Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.5 இசைத்தமிழர் இருவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Question 1.
‘சிம்பொனி’த் தமிழரும், ‘ஆஸ்கர்’ தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.
Answer:
சாதனை புரிந்த இளையராஜா

சிம்பொனித் தமிழர் :
“ஆசியக் கண்டத்தவர், ‘சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்க முடியாது” என்னும் மேலை இசை வல்லுநர் கருத்தைச் சிதைத்தவர் இளையராஜா. இவர், தமிழ்நாட்டுத் தேனி மாவட்டத்து இராசையா ஆவார். தாலாட்டில் தொடங்கித் தமிழிசைவரை அனைத்தையும் அக் சபோட்ட இசை மேதை.

இசையைச் செவியுணர் கனியாக்கியவர் :
திரையுலகில் கால் பதித்த இளையராஜா, இசையல் சிலம்பம் சுழற்றி, மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தவர். பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி, மெல்லிசையில் புது உயர் தொட்டவர். எழுபது எண்பதுகளில் இவர் இசை, இசை வல்லாரை மட்டுமன்றி, பாமர மக்களையும் கர்த்துத் தன்வசப் படுத்தியது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் சாதனைப் படைப்புகள்:
ஐவகை நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தும் இளையராஜாவின் இசை மெட்டுகள், நெடுந்தூரப் பயணங்களுக்கு வழித்துணையாயின. இளையராஜாவின் இசையில், மண்ணின் மணத்தோடு, பண்ணின் மணமும் கலந்திருக்கும். எனவே, இசை மேதைகளால் மதிக்கப்பட்டார்.

‘எப்படிப் பெயரிவேன்?’, ‘காற்றைத் தவிர ஏதுமில்லை!’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள் (இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படப் பின்னணி இசை, மனித உணர்வுகளான மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி என்பவற்றை உணர்த்துவன.

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜாவின் ‘இரமணமாலை’, ‘கீதகள்கள்’, மூகாம்பிகை பக்தித் தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ் சமுகி) என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
‘இசைஞானி’ எனப் போற்றப்படும் இளையராஜா, மேற்கத்திய இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். திரை இசைக்கு ஏற்ப உணர்வின் மொழியை மாற்றுவதில் வல்லவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

அரிய செயல் :
தேசத் தந்தை மகாத்மாகாந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, ‘அஜொய் சக்கரபர்த்தி’யைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் ‘முதல் சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்கினார். இன்று இளையராஜாவின் இசை ஆட்சி, உலகு முழுவதும் பரவியுள்ளமை தமிழராகிய நமக்குப் பெருமை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

பெற்ற விருதுகள் :
இளையராஜா, தமிழக அரசின் கலைமாமணி’ விருதைப் பெற்றார்; சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றார். மத்தியப்பிரதேச அரசு அளித்த ‘லதா மங்கேஷ்கர்’ விருதைப் பெற்றார்; கேரள நாட்டின் ‘நிஷாகந்தி சங்கீத விருதைப் பெற்றார்.

இந்திய அரசு, ‘பத்ம விபூஷண் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. இசையால் உலகளக்கும் இளையராஜாவின் புகழ், காலம் கடந்து நன்று பாராட்டைப் பெறும். வாழ்க இசை! வளர்க இளையராஜாவின் இசைப்பணி!

தமிழ் இசை உலகில் சாதனைபுரிந்த இரஹ்மான்

ஆஸ்கர் விருது வென்ற தமிழர் :
2009ஆம் ஆண்டு அமெரிக்க ‘கோடாக்’ அரங்கில், இசைக்கான ஆஸ்கர் பாந்துக்கு, ஐந்து பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இரஹ்மான் பெயரும் இருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

ஏனைய நால்வர், பலமுறை பரிந்துரை பெற்றவர்கள். எனினும், முதன்முறை பரிந்துரைக்கப்பட்டவர் அரங்கில் ஏறி, இரு கைகளிலும் ஆஸ்கர் விருதுக்கான சிலைகளை ஏந்தி, இறைவனை வணங்கியபின், தன் தாய்மொழியில் உரை நிகழ்த்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

இளமையில் இசையும் படிப்பும் :
மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய தம் தந்தை ஆர். கே. சேகரை எண்ணினார். நான்கு வயதில் தந்தையுடன் ஹார்மோனியம் வாசித்துத் திறமைகாட்டியதை எண்ணினார்.
தந்தையை இழந்த சூழலில் பள்ளிப் படிப்புக்கு இடைறு ஏற்படாவகையில், இரவெல்லாம் இசைக்குழுவில் பணி செய்து, காலையில் நேராகப் பள்ளி சென்று, வாயிலில் காத்திருக்கும் தாய் தந்த உணவை உண்டு, பள்ளிச் சீருடை அணிந்த காலத்தை நினைத்தார். பாழ்க்கைப் போராட்டம், பதினோராம் வகுப்போடு படிப்பை முடிக்க வைத்தது.

துள்ளல் இசைக்கு ஆட வைத்தவர்:
1992இல் ‘ரோஜா’ படத்திற்கு இசையமைத்துத் திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார். தம் இசையால் தமிழ்த் திரையுலகில் கதெழுச்சியை ஏற்படுத்தினார். இளைஞர்களிடையே இசை ஆளுமையை வளர்த்தார். இவரது தமிழிசையின் துள்ளல் ஓசைக்கு மயங்காதவர் இலர். இசையின் நுட்பமுணர்ந்து, செம்மையாகக் கையாண்டு இளைஞர்களைத் தம் பாடலுக்கு ஆடவும் பாடவும் வைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் கணினித் தொழில்நுட்பம் :
கணினித் தொழில் நுட்ப உதவியுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முறைகளைக் கலந்து, உலகத்தரத்தில் இசை அமைத்தார். இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.

இசைப்பா லின் மெட்டை உருவாக்குமுன், தாளத்தைக் கட்டமைத்துப் பாடலுக்கான சூழலை உள்வாங்கி, அதன்பின் பாட்டை வெளிக்கொணர்வது இரஹ்மானின் தனிஆற்றல். பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையை, மக்களை ஈர்க்கும் வகையில் அமைத்துத் தம் வல்லமையை வெளிப்படுத்துவார்.

உலகக் கலாசாரத்தை இசையில் இணைத்தல் :
இவர் இசையமைத்த ‘வந்தே மாதரம்’, ‘ஜனகணமன’ இசைத் தொகுதிகள், நாட்டுப் பற்றைத் தூண்டுவன. தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு, மேலை நாட்டுப் படங்களுக்கும் நாடகங்களுக்கும் இசையமைத்து, இசையுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார். தம் இசையால் வெவ்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைக்கவும் செய்தார்.

பெற்ற விருதுகள் :
ஏ. ஆர். இரஹ்மானுக்குத் தமிழக அரசு, ‘கலைமாமணி’ விருது வழங்கியது. கேரள அரசு, ‘தங்கப்பதக்கம்’ வழங்கிப் பாராட்டியது. உத்தரப்பிரதேச அரசு, ‘ஆவாத் சம்மான்’ விருதும், மத்தியப் பிரதேச அரசு, ‘லதா மங்கேஷ்கர்’ விருதும் வழங்கின.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

மொரிஷியஸ் அரசும் மலேசியா அரசும், ‘தேசிய இசை விருது’ வழங்கிச் சிறப்பித்தன. ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம், சர்வதேச இசை விருது’ வழங்கிப் பாராட்டியது.

இந்திய அரசு, பத்மபூஷண்’ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்கு இசையமைத்து, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று, உலகப் புகழ் பெற்றார்.

இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியராக வலம் வரும் இரஹ்மானின் வாழ்க்கை , சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கூடுதல் வினா

Question 2.
சிம்பொனித் தமிழர் இசைத் தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக.
Answer:
சிம்பொனித் தமிழரின் சாதனைப் படைப்புகள் :
பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி மெல்லிசையில் புது உயரம் தொட்டவர் இளையராஜா.

இந்தியாவின் பஹார், பஹாடி இன மக்கள் தொடங்கி, மதுரைக் கிராமிய இசைவரை அனைத்தையும் தம் கைவண்ணத்தில் வழிந்தோடச் செய்கம் எப்படிப் பெயரிடுவேன்?’, ‘காற்றைத் தவிர எதுவுமில்லை !’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள். இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படத்திற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜவின் ‘இரமண மாலை’, ‘கீதாஞ்சலி’, ‘மூகாம்பிகை பக்தித் தொகுப்பு’, ‘மீனாட்சி ஸ்தோத்திரம்’ என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ்சமுகி’ என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். மூன்றே சுரங்களோடு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசை அமைத்தது சிப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

அரிய செயல் :
மகாத்மா காந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் முதல் சிம்பொனி இசைக்கோவையை இளையராஜா உருவாக்கினார். தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் இனிமையான இடமுண்டு. அதில், இளையராஜாவின் புகழ், மகுடமாக அனிர்கின்றது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.4 திருச்சாழல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.4 திருச்சாழல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

குறுவினாக்கள் – கூடுதல்

Question 1.
சாழல் – விளக்குக.
Answer:

  • சோழன் என்பது, மகளிர் விளையாட்டுகளுள் ஒருவகை.
  • இது ஒரு மொழி விளையாட்டு. ஒருத்தி ஒரு செய்தி குறித்து வினா எழுப்புவாள்; மற்றொருத்தி தோள் வீசி நின்று, விடை கூறுவதாகச் சாழல் விளையாட்டு அமையும்.
  • விடையைக் கூறும்போது இறைவன் செயல்களையும், அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது போல் அமைந்திருத்தலால், ‘திருச்சாழல்’ எனப்பட்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 2.
‘சாழல்’ என்பதை எவ்வெவர் பயன்படுத்தியுள்ளனர்?
Answer:

  • மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில், ‘திருச்சாழல்’ இடம் பெற்றுள்ளது.
  • திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழி’யில் இவ்வடியைப் பயன்படுத்தியுள்ளார்.

Question 3.
‘திருச்சாழல்’ எங்கு யாரால் பாடப்பட்டது?
Answer:
‘திருச்சாழல்’ என்பது, தில்லைக் கோவிலில், மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

சிறுவினா

Question 1.
தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?
Answer:
சாழல்’ என்பது, மகளிர் விளையாட்டு. இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பான வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் – குறிப்புத் தருக.
Answer:

  • சிவபெருமான் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருத எசகம்.
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் நகார்’ என்னும் மூதுரை வழக்கைப் பெற்றுள்ளது. ஜி.யு.போப், திருவாசகம் முழுவதையும் இங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
மாணிக்கவாசகர் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • மாணிக்கவாசகர், சைவ சமயக் குரவர் நால்வரும் ஒருவர்.
  • இவர், திருவாதவூரைச் சேர்ந்தவர். எனவே திருவாதவூரார்’ எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும் திருக்கோவையாருமாகும்.

Question 4.
அந்தமிலான் செய்த புதுமை, மேன்மை குறித்துச் சாழலால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
“அழிவு இல்லாதவனாகிய அவன், தன்னை அடைந்த நாயினும் இழிந்தவனையும் எல்லை இல்லா ஆனந்த வெள்றுத்திய அழுத்தும் புதுமையை எவ்வாறு செய்தானடி?” என்று, ஒருத்தி இகழ்வதுபோல் வினா எழுப்பினாள்.

இன்னொருத்தி தன் தோள்களை அசைத்து ஆடியபடி, “அடைந்தவனை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள், தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்பதை அறிந்துகொள்!’ என, அவன் சிறப்பை விடையாகக் கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

நெடுவினா (கூடுதல்)

Question 1.
இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் திருச்சாழல்மூலம் மாணிக்கவாசகரின் மொழி விளையாட்டினை விவரிக்கவும்.
Answer:
(சாழல் என்னும் விளையாட்டு :
மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு சாழல். இதில் ஒருத்தி வினா எழுப்புவாள். மற்றொருத்தி அதற்கு ஏற்ற விடை கூறுவாள். இறைவன் செயல்களையும் அச்செயல்களால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவதாக அமைந்தது திருச்சாழலாகும். ‘திருச்சாழல்’ என்னும் ஒருவகை மொழி விளையாட்டின்மூலம் இருபது பாடல்களில் இறைவனின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

ஆற்றல் நிறைந்தவன் இறைவன்!
சாழல் ஆடும் ஒருத்தி, “சுடுகாட்டைக் கோவிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்டவனுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை! இத்தகையவரா உங்கள் கடவுள்?” எனக் கேள்வி எழுப்பினாள். அதற்கு, “எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லையாயினும், அவன் சினந்தால் உலகு அனைத்தும் கல்பொடியாகிவிடும்” என்று மற்றொருத்தி விடை கூறி இறைவனின் ஆற்றலை நிலைப்படுத்தினாள்.

பிறரைக் காக்கவே நஞ்சை உண்டான் :
உடனே அவள், “பாற்கடலைக் கடைந்தபோது உண்டான நஞ்சைப் பருகினானே. அதற்குக் காரணம் என்ன?” என வினவினாள். அதற்கு மற்றொருத்தி, “அந்த நஞ்சை எங்கள் இறைவன் அன்று உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அன்றே அழிந்திருப்பார்களே!” எனக் கூறி விளக்கினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

அனைவருக்கும் அவன் அடியே மேலானது :
“முடிவு இல்லாதவனாக இருக்கும் அவனை அடைந்த என்னை, ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தது என்னே புதுமை” எனக் கேட்டாள். அதற்கு மற்றொருத்தி, “உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த அதே திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையானதேயாகும்” என்று கூறி அமைந்தாள்.

சுவைக்கத்தக்க நயம் :
இவ்வகையில் திருச்சாழல் என்னும் விளையாட்டுப் பாடல் மூலம் ஒருத்தி இறைவனைப் பழிப்பதுபோலவும், இன்னொருத்தி இறைவனின் செயல்களை நியாயப்படுத்துவதுபோலவும் மாணிக்கவாசகர் சிவபெருமானின் பெருமைகளைப் புலப்படுத்தியுள்ள நயம் சுவைக்கத் தக்கதாகும்.

