Students can Download 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.3 மலைபடுகடாம்

கற்பவை கற்றபின்

Question 1.
உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டி அவை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைக்க.
Answer:
அ) எ.கா : ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’
கதை – எறும்பும் புறாவும் :
குளத்து நீரில் விழுந்து தத்தளித்த எறும்பைத் தக்க சமயத்தில் புறாவானது ஓர் இலையைப் பறித்துப் போட்டு எறும்பை அதன்மீது ஏறி கரைக்கு வரச் செய்தது. செய்நன்றி மறவாத எறும்பானது மறுமுறை புறாவைக் கொல்ல வந்த வேடனின் காலைக் கடித்ததால் அவன் எய்த அம்பு தவறியது புறா காப்பாற்றப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

ஆ) எ.கா : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
கதை :
பல நாட்கள் பட்டினியாகக் கிடந்த எலி ஒன்று தானியங்கள் நிரப்பப்பட்ட ஓர் உயரமான பானையைப் பார்த்தது. உயரத்தில் ஏற முடியாத காரணத்தால் எலியானது பானையின் அடியில் உள்ள ஓட்டையின் வழியே உள்ளே சென்றது. அளவுக்கு அதிகமான தானியங்களை உண்டதால் வயிறு புடைந்தது. ஓட்டையை விட்டு வெளியேற முடியாத எலி மீண்டும் மீண்டும் முயன்று அதன் வயிறு கிழிந்தது. ஓட்டையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலே வலியால் துடித்துச் செத்தது.

Question 2.
பத்தியைப் படித்து வார இதழ் ஒன்றிற்கு அனுப்பும் வகையில் சமையல் குறிப்பாக மாற்றுக.
Answer:
கம்மங்கூழ் தயாரித்தல் :
பொசுக்குகிறது வெயில், ஒரு துளி மழை பட்டால் வறுத்த உளுத்தின் வாசம் பரப்பும் வறண்ட மண். வெடித்த நிலம் செழித்து விளைகிறது கம்மம் பயிர். உரலில் குத்தி, சுளகில் புடைக்க அதன் உழி நீங்கும். நீர் தெளித்துத் தெளித்து, மீண்டும் உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். உப்புக் கலந்து உலையில் ஏற்றி, கொதிக்கும் நீரில் கரையவிட்டுக் கிண்ட, கட்டியாகி அது சோறாகும். கம்மஞ் சோற்றை உருட்டி வைத்து, பின் மோர் விட்டுக் கரைத்தால் அது கம்மங்கஞ்சி அல்லது கம்மங்கூழ், மோர் மிளகாய் வற்றல், உப்பில் தோய்த்த பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயம் கடித்துக் கஞ்சியைக் குடித்தால் உச்சி தொட்டு உள்ளங்கால் வரை தேகம் குளிர்ந்து போகும், அனல் அடங்கும். உயிர் வரும் கம்பு கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

கம்மங்கூழ் : (தேவையான பொருட்கள்)

கம்மம் பயிர் – 2 கைப்பிடி
உப்பு – தேவைக்கு ஏற்ப
நீர் – தேவைக்கு ஏற்ப
மோர் – அரை லிட்டர்
மோர் மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
பச்சை மிளகாய் (அல்லது) சின்ன வெங்காயம் – தேவைக்கு ஏற்ப

செய்முறை :
கம்மம் பயிரை நீர் தெளித்துத் தெளித்து உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். அதனுள் தேவையான அளவு நீரும் உப்பும் சேர்த்து உலையிலிட்டால் அது இறுகி சோறாகும். அந்தச் சோற்றுடன் மோர் விட்டுக் கரைத்தால் கம்மங்கூழ் தயார். மோர் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு இக்கஞ்சியைக் குடிக்கலாம்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது
அ) புத்தூர்
ஆ) மூதூர்
இ) பேரூர்
ஈ) சிற்றூர்
Answer:
ஈ) சிற்றூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

குறுவினா

Question 1.
‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
Answer:
தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

சிறுவினா

Question 1.
முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 1

Question 2.
கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
Answer:
வழிகாட்டல் :
பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்கள், மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

நன்னனின் கூத்தர்கள் :
பகைவரே இல்லாமல் ஆட்சிசெய்பவன், பகை வந்தாலும் எதிர்கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

இன் சொற்கள் :
நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.

