் யாவை?
Answer:
கைக்கிளை, பெருந்திணை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 12.
மதில் போர் பற்றிய திணைகள் யாவை?
Answer:
நொச்சித்திணை, உழிஞைத்திணை.

Question 13.
ஆநிரை பற்றிய திணைகள் யாவை?
Answer:
வெட்சித்திணை, கரந்தைத்திணை.

Question 14.
எதிர் எதிர் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சித்திணை (கவர்தல்)
  • காஞ்சித்திணை (எதிர்போரிடல்)
  • கரந்தைத்திணை (மீட்டல்)
  • நொச்சித்திணை (கோட்டை காத்தல்)
  • வஞ்சித்திணை (மண்ணாசை கருதிப் போரிடல்)
  • உழிஞைத்திணை (கோட்டை முற்றுகையிடல்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 15.
வெற்றிப்பூ எது?
Answer:
வெற்றிப்பூ : வாகை
போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு வாகைப்பூ சூடி மகிழ்வர்.

Question 16.
கல்வி, செல்வம், வீரம் முதலியவற்றைப் புகழ்ந்து பாடும் புறத்திணை எது?
Answer:
பாடாண் திணை.

Question 17.
புறப்பொருள் பற்றி உரையாடியவர்கள் யாவர்?
Answer:

  • கிள்ளிவளவன் : முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்
  • சேரலாதன் : பத்தாம் வகுப்பு மாணவர்

Question 18.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெரும்போர் நடக்கின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் :
பகைமன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப்பூவைச் சூடிப் போரிடுவர். இது தும்பைத் திணை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

விளக்கம் :
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தங்கள் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் போரிடுவதால், இதனைத் தும்பைத் திணையாகக் கொள்ளலாம்.

Question 19.
மலைப்பகுதியில் அரியதாகக் கிடைக்கும் நெல்லிக்கனி. அது நீண்ட ஆயுள் தரும். அதியனே நீவிர் உண்ணாது. எம் சாதல் ஒழிய கொடுத்த பெருமகனே என்று வாழ்த்துகிறார் ஔவையார். இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணம் :
பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது பாடாண் திணையாகும்.

விளக்கம் :
அதியமானின் புகழை ஒளவையார் பாடுவதால், இஃது பாடாண் திணையாகும்.

சிறுவினா

Question 1.
புறத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை? விளக்குக.
Answer:
புறத்திணை 12 வகைப்படும். அவை:

  • வெட்சித்திணை – நிரை கவர்தல்
  • கரந்தைத்திணை – நிரை மீட்டல்
  • வஞ்சித்திணை – வஞ்சிப்பூ சூடி போருக்குச் செல்லுதல்
  • காஞ்சித்திணை – காஞ்சிப்பூ சூடி எதிர்த்துப் போரிடல்
  • நொச்சித்திணை – கோட்டையைக் காக்க உள்ளிருந்து போரிடுதல்
  • உழிஞைத்திணை – கோட்டையைக் கைப்பற்ற சுற்றி வளைத்தல்.
  • தும்பைத்திணை – வலிமையை நிலைநாட்ட களம் குறித்துப் போரிடுதல்
  • வாகைத்திணை – போரில் வெற்றி பெற்றவன் வாகை சூடி மகிழ்தல்
  • பாடாண்திணை – போரை மட்டும் சொல்லாது மன்னனின் பேராண்மைகளைப் பாடுவது
  • பொதுவியல் – புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
  • கைக்கிளை பெருந்திணை – ஒருதலைக்காமம்
  • பெருந்திணை – பொருந்தாக்காமம்
  • Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.
Answer:

மருத நிலம்

பண்டைய சங்க இலக்கிய காலத்தில், பூகோள அடிப்படையில் (நில அமைப்புப்படி) தமிழ்நாடு ஐந்து வகையாக இருந்தது. அவற்றுள் மருத நிலப்பகுதியே உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. அந்த நிலப்பகுதியில் விவசாயிகள் (உழவர்கள்) பயன்பெறும் வகையான தேவையான பருவ காலங்கள் சிறந்திருந்தது. தேவையான சூரிய வெப்பம், வளமான நிலம், போதுமான அளவு மழையும் இருந்தது. அதனால் விவசாயம் செழித்தது. மருத நிலத்தின் இயற்கைக் கூறுகளாலும், போதுமான சூரிய வெப்பத்தினாலும் பழந்தமிழகத்தில் மருதநிலத்தில் உழவுத்தொழில் சிறந்திருந்தது.

பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

வரப்போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்.
இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்
Answer:
வரப்போகிறேன்
என் நண்பன்  இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன் என்றான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

இல்லாமல் இருக்கிறது
எங்கள் நாடு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

கொஞ்சம் அதிகம்
சங்ககாலத்தில் மன்னர்களுக்கு காதலும் வீரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

முன்னுக்குப் பின்
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது நன்றன்று.

மறக்க நினைக்கிறேன்.
எனக்கு பிடிக்காத நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்.

தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.
Answer:
தொகைச் சொற்கள்
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கடிதம் எழுதுக.

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
ஆர். இராகவன்,
16, பெரியகடைவீதி,
மதுரை.

பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
‘கனல்’ நாளிதழ்,
மதுரை.

பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல் – தொடர்பாக.

மதிப்பிற்குரிய ஐயா,

தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். அக்கட்டுரையைத் தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளேன். தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் என் கட்டுரையும் வெளிவர ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இடம் : மதுரை
நாள் : 8.3.2020

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர். இராகவன்.

உறைமேல் முகவரி:

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 3

கவிதையை உரையாடலாக மாற்றுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 11
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 4
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

மொழியோடு விளையாடு

ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 12
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 6

படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 7
Answer:
செய்தி :
பகை கொண்ட வேற்று நாட்டு மன்னனை எதிர்த்துப் போரிட வஞ்சிப்பூ சூடி வென்றே தீருவோம் என குதிரைப்படை, காலாட்படை, யானைப்படையோடு முன்னேறிச்செல்லும் 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

அகராதியில் காண்க.

மிரியல், வருத்தனை, அதசி, துரிஞ்சில்
Answer:
மிரியல் – மிளகு
வருத்தனை – பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்.
அதசி – சணல்
துரிஞ்சில் – வௌவால்வகை, சீக்கரிமரம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 8
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 9

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

கலைச்சொற்கள் அறிவோம்.

  • Consulate – துணைத்தூதரகம்
  • Guild – வணிகக்குழு
  • Patent – காப்புரிமை
  • Irrigation – பாசனம்
  • Document – ஆவணம்
  • Territory – நிலப்பகுதி

நிற்க அதற்குத் தக

அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியவர் பெயர், நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள். இவை நமது இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை.

அதுபோலவே கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம்பெற்றிருக்கும். அவை நம் பழம்பெருமையையும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்று அறிவீர்கள்தானே? இவற்றைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்….
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 10