Students can Download 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ – என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்?
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
Answer:
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

குறுவினா

Question 1.
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
Answer:
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாதவகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

சிறுவினா

Question 1.
பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
Answer:
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி, பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்திக் காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை . ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து:
பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை . இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

நெடுவினா

Question 1.
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி - 1
முன்னுரை:
நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தி பாடல், சோழநாட்டின் வளத்தையும். மன்னனின் சிறப்பையும் நயமுடன் எடுத்துரைக்கிறது.

சோழ நாட்டின் வளம்:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி - 2

மன்னனின் சிறப்பும் பெருமையும் :
மன்னன் மக்களுக்குக் காவல் தெய்வமாக, தாயாக, தந்தையாக இருக்கிறான். மகன் இல்லாதோர்க்கு மகனாக இருக்கிறான். உலக உயிர்களுக்கு உயிராக, விழியாக, மெய்யாக, புகழ் பெற்ற நூலாக புகழ் அனைத்துக்கும் தலைவனாக விளங்குகிறான்.

முடிவுரை :
சோழ அரசனின் பெருமையும் அவன் காலத்தில் நாடு பெற்றிருந்த வளத்தையும் மெய்க்கீர்த்திப்பாடல் வழியாக நயம்பட உரைக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

வருபுனல் – வினைத்தொகை
இளமான் – பண்புத்தொகை
மாமலர் – உரிச்சொல் தொடர்
எழு கழனி – வினைத்தொகை
நெடுவரை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

கடிந்து கடி த்(ந்) த் உ

கடி – பகுதி
த்(ந்) – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

Question 1.
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்……………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) குறுந்தொகை
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 2.
பல்லவர் கால கல்வெட்டும், பாண்டியர் கால செப்பேடும் சோழர் காலத்தில் எனப் ………………………பெயர் பெற்றது.
அ) மெய்க்கீர்த்தி
ஆ) மெய்யுரை
இ) நூல்
ஈ) செப்பம்
Answer:
அ) மெய்க்கீர்த்தி

Question 3.
………………………இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
அ) இளஞ்சேரலாதன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) இராஜேந்திர சோழன்
ஈ) முதலாம் இராசராசன்
Answer:
ஆ) இரண்டாம் இராசராசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
சோழநாட்டில் பிறழ்ந்தொழுகுவது………………………
அ) இளமான்கள்
ஆ) யானைகள்
இ) மக்கள்
ஈ) கயற்குலம்
Answer:
ஈ) கயற்குலம்

Question 5.
‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………………………
அ) காடுகள்
ஆ) மலைக்குகை
இ) கடல்
ஈ) யானைகள்
Answer:
அ) காடுகள்

Question 6.
‘இயற்புலவரே பொருள் வைப்பார்’ – எதில்?
அ) இல்லத்தில்
ஆ) மன்றத்தில்
இ) செய்யுளில்
ஈ) சான்றோர் அவையில்
Answer:
இ) செய்யுளில்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 7.
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்………………………
அ) பொருள்
ஆ) முன்னுரை
இ) நூல்
ஈ) கோல்
Answer:
இ) நூல்

Question 8.
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………………………
அ) இரண்டாம் இராசராசன்
ஆ) குலோத்துங்கன்
இ) முதலாம் இராசராசன்
ஈ) விக்கிரம சோழன்
Answer:
அ) இரண்டாம் இராசராசன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 9.
யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?
அ) பல்ல வர்
ஆ) பாண்டியர்
இ) முதலாம் இராசராசன்
ஈ) இராஜேந்திர சோழன்
Answer:
இ) முதலாம் இராசராசன்

Question 10.
இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்………………………
அ) 81
ஆ) 91
இ) 101
ஈ) 112)
Answer:
ஆ) 91

Question 11.
அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது………………………
அ) செப்பேடு
ஆ) சிற்பங்கள்
இ) ஓவியம்
ஈ) மெய்க்கீர்த்தி
Answer:
ஈ) மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 12.
சோழநாட்டில் சிறைப்படுவன………………………
அ) மா
ஆ) வண்டுகள்
இ) வருபுனல்
ஈ) காவுகள்
Answer:
இ) வருபுனல்

Question 13.
திசாபாலர் ………………………ஆவார்
அ) அறுவர்
ஆ) எழுவர்
இ) எண்மர்
ஈ) பதின்மர்
Answer:
இ) எண்மர்