உணவு : நெய்யில் வெந்த மாமிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நெடுவினா

Question 1.
ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 2

முன்னுரை:
அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றுப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

உணவு:
அன்றைய பாணர்கள் கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:
கல்வி கற்க முடியாதவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பலர் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:
இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு போக்கப்படுகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

நன்னடை:
சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய்ய இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:
வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றுப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

இலக்கணக் குறிப்பு.

அசைஇ, கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்
பரூஉக், குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடைகள்
எய்தி – வினையெச்சம்
பொழிந்த – பெயரெச்சம்
சேர்ந்த – பெயரெச்சம்
கூறி – வினையெச்சம்
புக்கு – வினையெச்சம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

பகுபத உறுப்பிலக்கணம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) அசைஇ – 1. சுற்றம்
ii) அல்கி – 2. கன்றின் நெருப்பு
iii) கன்று எரி – 3. இளைப்பாறி
iv) கடும்பு – 4. தங்கி
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 1, 2, 3, 4,
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 3, 4, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 2.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) ஆரி – 1. பள்ள ம்
ii) நரலும் – 2. கூத்தர்
ii) படுகர் – 3. அருமை
iv) வயிரியம் – 4. ஒலிக்கும்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
ஆ) 3, 4, 1, 2

Question 3.
பொருந்தாத பொருளுக்கான இணை எது?
அ) வேவை – வெந்தது
ஆ) இறடி – தினை
இ) பொம்மல் – சோறு
ஈ) நரலும் – சுற்றம்
Answer:
ஈ) நரலும் – சுற்றம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 4.
மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
ஆ) பத்துப்பாட்டு

Question 5.
மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?
அ) 483
ஆ) 543
இ) 583
ஈ) 643
Answer:
இ) 583

Question 6.
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) விறலியாற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
ஈ) கூத்தராற்றுப்படை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 7.
மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது
அ) யானை
ஆ) மேகம்
இ) மான்
ஈ) வானம்
Answer:
அ) யானை

Question 8.
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெருங்கௌசிகனார்
இ) மருதனார்
ஈ) நக்கீரர்
Answer:
ஆ) பெருங்கௌசிகனார்

Question 9.
‘மலைந்து’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) மலைந்து+உ
ஆ) மலைந்+த்+உ
இ) மலை +த்(ந்)+த்+உ
ஈ) மலை +த்+த்+உ
Answer:
இ) மலை +த்(ந்)+த்+உ

Question 10.
‘பொழிந்த’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) பொழிந்து+அ)
ஆ) பொழி+த்+த்+உ
இ) பொழி+த்+ந்+த்+அ
ஈ) பொழி+த்(ந்)+த்+அ
Answer:
ஈ) பொழி+த்(ந்)+த்+அ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 11.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
ஆ) சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
இ) பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Answer:
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ண னார்

Question 12.
அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்
அ) அசைவாடிய
ஆ) இளைப்பாறி
இ) அமைதியாகி
ஈ) இன்பமாகி
Answer:
ஆ) இளைப்பாறி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 13.
கன்று எரி – என்பதில் ‘எரி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) நெருப்பு
ஆ) கொம்பு
இ) வால்
ஈ) நீர்
Answer:
அ) நெருப்பு

Question 14.
அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
அ) கரும்
ஆ) சிவந்த
இ) வெண்மையான
ஈ) நீலநிற
Answer:
ஆ) சிவந்த

Question 15.
அல்கி என்பதன் பொருள்
அ) அழிந்து
ஆ) தங்கி
இ) உள்ளே
ஈ) வெளியே
Answer:
ஆ) தங்கி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 16.
பொருத்துக.
1. இறடி – அ) தங்கி
2. அல்கி – ஆ) பள்ளம்
3. படுகர் – இ) வெந்து
4. வேவை – ஈ) தினை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ)

