Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 14 பனிமலைப் பயணம் Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 14 பனிமலைப் பயணம்
வாங்க பேசலாம்
Question 1.
உமது நண்பரிடம் உமக்குப் பிடித்த, பிடிக்காத பண்புகளைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 – : எனது நண்பன் கிருஷ்ணன். அவனிடம் எனக்குப் பிடித்தவை நிறைய குணங்கள் உள்ளன.
மாணவன் 2 : பிடிக்காதவையென்று ஏதேனும் உள்ளதா?
மாணவன் 1 : ஏன் இல்லை? பிடிக்காத அக்குணத்தை மாற்றிக் கொள்ளும்படி நான் கூறுகிறேன். அவன் சரி என்று கூறுவான். ஆனாலும் சில நேரங்களில் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை .
மாணவன் 2 : பிடிக்காத குணம் என்ன? பிடித்த குணங்கள் எவை?
மாணவன் 1 : பிடித்த குணங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவை பிறர் மனம் புண்படாதபடிப் பேசுவான். யாரிடமும் சண்டை போட மாட்டான். தன்னைவிடச் சிறியவருக்கும் மரியாதை கொடுப்பான். பெற்றோர், ஆசிரியர் கூறும் வார்த்தைகளை மீறமாட்டான்.
மாணவன் 2 : இவ்வாறு இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது?
மாணவன் 1 : சரியாகச் சொன்னாய்! அவனைப் பிடிக்காதவர் எவருமில்லை. ஆனால் தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் பேசவே மாட்டான். கோபம் வந்தால் உச்சக்கட்டத்திற்குச் சென்றுவிடுவான். அவனை அடக்குவது எல்லோருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். அவன் அப்படி கோபம் கொள்வது எனக்கு பிடிக்காத ஒன்று.
மாணவன் 2 : பரவாயில்லையே, உன் நண்பனைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டுள்ளாயே?
மாணவன் 1 : குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி என் நண்பனிடம் ஒரு சில பிடிக்காத குணங்கள் இருந்தாலும் பல நல்ல குணங்கள் அதாவது எனக்குப் பிடித்த குணங்கள் இருக்கின்றன.
சிந்திக்கலாமா?
பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம்… எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?
Answer:
நான் படகில் பயணம் செய்ய விரும்புவேன்.
காரணம் :
சாலை வழிப் பயணம் என்பது எப்போதும் எளிதானது. வழக்கமாக நிகழும் ஒன்று. ஆனால் படகில் பயணம் செய்வது அரிதானது.
சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
படகில் பயணம் செய்யும்போது மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். பயணம் செய்வதற்கான சோர்வு இல்லாமல் இருக்கும். இவையே நான் படகில் பயணம் செய்வதற்கான காரணங்கள் ஆகும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
Question 1.
பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது?
அ) மெதுவாக
ஆ) எளிதாக
இ) கடினமாக
ஈ) வேகமாக
Answer:
அ) மெதுவாக
Question 2.
“என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………..
அ) என்ன என்று
ஆ) என்னென்று
இ) என்னவென்று
ஈ) என்னவ்வென்று
Answer:
இ) என்னவென்று
Question 3.
“அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) அந்த + காட்டில்
ஆ) அ + காட்டில்
இ) அக் + காட்டில்
ஈ) அந்தக் + காட்டில்
Answer:
ஆ) அ + காட்டில்
Question 4.
“என்னவாயிற்று” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) என்ன + ஆயிற்று
ஆ) என்னவா + ஆயிற்று
இ) என்ன + வாயிற்று
ஈ) என்னவோ + ஆயிற்று
Answer:
அ) என்ன + ஆயிற்று
வினாக்களுக்கு விடையளிக்க
Question 1.
படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின?
Answer:
விலங்குகள் படகில் செல்லும்போது, திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் விலங்குகள் அலறின.
Question 2.
நரி, முதலையிடம் என்ன கூறியது?
Answer:
“இதற்கு முன் ஒரு முதலை, விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்துவிட்டது.”
“விஷ முறிவுச் செடிகளை நாங்கள் தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும் அவர்கள் இறந்துவிடுவர்” என்று நரி முதலையிடம் கூறியது.
Question 3.
இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த விலங்கு நரி. ஏனெனில் நரி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது.
உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?
Answer:
விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக
Answer:
மொழியோடு விளையாடு
கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.
Answer:
சொல்லக்கேட்டு எழுதுக
1. அடர்ந்த காடு
2. பயணம்
3. பனிமலைக்காடு
4. விலங்குகள்
5. திருவிழா
அகர வரிசைப்படுத்துக
மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மௌவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்.
மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை
Answer:
கலையும் கைவண்ணமும்
வண்ணம் தீட்டுவோமா!
செயல் திட்டம்
“அறிவே துணை” என்னும் நீதியை அறிவுறுத்தக்கூடிய கதைகளுள் இரண்டு எழுதி வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
வினாக்களுக்கு விடையளிக்க.
Question 1.
காட்டில் வாழ்ந்த விலங்குகள் யாவை?
Answer:
நரி, மான், ஓநாய், வரிக்குதிரை.
Question 2.
விலங்குகளைச் சிறுத்தை எங்கு வரும்படிக் கூறியது?
Answer:
பனிமலைக் காட்டில் நடைபெறும் திருவிழாவிற்கு வரும்படி விலங்குகளை அழைத்தது சிறுத்தை .
Question 3.
முதலையிடமிருந்து தப்பிக்க நரி கூறிய தந்திர மொழிகள் யாவை?
Answer:
1. “சென்றவாரம் விலங்குகளைச் சாப்பிட்ட ஒரு முதலை செரிமானம் ஆகாமல் இறந்து போய்விட்டது. அதற்குத் தயார் என்றால் நீங்கள் சாப்பிடுங்கள்” என்றது நரி.
2. “வழியில் பாம்பு கடித்தால் எங்களுக்கு விஷம் ஏறாமல் இருக்க நாங்கள் விஷமுறிவுச் செடிகளைத் தின்று வந்திருக்கிறோம். அதனால் எங்களை யார் கடித்தாலும் அல்லது நாங்கள் யாரைக் கடித்தாலும் அவர்கள் இறப்பது உறுதி” என்று கூறிக் கொண்டே ஒரு மீனைக் கடித்தது. மீன் இறந்து விட்டது.
3. இதனால் முதலையிடமிருந்து விலங்குகள் உயிர் பிழைத்தன.