Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 18 வேலைக்கேற்ற கூலி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

வாங்க பேசலாம்

Question 1.
கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
அழகாபுரி மன்னர் நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். அவரை எல்லோரும் புகழ்ந்து பேசுவர். இரத்தினபுரி மன்னர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தன்னுடைய அமைச்சர்களிடம் “நானும் நன்றாக ஆட்சி புரிகிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். ஆனால், என்னை யாரும் புகழவில்லையே” என்று கேட்டார்.

அமைச்சர் ஒருவர் கொஞ்சம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் அழகாபுரி மன்னருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவர் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொண்டால் அதனை நாமும் பின்பற்றலாம்” என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

அதன்படி இரத்தினபுரி மன்னர் அழகாபுரி நாட்டுச் சென்றார். இருமன்னர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு இருவரும் அரசவைக்குச் சென்றனர். அழகாபுரி மன்னர் தனக்குச் சமமான இருக்கையில் அம்மன்னரை அமரச் செய்தார்.

அப்போது விறகுவெட்டி ஒருவன் அரசவைக்கு வந்து தன் குறையைத் தீர்க்கும்படிக் கேட்டான். “ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்கிறேன்” என்றார் மன்னர்.

விறகுவெட்டி “தன்னைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும், மன்னரிடம் பணிபுரிபவருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினான். மன்னர் “இதுபோல் எக்குறையும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், உங்கள் ஐயத்தைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

மன்னர் அமைச்சர்களுள் ஒருவரையும் விறகு வெட்டியையும் பார்த்து “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். விறகுவெட்டி வெளியில் சென்று உடனே திரும்பி வந்து “ஒரு வண்டி செல்கிறது” என்று கூறினான்.

அந்த வண்டியில் என்ன இருக்கிறது? எந்த ஊரிலிருந்து வருகிறது? என்று மன்னர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் வெளியில் சென்று வந்து அவன் பதிலளித்தான். அப்போது அமைச்சர் உள்ளே நுழைந்தார். “நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று அமைச்சரிடம் மன்னர் கேட்டார்.

அமைச்சர் ஒரு கேள்விக்கு பல பதில்களைக் கூறி முடித்தார். விறகு வெட்டியோ மன்னர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் வெளியே சென்று வந்து பதிலளித்தான். அமைச்சர் கூறியதைக் கேட்டு விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்தான்.
மன்னரிடம் விறகுவெட்டி, “அமைச்சரின் அறிவுக்கூர்மையையும் என்னுடைய அறியாமையையும் புரிந்து கொண்டேன். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இரத்தினபுரி மன்னரும் ‘இவருடைய புகழைக் கண்டு பொறாமை கொண்டோமே, உண்மையை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார். தம் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.

சிந்திக்கலாமா?

அமைச்சர் வண்டிக்காரரரிடம் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்? எழுதுங்கள்.
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
Answer:

  • வண்டியில் என்ன இருக்கிறது?
  • எந்த ஊரிலிருந்து வருகிறது?
  • வண்டியில் என்ன எடுத்துச் செல்கின்றார்?
  • வண்டியில் எத்தனை மூட்டைகள் உள்ளன?
  • வண்டியில் உள்ள மூட்டைகளில் என்ன இருக்கிறது?
  • வண்டி எங்கிருந்து எங்கு செல்கின்றது?
  • வண்டியில் யார்யார் பயணம் செய்கிறார்கள்?
  • வண்டி எப்போது திரும்பி வரும்?
  • வண்டி விரைந்து செல்வதற்கான காரணம் யாது?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
அழகாபுரி மன்னர் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தினார்?
Answer:
அழகாபுரி மன்னர், அமைச்சர், விறகு வெட்டி என்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தினார்.

Question 2.
விறகுவெட்டி, மன்னரிடம் தம் மனக்குறையாக என்ன கூறினார்?
Answer:
‘மன்னர், விறகு வெட்டியான தனக்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும் அமைச்சருக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் கொடுப்பதாகவும் அதுவே தம் மனக்குறை என்று விறகு வெட்டி மன்னரிடம் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Question 3.
மன்னர் அமைச்சரிடமும் விறகுவெட்டியிடமும் என்ன வேலை அளித்தார்?
Answer:
“அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா?” என்று பார்த்து வரும்படி மன்னர் அமைச்சரிடமும் விறகு வெட்டியிடமும் கூறினார். அதற்கு அமைச்சர் ஒருமுறையே வெளியே சென்று வந்து பல பதில்களைக் கூறினார். ஆனால் விறகு வெட்டியோ ஒவ்வொரு முறையும் சென்று வந்து மன்னரிடம் பதில் அளித்தான்.

படத்தைப் பார்ப்போம் வினாக்கள் உருவாக்குவோம்

எ.கா. படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன?
1. ………………………………………………………………………………………………………………..
2. ………………………………………………………………………………………………………………..
3. ………………………………………………………………………………………………………………..
4. ………………………………………………………………………………………………………………..
5. ………………………………………………………………………………………………………………..
6. ………………………………………………………………………………………………………………..
Answer:

  1. யானை என்ன செய்கிறது?
  2. வரிக்குதிரை ஏன் சோகமாக உள்ளது?
  3. சீறி பாயும் விலங்கு எது?
  4. புலி சண்டை போடுகிறதா?
  5. நடனமாடும் விலங்கு எது?
  6. படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

மொழியோடு விளையாடு

சொல் உருவாக்கப் புதிர்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 2

சொல் எழுதுக சொற்றொடர் அமைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 6

செயல் திட்டம்

பல்வேறு தொழில் செய்பவர்களின் படங்களை ஒட்டித் தொகுப்பு ஏடு தயாரித்து வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
இரத்தினபுரி மன்னர் ஆலோசனையின் போது அமைச்சர்களிடம் என்ன வினவினார்?
Answer:
“நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை ” என்று அமைச்சர்களிடம் வினவினார்.

Question 2.
இரத்தினபுரி மன்னருக்கு அமைச்சர் கூறிய பதில் என்ன?
Answer:
“நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்க வேண்டும். அவர் தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்து கொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா” என்று அமைச்சர் மன்னரிடம் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Question 3.
விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்த பிறகு மன்னரிடம் என்ன கூறினான்?
Answer:
“மன்னா, என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சரின் அறிவுக் கூர்மையையும் அவருடைய திறமையையும் கண்டுவியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது என் அறியாமையையும் நான் உணர்ந்து கொண்டேன். நான், நான்தான். அமைச்சர், அமைச்சர்தாம். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான் அந்த விறகுவெட்டி.