இலக்கணக்குறிப்பு

சுடுகாடு, கொல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
நல்லாடை – பண்புத்தொகை
அயன்மால் – உம்மைத்தொகை
கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

உறுப்பிலக்கணம்

1. உண்டான் – உண் + ட் + ஆன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆன் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. உண்டிலன் – உண் + ட் + இல் + அன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை இல் – எதிர்மறை இடைநிலை,
அன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அடைந்த – அடை + த் (ந்) + த் அ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கற்பொடி – கல் + பொடி
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பொடி)

2. உலகனைத்தும் – உலகு + அனைத்தும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (உலக் + அனைத்தும்)
“உடல் பால் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உலகனைத்தும்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

3. திருவடி – திரு + அடி
ஏனை உயிர்வழி வவ்வும்” (திரு + வ் + அடி)
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (திருவடி)

4. தாயுமிலி – தாயும் + இலி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாயுமிலி)

5. தேவரெல்லாம் – தேவர் + எல்லாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தேவரெல்லாம்)

6. தனையடைந்த – தனை + அடைந்த
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனை + ய் + அடைந்த)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனையடைந்த)

7. புலித்தோல் – புலி + தோல்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (புலித்தோல்)

8. தனியன் – தனி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனி + ய் + அன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனியன்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

9. நல்லாடை – நன்மை + ஆடை
“ஈறுபோதல்” (நன் + ஆடை), “முன்னின்ற மெய்திரிதல்” (நல் + ஆடை)
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஆடை),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லாடை)

பலவுள் தெரிக

Question 1.
பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று ………………….
அ) சாழல்
ஆ) சிற்றில்
இ) சிறுதேர்
ஈ) சிறுபறை
Answer:
அ) சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ………………….
அ) பெஸ்கி
ஆ) கால்டுவெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஈ) ஜி.யு. போப்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
சைவத் திருமுறைகளில் திருவாசகம், ………………….திருமுறையாக உள்ளது.
அ) பன்னிரண்டாம்
ஆ) ஆறாம்
இ) எட்டாம்
ஈ) ஏழாம்
Answer:
இ) எட்டாம்

Question 4.
திருமங்கையாழ்வார் பாடியது………………….
அ) திருச்சாழல்
ஆ) நாட்டார் வழக்கியல்
இ) தேவாரம்
ஈ) பெரிய திருமொழி
Answer:
ஈ) பெரிய திருமொழி

Question 5.
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பதிகங்கள் ………………….
அ) 658
இ) 51
ஈ) 12
Answer:
இ) 51

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 6.
சாழல் வடிவத்தைக் கையாண்ட ஆழ்வார் ………………….
அ) பெரியாழ்வார்
ஆ) திருமங்கை ஆழ்வார்
இ) ஆண்டாள்
ஈ) திருப்பாணாழ்வார்
Answer:
ஆ) திருமங்கை ஆழ்வார்

Question 7.
சைவத் திருமுறைகள் ………………….
அ) ஏட்டு
ஆ) பதினெட்டு
இ) பத்து
ஈ) பன்னிரண்டு
Answer:
பன்னிரண்டு

Question 8.
பைத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக அமைந்தது ………………….
அ) தேவாரம்
ஆ) திருவாய்மொழி
இ) திருவாசகம்
ஈ) திருக்குறள்
Answer:
இ) திருவாசகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 9.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் ………………….
அ) திருவாசகம், தேவாரம்
ஆ) திருக்கோவையார், தேவாரம்
இ) திருவாசகம், திருக்கோவையார்
ஈ) திருவாசகம், திருப்புகழ்
Answer:
இ) திருவாசகம், திருக்கோவையார்

Question 10.
ஒருவர் வினா கேட்டு, அதற்கு மற்றொருவர் விடை கூறும் வகையில் இறைவனைப் போற்றிப் பாடப்பட்டவை ………………….
அ) திருச்சாழல், திருப்புகழ்
ஆ) பெரிய திருமொழி, திருவருட்பா
இ) திருப்புகழ், திருவருட்பா
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி
Answer:
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி

Question 11.
மாணிக்கவாசகர், ‘திருச்சாழலில்’………………….பாடல்களைப் பாடியுள்ளார்.
அ) பன்னிரண்டு
ஆ) எட்டு
இ) இருபது
ஈ) பத்து
Answer:
இ) இருபது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 12.
பொருத்துக.
1. காயில் – அ. திருமால்
2. அந்தம் – ஆ. நஞ்சு
3. அயன் – இ. வெகுண்டால்
4. ஆலாலம் – ஈ. முடிவு
– உ. பிரமன்
Answer:
1-இ, 2-ஈ, 3-உ, 4-ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குற்றாலக் குறவஞ்சி, குற்றால மாலை, குற்றாலச் சிலேடை, குற்றாலப் பிள்ளைத் தமிழ், குற்றால யமக அந்தாதி ஆகியன, திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் ஆகும்.

Question 2.
சிங்கிக்குப் பரிசளித்த நாடுகள் எவை?
Answer:
சேலத்து நாடு, கோலத்து நாடு, பாண்டி நாடு, கண்டி நாடு ஆகியவை, சிங்கிக்குப் பரிசளித்த நாடுகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 3.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களுள் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:
சிலம்பு, தண்டை , பாடகம், காலாழி.

சிறுவினா

Question 1.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?
Answer:

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
  • கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
  • பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
குறவஞ்சி – பெயர்க்காரணம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று; தமிழ்ப் பாடல் நாடக இலக்கிய வடிவாகும்.
  • பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி, அத் தலைவன்மீது காதல் கொள்வாள்.
  • அப்போது வரும் குறவர்குலப் பெண் ஒருத்தி, தலைவிக்கு நற்குறி கூறிப் பரிசில்களைப் பெறுவாள்.
  • இவ்வகையில் அமைவது, ‘குறவஞ்சி’ இலக்கியம். இதனைக் ‘குறத்திப் பாட்டு’ எனவும் கூறுவர்.

Question 3.
குற்றாலக் குறவஞ்சி – குறிப்புத் தருக.
Answer:
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி, நாடக இலக்கிய வடிவில் அமைந்ததாகும். இது இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது. உலா வந்த தலைவன்மீது காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லிப் பரிசு பெறுவதுபோன்ற அமைப்புடையது.

தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி, ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ என வழங்கப்பெறுகிறது. இது ‘கவிதைக் கிரீடம்’ எனப் போற்றப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
திரிகூட ராசப்பக் கவிராயர் குறித்து அறிவன யாவை?
Answer:

  • திருநெல்வேலி விசய நாராயணம் என்னும் ஊரில் வாழ்ந்தவர், திரிகூட ராசப்பக் கவிராயர்.
  • திருக்குற்றால நாதர் கோவிலில் பணிபுரிந்தார்.
  • சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்.
  • குற்றாலத் தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றி யுள்ளார். திருக்குற்றாலநாதர் கோவிலின் ‘வித்துவான்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
  • மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார் வேண்டுதலின்படி, திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடி அரங்கேற்றினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

நெடுவினா – கூடுதல் வினா

Question 1.
சிங்கன் சிங்கி – உரையாடலை விரித்துரைக்க.
Answer:
குறி சொல்லப் போன குறவஞ்சி :
குறி சொல்லிப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிய குறத்தி சிங்கியை, அவள் கணவன் சிங்கன் சந்தித்தான். அவள் அணிந்திருந்த அணிவகைகளைக் கண்டு வியந்தான்.

“நெடுநாள் பிரிந்திருந்தமையால், “என்னிடம் சொல்லாமல் இத்தனை நாள்களாக எங்கே சென்றாய்?” என வினவினான்.

அதற்குச் சிங்கி :
“கொத்தான மலர்களால் அலங்கரித்த கூந்தலையுடைய பெண்களுக்குக் குறி சொல்லப் போனேன்” என்று கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

சிங்கனின் வினா – சிங்கி விடை :

சிங்கன் : “உன்னைப் பார்க்க அதிசயமாகத் தோன்றுகிறது! ஆனால் அது பற்றிப் – இருக்கிறது!”.
சிங்கி : “எவர்க்கும் பயப்படாமல் தோன்றுவதை அஞ்சாமல் சொல்”,
சிங்கன் : “காலுக்கு மேல் பெரிய விரியன் பாம்புபோல் கடித்துக் கிடப்பது என்ன?”
சிங்கி : “சேலத்து நாட்டில் குறி சொல்லியதற்குப் பரிசாகப் பெற்ற சிலம்
சிங்கன் : “அதற்கு மேல் திருகு முருகாகக் கிடப்பது என்ன?”
சிங்கி : “கலிங்க நாட்டில் கொடுத்த முறுக்கிட்ட தண்டை”

சிங்கன் : “சரி, நாங்கூழ்ப் புழுபோல் நீண்டு நெளிந்து குறுதிக் கிடப்பது என்ன?”
சிங்கி : “பாண்டியனார் மகளுக்குச் சொன்ன குறிக்குப் பரிசாக அளித்த பாடகம்” என்றாள்.
சிங்கன் : “உன் காலிலே பெரிய தவளைபோல் கட்டியள்ளது என்னடி?”,
சிங்கி : “இறைவன் குற்றாலநாதர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்”.
சிங்கன் : “அப்படியானால் சுண்டு விரலிலே கண்டலப் பூச்சிபோல் சுருண்டு கிடப்பது என்ன?”
சிங்கி : “கண்டி தேசத்தில் முன்பு நான் பெற்ற காலாழி”.
இப்படி உரையாடிக் கொண்டு, தம் உறைவிடம் நோக்கிச் சென்றனர்.

இலக்கணக்குறிப்பு

மாண்ட, பெற்ற, இட்ட, கொடுத்த கட்டிய – பெயரெச்சங்கள்
சொல்ல, கடித்து, சொல்லி நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
சுண்டுவிரல் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
திருகுமுருகு – உம்மைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

உறுப்பிலக்கணம்

1. பெற்ற பெறு (பெற்று) + அ
பெறு பகுதி, ‘பெற்று’ என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, அ – பெயரெச்ச விகுதி.

2. நடந்தாய் – நட + த் (ந்) + த் + ஆய்
நட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

3. சொல்ல – சொல் + ல் + அ
சொல் – பகுதி, ல் – சந்தி, அ – வினையெச்ச விகுதி.

4. கடித்து – கடி + த் + த் + உ
கடி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

5. சொல்லி – சொல் + ல் + இ
சொல் – பகுதி, ல் – சந்தி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

6. கொடுத்த – கொடு + த் + த் + அ
கொடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

7. நெளிந்த – நெளி + த் (ந்) + த் + அ
நெளி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. பயமில்லை – பயம் + இல்லை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பயமில்லை)

2. காலாழி – கால் + ஆழி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலாழி)

3. விரியன் – விரி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (விரி + ய் + அன் )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (விரியன்)

4. குண்டலப் பூச்சி – குண்டலம் + பூச்சி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்புவும் ஆகும்” (குண்டல + பூச்சி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (குண்டப்பூச்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

பலவுள் தெரிக

Question 1.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் – 1. தண்டை
ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
i – 3 4 2 1
ii – 3 1 4 2
iii – 4 3 2 1
iv – 4 1 3 2
Answer:
ii – 3 1 4 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
திரிகூட ராசப்பக் கவிராழரின் கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்ட நூல் ………………
அ) குற்றால மாலை
ஆ) குற்றாலக் கோவை
இ) நன்னகர் வெண்பா
ஈ) குற்றாலக் குறவஞ்சி
Answer:
ஈ) தற்றாகக் குறவஞ்சி

Question 3.
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் ………………
அ) காவடிச்சிந்து
ஆ) திருமலை முருகன் பள்ளு
இ) குற்றாலக் குறவஞ்சி
ஈ) திருச்சாழல்
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது ………………
அ) பரணி
ஆ) கலம்பகம்
இ) குறவஞ்சி
ஈ) காவடிச்சிந்து
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Question 5.
‘குறத்திப்பாட்டு’ என வழங்கப் பெறுவது ………………
அ) பள்ளு
ஆ) காவடிச்சிந்து
இ) பரணி
ஈ) குறவஞ்சி
Answer:
ஈ) குறவஞ்சி

Question 6.
குற்றாலக் குறவஞ்சி பாடியவர் ………………
அ) வில்வரத்தினம்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்
ஈ) அழகிய பெரியவன்
Answer:
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 7.
குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் ………………
அ) வள்ளல் சீதக்காதி
ஆ) சென்னிகுளம் அண்ணாமலையார்
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
ஈ) இராசராசசோழன்
Answer:
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்

Question 8.
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு ………………
அ) கோலத்து நாடு
ஆ) பாண்டி நாடு
இ) சேலத்து நாடு
ஈ) கண்டிதேசம்
Answer:
இ) சேலத்து நாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 9.
‘திருகுமுருகு’ என்று சிங்கன் குறிப்பிட்டது ………………
அ) காலாழி பீலி
ஆ) பாடகம்
இ) முறுக்கிட்ட தண்டை
ஈ) அணிமணிக்கெச்சம்
Answer:
இ) முறுக்கிட்ட தண்டை

Question 10.
அரசர்களையும், வள்ளல்களையும், வீரர்களையும், தனி மனிதர்களையும் பாடியவை………………
அ) சமய நூல்கள்
ஆ) சங்க இலக்கியங்கள்
இ) சிறுகாப்பியங்கள்
ஈ) சிற்றிலக்கியங்கள்
Answer:
ஆ) சங்க இலக்கியங்கள்

Question 11.
கடவுளோடு மனிதர்களைப் பாடியவை ………………
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) சிற்றிலக்கியங்கள்
இ) சமய இலக்கியங்கள்
ஈ) காப்பியங்கள்
Answer:
ஆ) சிற்றிலக்கியங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 12.
பொருத்துக.
1. குழல் – அ. சன்மானம்
2. நாங்கூழ் – ஆ. பூமாலை
3. வரிசை – இ. கூந்தல்
4. கொத்து – ஈ. கோலம்
– உ. மண்புழு
Answer:
1-இ, 2-உ, 3-ஆ 4.ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?
Answer:
விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வகை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம், சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

Question 2.
அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது?
Answer:
மலர்க்கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல் சரிவிலோ, சதுர வட்ட கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

சிறுவினா

Question 1.
உணவும் உறக்கமும் அணில் கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.
Answer:

  • காலை எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வெண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்கவேண்டும்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்குப் பதில் சொல்லவேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘கேள்வி’ என்னும் தலைப்பில், ‘ஆத்மாநாம் உணர்த்தும் செய்திகளை எழுதுக.
Answer:

  • காலையில் எழுந்ததும் இரை தோத துள்ளி ஓடும் அணில், இரவு எங்கே உறங்குகிறது?
  • மலர்க்கிளையாகிய படுக்கையிலா ? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
  • ஒன்றல்ல, நூற்றுக்கணகம் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான
  • முகங்களுடனும் சிஜியிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும் !
  • இவை உணலையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது, ஆத்மாநாமின் ‘கேள்வி’க் கவிதைச் செய்தியாகும்.

