Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 21 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி
வாங்க பேசலாம்
Question 1.
கதையில் நடுவர் மயிலக்கா கூறும் தீர்ப்பு சரியானதா? உம் கருத்தைச் சொந்த நடையில் கூறுக.
Answer:
கதையில் நடுவர் மயில் அக்கா கூறும் தீர்ப்பு சரியானது. காகம் பாடாது என்று அதனை கேலி பேசியவர் முன்னிலையில் தொடர்ந்து அரைமணி நேரம் பாடி அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த காகம்தான் பரிசு பெறுவதற்கு சரியான பறவை. காகம் தான் பாடியதோடு மட்டுமல்லாமல் மற்ற பறவைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தது. எனவே பாட்டு ராணி என்ற பட்டம் காகத்திற்குக் கிடைத்தது ஏற்புடைய ஒன்றாகும்.
Question 2.
உங்கள் பள்ளியில் நடைபெற்ற பாட்டுப்போட்டி நிகழ்வுகள் குறித்துப் பேசுக.
Answer:
வணக்கம்!
எங்கள் பள்ளியில் நவம்பர் பதினான்கு அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
அன்று பல போட்டிகள் நடைபெற்றது. நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலைப் பாடினர். ஒரு சிலர் நடனமாடியும் பாடல் பாடியும் மகிழ்ந்தனர். ஒரு சிலர் இசைக்கருவிகளை இசைத்தனர். என்னுடைய தோழி குறையொன்றுமில்லை ‘ என்ற எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைப் பாடினாள். அனைவரும் அப்பாடலை மெய்மறந்து கேட்டனர். ‘பாடலுக்கு அழகு கேட்டார் நன்று எனக் கூறல்’ என்ற சிறுபஞ்சமூலம் கூற்றின்படி அவளுடைய பாடலை அனைவரும் இரசித்தனர். இறுதியில் பரிசு அறிவிக்கப்பட்டது. என் தோழிக்குப் பரிசு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ந்தேன்.
சிந்திக்கலாமா?
போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையாதது என்று உன் தந்தை கூறுகிறார். ஏன் தெரியுமா?
Answer:
போட்டியில் பங்கேற்பதன் மூலம் அவரவர் ஆற்றல் வெளிப்படுகிறது. பலமுறை தோற்றாலும் ஒரு முறையாவது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.
போட்டியில் கலந்துகொள்ளும் போது தன்னால் என்ன முடியும், முடியாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
போட்டியில் தோற்றாலும் சரி என்று கலந்து கொள்ளும் போது அவர்களுக்குள் ஓர் உந்துதல் சக்தி உண்டாகிறது. அச்சக்தி அவர்களை முயற்சி செய்யத் தூண்டுகோலாய் அமைகிறது.
போட்டிக்காக அவர்கள் செய்யும் பயிற்சியும் முயற்சியும் அவர்களைச் சுறுசுறுப்பாக்குகிறது. செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவுகிறது.
இக்காரணங்களால் போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதுதான் இன்றியமையதாதது என்று தந்தை கூறுகிறார்.
வினாக்களுக்கு விடையளிக்க
Question 1.
காட்டில் நடந்த போட்டியின் பெயர் என்ன?
Answer:
காட்டில் நடந்த போட்டியின் பெயர் ‘பாட்டுப்போட்டி’ ஆகும்.
Question 2.
காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா என்ன கூறினார்?
Answer:
காக்காவின் பாட்டைக் கேட்ட சிங்கராஜா “ஆகா…. என்ன சுருதி சுத்தம்; அற்புதம்!” என்று கூறினார்.
Question 3.
‘பாட்டு ராணி’ பட்டம் பெற்ற பறவை எது?
Answer:
‘பாட்டு ராணி’ பட்டம் பெற்ற பறவை காகம்.
புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!
Answer:
மீண்டும் மீண்டும் சொல்வோம்
1. ஒரு குடம் எடுத்து அரைக்குடம் இறைத்துக் குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.
2. துள்ளி எழுந்து பள்ளி சென்றாள் வள்ளி. அவளுடன் மெள்ள மெள்ள வந்து சேர்ந்து கொண்டாள் அல்லி.
கலையும் கை வண்ணமும்
காகிதத்தில் கரடி செய்வோம்
அறிந்து கொள்வோம்
- ஆண்மயிலுக்குதான் தோகை உண்டு.
- ஆண் சிங்கத்துக்குதான் பிடரிமயிர் உண்டு
- மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.
- புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.
செயல் திட்டம்
எவையேனும் ஐந்து பறவைகளின் படங்களை ஒட்டி அவற்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வருக.
Answer:
கூடுதல் வினாக்கள்
நிரப்புக:
1. ‘சிரிப்பொலியொன்று’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது சிரிப்பு+ஒலி+ஒன்று.
2. மரக்கிளையில் குரங்கு ஒன்று உட்கார்ந்திருந்தது.
3. காட்டில் பறவைகளுக்கான பாட்டுப்போட்டி நடந்தது.
4. போட்டிக்கு வந்த பறவைகளின் பெயர்களை எழுதியது ஆந்தை.
5. போட்டிக்கு நடுவராக இருந்த பறவை மயில்,
6. மயில் ஒய்யாரமாகத் தோகை விரித்தபடி மேடையில் அமர்ந்தது.
7. முதலில் பாடிய பறவை மைனா.
8. இரண்டாவது போட்டியாளராக வந்த பறவை கிளி.
9. – கிளி பாடத் தொடங்கியதும் விலங்குகளின் விசில் சத்தம் விண்ணைத் தொட்டது.
10. வெட்கத்தோடு கீழே இறங்கிய பறவை சேவல்.
11. தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடிய பறவை கழுகு.
12. கழுகு பாடிய பாட்டு காடெங்கும் எதிரொலித்தது.
13. கழுகின் பாட்டைக் கேட்டு பயந்தவை மான்குட்டிகள்.
14. “இம்புட்டுத்தான் என் பாட்டு” என்று சொன்ன பறவை கொக்கு.
15. நிறைய விலங்குகள் குயிலுக்கு இரசிகர்களாய் இருந்தன.
16. கடைசிப் போட்டியாளராக வந்த பறவை காகம்.
விடையளி:
Question 1.
சேவலும் குரங்கும் என்னப் பேசிக் கொண்டது.
Answer:
அமைதியாக இருந்த காட்டில் சேவல் அங்கு யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு மெலிதாய்க் குரல் எழுப்பிப் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென சிரிப்பொலி கேட்டதும் சேவல் பயந்துகொண்டே “யார் சிரித்தது?” என்று கேட்டது. மரத்தின் மேலேயிருந்த குரங்கு , “என்ன பாட்டு பலமா இருக்கு. என்ன விசேஷம்?” என்று குரங்கு கேட்டது. சேவலுக்கு வெட்கம் வந்துவிட்டது.
சேவல் “மறுநாள் பாட்டுப்போட்டி நடப்பதாகவும் அதற்குப் பயிற்சி எடுப்பதாகவும் கூறியது.
“போட்டியில் பாடு. வெற்றி பெற வாழ்த்துகள்!” என்று குரங்கு கூறியது. சேவல் ரொம்ப நன்றி என்று தலையாட்டியது.
Question 2.
குருவி ஒலிபெருக்கி முன்னே வந்து கூறியது யாது?
Answer:
குருவி, மற்ற பறவைகளிடம் “பாட்டுப்போட்டியில் நன்றாகவும் அதிக நேரமெடுத்தும் பாட வேண்டும். அனைவரும் இரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும். அப்படியான பாடலைப் பாடுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்” என்று கூறியது.
Question 3.
சேவல் பாடியபோது மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலை என்ன?
Answer:
சேவல் “கொக்… கொக்… கொக்கரக்கோ … கோ….” என்று பாடியது.
தூங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு கரடிகளும் விழித்துக் கொண்டன. சேவலைப் பார்த்து, “தூங்கிறவங்களை எழுப்புறதே உன் பாட்டா இருக்கு. அருமையான பாட்டு. போதும்பா, நிப்பாட்டு!” என்று மற்ற பறவைகள் கத்தின. சேவல் வெட்கத்தோடு கீழே இறங்கியது.
Question 4.
கழுகு பாடியபோது என்ன நடந்தது?
Answer:
கழுகு தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடியது. அப்பாட்டு காடெங்கும் எதிரொலித்தது. மான்குட்டிகள் பயந்து போய்விட்டன. சில பயத்தில் அழுதன. சில எழுந்து ஓடத் தொடங்கின. இதைப் பார்த்துச் சிரித்த யானைக்குக் கண்ணில் நீரே வந்து விட்டது.
Question 5.
குயில் மேடைக்கு வந்தபோது மற்ற பறவை, விலங்குகளின் செயல் யாது?
Answer:
குயில் மேடைக்கு வந்தபோது, பறவை, விலங்குகள் எல்லாமும் எழுந்து நின்று கைகளைத் தட்டின. குயிலுக்கு நிறைய விலங்குகள் இரசிகர்களாய் இருந்தன. ஒவ்வொன்றாய் எழுந்து நின்று குயில் குமாரிக்குப் பூங்கொத்துகளைக் கொடுத்தன.
வாழ்த்துக்களைச் சொல்லி அனுப்பி வைத்தன.
Question 6.
காகம் எவ்வாறு பாடியது? மற்ற பறவை விலங்குகள் என்ன செய்தன?
Answer:
காகம் மெல்லியக் குரலில் முதலில் பாட ஆரம்பித்தது. விலங்குகள் ஆச்சரியத்தோடு கவனித்தன. ‘கா’ என்ற ஓர் எழுத்திலேயே புதுப்புது ஆலாபனைகள். சுருதி கூட்டிப் பாடிக்கொண்டே இருந்ததது. கேலி செய்த பறவைகளுக்கு என்னவோ போலாகிவிட்டது அவை அனைத்தும் எழுந்து பாட்டிற்கேற்ப ஆட்டம் போட்டது. புலி “பிரமாதம்” என்றது. சிங்கம் தலையாட்டி இரசித்தது.
Question 7.
நடுவர் மயிலக்காவின் தீர்ப்பு யாது?
Answer:
“பாருங்க. காக்கா பாட வர்றபோது கேலி செஞ்சீங்க. ஆனா, தயங்கி நிற்காம, விடாமுயற்சியோட பாடுச்சு. அது மட்டுமில்ல. நிறைய பயிற்சி எடுத்துப் புதுப்புது இராகத்தில் பாடியிருக்கு. எல்லாரும் கை தட்டி பாராட்டுற அளவுக்கு அரைமணி நேரம் பாடியிருக்கு. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எல்லாராலும் பாட முடியும்னு இந்தப் போட்டி மூலமா காக்கா நிரூபிச்சுக் காட்டியிருக்கு. மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது. இந்தப் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வழங்கிப் பாராட்டுகிறேன்!” என்று தீர்ப்பு வழங்கியது. ‘பாட்டுராணி’ என்ற பட்டத்தைக் காகத்தின் தலையில் கிரீடமாய்ச் சூட்டியது.