Students can Download 8th Tamil Chapter 6.5 புணர்ச்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி
கற்பவை கற்றபின்
Question 1.
இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.
Answer:
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
விகாரப் புணர்ச்சி …………. வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
Answer:
இ) மூன்ற
Question 2.
‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………..
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்
Answer:
அ) இயல்பு
பொருத்துக
1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
2. மரவேர் – இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – திரிதல் விகாரம்
Answer:
1. மட்பாண்டம் – திரிதல் விகாரம்
2. மரவேர் – கெடுதல் விகாரம்
3. மணிமுடி – இயல்புப் புணர்ச்சி
4. கடைத்தெரு – தோன்றல் விகாரம்
சிறுவினா
Question 1.
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
எ.கா. தாய் + மொழி = தாய்மொழி
உடல் + ஓம்பல் = உடலோம்பல்
Question 2.
மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
Answer:
மரக்கட்டில் = மரம் + கட்டில்
நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து மர + கட்டில் என்றானது. தோன்றல் விகாரத்தின் படி ‘க்’ தோன்றி மரக்கட்டில் என்றானது.
மொழியை ஆள்வோம்
கேட்க
Question 1.
நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
1. உழவும் நெசவும்
அவையோர்க்கு வணக்கம்!
நமக்கெல்லாம் இன்றியமையாத தேவைகளான உணவும், உடையும் பற்றிப் பேச வந்துள்ளேன். முதலில் உழவுத்தொழில் பற்றிக் கூறுகிறேன். ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உலகமே உழவர்களின் பின்தான் செல்கிறது. உலகில் ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் பசி என்ற ஒன்று உள்ளது.
‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்றெல்லாம் கூறுகிறோம். அப்பசியைப் ‘பசிப்பிணி’ என்று இலக்கியம் கூறுகிறது. அப்பசிப் பிணியைப் போக்கும் மருத்துவர்கள் யார்? வேளாண்மை செய்யும் உழவர்கள்தானே!
உழவர்கள் நிலத்தை உழுது, பயிர்செய்து, விளைகின்ற பொருளால்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் தாம் வாழ்வதோடு உலகையே வாழ வைக்கின்றனர். உலக மக்களுக்கு உணவாகிய அமுதத்தையே அளிக்கின்றனர். இதனையே வள்ளுவப் பெருந்தகை “உழுது உண்டு வாழ்வார்” என்று கூறியுள்ளார்.
இத்தகு பெருமையுடைய வேளாண்மை தமிழரின் முதன்மையான தொழிலாகவும் மிகுந்த மதிப்பிற்குரிய தொழிலாகவும் இருந்தது. நம் முன்னோர்கள் மண் வகைகளைப் பற்றியும் வெவ்வேறு நிலப்பகுதியில் விளையக்கூடிய பயிர்களைப் பற்றியும் நீர் பாய்ச்சும் முறைகளைப் பற்றியும் அறிந்திருந்தனர். ஐவகை நிலங்களில் மருத நிலமே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் கருதப்பட்டது.
வேளாண்மைக்குத் தேவையான நீரை கிணறுகளில் ஏற்றம் அமைத்து இறைத்தனர். கண்மாய்கள், குளங்கள், அணைகள் ஆகியவற்றில் தேக்கி வாய்க்கால் வழியாகப் பாய்ச்சிப் பயிர்களை வளர்த்தனர். இவ்வளவு தொன்மை வாய்ந்ததும் மக்களுக்கு உயிராய் விளங்குவதுமான உழவுத்தொழில் தற்போது நலிவுறுவது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது.
அடுத்த அடிப்படைத் தேவை உடை. இவ்வுடையை நமக்களிப்பது நெசவுத்தொழில். ‘ஆடைபாதி ஆள்பாதி”, “ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்ற பழமொழிகள் ஆடையின் அவசியத்தை உணர்த்துகின்றன. நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டவன் மனிதன். மனித இனத்தின் வாழ்வுக்கு உணவு துணை புரிகிறது என்றால் நாகரிக நடமாட்டத்திற்கு உடை துணை புரிகிறது.
