Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 7 வெற்றி வேற்கை Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 7 வெற்றி வேற்கை
வாங்க பேசலாம்
Question 1.
பாடலின் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் பொருளை தன் சொந்த நடையில் கூற வேண்டும்.
Question 2.
உனக்கு உனது நண்பன் செய்த சிறிய உதவி, அந்த நேரத்தில் பெரியதாக இருந்த அனுபவத்தைப் பற்றிப் பேசு.
Answer:
ஒருமுறை நான் பேருந்து நிறுத்தத்தில் ஒரு முதியவரைப் பார்த்தேன். அவர் வெகு நேரமாய் ஒவ்வொரு நபரிடமும் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எந்தப் பதிலும் யாரும் சரியாக தராததைப் பார்த்து, அவர் அருகில் சென்று காரணம் கேட்டேன். அவர் அருகில் உள்ள ஊருக்குச் செல்ல வேண்டுமாம். பையில் வைத்திருந்த காசு எங்கேயோ விழுந்து விட்டதாம்.
அதனால் ஊருக்குச் செல்லக் காசு கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார். நான் எவ்வளவு தேவை என்று கேட்டபோது, ரூபாய் 15 என்று கூறினார் வருத்தத்துடன். நான் வேகமாக வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் செய்தியைச் சொல்லி 15 ரூபாய் வாங்கி வந்து அந்த முதியவரிடம் கொடுத்தேன்.
அவர் கண் கலங்கியபடியே வாங்கிக் கொண்டு, எனக்கு நன்றி கூறி வாழ்த்தியும் சென்றார். நான் செய்தது சிறிய உதவியாக இருந்தாலும், அது அவருக்குப் பெரியதாக தோன்றியது.
சிந்திக்கலாமா?
சிறு சிறு உதவிகளை பிறருக்குச் செய்வது பற்றி உனது கருத்து என்ன? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
கமலன் : ராமு! சிறு சிறு உதவிகளைப் பிறருக்குச் செய்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
மாறன் : கட்டாயம் நாம் அவற்றை நாம் செய்ய வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
மாறன் : சரி, அப்படி நீ செய்யும் போது உன் மனநிலை எப்படியிருக்கும்?
கமலன் : அப்படி உதவி செய்யும் போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும். ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல மனதில் தோன்றும். உனக்கு எப்படியிருக்கும்?
மாறன் : ராமு எனக்கும் அதே மனநிலைதான் இருக்கும். நமக்குள் பல ஒற்றுமை இருக்கிறதே!
கமலன் : நமக்கு மட்டுமல்ல, நம்மைப்போல உதவி செய்கின்ற அனைவருக்குள்ளும் இதே ஒற்றுமையிருக்கும். இப்படி உதவி செய்கிறவர்களால்தான் இன்றளவும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மாறன் : ஆமாம், ராஜா! சரியாகச் சொன்னாய். மனிதர்கள் மனிதருக்கு உதவி செய்வதுதான் மானுடத்தின் மாண்பு. ஆனால் இதைப் புரிந்து எல்லோரும் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.
கமலன் : ஆமாம்பா சரியாக சொல்கிறாய். நாம் செய்கிற சிறிய உதவிகூட பலருக்குப் பேருதவியாக அமைந்து விடுகிறது.
மாறன் : நாம் இருவரும் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : நல்லது செய்ய இணைவது தப்பேயில்லை நண்பா- இணைவோம் – செயல்படுவோம் – நன்றி நண்பா!
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
Question 1.
தெள்ளிய – இச்சொல்லின் பொருள்
அ) மெல்லி
ஆ) இளகிய
இ) முதிர்ந்த
ஈ) அழகிய
Answer:
இ) முதிர்ந்த
Question 2.
ஆல் இச்சொல்லின் பொருள் ……
அ) வேல மரம்
ஆ) ஆல மரம்
இ) அரச மரம்
ஈ) வேப்ப மரம்
Answer:
ஆ) ஆல மரம்
Question 3.
கயம் இச்சொல்லின் பொருள் ….
அ) நீர் நிலை
ஆ) பயம்
இ) வானிலை
ஈ) பருவநிலை
Answer:
அ) நீர்நிலை
Question 4.