Question 3.
புளியமர நிழலில் கேட்டதாக ஆத்மாநாம் கூறுவன யாவை?
Answer:
சமீபத்தில் ஒரு புளியமரம் என் நண்பனாயிற்று! தற்செயலாக நான் அப்புறம் சென்றபோது, “என்னைத் தெரிகிறதா? நினைவு இருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது, என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்!

அப்போது உன் முகம் உடல் எங்கும் குளிர்காற்றை வீசினேனே! எப்படியும் என் மடிக்கு வா!” என, நிழலிலிருந்து குரல் கேட்டதாக ஆத்மாநாம் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 4.
ஆத்மாநாம் – குறிப்பெழுதுக.
Answer:

  • மதுசூதனன் என்பது, ‘ஆத்மாநாம்’ என்பாரின் இயற்பெயர்.
  • முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்.
  • 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு.
  • ‘ழ’ என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்.
  • கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

இலக்கணக்குறிப்பு

உணவையும், உறக்கத்தையும் – எண்ணும்மை
சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ல் ‘ன்’ எனத் திரிந்தது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. குளிர்ந்த – குளிர் + த் (ந்) + த் + அ
குளிர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

புணர்ச்சி விதிகள்

Question 1.
நூற்றுக்கணக்கு – நூறு + கணக்கு
Answer:
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” (நற்று + கணக்கு) “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நூற்றுக்கணக்கு)

Question 2.
நண்பனாயிற்று – நண்பன் + ஆயிற்று
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நண்பனரயினது)

Question 3.
நிழலிலிருந்து – நிழலில் + இருந்து
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலிருந்து)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

பலவுள் தெரிக

Question 1.
‘ழ’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மருதமால் வெளியிடப்பட்டது; கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது…………………..
அ) சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்.
ஆ) கவிதைநூல், திருச்சாழல்
இ) நாளிதழ், நன்னகர் வெல்டர்
ஈ) கட்டுரை நூல், குற்றாலக்கோவை
Answer:
அ) சிற்றிதழ், குஜாலக்குறவஞ்சி

Question 2.
‘ஆத்மாநாம்’ இயற்பெயர் யாது?
அ) ரங்கராஜன்
ஆ) மதுசூதனன்
இ) ராசேந்திரன்
ஈ) மீனாட்சி
Answer:
ஆது சூதனன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 3.
ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பு ………………….
அ) ஒன்றே ஒன்று
ஆ) இரண்டு
இ) ஆறு
ஈ) எதுவும் இல்லை
Answer:
அ) ஒன்றே ஒன்று

Question 4.
அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்………………….
அ) வில்வரத்தினம்
ஆ) மீரா
இ) மீனாட்சி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஈ) ஆத்மாநாம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 5.
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு ………………….
அ) கொடி விளக்கு
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) காகிதத்தில் ஒரு கோடு
ஈ) உதயத்திலிருந்து
Answer:
இ) காகிதத்தில் ஒரு கோடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.1 காலத்தை வென்ற கலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

குறுவினாக்கள்

Question 1.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நாகரம், வேசரம், திராவிடம்.

Question 2.
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?
Answer:
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் எருதந் குஞ்சர மல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் ‘சோமயன் அமிர்தவல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.

இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் படைரிந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 4.
கோபுரம், விமானம் – வேறுபாடு என்ன?
Answer:

  • நுழைவு வாயிலின்மேல் அமைக்கப்படுவது கோபுரம். –
  • கருவறை’ என்னும் அகநாழிகையின்மேல் அமைக்கக் வெது விமானம்.

Question 5.
பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எது? .
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்காலச் சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 6.
கற்றளிக் கோவில்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியன, கற்றளிக் கோவில்களாகும்.

Question 7.
‘கற்றளி’க் கோவிலை முதலில் உருவாக்கியவன் யார்?
Answer:
கருங்கற்களை ஒன் என் மேல் ஒன்றாக அடுக்கிக் ‘கற்றளி’க் கோவிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இரண்டாம் நரசிம் வம் பல்லவ மன்னன் உருவாக்கினான்.

Question 8.
பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன?
Answer:

  • பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேலே மரத்தால் சட்டகம் இட்டனர்.
  • அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
  • அடுத்து, செங்கற்களை அடுக்கிக் கோவில்களைக் கட்டினர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 9.
தடைவரைக் கோவில் என்பது யாது?
Answer:
செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில், குடைவரைக் கோவிலாகும்.

சிறுவினா

Question 1.
ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?
Answer:

  • ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : * ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கற்றளிக் கோவில்கள் :

செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
கற்றளிக் கோவில்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதைப்போல் கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் ‘கற்றளி’ என்று பெயர். இவ்வடிவத்தை ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் உருவாக்கினான்.

மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோயில் ஆகியவற்றைக் கற்றளிக் கோவில்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அந்தவகையில் இராசராசசோழன் கட்டியது மிகப் பெரிய கற்றளிக் கோவிலாகும். தட்சிணமேரு’ என இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களில் பெரியதும் உயரமானதுமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 3.
கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல – நிறுவுக.
Answer:

  • பெரிதாகக் கட்டப்பட்ட தமிழகக் கோவில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லை.
  • இசை, நடனம், நாடகம் முதலான அருங்கலைகள், அக்கோவில்களால் போற்றி வளர்க்கப்பட்டன.
  • மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகக் கோவில்கள் இருந்ததனால், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாகப் பறித்தனர்.

பஞ்சம் ஏற்படும் காலத்தில், மக்களுக்கு உதவுவதற்காகத தானியக் கிடங்குகளையும் கோவில்களில் அமைத்திருந்தனர். கருவூலமாகவும், மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கும் இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன.

Question 4.
தஞ்சைப் பெரிய கோவில் விமான அமைப்பின் ( சிலப்பினை விளக்குக.
Answer:

  • கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உர மானதும் பெரியதும் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன் (மல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோவில் இது.
  • ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் இது கட்டி முடிக்கப்பட்டது.
  • இக்கோவில் கருவறை விமானம், 216 அடி உயரத்தையும், 13 தளங்களையும் கொண்டுள்ளது.
  • இதனை இராசராசன், தினைமேரு’ எனப் பெருமையுடன் அழைத்தான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 5.
கோவில் கோபுரம் அமைக்கும் மரபு குறித்து எழுதுக.
Answer:
பழமையான கோவில்களில் கோபுரங்கள் சிறியனவாக இருந்தன. வெளிக்கோபுரம் உயரமாகவும், உள்கோபுரம் உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரம் அமைக்கும் மரபை இராசராசன் தோற்றுவித்தான்.

12ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் அமைப்பு, தனிச்சிறப்புப் பெற்றது. நான்கு புறங்களில், நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தொடங்கியது.

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றில் மிக உயரமான கோபுரங்களை எழுப்பியது விஜயநகர அரசு. ‘கோபுரங்களின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டி இருப்பர்.

காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களிலுள்ள கோவில் கோபுரங்கள், நூற்றைம்பது அடி உயரத்திற்குமேல் இருக்கும்.

Question 6.
‘கலை’ என்பது குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை. கலை, நம் மனத்தில் அழகுணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனப் பலவிதமாகப் பிரிப்பர்.
  • கலை என்பது, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் பிரதிபலிக்கிறது.
  • சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலான கலைகளில், தமிழகம் பழங்காலத்திலேயே சிறப்புற்றிருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

நெடுவினா

Question 1.
‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.
Answer:
காலத்தை வென்று நின்ற கலை :
ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில், தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில், இராசராச சோழனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.

கதை சொல்லும் கல்வெட்டு :
சுற்றுச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லும் அந்தக் கல் இசை, நடனம், நாடகம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்தியைத் தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளைத் தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளைக் கேட்டறிய முடிகிறது.

கோவில் உருவான கதையைக் கூறுகிறது :
கோவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்கச் செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள் எண்ணற்ற வரலாற்றுக் கதைகளைக் கூறுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

ஓவியங்கள் கூறும் கதை :
கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கட்டம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெரிய அளவில் வரைந்து வைத்துள்ளதை, இன்றளவும் காணமுடிகிறது. கோவல் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்ததைக் கதைகதையாக இன்று இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.

கல் சொல்லும் கதை :
ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சை பெரிய கோவிலை ஒருமுறை காணும்போது, கல்லும் கதை சொல்லும்’ என்பது தெளிவாகப் புலப்படும்.

பலவுள் தெரிக

Question 1.
கூற்று 1 : தந்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ். கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையைச் சார்ந்தவை
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 2.
மனிதகுல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை
அ) கல்வியும் தொழிலும்
ஆ) கல்வியும் கலையும்
இ) கலையும் அறிவியலும்
ஈ) தொழிலும் அறிவியலும்
Answer:
இ) கலையும் அறிவியலும்

Question 3.
ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேம்பாட்டையும் பிரதிபலிப்பது ……………
அ) கல்வி
ஆ) அறிவியல்
இ) கோவில்
ஈ) கலை
Answer:
ஈ) கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 4.
கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் …………………
அ) எஸ். கே. கோவிந்தசாமி
ஆ) ஃப்ரெஸ்கோ
இ) ஷூல்ஸ்
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்
Answer:
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்

Question 5.
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது………………
அ) இராசராசன் திருவாயில் கோபுரம்
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
இ) மதுராந்தகன் கோபுரம்
ஈ) இராசராசன் கோபுரம்
Answer:
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்

Question 6.
‘தட்சிண மேரு’ என அழைக்கப்படுவது –
அ) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
ஆ) திருவில்லிபுத்தூர் கோவில்
இ) தஞ்சைப் பெரிய கோவில்
ஈ) ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
Answer:
இ) தஞ்சைப் பெரிய கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 7.
செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் ………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
ஈ) சோழன் செங்கணான்
Answer:
ஈ) சோழன் செங்கணான்

Question 8.
‘இராசசிம்மேச்சுரம்’ என அழைக்கப்படும் கோவில் ……………
அ) திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
ஆ) தஞ்சைப் பெரிய கோவில்
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
ஈ) தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
Answer:
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Question 9.
இராசராசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட வேன்டுமென்ற எண்ணத்தைத் தூண்டிய கோவில் ………….
அ) தில்லைக் கோவில்
ஆ) குற்றாலநாதர் கோவில்
இ) திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
Answer:
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 10.
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……………
அ) காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
ஆ) தஞ்சாவூர், அஜந்தா, திருவில்லிபுத்தூர்
இ) அஜந்தா, எல்லோரா. சித்தன்னவாசல்
ஈ) காஞ்சிபுரம், எல்லோரா, சித்தன்னவாசல்
Answer:
இ) அஜந்தா, எ மோரா, சித்தன்னவாசல்

Question 11.
தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்த கட்டடக்கலைப் பாணி ……………
அ) நாகர கலைப்பாணி
ஆ) வேசர கலைப்பாணி
இ) திராவிட கலைப்பாணி
ஈ) மாயன் கலைப்பாணி
Answer:
இ) தராவிட கலைப்பாணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 12.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியங்களைக் கண்டறிந்தவர் ……………
அ) எஸ்.கே.கோவிந்தசாமி
ஆ) பி. கே. கோவிந்தசாமி
12) வி. கே. கோவிந்தராஜன்
ஈ) எம். எஸ். கோவிந்தராஜன்
Answer:
அ) எஸ்.கே.கோவிந்தசாமி

Question 13.
‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியவர்……………
அ) முதலாம் நரசிம்மவர்மன்
ஆ) இராசராசசோழன்
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்

Question 14.
காஞ்சி கைலாசநாதர் கோவிலை அமைத்த மன்னன்……………
அ) மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) நரசிம்மவர்மன்
ஈ) இராசராசன்
Answer:
ஆ) இராசசிம்மன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 15.
குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ……………
அ) இராசசிம்மன்
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்
இ) இரண்டாம் நரசிம்மன்
ஈ) இராசராச சோழன்
Answer:
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 16.
தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என உறுதி செய்தவர் ……………
அ) இத்தாலி ஃப்ரெஸ்கோ
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
இ) எஸ். கே. கோவிந்தசாமி
ஈ) கோவலூர் உடையான்
Answer:
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்

Question 17.
தமிழக அரசின் சின்னம்……………
அ) ஆலமரம்
ஆ) கோவில் நந்தி
இ) கோவில் கோபுரம்
ஈ) திருவாயில்
Answer:
இ) கோவில் கோபுரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 18.
இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் ……………
அ) நாயக்க மன்னர்
ஆ) பல்லவர்
இ) குலோத்துங்கன்
ஈ) இராசராசன்
Answer:
ஈ) இராசராசன்

Question 19.
நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபைத் தொடங்கியவன் ……………
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
இ) இரண்டாம் இராசராசன்
ஈ) இரண்டாம் மகேந்திரவர்மன்
Answer:
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்

Question 20.
பெரிய கோவிலில் காணப்படும் பெரிய நந்தியும் மண்டபமும்,……………காலத்தில் கட்டப்பட்டவை.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பல்லவர்
ஈ) நாயக்கர்
Answer:
ஈ) நாயக்கர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 21.
புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியது……………
அ) சோழ அரசு
ஆ) பல்லவ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) விஜயநகர அரசு
Answer:
ஈ) விஜயநகர அரசு