நம் பழந்தமிழர்கள் பண்டைக்காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைத்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பது வரலாற்று உண்மை.
இலை தழைகளையும் மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோல்களையும், பறவைகளின் இறகுகளையும் ஆடையாக உடுத்திய மனிதன் நாகரிக வளர்ச்சியில் பல வகையான ஆடைகளை உற்பத்தி செய்து நெசவுத்தொழிலில் புதுமைப் படைத்துள்ளான்.
நம் நாட்டில் உழவுத்தொழிலுக்கு அடுத்ததாகச் செய்யப்பட்ட தொழில் நெசவுத்தொழில் என்பது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டு பருத்தி ஆடைக்கும் பட்டாடைக்கும் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. கடல் கடந்து வணிகம் செய்த தமிழர்களும் ஆடைகளையும், தானியங்களையும் ஏற்றுமதி செய்துள்ளனர்.
நெசவுத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருளை உற்பத்திச் செய்வது உழவுத்தொழிலே.
உழவும் நெசவும் இருகண்கள் போன்றவை. இவற்றை அழியாமல் பாதுகாத்து மேலும் மேலும் வளரச் செய்து நாட்டின் பொருளாதார நிலையில் நாம் முன்னேறுவோம் என்று கூறிப்பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி நவின்று விடைபெறுகிறேன்.
2. தொழில்கள் பலவிதம்
அவையோர்க்கு வணக்கம்!
நான் பலவகையான தொழில்கள் பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் பேச வந்துள்ளேன். மனிதன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேவையான பொருள்களை உற்பத்தி செய்யவும் முனைகின்றான். இதுவே தொழில் எனப்படுகிறது. இத்தொழிலானது மக்கள் வாழும் புவியியல் அமைப்பிற்கு ஏற்றபடியே அமைகிறது.
அகப்பொருளில் ஐவகை நிலங்களுக்கான தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிட நான் கடமைப்பட்டிருக்கிறேன். உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், நிரை மேய்த்தல், உழவுத்தொழில் போன்றவைகளாகும்.
நாம் நாகரிக வளர்ச்சி பெற்றது போலவே தொழில்களும் பல புதிய புதிய பெயர்களில் வகைகளில் வடிவம் பெற்றுள்ளன. தொன்மையான தொழில்கள் உழவுத்தொழில், நெசவுத்தொழில். இவை தற்காலத்தில் நவீன மயமாக்கப்பட்டு உற்பத்தியைப் பல மடங்காகப் பெருக்கியுள்ளன.
காகிதம் தயாரித்தல், சோப்பு மற்றும் சலவைப் பொருள்கள் தயாரிப்பு, எண்ணெய் தயாரிப்பு, விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு, பிஸ்கட் தயாரிப்பு, மெழுகுவர்த்தித் தயாரிப்பு, பந்துமுனைப் பேனா, மைக்குழாய் தயாரிப்பு, தேன் தயாரிப்பு, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு எனப் பல வகையான சுய தொழில்கள் உள்ளன.
மின்சாரத்தையும் இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் வீட்டிலேயே செய்யப்படும். சிறுதொழில் குடிசைத்தொழில் எனப்படுகிறது. இதில் முதலிடத்தில் இருப்பது ஊறுகாய் – தயாரித்தல், ஜாம் தயாரித்தல், மூலிகைப் பொருட்களைவைத்து குளியல் பொடி தயாரித்தல், கற்பூரம், ஊதுபத்தி தயாரித்தல் போன்ற பல தொழில்கள் குடிசைத் தொழில்களாக நடைபெறுகின்றன.
‘உள்ளங்கையில் உலகம்’ என்ற தொடருக்கு ஏற்ப இணைய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இல்லை என்று சொல்ல இயலாத அளவிற்குப் பல வகையான விற்பனை பொருள்கள் இணைய வணிகத்தில் விற்கப்படுகின்றன.
குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பள்ளிகள், குழந்தைகளுக்கான சாகச விளையாட்டு மையம். இவை பெற்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ரெடிமேட் பொருட்கள் தயாரித்தல், பரிசுப் பொருள்கள் விற்பனை செய்தல் போன்றவை முன்னிலையில் உள்ளன.
இயந்திர உலகில் பணத்தைத் தேடி அலையும் மக்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலும் நல்ல இலாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றது. சிறிய அளவில் செய்தாலும் போதுமான வருவாயை ஈட்ட முடியும்.
இவ்வாறு நம் நாட்டில் பல வகையான தொழில்கள் உள்ளன. ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் தொழிலில் நேர்மையைக் கடைபிடித்து முன்னேற வேண்டும்.
பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
சொல்லக் கேட்டு எழுதுக
பூமிக்குள் புதைந்த தாவர இனங்களும் விலங்கினங்களும் அழுகி, மட்கிப் பழுப்பு நிலக்கரியாக மாறுகின்றன. இது மின் உலைகளிலும் ஊது உலைகளிலும் எரிபொருளாகப் பயன்படுகின்றது. உலோக உருக்குத் தொழிலிலும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டில் கடலூர் – மாவட்டம் நெய்வேலியிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.
இது தஞ்சை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குறைந்த அளவு காணப்படுகிறது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் a சுரங்கம் உள்ளது. இங்குக் கிடைக்கும் நிலக்கரி அனல்மின்சாரம் தயாரிக்க உதவுகின்றது.
அறிந்து பயன்படுத்துவோம்
மரபுத்தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுசேர்கின்றன. சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப் பொருள்கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.)
1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.
கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்
2. அவர் ஓர் அவசரக்குடுக்கை
அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை
பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
Answer:
பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
Question 1.
வாழையடி வாழையாக
Answer:
வாழையடி வாழையாக குமரனுடைய குடும்பம் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது.
Question 2.
முதலைக்கண்ணீர்
Answer:
மாறன் எப்போதும் முதலைக்கண்ணீர் வடித்து நினைத்தகாரியத்தை முடித்துக்கொள்வான்.
Question 3.
எடுப்பார் கைப்பிள்ளை
Answer:
எடுப்பார் கைப்பிள்ளையாய் இல்லாமல் சொந்தமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.
கட்டுரை எழுதுக.
Question 1.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.
Answer:
முன்னுரை :
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.”
என்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். இன்றைய இயந்திர வாழ்க்கையில் மக்கள் பொருள் வேண்டி, வேலையைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
கைத்தொழிலின் அவசியம் :
இன்று நாம் கற்கும் ஏட்டுக்கல்வி பின்னர் நமக்கு ஏதாவது ஒரு வேலையினைப் பெற்றுத் தரலாம். அல்லது வேலையே கிடைக்காத நிலையும் ஏற்படலாம். படித்துவிட்டு வேலையின்றித் தவிப்போர் ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்யத் தெரிந்தவராக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.
எதிர்கால வாழ்வு குறித்தும் கவலையோ வருத்தமோ கொள்ள வேண்டியதில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கைத்தொழிலைத் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நல்லது.
கைத்தொழில்கள் :
கைத்தறி நெசவு, செக்காடுதல், பாய் பின்னுதல், கூடைப் பின்னுதல், தச்சு வேலை செய்தல், கயிறு திரித்தல், மட்பாண்டம் செய்தல், தீப்பெட்டி செய்தல், மரவேலை செய்தல், தேனீ வளர்த்தல், தச்சுவேலை செய்தல் போன்ற கைத்தொழில்களை எளிதாகக் கற்றுக் கொண்டு பயன் பெறலாம்.
கைத்தொழிலின் பயன்கள் :
“கைத்தொழிலைக் கற்றுக் கொள்வதால் தனிமனித வருவாய் பெருகி வளம் பெறலாம். அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கின்றது. கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் ஊர்களில் இருந்தே வேலை செய்யலாம். தொழில் வளம் பெருகுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.