Question 14.
பொருத்துக.
1. பிணிப்பு – அ) நீர்
2. புனல் – ஆ) கட்டுதல்
3. கழனி – இ) இருள்
4. மை – ஈ) வயல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 15.
பொருத்துக.
1. முகம் – அ) மலை
2. வரை – ஆ) செவிலித்தாய்
3. கைத்தாய் – இ) நூல்
4. பனுவல் – ஈ) முன்னுரை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. யானை – அ) புலம்புகின்றன
2. சிலம்புகள் – ஆ) பிணிக்கப்படுவன
3. ஓடைகள் – இ) வடுப்படுகின்றன
4. மாங்காய்கள் – ஈ) கலக்கமடைகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 17.
பொருத்துக.
1. மலர்கள் – அ) பறிக்கப்படுகின்றன
2. காடுகள் – ஆ) தேன் உண்ணுகின்றன
3. வண்டுகள் – இ) கொடியன
4. மலை மூங்கில்- ஈ) உள்ளீடு இன்றி வெறுமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 18.
பொருத்துக.
1. நெற்கதிர்கள் – அ) இருள் சூழ்ந்திருக்கின்றன
2. மலைகள் – ஆ) மருள்கின்றன
3. மான்களின் கண்கள் – இ) பிறழ்ந்து செல்கின்றன
4. குளத்து மீன்கள் – ஈ) போராக எழுகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 19.
பொருத்துக.
1. செவிலித்தாய் – அ) பொருள் பொதிந்து கிடக்கின்றது.
2. புலவர் பாட்டு – ஆ) தெருவில் ஆடிப்பாடுபவர்.
3. இசைப்பாணர் – இ) பிறழ்ந்து செல்கின்றன.
4. குளத்து மீன்கள் – ஈ) சினங்காட்டுவார்.
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 20.
சொற்றொடரை முறைப்படுத்துக.
i) கல்தச்சர்களால்
ii) புலவர்களால் எழுதப்பட்டு
iii) மெய்க்கீர்த்திகள்
iv) கல்லில் பொறிக்கப்பட்டவை
அ) (ii)-(ii)-(i)-(iv)
ஆ) (ii)-(i)-(i)-(iv)
இ) (i)-(iii)-(iv)-(ii)
ஈ) (iv)-(iii)-(i)-(ii)
Answer:
அ) (iii)-(ii)-(i)-(iv)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 21.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) யானைகள் பிணிக்கப்படும் – மக்கள் பிணிக்கப்படுவதில்லை
ஆ) சிலம்புகள் புலம்பும் – மக்கள் புலம்புவதில்லை
இ) ஓடைகள் கலக்கமடையும் – மக்கள் கலக்கமடைவதில்லை
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்
Answer:
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்

Question 22.
செப்பமான வடிவம் பெற்றது, கல்லிலக்கியமாய் அமைந்தது………………………
அ) கல்வெட்டு
ஆ) மெய்க்கீர்த்தி
இ) செப்பேடு
ஈ) இலக்கியம்
Answer:
ஆ) மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 23.
தந்தையில்லாதவருக்குத் தந்தையாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 24.
தாயில்லாதவருக்குத் தாயாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 25.
மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 26.
உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 27.
விழி பெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூ லாகவும் திகழ்பவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 28.
புகழ் அனைத்திற்கும் தலைவனானவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

குறுவினா

Question 1.
இரண்டாம் இராசராசனின் பட்டங்கள் யாவை?
Answer:
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி ஆகியவையாகும்.

Question 2.
திசாபாலர் எண்மர் யாவர்? (அல்லது) திசைபாலகர் எட்டு பேர் யாவர்?
Answer:
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயகுபேரன், ஈசானன் ஆவர்.

Question 3.
இராசராசனின் நாட்டில் புலம்புவதும், அடைக்கப்படுவதும் எது?
Answer:

  • சோழமன்னனின் ஆட்சியில் சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் எதனை நினைத்தும் துன்புற்றுப் புலம்புவதில்லை
  • நீர் மட்டுமே தேக்கி வைக்கும் பொருட்டு அடைக்கப்படும். மக்கள் எதற்காகவும் சிறைப்படுத்தி அடைக்கப்படுவதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
காவல்நெறி பூண்டு ஆண்டவன் இராசராசன் என்பதை மெய்க்கீர்த்தி எவ்வாறு கூறுகின்றது?
Answer:

  • தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருந்தான்.
  • தாயில்லாதோருக்குத் தாயாய்த் திகழ்ந்தான்.
  • மகனில்லாதோருக்கு மகனாய் இருந்தான்.
  • உலகின் உயிர்களுக்கெல்லாம் உயிராக இருந்து காவல் நெறி. பூண்டு ஆண்டான் என்று மெய்க்கீர்த்தி போற்றுகிறது.