Question 22.
‘ஒலோகமாதேவீச்சுரம்’ கோவிலைத் திருவையாற்றில் கட்டியவர் ……………
அ) எருதந் குஞ்சர மல்லி ,
ஆ) சோமயன் அமிர்தவல்லி
இ) ஒலோகமாதேவி
ஈ) குந்தவைதேவி
Answer:
இ) ஒலோகமாதேவி

Question 23.
‘ஒலோகமாதேவீச்சில் கோவில் கல்வெட்டால் அறியப்படும் பெண் அதிகாரிகள்……………
அ) குந்தவை, ருதஞ் குஞ்சர மல்லி
ஆ) சோமயின் அமிர்தவல்லி , குந்தவை
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி
ஈ) ஓவோகமாதேவி, எருதந் குஞ்சர மல்லி
Answer:
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி

Question 24.
சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகை ……………
அ) நாகரம்
ஆ) வேசரம்
இ) தட்சிணம்
ஈ) திராவிடம்

1. அ, ஆ, இ
2. அ, ஆ, ஈ
3. ஆ, இ, ஈ
4. அ, இ, ஈ
Answer:
2. அ, ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 25.
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ) தஞ்சாவூர் – 1. கடற்கரைக் கோவில்
ஆ) மகாபலிபுரம் – 2. ஒலோகமாதேவீச்சுரம்
இ) காஞ்சிபுரம் – 3. தட்சிண மேரு
ஈ) திருவையாறு – 4. கைலாசநாதர் கோவில்

அ) அ – 1, ஆ – 2, இ – 3, ஈ – 4
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
இ) அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
ஈ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
Answer:
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2

Question 26.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1) ‘தட்சிண மேரு’ என்பது – அ. வாயில்களின்மேல் அமைவது
2) ‘விமானம் என்பது – ஆ. தானியக் கிடங்கு
3) ‘கோபுரம்’ என்பது – இ. தஞ்சைப் பெரிய கோவில்
4) ‘கற்றளி’ என்பது – ஈ. அகநாழிகைமேல் அமைக்கப்படுவது
உ. கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது

அ) 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ
ஆ) 1 – உ , 2 – இ, 3 – ஆ, 4 – ஈ
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
Answer:
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 27.
பொருத்துக.
1. வளர்க்கப்பட்ட அருங்கலைகள் – அ. பஞ்சகாலத்தில் மக்களுக்கு -வ.
2. கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டவை – ஆ. போர்க்காலத்தில் படை பரர்களுக்கு.
3. தானியக் கிடங்குகள் – இ. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள்.
4. தங்கும் இடம் – ஈ. மக்கள் ஒன்று டும் இடம்.
– உ. இசை, நடனம், நாடகம்.
Answer:
1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. கலை, ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையைப் பிரதிபலிக்கிறது.
வினா : கலை, எவற்றைப் பிரதிபலிக்கிறது?

2. தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்டம் நம்மை வியப்படையச் செய்கிறது.
வினா : எக்கோவிலின் கட்டடக் கலைநுட்பம், நம்மை வியப்படையச் செய்கிறது?

3. கருவறையை அகநாழிகை என்று அழைப்பார்கள்.
வினா : எதனை அகநாழிகை என் அழைப்பார்கள்?

4. தஞ்சைப் பெரிய கோவில், நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும்.
வினா : நம் நாட்டிலுள்ள கறளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?

5. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காகத் தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப் பட்டிருந்தன.
வினா : கோவிலுக்குள் தானியக் கிடங்குகளும் எதற்காக அமைக்கப்பட்டிருந்தன?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

6. தஞ்சைப் பெரிய கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.
வினா : (தஞ்சைப் பெரிய கோவில் எப்படிக் கட்டப்பட்ட வடிவு கலைப்பாணி எவை?

7. ஃப்ஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள்.
விரை : எந்த இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை’ என்று பொருள்?

8. காலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.
வினா : வரலாற்றைப் படைத்த நமக்கு, எது தெரியவில்லை?

9. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
வினா : கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் எதனைப் பார்த்திருக்கிறோம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

10. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்பது,
ஆச்சரியமாக இருக்கிறது. வினா : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியமாக இருக்கிறது என்பது எது?

11. தான் மட்டுமே பங்களிக்காமல், மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு, அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தி இருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது.
வினா : இராசராசன், எதனை ஆவணப்படுத்திய பாங்கு போற்றத்தக்கதாகும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

குறுவினாக்கள்

Question 1.
மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
Answer:
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு பிரிவுகளை உடையது மருத்துவம் எனக் குறள் கூறுகிறது.

Question 2.
படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை?
Answer:
வீரம், மானம், முன்னோர்வழி நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்னும் நான்கும் படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை ஆகும்.

Question 3.
பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிடவேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக.
Answer:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 4.
எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
“முன் உண்டது செரித்ததை அறிந்து, அடுத்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை” என்று, திருவள்ளுவர் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

Question 5.
இகழ்ச்சியில் கெட்டாரை எப்போது நினைத்தல் வேண்டும்?
Answer:
மகிழ்ச்சியில் தங்கள் கடமையை மறக்கும் போது, மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

Question 6.
எண்ணியதை அடைதல் எப்போது எளிதாகும்?
Answer:
எண்ணியதை எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் என்பது எளிதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 7.
எதைக் கொடுத்து யாரைத் துணையாகக் கொள்ள வேண்டும்?
Answer:
முகக் குறிப்பா அகக் குறிப்பை அறிபவரை, எதையேனும் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

Question 8.
கண் உரைப்பவை எவை?
Answer:
பகைைையயும், நட்பையும் கண் உரைத்துவிடும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 9.
நகையையும் வேண்டற் பாற்று அன்று – எது?
Answer:
கை என்னும் பண்பற்றதை, விளையாட்டிற்குக் கூட ஒருவன் விரும்பக்கூடாது.

Question 10.
திருவள்ளுவர் எவர் பகையைக் கொள்ளற்க என்கிறார்?
Answer:
திருவள்ளுவர், வில்லேர் உழவரின் பகையைக் கொண்டாலும், சொல்லேர் உழவரின் பகையைக் கொள்ளல் கூடாது என்கிறார்.

Question 11.
உலகியற்றியான் எவ்வாறு கெடல் வேண்டும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
பிறரிடம் யாசித்து உயிர் வாழும் நிலை இருக்குமானால், அப்படிப்பட்ட உயிர் வாழ்க்கையைப் படைத்தவன், இவ்வுலகில் அலைந்து கெடட்டும் என்கிறார் திருவள்ளுவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 12.
ஏமாப்பில் தோணி எது? அது எப்போது பக்குவிடும்?
Answer:
பிறரை எதிர்பார்த்து யாசித்து வாழ்தல் என்பது, பாதுகாப்பு இல்லாத படகு ஆகும். ஈயாமை என்னும் பாறை மோதினால், அது உடைந்துவிடும்.

சிறுவினாக்கள்

Question 1.
உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.
Answer:
உவமானத்தின் தன்மையை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவகம். இவ்வகை உருவகம் இடம் பெற்றுள்ள செய்யுளை, உருவக அணிச் செய்யுள் எனக் கூறுவர்.

எ – கா: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

விளக்கம் : இக்குறளில் ‘இரவு’ (யாசித்தல்) ‘ஏமாப்புஇல்’ (பாதுகாப்பு இல்லாத) தோணியாகவும், ‘கரவு’ (ஈயாமை – கொடுக்காமை) ‘பார்’ (பாறை) ஆகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ளன. எனவே, உருவக அணி அமைந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.

உவமானத்தைக் கூறி, உவமேயத்தைப் பெறவைப்பது, பிறிதுமொழிதல் அணியாகம்

‘சிறியதாக இருக்கும்போதே முள்மரத்தைக் களைந்துவிட வேண்டும். முதிர்ந்தால் வெட்டுபவரின் கையை வருத்தும்’ என்னும் உவமானத்தைக் கூறி, “பகைவர் வலிமை பெற து இருக்கும்போதே அழித்துவிட வேண்டும். வலிமை பெற்றால் வெல்லுவது எளிதாக இருக்காது” என்னும் உவமேயத்தைப் பெறவைத்தமையால், ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 3.
மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
Answer:
முன்னர் உண்டது செரித்ததை அறிந்து உண்டால், மருந்து என ஒன்று உடலுக்குத் தேவை இல்லை .

நோயையும், அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து, நோயாளியின் வயதையும், நோயின் அளவையும், மருத்துவம் செய்தற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, அதன்பின் மருத்துவர் செயல்பட வேண்டும்.

மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், பருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு வகைக்குள் அடங்கும் என்று, திருவள்ளுவர் கூறியுள்மாரர்.

கூடுதல் வினாக்கள்

Question 4.
மறதி குறித்துத் திருவள்ளுவர் சறுவன யாவை?
Answer:
மகிழ்ச்சி மிகுதியால் ஒருன் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறக்கும்போது, மறதியால் கெட்டவர்களை அவன் நினைத்துப் பார்த்தல் வேண்டும். மறவாமல் எப்போதும் எண்ணியதையே எண்ணிக்கொண்டு இருப்பதனால், எண்ணியதை அடைவது எளிதாகும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 5.
‘குறிப்பறிதல்’ வாயிலாகத் திருவள்ளுவர் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவருக்கு, எப்பொருளையாவது கொடுத்து நமக்குத் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

தொனன்றால், கண்ணின் குறிப்புகளை உணர்ந்து அறிபவரைப் பெற்றால், அவரது கண்ணே கைமை யையும் நட்பையும் அறிந்து உணர்த்தும் எனக் குறிப்பறிதல்’ சிறப்பைத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Question 6.
பகைத்திறம் தெளிதல்’ குறித்துத் திருவள்ளுவர் கூறுவனவற்றை விளக்குக.
Answer:

  • ‘பகைமை’ என்பது பண்பற்ற செயல். அதனை ஒருவன் விளையாட்டுக்குக்கூட விரும்பக்கூடாது.
  • வில்லைக் கருவியாக உடைய வீரனின் பகைமையைத் தேடிக் கொண்டாலும், சொல்லைக் கருவியாகக் கொண்ட அறிஞரின் பகையை உருவாக்கிக் கொள்ளல் கூடாது.
  • முள்மரத்தை முதிர்ந்தபின் வெட்டுபவனின் கைகளை அது வருத்தும். அதனால் பகைமையை ஆராய்ந்து அறிந்து, வலிமை பெறும் முன்பே களைய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 7.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:

  • இதில் ‘சொற்பொருட் பின்வரு நிலையணி’ அமைந்துள்ளது.
  • முன்னர் வந்த சொல், அதே பொருளில் பின்னரும் பலமுறை வருவது, சொற்பொருட் பின்வருநிலையணியாகும். இக்குறளில் ‘நாடி’ என்னும் சொல், ‘ஆராய்ந்து ‘ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, ‘சொற்பொருட் பின்வருநிலையணி’ பயின்றுள்ளது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

நெடுவினா

Question 1.
வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.
Answer:
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அரிய பண்புகள் சிலவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாகப் பல செய்திகளைத் திருக்குறள் தன்னிடத்தில் பெற்றுள்ளது. இனிக் குறளின் துணையுடன் வாழ்வின் உயர்வுக்கு உதவும் செய்திகளை ஆராய்வோம்.

மறதியை விலக்கு :
‘மறதி’ என்பது மிகமிகக் கெட்ட பழக்கம். எதனையும் காலம் தாழ்த்திச் செய்வதால், ‘மறதி’ என்பது குடி கொள்ளும். மறதியைப் போக்க, நாம் எண்ணியதை மீண்டும் மீண்டும் நினைத்துச் செயல்பட வேண்டும்.

வாழத் தெரிந்துகொள் :
வாழ்க்கை என்பது பலருடன் சேர்ந்து வாழ்வதாகும். எனவேறெருடன் பழகும்போது அவர்தம் மனக் குறிப்பை அறிந்து பழகவேண்டும். மனக்கருத்தை முகக்குறிரே காட்டிவிடும். ஆகையால் எவருடனும் முகம் பார்த்துப் பழக வேண்டும். அதனால் பகைமையையும் நட்டையும், பிரித்துப் புரிந்துகொள்ள முடியும்.

பிறரிடம் பகைமை பாராட்டுவதனை விளையாட்டுக்காகக்கூட விரும்பக் கூடாது. அச்செயல், தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பயன்படாது. முகக்குறிப்பால் அகக்குறிப்பை அறியும் ஆற்றலுடையவருக்கு, ஏதேனும் ஒன்றைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்வது, நம் வாழ்க்கைக்குப் பக்கபலமாக அமையும்.

பிரச்சனை போக்கு :
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அது தோன்றும்போதே களைந்து எறிந்து தீர்வு காண்பது நற்பயன் தரும். இல்லையானால் அது பெரித்த வளர்ந்து, பெருந்துன்பத்தை ஏற்படுத்தும். இதனையே திருவள்ளுவர்,

“இளைதாக மள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லிம் காழ்த்த இடத்து”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

எனக் கூறியுள்ளார்.

நோயற்ற வாழ்வு:
உடல் நோயுற்றால், மருத்துவரையும் மருந்தையும் தேடிச் செல்லவேண்டி இருக்கும். இத்துன்ப நீக்கத்திற்கு எளியதொரு வழியைத் திருவள்ளுவர், ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். நாம் உண்ண வு செரித்ததை அறிந்து, அடுத்த வேளை உணவையும் அளவறிந்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை என்று, திருவள்ளுவர் கூறுவதை அறிந்து கடைப்பிடிக்கலாம். அத்துடன் நோய் வந்தால், நோய்க்கான அடிப்படையை ஆராய்ந்து, அதைப் போக்குவதற்கு மருந்தளிக்கும் மருத்துவரைத் தேடிச்செல்ல வழியும் கூறுகிறார்.