இன்றைய கைத்தொழில்கள் :
கால மாற்றம், இட வேறுபாடுகளுக்கேற்ப வாழ்க்கை முறையில் பயன்பாட்டுப் பொருள்கள் மாறுகின்றன. புதிய நாகரிகம், புதிய விருப்பங்கள் என எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. இம்மாற்றங்களுக்கேற்ப கணினி பழுதுபார்த்தல், செல்பேசி பழுது பார்த்தல், ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்தல், எம்ப்ராய்டிங், சிறுசிறு உணவகங்கள் வைத்தல். இவையெல்லாம் இன்றைய சிறந்த கைத்தொழில்கள் ஆகும்.
முடிவுரை :
நம் வாழ்வை உயர்த்துவது உழைப்புதான். இவ்வுழைப்பை மூலதனமாக வைத்து ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு முன்னேறுவோம். படித்த படிப்பிற்கு வேலை தேடி அலையாமல் கைத்தொழில் மூலம் பொருள் ஈட்டி வளம் பெறுவோம்.
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்.
ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!
இடமிருந்து வலம்
1. சிவகாசி
5. திருபாச்சி
7. திருநெல்வேலி
12. கோவில்பட்டி
மேலிருந்து கீழ்
1. காஞ்சிபுரம்
2. சேலம்
4. பழனி
வலமிருந்து இடம்
3. மதுரை
4. பண்ருட்டி
9. தஞ்சாவூர்
10. மணப்பாறை
கீழிருந்து மேல்
6. தூத்துக்குடி
8. ஸ்ரீவில்லிப்புத்தூர்
11. திண்டுக்கல்
விடைகள்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தெளிவேன்.
2. நெசவுத் தொழிலின் சிறப்பை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. நூல் – Thread
2. தறி – Loom
3. பால்பண்ணை – Dairy farm
4. தோல் பதனிடுதல் – Tanning
5. தையல் – Stitch
6. ஆலை – Factory
7. சாயம் ஏற்றுதல் – Dyeing
8. ஆயத்த ஆடை – Readymade Dress
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது …………………. எனப்படும்.
2. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது …………………. புணர்ச்சி .
3. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது …………….. புணர்ச்சி.
4. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது …………………. புணர்ச்சி.
5. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது …………………….. புணர்ச்சி.
6. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது ………………….. புணர்ச்சி.
7. இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழி, வருமொழியில் மாற்றங்கள் நிகழுமாயின் அது ……………………. புணர்ச்சி.
8. விகாரப்புணர்ச்சி …………………. வகைப்படும்.
9. வாழைமரம் ……………………… புணர்ச்சி.
10. தமிழ்ப்பசி ………………….. விகாரம்.
11. பற்பசை ………………….. விகாரம்.
12. மரவேர் …………………….. விகாரம்.
13. உடல் + ஓம்பல் = …………………………
14. பொற்சிலை பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
Answer:
1. புணர்ச்சி
2. உயிரீற்றுப்
3. மெய்யீற்றுப்
4. உயிர்முதல்
5. மெய்முதல்
6. இயல்பு
7. விகாரப்
8. மூன்று
9. இயல்பு
10. தோன்றல்
11. திரிதல்
12. கெடுதல்
13. உடலோம்பல்
14. பொன் + சிலை
விடையளி :
Question 1.
புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது புணர்ச்சி எனப்படும். எ.கா. வாழை + மரம் = வாழைமரம்.
Question 2.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
புணர்ச்சி இரண்டு வகைப்படும். அவை (i) இயல்பு புணர்ச்சி (ii) விகாரப் புணர்ச்சி
Question 3.
விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
எ.கா. தமிழ் + பசி = தமிழ்ப்பசி.
Question 4.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை தோன்றல், திரிதல், கெடுதல்.
Question 5.
விகாரப் புணர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகளை எழுதுக.
Answer:
(i) தோன்றல்
தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
எட்டு + தொகை = எட்டுத்தொகை
(ii) திரிதல்
வில் + கொடி = விற்கொடி
பல் + பசை = பற்பசை
(iii) கெடுதல்
மரம் + வேர் = மரவேர்
மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி