Students can Download 8th Tamil Chapter 3.2 வருமுன் காப்போம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 1.
‘தன் சுத்தம்’ என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
(எ.கா) சுத்தம் சோறு போடும்.
Answer:
(i) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(ii) சுத்தம் சுகம் தரும்; சுகாதாரம் நாட்டைக் காக்கும்.
(iii) கூழானாலும் குளித்துக்குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகள் ………………… போற்ற வாழ்ந்தார்
அ) நிலம்
ஆ) வையம்
இ) களம்
ஈ) வானம்
Answer:
ஆ) வையம்

Question 2.
‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) நலம் + எல்லாம்
ஆ) நலன் + எல்லாம்
இ) நலம் + எலாம்
ஈ) நலன் + எலாம்
Answer:
அ) நலம் + எல்லாம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 3.
இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) இடவெங்கும்
ஆ) இடம்எங்கும்
இ) இடமெங்கும்
ஈ) இடம்மெங்கும்
Answer:
இ) இடமெங்கும்

வருமுன் காப்போம் – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்தெழுதுக.

மோனை(சீர்) :
உடலின் – இடமும் – சுத்தமுற்ற
உலகில் – இனிய – சுகமும்
நித்தம். – காலை – காலை
நீண்ட – காற்று – காலன்
கூழை – திட்டு – நோயை
குளித்த – தினமும் – நூறு

எதுகை (அடி) :
உடலின் – காலை – மட்டு
இடமும் – காலை – திட்டு
சுத்தமுள்ள – கூழை – தூய
நித்தம் – ஏழை – நோயை

இயைபு :
குடித்தாலும் – குடியப்பா – உண்ணாமல்
ஆனாலும் – உறங்கப்பா – தின்பாயேல்
பட்டிடுவாய் – நன்னீரும் – விடும்அப்பா
விழுந்திடுவாய் – உணவும் – தரும் அப்பா

குறுவினா

Question 1.
நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
Answer:
நம்மை நோய் அணுகாமல் காப்பவை :
(i) காலையும் மாலையும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
(ii) தூய்மையான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
(iii) நல்ல குடிநீரைக் குடிக்க வேண்டும்.
(iv) நன்கு பசித்த பிறகு உண்ண வேண்டும். இவற்றைச் செய்தால் நோய் நம்மை அணுகாது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 2.
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
Answer:
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள் :
அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் ஆகாது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழும் நிலைக்கு ஆளாவோம்.

சிறுவினா

Question 1.
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகள்:
(i) உடலில் உறுதி கொண்டவர், உலகில் மகிழ்ச்சி உடையவர்.
(ii) எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
(iii) நாள்தோறும் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்.
(iv) காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நல்ல காற்றைச் சுவாசிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களை எமனும் அணுகமாட்டான்.
(v) கூழைக் குடித்தாலும் குளித்த பிறகு குடித்தல் வேண்டும்.
(vi) வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
(vii) அளவாக உண்ண வேண்டும். அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழும்படி ஆகிவிடும்.
(viii) தூய்மையான காற்றைச் சுவாசித்து நல்ல குடிநீரைக் குடித்து நன்கு பசித்த பிறகு உண்ண வேண்டும்.
(ix) இவைகளை மேற்கொண்டால் நோய் நம்மை அணுகாது. நூறாண்டு வாழலாம்.
(x) இவையாவும் அரிய நம் உடலில் நலமோடு இருப்பதற்கான வழிகள் எனக் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகள் :
(i) நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்.

(ii) தியானம், யோகா போன்ற பயிற்சிகளை நாள்தோறும் செய்தல். உடலும் மனமும் பயன்பெறும்.

(iii) உணவு உண்ணும்போது செயல்படுத்த வேண்டியவை :

  • மெதுவாக மென்று ருசித்து சாப்பிட வேண்டும்.
  • அப்போதுதான் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.
  • இவ்வாறு சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்.
  • உணவை அளவாக உண்ண வேண்டும்.
  • இரவு நேரங்களில் மாமிச உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • இரவில் நேரங்கடந்து உண்ணக்கூடாது.

(iv) படுக்கைக்குப் போகும் வரை தொலைக்காட்சியைப் பார்க்கக் கூடாது. நீண்ட நேரம் செல்பேசி, கணினி போன்றவற்றைப் பார்க்கக்கூடாது.

(v) ஆசைகளைக் குறைத்து தேவைக்கு மட்டுமே பொருள்தேட வேண்டும். ஆசைக்குப் பொருள் சேர்ப்பதன் பொருட்டு செல்வத்தின் பின் ஓடக்கூடாது. மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்தினால் நோய்கள் வாரா.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. நித்தம் நித்தம் – நாள்தோறும்
2. மட்டு – அளவு
3. சுண்ட – நன்கு
4. வையம் – உலகம்
5. பேணுவையேல் – பாதுகாத்தால்
6. திட்டுமுட்டு – தடுமாற்றம்

நிரப்புக :

1. கவிமணி எனப் போற்றப்படுபவர் …………………
2. தேசிக விநாயகனார் பிறந்த ஊர் ……………
3. கவிமணி ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள் ……………….
4. அதிகமாக உண்டால் ………………. தடுமாறும்.
5. நாள்தோறும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ………………..
6. உடலில் …………… உடையவர், உலகில் இன்பம் உடையவர்.
7. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதைவிட வருமுன் காப்பதே ………………
Answer:
1. தேசிக விநாயகனார்
2. தேரூர்
3. முப்பத்தாறு
4. செரிமானம்
5. தூய்மை
6. உறுதி
7. அறிவுடைமை

விடையளி :

Question 1.
கவிமணி தேசிக விநாயகனார் குறிப்பு எழுதுக.
Answer:
(i) தேசிக விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
(ii) இவர் கவிமணி’ எனப் போற்றப்படுகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர்.
(iii) இயற்றிய நூல்கள் – ஆசியஜோதி, மருமக்கள் வழிமான்மியம், கதர் பிறந்த கதை, உமர்கய்யாம் பாடல்கள் (மொழிபெயர்ப்பு நூல்).

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

ஆசிரியர் குறிப்பு
கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்; இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். ‘மலரும் மாலையும்’ என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 1

பாடலின் பொருள்
உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 2
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 3
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 4
காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமட்டான். எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும். ‘ அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!.