கொடியது களைக :
உலகில் வறுமை என்பதே கொடியது. அந்தக் கொடுமையைப் போக்கப் பொருள் இல்லாதவர்க்கு நம்மால் இயன்ற பொருளைக் கொடுத்து வாழ்வது சிறந்த வாழ்வாக அமையும். இப்படி நம் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாகும் கருத்துகள், திருக்குறட்பாக்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. வாழ்விற்குப் பெருமை சேர்க்கும் நெறிகளைக் கொண்டமைந்த நூல் திருக்குறள். எனவே, திருக்குறளைத் தெளிவாகக் கற்று, மனத்தில் இருத்தி, கற்றதன்வழி வாழ்வை நடத்தி உயர்வோமாக.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 1
Answer:
அ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
ஆ) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
இ) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.
Answer:
கொடி தவித்ததைப் பாரி
அறிந்துகொண்டான்
மயில் தவித்ததைப் பேகன்
உணர்ந்துகொண்டான்
பிள்ளையின் பரிதவிப்பைத்
தாய் அறிவாள்
பளிங்கு முகத்தைப் படித்துக்கொள்
அப்படிப் படித்தவர்களைப்
பிடித்துக்கொள்.

அ) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
ஆ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
இ) இளைதாக முள்மரம் கொல்க களையும் கைகொல்லும் காழ்த்த விடத்து.

Question 3.
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………. நினை.
அ) முகக்குறிப்பை அறிந்தவரை
ஆ) எண்ணியதை எண்ணியவரை
இ) மறதியால் கெட்டவர்களை
ஈ) கொல்லேர் உழவரை
Answer:
இ) மறதியால் கெட்டவர்களை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 4.
பொருள் கூறுக.
அ) ஏமம் – பாதுகாப்பு
ஆ) மருந்துழைச் செல்வான் – மருந்தாளுநர்.

Question 5.
இலக்கணக்குறிப்புத் தருக.
அ) கெடுக – வியங்கோள் வினைமுற்று
ஆ) குறிப்புணர்வார் – வினையாலணையும் பெயர்

கூடுதல் வினாக்கள்

Question 6.
முகக்குறிப்பால் அகக் குறயை அறிபவரை………………ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அ) பகை
ஆ) நகை
இ) துணை
ஈ) இணை
Answer:
இ) துணை

Question 7.
பகைமை என்னும் பண்பை ………………. கூட ஒருவன் விரும்பக் கூடாது.
அ) மறதியாக
ஆ) இகழ்ச்சியாக
இ) குறிப்பாக
ஈ) விளையாட்டாக
Answer:
ஈ) விளையாட்டாக

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 8.
எவருடைய பகையைக் கொள்ளக்கூடாது?
இ) வில்லேர் உழவர்
ஆ) உழவர்
இ) மருத்துவர்
ஈ) சொல்லேர் உழவர்
Answer:
ஈ) சொல்லேர் உழவர்

Question 9.
பாதுகாப்பற்ற படகு போன்றது ……………….
அ) மறதியுடன் வாழ்வது
ஆ) கண்ணோட்டமின்றி வாழ்தல்
இ) இரந்து வாழ்தல்
ஈ) பகையோடு வாழ்தல்
Answer:
இ) இரந்து வாழ்தல்

Question 10.
மகிழ்ச்சியின் மைந்துறும்போது ………………..உள்ளுக.
அ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஆ) மானம் மாண்ட வழிச்செலவு
இ) பகை என்னும் பண்பில் அதனை
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை
Answer:
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 11.
கொடுத்தும் கொளல் வேண்டும் – எவரை ?
அ) இகழ்ச்சியில் கெட்டாரை
ஆ) பகைமையைக் கொண்டாரை
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஈ) கண்ணியம் இல்லாரை
Answer:
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை

Question 12.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் – இதில் பயின்றுள்ள அணி
அ) பிறிதுமொழிதலணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பின்வருநிலையணி
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 13.
‘இளைதாக முள்மரம்’ எனத் தொடங்கும் குறளில் ஈற்றடி ஈற்றுச்சீர், என்னும் வாப்பாட்டால் முடிந்துள்ளது.
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு
Answer:
ஈ) பிறப்பு

அலகிடுதல்

Question 1.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 2.
குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொலை – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் - 3

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

குறுவினா

Question 1.
ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
ஈரசைச்சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள், இயற்சீர், ஆசிரிய உரிசர்சான்பன. ஈரசைச்சீர்கள் மாச்சீர் (தேமா, புளிமா), விளச்சீர் (கூவிளம், கருவிளம்) என இரு வகைப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘செய்யுள்’ என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள் எவை?
Answer:
செய்யுள் என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள், காக்கு கவி, கவிதை, பாட்டு என்பன.

Question 3.
செய்யுள் உறுப்புகள் எவை?
Answer:
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பல செய்யுள் உறுப்புகளாகும்.

Question 4.
அசையாவது யாது? அது எத்தனை வகைப்படும். அவை யாவை?
Answer:

  • எழுத்தோ எழுத்துகளோ சேர்ந்து அசைத்து, ஆசைபொருந்த சீர்க்கு உறுப்பாக வருவது அசை.
  • அது இரண்டு வகைப்படும். அவை நேர் நிரை.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 5.
நேரசை எவ்வாறு அமையும்?
Answer:
குறில் தனித்தோ, குறில் ஒற்றிணைத்தோ, நெடில் தனித்தோ, நெடில் ஒற்றிணைந்தோ நேர்’ அசை அமையும்.

Question 6.
நிரையசை எவ்வாறு அமையும்?
Answer:
இருகுறில் இணைந்தோ, இருகுறிலோடு ஒற்றிணைந்தோ, குறில்நெடில் இணைந்தோ, குறில் நெடிலோடு நற்றிணைந்தோ, நிரை அசை அமையும்.

Question 7.
நேரிசை ஆசிரியப்பா எவ்வாறு அமையும்?
Answer:
ஈற்றயல் அடி மூன்று சீர்களாய் அமைய, ஏனைய அடிகள் நான்கு சீர்களாக அமைய வருவது, நேரிகை ஆசிரியப்பா.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 8.
எல்லா அகளும் நான்கு சீர்களாக அமைந்து வரும் ஆசிரியப்பாப் பெயர் என்ன?
Answer:
எல்லா அடிகளும் நான்கு சீர்களாக அமைந்து வரும் ஆசிரியப்பா ‘நிலைமண்டில ஆசிரியப்பா’. இது ‘ஏ’, ‘என்’ என்னும் ஈற்று அசை பெறுவது சிறப்பு என்பர்.

Question 9.
இணைக்குறள் ஆசிரியப்பா எவ்வாறு அமையும்?
Answer:
முதல் அடியும் இறுதி அடியும் நான்கு சீர்களைப் பெற்று, இடையடிகள் ஈரசை, மூவசைச் சீர்களைப் பெற்று வருவது, இணைக்குறள் ஆசிரியப்பா.

Question 10.
அடிமறிமண்டில ஆசிரியப்பா என்பது யாது?
Answer:
அடிகளை முன்பின்னாக மாற்றிப் பாடினாலும் பொருளோ, ஓசையோ மாறாது அமைவது அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 11.
ஆசிரியப்பாவின் இனங்கள் யாவை?
Answer:
ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் என்பன, ஆசிரியப்பாவின் இனங்களாகும்.

சிறுவினா

Question 1.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்துள், எவையேனும் நான்கினைக் கூறுக.
Answer:

  • எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வரும்.
  • இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
  • நிரை நடுவாகிய (கூவிளங்கனி, கருவிளங்கனி) வஞ்சி உரிச்சீர்கள் வாரா.
  • இறுதி அடியின் இறுதிச் சீர் ‘ஏ’ என்னும் ஓசையில் முடிவது சிறப்பு.

பலவுள் தெரிக

Question 1.
நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது……………………….
அ) காய் முன் நேர்
ஆ) காய் முன் நிரை
இ) கனி முன் நிரை
ஈ) மா முன் நேர்
Answer:
ஈ) மா முன் நேர்

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
பாக்களின் வகை, ஓசை இயற்றும் விதிமுறைகளைக் கூறும் நூல்……………………….
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) யாப்பருங்கலக்காரிகை
ஈ) புறம்பொருள் வெண்பா மாலை
Answer:
இ) யாப்பருங்கலக்காரிகை

Question 3.
பா (செய்யுள்) எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
இ) நான்கு

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 4.
கலிப்பாவிற்கு உரிய ஓசை……………………….
அ) துள்ளலோசை
ஆ) செப்பலோதை
இ) அகவலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) துள்ளலோசை

Question 5.
‘அகவலோசை’ பெற்று வருவது……………………….
அ) வெண்பா
ஆ) கலிப்பா
இ) ஆசிரியப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
இ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 6.
செய்யுளில் இசையைப் பிணைப்பவை ……………………….
அ) எழுத்து, அசை, சீ
ஆ) எதுகை, மோனை, இயைபு
இ) அடி, தொடை பா
ஈ) சீர், அடி, தொடை
Answer:
ஆ) எதுகை, மோனை, இயைபு

Question 9.
‘அகவற்பா’ எனக் குறிப்பிடப்படுவது……………………….
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 10.
‘ஆரிய உரிச்சீர்’ என்று அழைக்கப்படுவது……………………….
அ) ஈரசைச்சீர்
ஆ) மூவசைச்சீர்
இ) ஓரசைச்சீர்
ஈ) நாலசைச்சீர்
Answer:
அ) ஈரசைச்சீர்

Question 11.
எல்லா அடிகளும் அளவடி (நாற்சீர் அடி) பெற்று வருவது……………………….
அ) நிலைமண்டில ஆசிரியப்பா
ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா
Answer:
அ) நிலைமண்டில ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 12.
முதலடியும் இறுதி அடியும் அளவடிகளாகவும், இடையடிகள் குறளடி, சிந்தடிகளாகவும் வரும் ஆசிரியப்பா……………………….
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) நிலைமண்டில ஆசிரியப்பா
இ) இணைக்குறள் ஆசிரியப்பா
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா
Answer:
இ) இணைக்குறள் ஆசிரியப்பா

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
ஆசிரியப்பா, நான்கு வகைப்படும். அவை: நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா.

Question 2.
ஆசிரியப்பாவிற்குரிய சீரும் தளையும் யாவை?
Answer:

  • மாச்சீர், விளச்சீர் எனும் ஈரசைச் சீர்கள், ஆசிரியப்பாவிற்குரிய சீர்களாகும்.
  • வெண்பாவிற்குரிய காய்ச்சீர்கள் வரலாம்.
  • நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் ஆசிரியப்பாவின் தளைகளாகும்.
  • பிற தளையும் கலந்து வரும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 3.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளையும், அவை இயற்றுவதற்கான விதிகளையும் கூறுக.
Answer:

  • ஆறுசீர்கள் நான்கு கொண்டதாக அமைந்து, நான்கு அடிகளும் அளவு ஒத்து வரவேண்டும்.
  • முதல்சீரிலும், நான்காம் சீரிலும் மோனை அமைத்தும், முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாம்.

Question 4.
பொருத்துக.
அ) நேரிசை ஆசிரியப்பா – i) முதலடியும் இறுதியடியும் அளவடிகளால் வரும்
ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா – ii) அடிகளை மாற்றிப் பாடினாலும் ஓசயும் பொருளும் மாறாது
இ) நிலைமண்டில ஆசிரியப்பா – iii) ஈற்றயல் அடி சிந்தடியாய் வரும்
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா – iv) எல்லா அடிகளும் அளவடி பெற்று வரும்
Answer:
அ – iii ஆ – 1 இ – iv ஈ – ம

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

மொழியை ஆள்வோம்,
சான்றோர் சித்திரம்
இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர் (1882 – 1954)

தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி. கே. சி.யின் வீட்டுக் கூடத்தில் வட்டவடிவமான தொட்டிக் கட்டு. ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய காலம், இலக்கியத்தைப் பற்றிப் பேசியது. அவ்வமைப்பு, ‘வட்டத் தொட்டி’ என்றே பெயர் பெற்றது. டி. கே. சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும். வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்.

தமிழ்க்கலைகள், தமிழ்இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவாகம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, தயார் யார்? முதலான நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவ தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். சென்னை மாநில மேலவையின் உறுப்பினர் கவும், அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி.கே.சி. ஏற்றிய இலக்கிய ஒளி, தமில் அழகியலை வெளிச்சப்படுத்தியது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள்வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.
Answer:
அன்று : நீ செய்யும் செயல் நன்று அன்று.
அல்ல : நான் கேட்டவை இவை அல்ல.

Question 2.
சொல்லச் சொல்ல, திளைப்பர் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
சொல்லச் சொல்ல – அடுக்குத்தொடர்
திளைப்பர் – படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 3.
ரசிகர் – தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை – ஆங்கிலக் கலைச்சொல் தருக.
Answer:
ரசிகர் – சுவைப்பவர், சுவைஞர்,
மாநில மேலவெ – Legislative Council

Question 4.
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார் – விடைக்கேற்ற வினா அமைக்க.
Answer:
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட, எதில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்?

Question 5.
மேலவை, புத்துணர்வு – இச்சொற்களின் புணர்ச்சி வகையைக் கண்டறிக.
Answer:
மேலவை – மேல் + அவை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மேலவை)
புத்துணர்வு – புதுமை + உணர்வு
“ஈறுபோதல்” (புது + உணர்வு)“தன் ஒற்று இரட்டல்” (புத்து + உணர்ச்சி)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (புத்த் + உணர்வு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புத்துணர்வு)

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. டி. கே. சிதம்பரநாதர் தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு
ஊட்டினார். வினா : டி. கே. சிதம்பரநாதர் தமிழுக்கும் தமிழருக்கும் எவ்வாறு பத்துணர்வு ஊட்டினார்?

2. டி. கே. சி. எழுதிய கடிதங்களும் நூல் உரைகளும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்.
வினா : எவற்றை டி. கே. சி. இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்?

தமிழக்கம் தருக

The folk songs of TamilNadu have in thema rawarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in Mese Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have reserved in them a certain literary and artistic quality. This is so because the people who yowak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are alwax new and progressively modern. These songs were born several centuries ago; they are baing born every generation; they will be born and reborn over and over again!
Answer:
தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள், பிறமொழி நாட்டுப்புறப் பாடல்களைவிட ஒரு குறிப்பிடத்தக்க அழகுணர்ச்சி நிறைந்த கவாசி யைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதனால், தமிழில் உள்ள பாடல்கள் தனிச்சிறப்பு உடையன.

இயற்கை அழகின் தோற்றத்தையும், சொந்த மண்ணின் மணத்தையும், குறிப்பிட்ட இலக்கிய மற்றும் கலை உணர்வுகளையும் தன்னகத்தே பாதுகாத்து வைத்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், அவை புழங்கும் தமிழ் மொழி ஒரு பெரிய வரலாற்றைக் கடந்த அற்புதமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டதாக இருந்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், மிகவும் பழைமையானவை.

அது புதிய வாழ்க்கையையும் படிப்படியாக தவனமயமாக்கப்படும் வாழ்க்கையையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு தலைமுறைய பெருக்கும் மறுபடியும் மறுபடியும் தோன்றிப் புதுப்பித்து வந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கீழ்க்காணும் பாடலின் முதலடியைக் கவனித்துப் பிற அடிகளில் உள்ள சீர்களை ஒழுங்கு செய்க.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்றதீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்தசுகந்தமணமலரே
மேடையிலேவீசுகின்றமெல்லியபூங்காற்றே
மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே
ஆடையிலே எனைமணந்தமணவாளாபொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந்தருளே.
Answer:
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

படித்துப் பார்த்துப் படைத்துக் காட்டுக

புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த சான்றோர் குறித்த அறிமுக உரை :

பேரன்பு கொண்டோரே! பேரறிவுச் செல்வமே பெருஞ்செல்வம் எனக் கருதி வந்திருக்கும் சான்றே ரே! இளைய தலைமுறையே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொல்றேன்.

புத்தக வாசிப்பை மூச்சுக்காற்றாய்ச் சுவாசித்து வாழ்கின்ற படிப்பாளர்களாகிய உங்கள் முன்பு ஒரு படைப்பாளரை, மிகச் சிறந்த பண்பாளரை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். சிறுவயது முதலாகத் தனக்குப் பெற்றோர்கள் அளித்த சில்லறைகளைச் சேகரித்து, ஆண்டுதோறும் புத்தகம் வாங்கும் வழக்கத்தைக் கொண்டவர்.

புத்தகங்களோடு வாழ்ந்து வருபவர். புத்தகத்தை வாங்குவ தாடு மட்டுமல்லாமல் முழுமையாக அவற்றை வாசிப்பதும், குறிப்பெடுப்பதும் இளைய தலைமுறையினர்க்குத் தன்னம்பிக்கை அளிக்கும் கூட்டங்களில் பேசுவதும் எனப் பல்வேறு திறன்களைப் பெற்றவர்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

ஷேக்ஸ்பியர் என்னும் மாபெரும் படைப்பாளரின் பிறந்த நாளான ஏடல் 23ஐ, உலகம் முழுவதும் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த வாசிப்பு வழக்கமே ஆகும். அவ்வகையில் வாசிப்பையே தம் வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் தம் சிறப்பு விருந்தினர், நமக்கெல்லாம் முன்மாதிரியானவர். அவர் வழியில் புத்தக வாசிப்பைத் தொடர்போடி! புதியதோர் உலகம் படைப்போம்! வெல்வோம்!

உங்கள் பகுதி நூலகத்தில் வாசகர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்க வருகைதரும் அறிஞரை அறிமுகம் செய்க.

திரண்டுள்ள அனைவருக்கும் வணக்கம்.
நாம் இன்று இங்குத் திரண்டிருப்பதன் நோக்கத்தை அனைவரும் அறிவீர்கள். இன்று, பெருமைக்குரிய ஐயா, அறிவொளி அவர்கள் இங்கு உங்கள் அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டை வழங்க வந்துள்ளார் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. இருப்பினும் சில கூறி முடிக்கிறேன். இவர் சிறந்த சொற்பொழிவாளர், உன்னதமான எழுத்தாளர், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, நம் தமிழின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பைப் பறையறைந்து கொண்டிருப்பவர். இவர் போன்றவர்களை நாம் பெற்றிருப்பது, நம் நாட்டுக்கும் மொழிக்கும் பெருமை சேர்க்கிறது.

இவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். இந்த விழாவைப் பற்றிக் குறிப்பிட்டு அழைத்ததும், முகமலர்ச்சியோடு மறுப்புத் தெரிவிக்காமல் வர உடன்பட்டார். இனி அவர் தரும் நூலக அட்டைகளைப் பெற்றுச் சென்று, இந்த நூலகத்திலுள்ள நூல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்து, மகிழ்ச்சி அடையுமாறு வேண்டுகிறேன்.

ஐயாவுக்கும் உங்களுக்கும் நன்றி. வணக்கம்.
இலக்கிய நயம் பாராட்டுக

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 1

ஆசிரியர் குறிப்பு : ‘பெ. தூரன்’ என்று சுருக்கப் பெயரில் குறிப்பிடப் பெறுபவர், ‘பெரியசாமித்

தூரன்’. இவர் சிறந்த இலக்கியப் புலமையும், ஆழ்ந்த அறிவியல் அறிவும் பெற்றவர். தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காகத் தாய்மொழியில் இனிய எளிய பாடல்களை எழுதி, நல்லறிவு புகட்ட முயன்றார். தமிழ்மொழியில் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தைப் படைத்தளித்த உழைப்பாளி.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

திரண்ட செய்தி : இயற்கையைப் போற்ற வேண்டும். அதனால் வளம் பெருகும். உணவுப் பொருள் உற்பத்தி பெருகும். வறுமை போகும் என்பவற்றை வலியுறுத்துகிறார். முன்பு சாதி, சமய வேறுபாடுகளால் சிதைந்து அடிமைப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி அனைவரும் ஒரு குடும்பமாக வாழவேண்டுமென அறிவுரை கூறுகிறார்.

ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வது நல்லது என்னும் செய்தி, உறுதிபடக் கூறப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கலில் தமிழ்ப்பண்பு வெளிப்பட விழா எடுத்து வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வேற்றுமைகளை மறந்து, மனித இன உயர்வுக்குப் பாடுபட வேண்டுமென் வதை வலியுறுத்துகிறார். எளிய சொற்களில், இனிய கருத்தை அருமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடை நயம் :
மோனைத்தொடை : ஒருதனி, ஒற்றுமை; தமிழன், தமிழன்; புவியெலாம், புறம்பிலை யாதும், யாவரும் என்னும் சீர்களில், முதலெழுத்து ஒன்றிவந்து, சீர்மோனை அமைந்துள்ளது.

இயைபுத்தொடை : விளைந்தனவே, விரிந்தனவே; போயொழிக, நலமுறுக, வாழ்ந்திடுவோம், செய்திடு வோம்; சாற்றியதும், ஏற்றதுவும் என்னும் ஈற்றுச்சீர்களில், ஓசைநயம் பொருந்தி, இயைபுத் தொடை அமைந்துள்ளது.

சந்தநயம் : எளிய சொற்களில் ஓசைநயம் பெறப் பாடி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளமை, சந்தநயத்தைப் புலப்படுத்தும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

மொழியோடு விளையாடு

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக
Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 2

தமிழ் மொழியின் ஐவகை இலக்கணப் பிரிவுகளுள் ‘பொருள் இலக்கணம்’ தமிழர் வாழ்வுமுறை கூறுவதாகும். இந்தப் பொருள் இலக்கணம் என்பது, அகம் (அகப்பொருள்), புறம் (புறப்பொருள்) என இருவகையாகப் பிரிக்கப் பெற்றுளராது.

அன்பு நிறை காதல் வாழ்வைப் பற்றிக் கூறும் அகப்பொருள் செய்திகளை விளக்கும் இலக்கணம் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூவகைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

முதல்பொருள் என்பது (நிகழ்வு நடைபெறும்) நிலத்தையும் பொழுதையும் குறிக்கும். நிலமானது குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐந்து வகைப்படும்.

‘குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
‘முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
மருதம்’ என்பது வயலும் வயல் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
நெய்தல்’ என்பது கடலும் கடல் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
‘பாலை’ என்பது சுரமும் சுரம் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.

பொழுது என்பதைச் சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைகளாகப் பிரிப்பர். சிறுபொழுது என்பது ஒருநாளின் வைகறை, காலை, நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டதாகும். பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டதாகும்.

‘கருப்பொருள்’ என்பது தெய்வம், மக்கள், புள் (பறவை), விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்னும் பிரிவுகளைக் கொண்டது. இது ஐந்து திணைகளுக்கும் தனித்தனியே அமையும்.

‘உரிப்பொருள்’ என்பது புணர்தல் புணர்தல் நிமித்தம், பிரிதல் பிரிதல் நிமித்தம், இருத்தல் இருத்தல் நிமித்தம், ஊடல் ஊடல் நிமித்தம், இரங்கல் இரங்கல் நிமித்தம் என ஐந்து வகைப்படும். இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திணைகளுக்கு உரியனவாகும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (கம்பு, மை, வளை, மதி, இதழ், ஆழி)
1. எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும்………………….
2. அடிக்கவும் செய்யலாம்; கோடைக்குக் கூழாகக் குடிக்கவும் செய்யலாம்………………….
3. கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம்.
4. அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுதான்………………….
5. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே………………….
6. வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும்.
Answers:
1. வளை ,
2. கம்பு,
3. மை,
4. மதி,
5. இதழ்,
6. ஆழி.

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 3

கத்திக்கும் ஈட்டிக்கும் இப்போது இடமில்லை!
புத்திக்கும் உழைப்புக்குமே இடம் உண்டு!

முயற்சி செய் முடிவு உன்கையில்!
உழைப்பவர்க்கே ஊதியம் கிடைக்கும்.
எண்ணித் துணிந்தால் எதுவும் கைகூடும்.
வெற்றி எப்போதும் எட்டாக் கனிதான்
ஏன் எட்டாது என முயன்று பார்!
மனம் ஊனமுற்றால் உழைக்க முடியாது
உறுதியோடு போரிட்டவனே உலகை ஆண்டான்
விதியே உன்னதம் என்றால், உன் முயற்சி என்னவானது?

நம்பிக்கை உள்ளோர் பிரச்சனைகளை மிதித்து வாய்ப்டை எதிர்நோக்குவர்!
வெற்றியை உறுதிசெய்யச் சோம்பலை விரட்டு!
அண்டவிட்டால் அழிவது உறுதி!
அச்சப்படாமல் தொட்டுப் பார்!
பயத்தைப் பலியிட்டு, உரிய காலத்தோடு கைகுலுக்கு!

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

ஆழ்கடல் மூழ்கியோர் முத்தெடுப்பர்
அடுத்து முயல்வோர் இமய உச்சி மிதிப்பர்!
கண் மூடாதே. பசி நோக்காதே
பழிமொழி கேளாதே, புகழ்மொ தவிர்!
குறிக்கோள் ஒன்றே குறியாது நில். வெற்றி உனதே!

நிற்க அதற்குத் தக

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 4

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கலைச்சொல் அறிவோம்

ஆவணம் – Document
உப்பங்கழி – Backwater
ஒப்பந்தம் – Agreement
படையெடுப்பு- Invasion
பண்பாடு – Culture
மாலுமி – Sailor

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.4 பிம்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.4 பிம்பம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.4 பிம்பம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.4 பிம்பம்

நெடுவினா

Question 1.
‘பிம்பம்’ கதையின் வாய்வாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் பற்றி விவரிக்க.
Answer:
முகமூடி அணிதல் மனித இயல்பு :
மனிதன் ஒருவன், மற்றவர் இயல்புக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளும்போது, அவன் அவனாக இருப்பதில்லை. (அவ்வேளைகளில் அவரவருக்கு ஏற்ப வெவ்வேறு முகமூடியை அணிந்துகொள்கிறான். சில சமயங்களில் மனிதன், இப்படி அடிக்கடி முகமூடியை மாற்றி மாற்றி வாழ்வதால், அவனது உண்மைத் தன்மையை, உண்மை முகத்தையே இழந்துவிடுகிறான். அதனால் சமுதாயத்தில் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.4 பிம்பம்

வேண்டாத விருந்தினர் :
பம்பம் கதையைப் பிரபஞ்சன், தம்மையே முன்னிலைப்படுத்திக்கொண்டு எழுதுகிறார். காரணம் ஏதுமின்றி எந்த நேரத்திலும் அது வெளிவருகிறது. தன் கட்டளைக்கு உடன்படாமல், வீட்டில் உரையாடி மகிழ்வதற்கு என்றில்லாமல், விரும்பும்போது இம்சிக்க வருவதுபோல் இருக்கிறது. அது வேண்டாத விருந்தாளியாகத் தன் விருப்பம்போல் சுற்றி அலைந்து, எதையும் துருவித்துருவிக் கேட்கிறது.

கேள்விகளால் துளைத்தால் :
மனிதன் தன்னையும் தன் மனச்சாட்சியையும் ஏமாற்றுவதை வெளிப்படச் செய்கிறது. நிதானமாக எண்ணிப்பார்த்தால், ஒரு மனிதன் எத்தனை வண்ணங்களில், வெவ்வேறு அளவுகளில், பல்வேறு கோணங்களில், பல முகங்களோடு வாழ்வது வெளிப்படும். எதிரில் உள்ளவர் தாயானாலும், அவர் காட்டும் முகபாவத்திற்கு ஏற்பத் தன் முகபாவத்தை மாற்றிக் கொள்ளும் மனிதர்கள்தாம் உள்ளனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.4 பிம்பம்

முகங்களின் குவியல் :
ஒவ்வொருவர் காலடியிலும் பல முகங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் தேவையானதைத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்வதே சகஜம். இத்துணை நிகழ்வுகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு வந்த பிம்பம் விடைபெறுவதோடு பிரபஞ்சன், பிம்பம் கதையை முடித்துள்ளார். விடைபெறும் பிம்பத்தால், சொந்த முகம் என்று எதுவும் மனிதனிடம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

மனச்சாட்சி :
ஒவ்வொரு மனிதனிடமும் விருப்பு வெறுப்புகள் உள்ளன. எனினும், பிறருடன் உறவு பாராட்டும்போது, அவரவர் இயல்புக்கு ஏற்பத் தன்னை மறைத்து, மாற்றிக் கொள்கிறான். எனினும், அவனவன் மனச்சாட்சி என்பது, உண்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இவ்வகையில் மனிதன் வாழ்க்கையில் இப்படி முகம் மாற்றி முகம் மாற்றித் தன் உண்மை முகத்தை இழந்து, அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.3 அகநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.3 அகநானூறு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

குறுவினா

Question 1.
நெருங்கின, இரங்கி – உறுப்பிலக்கணம் தருக.
Answer:
நெருங்கின – நெருங்கு + இன் + அ
நெருங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.
இரங்கி – இரங்கு + இ
இரங்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

கூடுதல் வினாக்கள்

Question 2.
அகநானூற்றின் பிரிவுகள் யாவை?
Answer:

  • அகநானூற்றின் பிரிவுகள் மூன்று.
  • அவை : களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

Question 3.
அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு யாது?
Answer:
சொல்லவந்த கருத்தை, ‘உள்ளுறை’ வழியாக உரைப்பது, அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பாகும்.

