Students can Download 8th Tamil Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்
கற்பவை கற்றபின்
Question 1.
மூளையின் செயல்கள் குறித்துப் பிற நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி எழுதுக.
Answer:
மனித உடல் இருபுறமும் சமமாக உள்ளது. அதாவது இடது, வலது பாகங்கள் கண்ணாடி பிரதிபலிப்பாக உள்ளன. நமக்கு காதுகள், கண்கள், மூக்கு துவாரங்கள், புஜங்கள், கால்கள், நுரையீரல்கள், சிறுநீரகங்கள் என அனைத்தும் இரண்டிரண்டு உள்ளன. மூக்கு, வாய், தாடை, மார்புக்கூடு, முதுகெலும்பு இவை ஒன்றுதான் உள்ளது. இவை உடம்பின் நடுப்பகுதியில் உள்ளது.
மூளையைப் பொறுத்தமட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்புக் குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “Corpus Callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகளை கொண்டது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும் வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக் கொள்கிறது.
“Corpus Callosum” பகுதியைச் சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்குத் தொடர்பே இருக்காது. ஒரு பாகம் செயல்படுவது மற்றொரு பாகத்துக்குத் தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றது செய்யுமா? அல்லது செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? என்ற வினா எழுப்பப்பட்டது. 1861இல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது.
1950களின் ஆரம்பங்களில் தூக்கம் பற்றி ஆராயப்பட்டது. தூங்கும்போது விழிக்கரு மெதுவாக நகரும். விழித்திருக்கும் போது ஒளி பட்டவுடன் வேகமாக நகரும். இதற்கு “Rem Sleep” எனப் பெயர். தூங்கும் போது இந்த ‘ரெம் ஸ்லீப்’ நேரத்தில்தான் கனவுகள் தோன்றுகின்றன. இந்த நேரத்தில் விழிப்பு ஏற்பட்டால் அவர்கள் தாம் கண்ட கனவை நினைப்பர்.
தூக்கம் எதற்கு அவசியம்? ஓய்வுக்கு என அறிவோம். கண்களைத் திறந்து கொண்டு சிறிது நேரம் அமைதியாய்ப் படுத்தாலே போதும். ஆனால் இதைவிட தூங்கி எழுந்தால் தான் அதிக புத்துணர்ச்சி இருக்கும். தூங்கும் போது புரண்டு படுத்தல், நிலை மாறுதல் எனப் பல நடக்கின்றன. சும்மா ஓய்வு எடுப்பது நமக்கு நிம்மதி தராது. தூக்கம் மிக மிக அவசியம். தண்ணீர் இல்லாமல் இருப்பதைவிட தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவர் விரைவில் இறந்து விடுவார்.
ஆக ரெம் ஸ்லீப் மிக மிக அவசியம். ஒருவன் அடிக்கடி விழித்தெழுந்தால் அதன் விளைவை மறுநாள் இரவில் அவன் அறிவான். மனித மூளை அதிக சிக்கல்கள் நிறைந்தது. அவன் விழித்திருக்கும் போது அவனது குழப்பங்கள் நினைப்புகள் முதலியவற்றால் மிகவும் களைப்படைந்திருப்பதால் தூக்கம் மிக மிக அவசியம்.
வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போல் மூளையின் குப்பைகளை நீக்கிப் புத்துணர்ச்சி அளிக்க தூக்கம் தேவைப்படுகிறது. ஒருவரும் மூளையைப் பற்றி முழுவதும் அறிந்தவர் இல்லை . ஏனெனில் மிகவும் சிக்கல்கள் நிறைந்தது.
மூளை புத்தகங்கள் எழுதுகிறது, பாட்டு கேட்கிறது. கலைகள் புரிகிறது. இரக்கப்படுகிறது. மகிழ்ச்சியடைகிறது. அன்பு செலுத்துகிறது. அனைத்து விதமான குழப்பங்களுக்கும் தீர்வு சொல்கிறது. இந்த மூளையே சில கெட்ட செயல்களைச் செய்யவும் உதவுகிறது.
பயப்படுகிறது, வெறுக்கிறது, சந்தேகப்படுகிறது, போர் புரிகிறது, மூளை பற்றிய படிப்படியான ஆராய்ச்சி ஆக்க சக்திகளுக்குப் பயன்பட்டு கெட்ட சக்திகளுக்கு உடன்படாமல் இருந்தால் சரிதான். அப்போதுதான் நாம் அழகிய பாதுகாப்பான அமைதியான உலகைக் காணலாம்.
– (நூல் – மனித மூளையின் பாகங்களும் அவைகளின் இயக்கங்களும்)
மதிப்பீடு
Question 1.
மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
உலகத்திலேயே மிக மிக வியப்பானது மனித மூளை. அதன் செயல்பாடுகள் விந்தையானவை மட்டுமல்ல, புதிரானவை. மருத்துவ மேதைகளும் அறிவியலாளர்களும் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடல் இயக்கத்திற்கும் மன இயக்கத்திற்கும் காரணமான மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றி அறிவோம்.
மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட – வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று சொல்கிறார்கள்.
இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடது பகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவுகூட இடது பகுதியில்தான் நிகழ்கிறது.
இடதுபாதி :
இடதுபாதி அண்ண ன் என்றால் வலது பாதி தம்பி. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான், வலது பாதி 9 சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம்.
வலது பாதி :
வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கருவிகளைக் கையாளுபவர்கள் இன்ன பிறர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள் போன்றோர். இடதும் வலதும் சரியான அளவில் கலந்து இருப்பவர்களும் உண்டு.
முடிவுரை :
நம் மனதில் தோன்றும் உணர்வுகள், நம்மிடம் உள்ள நினைவாற்றல், நாம் என்கிற தன்னுணர்வு, கற்றல் திறம், செயல்பாடுகள் இவையெல்லாம் மூளையின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகும்.