Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 10 காவல்காரர் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 10 காவல்காரர்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

வாங்க பேசலாம்

Question 1
கதைப்பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கதைப் பாடலை ஓசை நயத்துடன் பாட வேண்டும்.

Question 2.
பாடலின் பொருளைப் புரிந்து கொண்டு பாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் பொருள் புரிந்து பாட வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 3.
பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
Answer:
தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது.

காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது.

காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

சிந்திக்கலாமா?

சூழல் -1 மீனாவின் அம்மா மீனாவுக்கு மட்டுமின்றி மீனாவின் நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கிறார்.
சூழல் – 2 வளவனின் அப்பா யார் எந்த உதவி கேட்டாலும் நீ செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Answer:
சூழல் ஒன்றுதான் போற்றத்தக்கது. மீனாவின் அம்மாவைப் போல் நாமும் அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும்பழகவேண்டும். அப்போதுதான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் பண்பைப் பெறுவர். வளரும் குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சூழல் இரண்டு யாரும் பின்பற்றக் கூடாத குணம். உதவி செய்து வாழ்வதைப் பற்றி முதலில் வளவனின் அப்பா அறிய வேண்டும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….
அ) பெயர் + இலாத
ஆ) பெயர் + இல்லாத
இ) பெயரில் + இல்லாத
ஈ) பெயரே + இல்லாத
Answer:
ஆ) பெயர் + இல்லாத

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்…………………
அ) கீழே
ஆ) அருகில்
இ) தொலைவில்
ஈ) வளைவில்
Answer:
அ) கீழே

Question 3.
‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது……………………
அ) உயிருள்ள பொருள்
ஆ) உயிரற்ற பொருள்
இ) இயற்கையானது
ஈ) மனிதன் செய்ய இயலாதது
Answer:
ஆ) உயிரற்ற பொருள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….
அ) அசைய இல்லை
ஆ) அசைவில்லை
இ) அசையவில்லை
ஈ) அசையில்லை
Answer:
இ) அசையவில்லை

Question 5.
நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்…………………….
அ) நாளும்
ஆ) இப்பொழுதும்
இ) நேற்றும்
ஈ) எப்பொழுதும்
Answer:
அ) நாளும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்?
Answer:
தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

Question 2.
காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?
Answer:
காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 3.
பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?
Answer:
பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

Question 4.
காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?
Answer:
காவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

முதலெழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 2

மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 4

இணைத்த சொற்களைக் கீழே எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 5
Answer:
1. சரிகை வேட்டை
2. கறுப்புக் கோட்டு
3. வெள்ளைச் சட்டை
4. சோளக் கொல்லைப் பொம்மை
5. கனத்த மழை.

பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 6
Answer:
மக்கள் ஒன்று கூடியே
மகிழ விரும்பும் திருவிழா
குழந்தைச் செல்வம் யாவுமே
கூடிஆடும் திருவிழா
குமரிப் பெண்கள் யாவரும்
கூடிமகிழும் திருவிழா
கடைத் தெருக்கள் முழுவதும்
கலைகட்டும் திருவிழா.

உரைப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

வினாக்கள் :
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 7

Question 1.
வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?
Answer:
பூ, காய், கனி, தண்டு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது.

Question 3.
வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.
Answer:
செவ்வாழை, பூவன் வாழை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
வாழை + இலை

Question 5.
பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.
Answer:
சிலவகை.

செயல் திட்டம்

உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும் செய்திகளைத் திரட்டுக.

Question 1.
தோட்டத்தின் பெயர்
Answer:
இயற்கைத் தோட்டம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
உரிமையாளர் பெயர்.
Answer:
சிவராமன்.

Question 3.
தோட்டம் அமைந்திருக்கும் ஊர்
Answer:
பருத்திப்பட்டு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
நீர்வசதி: கிணறு /அடிகுழாய்/ ஆறு/குளம்.
Answer:
கிணறு.

Question 5.
தோட்டத்தில் விளையும் காய்கறி/பழம் பெயரைக் குறிப்பிடுக.
Answer:
கீரை வகை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாதுளம் பழம், சப்போட்டாப் பழம்.

Question 6.
தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ஓரளவு/ வளர்ச்சி தேவை.
Answer:
நன்றாக உள்ளது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

அறிந்து கொள்வோம்

  1. தோட்டத்தில் பூச்சி தாக்குதலைத் தடுக்க முட்டை ஓட்டுத் தூளுடன், சிறிது உப்பைக் கலந்து செடியைச் சுற்றிலும் வளையம் போட வேண்டும்.
    2. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் தாவரங்களின் கனிம வளங்களைக் குறைக்கின்றன.
    3. மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் நட்டு வளர்த்தல் இன்றியமையாதது.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தோட்டத்தில் இருந்த பொம்மையைக் காகம் என்ன என்று நினைத்தது?
Answer:
தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சோளக்கொல்லைப் பொம்மையை காவல் காக்கும் உயிருள்ள மனிதர்’ என்று காகம் நினைத்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
காகம் பொம்மைக்கு ஏன் புதிய ஆடைகளைக் கொடுத்தது?
Answer:
பொம்மை அணிந்திருந்த ஆடைகள் கனத்த மழையால் கிழிந்திருந்தன. அதனால் காகம் பொம்மைக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்தது.

Question 3.
காகம், மற்ற பறவைகளை ஏன் கூவி அழைத்தது?
Answer:
தோட்டத்தில் இருந்த பொம்மை ‘உயிருள்ள மனிதர்’ என்று எண்ணி பறவைகள் அங்கு வராமலிருந்தன. அது உயிரற்ற பொருள் என்பதை உணர்ந்ததால் காகம், மற்ற பறவைகளையும் கூவி அழைத்தது.

Question 4.
அழ.வள்ளியப்பா, குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
Answer:
அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்கான கதைகளையும் பாடல்களையும் மிகுதியாகப் பாடியுள்ளமையால், குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 5.
‘மலரும் உள்ளம்’ நூலை எழுதியவர் யார்?
Answer:
‘மலரும் உள்ளம்’ நூலை எழுதியவர் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா ஆவார்.