Question 4.
‘உள்ளுறை’யைக் கவிஞர் எவ்வாறு கூறுவர்?
Answer:

  • உள்ளுறை பொதிந்த பாடலைப் பாடும் கவிஞர், சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவர்.
  • அவ்வாறு கூறும்போது, மரபின் நாகரிகம் குறைவுபடாது கூறவும் வேண்டும்.
  • அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும்.

Question 5.
தோழியின் பொறுப்பு யாது?
Answer:
தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்துக் குறிப்பைப் பொதிந்து வெளியிடுவது தோழியின் பொறுப்பாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

Question 6.
அகத்திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:

  • அகத்திணைகள் ஐந்து.
  • அவை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைத்திணைகள்.

Question 7.
சிறுபொழுதுகள் எத்தனை? அவை யாவை?
Answer:

  • சிறுபொழுதுகள் ஆறு.
  • அவை : காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என்பன.

Question 8.
பெரும்பொழுதுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பெரும்பொழுதுகள் ஆறு. அவை : கார், கூதிர், முன், பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன.

Question 9.
கருப்பொருள்கள் யாவை?
Answer:
தெய்வம், மக்கள், புள் (பறவை), விலங்கு, தார், நார், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்பன, கருப்பொருள்கள் ஆகும்.

சிறுவினா

Question 1
மேகத்திடம் கூறுவதுபோலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப் பொருள் யாது?
Answer:

  • மேகத்திடம் கூறுவதுபோலத் தோழி தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள்.
  • வேங்கைமலர் அணிந்து இன்விை, தோழியருடன் தழலை, தட்டை என்னும் கருவிகளைக்கொண்டு,
    ஒலியெழுப்பிப் பறவைகளை ஓட்டிக்கொண்டு தினைப்புனம் காக்கின்றாள்.
  • அங்கே மழை பொழிவாயாக என்று மேகத்திடம் கூறுவதுபோல், தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.
  • இதில் உணர்த்தப்படும் இறைச்சிப் பொருளாவது, தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் சென்று சந்திக்கலாம் என்பதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

கூடுதல் வினாக்கள்

Question 2.
அகநானூறு – குறிப்பெழுதுக.
Answer:

  • அதம்+ நான்கு + நூறு = அகநானூறு. அகப்பொருள் குறித்து 145 புலவர்கள் பாடிய, நானூறு பாக்களைக் கொண்ட தொகுப்பு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இதனை அகம், நெடுந்தொகை எனவும் கூறுவர். இது களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.

Question 3.
குறிஞ்சித்திணை – விளக்குக.
Answer:
‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ என்னும் உரிப்பொருளைக் கொண்ட அகப்பாடல், குறிஞ்சித் திணைக்குரியது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும்.

‘யாமம்’ என்னும் சிறுபொழுதையும், குளிர்காலம், முன்பனிக்காலம்’ என்னும் பெரும்பொழுதுகளையும், தெய்வம், உணவு, ஊர், தொழில் முதலான கருப்பொருள்களையும் கொண்டமைவது, குறிஞ்சித் திணையாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

Question 4.
‘இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது’ துறை – விளக்குக.
Answer:

  • இரவில் சிறைப்புறமாக வந்து நின்ற தலைவனுக்குத் தலைவியின் தோழி, இவ்வாறு இரவில் தலைவியைச் சந்திப்பது முறையன்று.
  • விரைவில் மணந்துகொள்க என்பதைக் குறிப்பினால் உணர்த்தி, அறிவுறுத்துவதாகும். இங்குத் தோழி மேகத்திடம் கூறுவதுபோல், தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

Question 5.
மேகத்தை நோக்கித் தோழி கூறிய செய்தி யாது? அதனால் அறிவுறுத்தப்பட்டது யாது?
Answer:
“பெருங்கடலின் நீரை முகந்து எடுத்துச்செல்லும் மேகக்கூட்டமே! வானம் இருளும்படி நீ உலாவுகிறாய்! போர் முரசுபோல் முழங்குகிறாய்! போர்க்களத்தில், ஆற்றல்மிக்க போர்வீரர்கள் சுழற்றும் வாள்போல் மின்னுகின்றாய்!

நாள்தோறும் இடி முழக்கமும் மின்னலுமாகப் பயனின்றி வெற்று ஆரவாரம் செய்வாயா? அன்றி மழை பொழிவாயா?” எனத் தோழி வினவினாள்.

அதாவது, தலைவன் நாள்தோறும் வந்து, ஊர்மக்கள் அறிந்து பழிச்சொல் தூற்றுமாறு செயல்படுவ தனினும் விரைவாகத் தலைவியை மணந்து கொள்வது, நலம் எனக் குறிப்பாக அறிவுறுத்துகிறாள்.

Question 6.
தலைவியின் நிலை குறித்துத் தோழி கூறும் செய்தி யாது?
Asnwer:
தன் தோழியர் கூட்டத்தோடு, தலைவி மெல்ல மெல்ல நடந்து, தினை எப்புனம் சென்றுள்ளாள். அவள் அங்குத் தினை உண்ணவரும் பறவைகளைத் தழலை, தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பி ஓட்டிக்

கொண்டிருப்பாள். கொழுந்து இலைகளைத் தழை ஆடையாக அணிந்து, தினைப்பனம் காக்கும் பகுதியில், மழையே நீ பொழிவாயாக” எனத் தோழி கூறி – தன் தலைவியின் இருப்பிட நிலையைத் தலைவனுக்கு உணர்த்தினாள். அதாவது, தலைவி தினைப்புனம் காக்கும் இடத்திற்குத் தலைவன் செல்லலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

கூடுதல் வினா

சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு மேகத்திடம் கூறுவதுபோல் தோழி சொல்லியன யாவை?
Answer:
மேகக்கூட்டத்தின் ஆரவாரம் :
பெருங்கடல் நீரை முகந்து செல்லும் மேகக் கூட்டமே! வானம் இருளுமாறு நீ உலவுகிறாய்! போர்முரசுபோல் முழங்குகிறாய்! முறைமை தெரிந்து அறநெத்தி பிழையாத திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் ஆற்றல்மிக்க வீரர்கள் சுழற்றும் வாள்போல மின்னுகிறாய்!

தலைவனுக்கு அறிவுறுத்தல்
நாள்தோறும் இடிமுழக்கமும் பன்னலுமாகப் பயனின்றி வெறும் ஆரவாரம் செய்கின்றாயா, அன்றி மழை பொழிவாயா எனச் சிறைப்பறத்தரனாகிய தலைவன் கேட்குமாறு தோழி கூறினாள். அதாவது, தலைவன் நாள்தோறும் வருவதை வர்மக்கள் அறிந்து பழிச்சொல் பேசுமாறு செயல்படுவதாயினும், விரைவாகத் தலைவியை மணந்துகொள்வது நலம் எனக் குறிப்பாக அறிவுறுத்துகிறாள்.

தலைவி தெயல்
மலர்ந்த வேங்கை மலர்களைத் தொகுத்துக் கட்டி அணிந்து கொண்டிருக்கும் தோழியர் கூட்டத்தோடு, தலைவி மெல் தடந்து, தினைப்புனம் சென்றுள்ளாள். அவள் அங்குத் தினை உண்ணவரும் பறவைகளைத் தழலை தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு, ஒலியெழுப்பி ஓட்டிக் கொண்டிருப்பாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

இனைப்புனத்தில் மழை பொழிக :
செழுந்தீ போன்ற அசோகின் கொழுந்து இலைகளைத் தழைஆடையாக அணிந்து, தினைப்புனம் காக்கும் பகுதியில், மழையே நீ பொழிவாயாக எனத் தோழி கூறித் தன் தலைவியின் இருப்பிட நிலையைத் தலைவன் அறியுமாறு உணர்த்தினாள். அதாவது, தலைவி தினைப்புனம் காக்கும் இடத்திற்குத் தலைவன் செல்லலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்.

இலக்கணக் குறிப்பு

பெருங்கடல், அருஞ்சமத்து – பண்புத்தொகைகள்
முகந்த, எதிர்ந்த, மலர்ந்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
இரங்கி, சுழித்து – வினையெச்சங்கள்
பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிமன்னர், உயர் விசும்பு, எறிவாள் – வினைத்தொகைகள்
வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்
வாழிய – வியங்கோள் வினைமுற்று
அறன் (அறம்), திறன் (திறம்) – ஈற்றுப்போலிகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

உறுப்பிலக்கணம்

1. இரங்கி – இரங்கு + இ
இரங்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

2. கழித்து – கழி + த் + த் + உ
கழி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

3. மலர்ந்த – மலர் + த் (ந்) + த் + அ
மலர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

4. பொலிந்த – பொலி + த் (ந்) + த் + அ
பொலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடை நிலை,
அ – பெயரெச்ச விகுதி.

5. வாழிய – வாழ் + இய
வாழ் – பகுதி, இய – வியங்கோள் வினைமுற்று விகுதி.

6. புரிந்து – புரி + த் (ந்) + த் + உ
புரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. பெருங்கடல் – பெருமை + கடல்
“ஈறுபோதல்” (பெரு + கடல்), “இனமிகல்” பெருங்கடல்)

2. ஆயமொடு – ஆயம் + ஒடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஆயமொடு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

3. மின்னுடைக் கருவி – மின்னுடை + கருவி
“இயல்பினும் விதியினும் நிலை உயிர்முன் கசதப மிகும்” (மின்னுடைக் கருவி)

பலவுள் தெரிக கூடுதல் வினாக்கள்

Question 1.
சொல்லவந்த கரத்தை உள்ளுறை’ வழியாக உரைப்பது …………….. பாடல்களின் சிறப்பு.
அ) கலித்தொகை
ஆ) பரிபாடல்
இ) அகநானூறு
ஈ) புறநானூறு
Answer:
இ, அகநானூறு

Question 2.
‘அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை……………..
அ) 400
ஆ) 145
இ) 300
ஈ) 140
Answer:
ஆ) 145

Question 3.
அகநானூறு’,…………….. பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அ) இரண்டு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஒரே நூல்
Answer:
இ) மூன்று

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

Question 4.
அகநானூற்றின் வேறு பெயர் ……………..
அ) அகப்பொருள்
ஆ) குறுந்தொகை
இ) பெருந்திணை
ஈ) நெடுந்தொகை
Answer:
ஈ) நெடுந்தொகை

Question 5.
தினைப்புனம் காப்பவள், ……………..எனக் குறிக்கப் பெற்றுள்ளாள்.
அ) தலைவி
ஆ) தோழி
இ) குறமகள்
ஈ) செவிலித்தாய்
Answer:
இ) குறமகள்

Question 6.
சிறைப்புறமாக நின்ற தலைவனுக்குக் குறியிடம் (தலைவி உள்ள இடம்) சொன்னது ……………..
அ) செவிலி
ஆ) நற்றாய்
இ) தோழி
ஈ) எவரும் இல்லை
Answer:
இ) தோழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

Question 7.
சிறைப்புறம் நின்ற தலைவனுக்குத் தோழி கூறியதில் எப்பொருள் வெளிப்படுகிறது?
அ) உள்ளுறைப் பொருள்
ஆ) கருப்பொருள்
இ) உரிப்பொருள்
ஈ) இறைச்சிப்பொருள்
Answer:
ஈ) இறைச்சிப்பொருள்

ஐந்திணை முதற்பொருளும் உரிப்பொருளும்

1. ‘குறிஞ்சித்திணை’

முதற்பொருள்
நிலம் : மலையும் மலை சார்ந்த இடமும்.
சிறுபொழுது : யாமம்
பெரும்பொழுது : கூதிர், முன்பனி.