Question 5.
இராசராசசோழனின் புகழ் பற்றி எழுதுக.
Answer:

  • விழி பெற்ற பயனாகவும்,
  • மெய் பெற்ற அருளாகவும்,
  • மொழி பெற்ற பொருளாகவும்,
  • புகழ் பெற்ற நூல் போலும்
    புகழ் அனைத்திற்கும் தலைவனாய்ப் பெருமையுற்று நின்றான்.

Question 6.
‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை.
  • சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை
  • Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 7.
‘செல்லோடையே கலக்குண்பன
வருபுனலே சிறைப்படுவன’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன. ஆனால் மக்கள் கலக்கமடைவதில்லை.
  • புனல் (நீர்) மட்டுமே அடைக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் அடைக்கப்படுவதில்லை

Question 8.
‘மையுடையன நெடுவரையே
மருளுடையன இளமான்களே’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை.
  • இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.

Question 9.
‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இம்மெய்க்கீர்த்தி வரிகள் உணர்த்தும் பொருள் யாது?
Answer:
சோழ நாட்டில் :

  • குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை.
  • செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 10.
“தந்தையில்லோர்க்கு தந்தையாகியுந் தாயாரில்லோர் தாயாராகி” இருப்பவர் யார்?
Answer:
தந்தையில்லாதவருக்குத் தந்தையாகவும், தாய் இல்லாதவருக்குத் தாயாகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.

Question 11.
மைந்தரில்லோர்க்கு மைந்தராகவும் மன்னுயிர்க்குயிராகவும் இருப்பவர் யார்? மகன் இல்லாதவருக்கு மகனாகவும், உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராகவும் இருப்பவர் இராசராச சோழன் ஆவார்.

சிறுவினா

Question 1.
மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக.
Answer:

  • அரசர்கள் தம் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்.
  • பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம் சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.
  • மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம், ஆகியவற்றை ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 2.
இராசராச சோழன் மெய்க்கீர்த்தியில் எவற்றுக்கெல்லாம் உவமைப்படுத்தப்பட்டுள்ளான்?
Answer:

  • தந்தையில்லாதவருக்குத் தந்தை
  • தாயில்லாதவருக்குத் தாய்
  • மகனில்லாதவருக்கு மகன்
  • உலக உயிர்களுக்கு உயிர்
  • விழி பெற்ற பயன்
  • மெய் பெற்ற அருள்
  • மொழி பெற்ற பொருள்
  • புகழ்பெற்ற நூல்

– ஆகியவற்றுக்கெல்லாம் இராசராச சோழன் உவமைப்படுத்தப்பட்டுள்ளதாக மெய்க்கீர்த்திகள் மூலம் அறியலாம்.

Question 3.
சோழ நாட்டில் மையுடையன, மருளுடையன யாவை?
Answer:

  • ‘மை’ என்றால் இருள் என்று பொருள்.
  • சோழநாட்டின் மலைப்பகுதியும் மலைக்குகைகளுமே இருள் சூழ்ந்து காணப்படுவன.
  • மக்கள் தம் வாழ்வில் வறுமை இருள் சூழ்வதில்லை.
  • மருள்’ என்பது ஒருவித பயஉணர்வு ஆகும்.
  • அத்தகு மருட்சி இளமான்களின் கண்களில் மட்டுமே காணப்படும். மக்கள் எதற்கும் மருட்சியடைவதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 4.
‘படியானையே பிணிப்புண்பன
வடிமணிச்சிலம்பே யரற்றுவன’ -இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் யானைகள் பிணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிணிக்கப்படுவதில்லை. சிலம்புகள் புலம்புகின்றன. ஆனால் மக்கள் புலம்புவதில்லை.

Question 5.
‘மையுடையன நெடுவரையே
மெருளுடையன இளமான்களே’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
AnsweR:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் நீண்ட மலையை இருள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் நாட்டில் வறுமை இருள் இல்லை. இளமான்கள் கண்கள் மருள்கின்றன. மக்கள் கண்களில் மருட்சி இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Question 6.
‘கயற்குலமே பிறழ்ந்தொழுகும்
கைத்தாயரே கடிந்தொறுப்பர்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள் விளக்கம் :
இராசராச சோழன் நாட்டில் குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன. ஆனால் மக்கள் நிலை பிறழ்வதில்லை. செவிலித்தாய் சினம் காட்டுவார். ஆனால் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.