புரவி இச்சொல்லின் பொருள் ……………
அ) யானை
ஆ) பூனை
இ) ஆள்
ஈ) குதிரை
Answer:
ஈ) குதிரை
Question 5.
பெரும்படை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பெருமை + படை
ஆ) பெரும் + படை
இ) பெரு + படை
ஈ) பெரிய + படை
Answer:
அ) பெருமை + படை
Question 6.
நிழல் + ஆகும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) நிழல் ஆகும்
ஆ) நிழலாகும்
இ) நிழல்லாகும்
ஈ) நிழலாஆகும்
Answer:
ஆ) நிழலாகும்
வினாக்களுக்கு விடையளி
Question 1.
ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்?
Answer:
ஆலமரத்தின் விதை தெரிந்த நீர் கொண்ட குளத்தின் சிறிய மீனின் முட்டையை விடவும் சிறியதாக இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்.
Question 2.
ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?
Answer:
ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை போன்ற படைகள் தங்கும்.
Question 3.
இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
Answer:
இப்பாடலின் பொருள் பிறருக்குச் செய்யும் உதவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக
Question 1.
ஆகா என்ன சுகம் தெரியுமா
Answer:
ஆகா! என்ன சுகம் தெரியுமா!
Question 2.
என்னைக் கட்டிப் போடுகிறார்கள்
Answer:
என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.
Question 3.
ஆகா இது என்ன பிரமாதம்
Answer:
ஆகா! இது என்ன பிரமாதம்!
Question 4.
நான் என்ன வேலை செய்ய வேண்டும்
Answer:
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
Question 5.
காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி கத்தாரி புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
Answer:
காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
மொழியோடு விளையாடு
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி.
Answer:
கலையும், கைவண்ண மும்
இணைந்து செய்வோம்
Answer:
இணைப்புச் சொற்களை அறிவோமா?
இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள் இணைப்புச் சொற்கள் ஆகும். சில இணைப்புச் சொற்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிவோம்.
அதனால், ஆகவே, ஆனால், எனினும், ஆகையால், எனவே போன்றவை.
1. பருவ மழை பெய்தது …………………… ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது …………………… மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன …………………… பறிக்க மனமில்லை .
5. நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் …………………… வெளிநாடு செல்ல மாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன் …………………… நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
Answer:
1. பருவ மழை பெய்தது அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது ஆகவே மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன எனினும் பறிக்க மனமில்லை .
5. நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் ஆகையால் வெளிநாடு செல்ல மாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன் எனவே நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
பயிற்சி
ஆகவே, எனவே, ஆகையால், ஆனால் ஆகிய இணைப்புச் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.
Answer:
1. அரசுத் தேர்வுகள் கடினமாக இருக்கும் ஆகவே விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டும்.
2. தீண்டாமை தீயைப் போன்றது எனவே அதனை உலகைவிட்டே ஓட்டுவது நம் கடமை.
3. நான் நல்லவனாக வாழ விரும்புகிறேன், ஆகையால் தீயோரிடம் நட்பு பாராட்ட மாட்டேன்.
4. காந்தியடிகள் லண்டனில் படித்தார் ஆனால் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து போகவில்லை
கூடுதல் வினாக்கள்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக
Question 1.
சின்ன இச்சொல்லின் பொருள்
அ) தட்டை
ஆ) கட்டை
இ) முட்டை
ஈ) காய்
Answer:
இ) முட்டை
Question 2.
வெற்றி வேற்கையின் ஆசிரியர்
அ) கபிலர்
ஆ) அதிவீரராம பாண்டியன்
இ) ஔவையார்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியன்
Question 3.
அண்ணல் இச்சொல்லின் பொருள்
அ) கருணையுடையவர்
ஆ) பாசமுடையவர்
இ) அன்புடையவர்
ஈ) கோபமுடையவர்
Answer:
அ) கருணையுடையவர்
வினாக்களுக்கு விடையளிக்க.
Question 1.
வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர் யார்? இந்நூலின் பெயர் என்ன?
Answer:
வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர் அதிவீரராமபாண்டியர் இந்நூலின் வேறு பெயர் நறுந்தொகை.