Question 17.
கூத்தராற்றுப்படை என்றழைக்கப்படும் நூல்
அ) திருமுருகாற்றுப்படை
ஆ) மலைபடுகடாம்
இ) பொருநராற்றுப்படை
ஈ) சிறுபாணாற்றுப்படை
Answer:
ஆ) மலைபடுகடாம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 18.
நன்னன் எந்நில மன்னன்?
அ) பெருநில
ஆ) குறுநில
இ) சிறுநில
ஈ) மா
Answer:
ஆ) குறுநில

Question 19.
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
அ) நன்ன ன்
ஆ) பாரி
இ) கபிலர்
ஈ) பெருங்கௌசிகனார்
Answer:
அ) நன்னன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

குறுவினா

Question 1.
மலைபடுகடாம் – பெயர்க்காரணம் கூறு.
Answer:
மலைக்கு யானையை உருவகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைபடுகடாம் எனப் பெயர் பெற்றது.

Question 2.
ஆற்றுப்படை என்றால் என்ன?
Answer:
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர் வரும் கூத்தனை அழைத்தல்.
யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகிறோம்.
நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல்.

Question 3.
குறுநில மன்னன் நன்னனின் ஊரில் கூத்தர்களுக்கு வழங்கப்படும் உணவாக மலைபடுகடாம் கூறுவன யாவை?
Answer:

  • நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியல்.
  • தினைச் சோறு.

Question 4.
பண்டையத் தமிழ் கலைஞர்கள் யாவர்?
Answer:
கூத்தர், பாணர், விறலியர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 5.
மலைபடுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?
Answer:
மலைபடுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்குக் கூறப்பட்ட உவமை எரியும் நெருப்பு ஆகும்.

Question 6.
“நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மானா விறல்வெள் வயிரியம் எனினே ” என்று யார் யாரிடம் கூறினார்?
Answer:
நன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம் கூறினார்.

Question 7.
“நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மானா விறல்வெள் வயிரியம் எனினே” தொடர் பொருள் விளக்குக.
Answer:
தொடர் இடம் பெறும் நூல் : மலைபடுகடாம்
தொடர் பொருள் விளக்கம் : பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

Question 8.
தினை, சோறு ஆகியவற்றிற்கு மலைபடுகடாம் தரும் சொற்கள் யாவை?
Answer:
தினை – இறடி ; சோறு – பொம்மல்.

Question 9.
“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்” இவ்வடியில் ‘கழை’ என்னும் பொருள் தரும் சொல் எது?
Answer:
கழை – மூங்கில்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 10.
“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்” இவ்வடியில் “ஆரி”, “படுகர்” ஆகிய சொற்களின் பொருள்
யாது?
Answer:
ஆரி – அருமை ; படுகர் – பள்ளம்.

சிறுவினா

Question 1.
‘மலைபடுகடாம்’ நூல் குறிப்பு வரைக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.
  • வேறு பெயர் : கூத்தராற்றுப்படை
  • அடிகள் : 583
  • உருவகம் : மலைக்கு யானையை உவமையாக்கி அதன் ஓசையைக் கடாஅம் எனச் சிறப்பித்தது.
  • பாட்டுடைத் தலைவன் : நன்னன் என்னும் குறுநில மன்னன்.
  • பாடியவர் : இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.

Question 2.
“நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்” இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்:
இப்பாடல், பெருங்கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பொருள்:
பரிசில் பெற்ற கூத்தன் பெறப் போகும் கூத்தனை ஆற்றுப்படுத்தல்.

விளக்கம் :
நன்னனின் ஊரில் பரிசு பெற்ற கூத்தன் பரிசு பெறப்போகும் கூத்தனிடம், “அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்” என்று ஆற்றுப்படுத்துகின்றான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Question 3.
பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்களையும் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் - 4