கருப்பொருள்
தெய்வம் : முருகன்
மக்கள் : குறவர், குறத்தியர், கானவர்.
பறவை : கிளி, மயில்.
விலங்கு : புலி, கரடி, யானை, சிங்கம்
ஊர் : சிறுகுடி
நீர். : சுனைநீர், அருவி
மலர் : காந்தள், குறிஞ்சி, வேங்கை.
மரம் : அகில், சந்தனம், வேங்கை .
உணவு : தினை, மலைநெல், மூங்கிலரிசி.)
பறை : வெறியாட்டுப்பறை, தெரண்டகப்பறை.
பண் : குறிஞ்சிப்பண்
யாழ் : குறிஞ்சியாழ்
தொழில் : தேனெடுத்தல் காலங்ககழ்தல், வெறியாடல், நெல் விதைத்தல்.
உரிப்பொருள் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

2. ‘முல்லைத்திணை’

முதற்பொருள்
நிலம் : காடும் காடுசார்ந்த இடமும்
சிறுபொழுது : மாலை
பெரும்பொறது) : கார்காலம்

கருப்பொருள்
தெய்வம் : திருமால்
மக்கள் : ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர்.
பறவை : கானக்கோழி
விலங்கு : முயல், மான்.
ஊர் : பாடி, சேரி.
நீர் : குறுஞ்சுனை, கானாறு
மலர் : முல்லை, குல்லை , பிடவம், தோன்றி.
மரம் : கொன்றை, குருந்தம், காயா.
உணவு : வரகு, சாமை, முதிரை.
பறை : ஏறுகோட்பறை
பண் : முல்லைப்பண் (சாதாரி)
யாழ் : முல்லையாழ்
தொழில் : வரகு விதைத்தல், களை பறித்தல், ஆநிரை மேய்த்தல், குழலூதல், காளை தழுவல்.
உரிப்பொருள் : இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

3.‘மருதத்திணை

முதற்பொருள்
நிலம் : வயலும் வயல்சார்ந்த இடமும்
சிறுபொழுது : காலை
பெரும்பொழுது : ஆறு பெரும்பொழுதுகளும்

கருப்பொருள்
தெய்வம் : வேந்தன்
மக்கள் : ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைச்சார்.
பறவை : நாரை, குருகு, அன்னம், தாரா.
விலங்கு : எருமை, நீர்நாய்.
ஊர் : பேரூர், மூதூர்.
நீர் : ஆற்றுநீர், குளத்துநீர்.
மலர் : நெய்தல், தாமரை, கழுநீர்
மரம் : மருதம், வஞ்சி, காஞ்சி.
உணவு : செந்நெல், வெண்ணெல்.
பறை : நெல்லரிகிணை, மணமுழவு.
பண் : மருதப்பண்
யாழ் : மருதயாழ்
தொழில் : விழாச் செய்தல், வயலில் களைகட்டம் நெல்லரிதல்.
உரிப்பொருள் : ஊடலும் ஊடல் நிமித்தமும்,

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

4.‘நெய்தல்திணை’

முதற்பொருள்
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்.
சிறுபொழுது : எற்பாடு
பெரும்பொழுது : ஆறு பெரும்பாழுதுகளும்

கருப்பொருள்
தெய்வம் : வானைல்
மக்கள் : பரதர பரத்தியர், நுளையர், நுளைச்சியர்.
பறவை : நீர்க்காக்கை
விலங்கு : பட்டினம், பாக்கம்.
நீர் : உவர்நீர்க்கேணி, உவர்க்கழி.
மலர் : தாழை, நெய்தல், புன்னை
மரம் : புன்னை , தாழை.
உணவு : மீனையும் உப்பையும் விற்றுப் பெறும் பொருள்.
பறை : மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை.
பண் : நெய்தல்பண் (செவ்வழி)
யாழ் : விளரியாழ்
தொழில் : மீன் பிடித்தல், உப்பு விற்றல்.
உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

5. பாலைத்திணை

முதற்பொருள்
நிலம் : சுரமும் சுரம் சார்ந்த இடமும்.
சிறுபொழுது : நண்பகல்
பெரும்பொழுது : வேனில், பின்பனி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 அகநானூறு

கருப்பொருள்
தெய்வம் – துர்க்கை
மக்கள் : காளை, விடலை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.
பறவை : கழுகு, பருந்து, புறா.
விலங்கு : செந்நாய், வலிமை இழந்த புலி.
ஊர் : குறும்பு
நீர் : நீர்வற்றிய சுனை
மலர் : பாதிரிப்பூ, மராம்பூ, குரா.
மலர் : பாலை, இலுப்பை, ஓமை.
உணவு : வழிப்பறி செய்த பொருள்.
பறை : போர்ப்பறை,
பண் : பாலைப்பண்
யாழ் : பாலையாழ்
தொழில் : நிரைகவர்தல், சூறையாடல், வழிப்பறி செய்தல்.
உரிப்பொருள் : பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.2 சீறாப்புராணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.2 சீறாப்புராணம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

குறுவினாக்கள்

Question 1.
மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
Answer:

  • மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
  • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.
  • மதீனா நகரின் வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்திருந்தன.
  • அத்துடன் பெரிய மாளிகைகள் சிறிதும் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருந்தன.
  • தோரணங்களும், கொடிகளும் கட்டப்பட்டுப் பொன்னகர்போல் பொலிந்தது.
  • அதனால், மதீனா நகரம், ‘ஒரு மாளிகை நகரம்’ என்பது உறுதிப்பட்டது.

Question 2.
“ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்”- இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது? பழுத்தது எது?
Answer:
மதீனா நகரில், திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் தரும் குறைவற்ற ஊக்கமும் காய்த்திருந்தன; தீன் என்னும் செல்வம் பழுத்திருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
மதீனா நகரம், எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
Answer:
மாளிகைநகரம், கொடைநகரம், பொன்னகரம், மனைநகரம், மாநகரம், ஒண்ண கரம், செம்மைநகரம் என்றெல்லாம் மதீனா நகரம் அழைக்கப்படுகிறது.

Question 4.
நபிகள் நாயகம், மதீனாவுக்கு எவ்வாறு சென்றார்?
Answer:
மதீனா நகர மக்களின் அழைப்பை ஏற்று, தம் துணைவரான அபூபக்கர் முதலானவர்களுடன் முல்லை, குறிஞ்சி நிலங்களைக் கடந்து, நபிகள் நாயகம் மதீனாவுக்குச் சென்றார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 5.
சீறாப்புராணம் – பொருள் தருக.
Answer:
‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபான ‘சீறா’ என்பதற்கு, ‘வாழ்க்கை ‘ என்பது பொருள். ‘புராணம்’ என்பது பழைய வரலாறு. எனவே, சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள்.

Question 6.
மதீனா நகரத்தை எவை தீண்டவில்லை?
Answer:
மதீனா நகரத்தைப் பகை, வறுமை, நோய்கள் தீண்டவில்லை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

சிறுவினாக்கள்

Question 1.
“கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” – யாது?
Answer:
மதினா நகரில் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டோர் நிறைந்திருந்ததால் கலைஞர்களும், மறையவர்களும் தாம் எண்ணிய பொருள்வளத்தைக் கொண்டிருந்தனர் என்பதாம்.

Question 2.
“மறுவிலா அரசென இருந்த மாநகர்” – உவமையைப் பொருளுடன் விளக்குக.
Answer:
‘குற்றம் குறை இல்லாத அரசன் ஆட்சி நடத்துவதுபோல’ என்பது உவமையின் பொருள்.

  • மதீனா நகருக்கு இது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
  • மதீனா நகரில் பகை, வறுமை, நோய் முதலானவை இல்லை. அவை ஓடி மறைந்த நிலையில் குறைவில்லாத மானுட அறம், அந்நகரில் செங்கோலாட்சி புரிந்தது. அதனால் மதீனா நகரம், சிறந்த அரசைப்போல் பொலிவுடன் இருந்தது என, உமறுப்புலவர் கூறுகிறார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
‘பூரணப் புவி’ என மதீனா பொலிந்ததை எழுதுக.
Answer:

  • தோரணங்களாலும் கொடிகளாலும் மதீனா நகர வீதிகள், காடுகள் போல் நெருங்கி இருந்தன.
  • அவ்வீதிகளில் மலைபோன்ற யானைகள் நிறைந்திருந்தன. வீதிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன.
  • இவற்றால் பொன்போல் பொலிந்த மதீனா நகரமானது, ‘பூரணப் புவி’ எனப் பொலிந்தது.

Question 4.
மதீனா நகர், எவற்றால் ஒளி பெற்றுத் திகழ்ந்தது?
Answer:
அலைவீசும் கடலானது முத்துகளையும் பல்வேறு அணி வகைகளையும் சிதறுவதுபோல், மதீனா நகரத்தில் வாழ்ந்த மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசினார்கள். பல்வேறு பொருள் வளத்தால் நிறைந்திருந்ததால், தேன் உண்டவர் மயங்குவதுபோல் மதீனா நகர், ஒண்ணகராய் ஒடியற்றுத் திகழ்ந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 5.
மதீனா, செம்மையான நகராகத் திகழ்ந்தமையை விளக்குக.
Answer:

  • தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் முதலானவை, மதீனா நகரில் பூத்திருந்தன.
  • திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், வெற்றியைத் தரும் குறைவற்ற ஆக்கமும் காய்த்திருந்தன.
  • தீன் என்னும் செல்வமும் பழுத்திருந்ததால் மதீனா, செம்மை பொருந்திய நகரமாக இருந்தது.

Question 6.
சீறாப்புராணம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ‘சீறாப்புராணம்’.
  • வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, உருதுப்புலவர் இதனை இயற்றினார்.
  • இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையான நாக விளங்குவது சீறாப்புராணம்.
  • இது, விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங் களையும், 92 படலங்களையும், 5027 விருத்த பாடல்களையும் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 7.
உமறுப்புலவர் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • இசுலாமியத் தமிழ்ப்புலவர் உமறுப்புலவர்
  • இவர், எட்டயபுர அரசவைப் புலவர் கடிகைமுத்துப் புலவரின் மாணவர்.
  • வள்ளல் சீதக்காதியின் வேண்டுதலால், சீறாப்புராணத்தைப் பாடியவர்.
  • நபிகள் நாயகத்தின்மீது ‘முது மொழிமாலை’ என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
  • வள்ளல் சீதக்காதியும், இதுலகாசிம் மரைக்காயரும் உமறுப்புலவரை ஆதரித்தனர்.

நெடுவினா

Question 1.
“மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
Answer:
மதீனா நகர வீதிகள் :
மதீனா நகரில், மாளிகைகளின் மேல்மாடங்கள், மேருமலைபோல் உயர்ந்திருந்தன. அங்காடித் தெருக்களில் பெருங்கடல் ஒலிபோல் மக்கள் ஆரவாரம் செய்தனர். வீதிகள், பிரபஞ்சம்போல் பரந்து விரிந்து கிடந்தன்

கொடைநகர் மதீனா :
கலைஞர்களும் மறையவர்களும் எண்ணிய வளத்தைப் பெறும் வகையில் வாரி வழங்கும் வள்ளல்கள் பலர், பழமையான மதீனா நகரிலும் இருந்தனர். அவர்களால் மதீனா மேலும் புகழ்பெற்றது. தோரணங்களாலும் கொடிகளாலும் மதீனா நகரின் வீதிகள் ஒழுங்குடன் காணப்பட்டன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

செங்கோலாட்சி நகர் :
பொன்னகர்போல் விளங்கிய மதீனா நகர மாளிகைகள், வெண்சுண்ணச் சாந்தில் பொலிந்து ஒளிர்ந்தன. வீதிகளில் புதிய மலர்கள், சிந்திக் கிடந்தன. விருந்தினர் உபசரிக்கப்பட்டதால், வீடுகள் திருமண வீடுகள்போல் பொலிந்தன. பகை, வறுமை, நோய் இல்லாத மதீனா நகரம், மானுட அறத்தைக் கடைப்பிடிக்கும் செங்கோல் ஆட்சி புரிவதுபோல் பெரும்புகழ் பெற்றுச் சிறந்தது.

தீன் பழுத்த நகர் மதீனா :
பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் நிறைந்திருந்ததால், மணி, முத்து அணிகளைச் சிதறும் கடல்போல், மதீனா நகர் காட்சி தந்தது. தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம் எங்கும் பூத்துத் திண்ணிய வலிமை நல்கும் வெற்றி குறையாத ஊக்கம் செழித்துத் ‘தீன்’ என்னும் பழம் பழுத்துச் செம்மை பொருந்திய நகராகத் திகழ்ந்த து.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

இலக்கணக் குறிப்பு

மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த, படைத்த – பெயரெச்சங்கள்
இடன் (இடம்) – ஈற்றுப்போலி
பெரும்புகழ், தெண்டிரை, அரும்பொருள், தொன்னகர், புதுமலர் – பண்புத்தொகைகள்
பொன்னகர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மாநகர், உறுபகை – உரிச்சொற்றொடர்கள்
யாவும், ஐந்தும் – முற்றும்மை
சிந்தி, பணிந்து – வினையெச்சம்
வறுமைநோய் – உருவகம்
ஆரமும் பூணும் தானமும் ஒழுக்கமும் தவமும் மறனும் வெற்றியும் – எண்ணும்ளைகார்.
தரும் – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
மலைவிலா, தொலைவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
இடுவிருந்து – வினைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

உறுப்பிலக்கணம்

1. மலிந்த – மலி + த் (ந்) + த் + அ
மலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. நெருங்கின – நெருங்கு + இன் + அ
நெருங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

3. அளந்தன – அள + த் (ந்) + த் + அன் அ
அள – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆசாது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அன் – சாரியை, அ – பலவின்பால் வினைமுற்று விகுதி.

4. படைத்த – படை + த் + த் அ
படை – பகுதி, த் – சந்தில் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

5. மலிந்து – மலி + த்(ந்)+த் + உ
மலி – பகுதி, த் சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

6. பொலிந்த பொலி + த் (ந்) + த் + அ
பொலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

7. உண்டார் – உண் + ட் + ஆர்
மண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

8. மண்டிய – மண்டு + இ(ன்) + ய் + அ
மண்டு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன’ கரம் புணர்ந்து கெட்டது,
ய் – உடம்படு மெய், அ – பெயரெச்ச விகுதி.

9. சிந்தி – சிந்து + இ
சிந்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

10. பணிந்து – பணி + த் (ந்) + த் + உ
பணி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

11. இருந்த – இரு + த் (ந்) + த் + அ
இரு – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

12. காய்ந்த – காய்த் (ந்) + த் + அ
காய் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

13. பழுத்த – பழு + த் + த் + அ
பழு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. அரும்பொருள் – அருமை + பொருள்
“ஈறுபோதல்” (அரு + பொருள்), “இனமிகல்” (அரும்பொருள்)

2. மனையென – மனை + என
“இ ஈ ஐ வழி யவ்வும்” (மனை + ய் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மனையென )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

3. மலைவிலாது – மலைவு + இலாது
“முற்றும் அற்று” (மலைவ் + இலாது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மலைவிலாது)

4. தொலைவிலா – தொலைவு + இலா
“முற்றும் அற்று” (தொலைவ் + இலா)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தொலைவிலா)

5. குறைவற – குறைவு + அற
“முற்றும் அற்று” (குறைவ் + அற)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (குறைவற)

6. கம்பலைப்புடவி – கம்பலை + புடவி
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (கம்பலைப்புடவி)

7. கடலென – கடல் + என
“உடல்மேல் உயிர்வந்து இன்றுவது இயல்பே” (கடலென )

8. இடனற – இடன் + அறY
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (இடனற)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

9. பெரும்புகழ் – பெருமை + புகழ்
“ஈறுபோதல் (பெரு + புகழ்), “இனமிகல்” (அரும்பொருள்)

10. தொன்னகர் – தொன்மை + நகர்
“ஈறுபோதல்” (தொன் + நகர்)
”னல முன் றனவும் ஆகும் தநக்கள்” (தொன்னகர்)

11. பொன்னகர் – பொன் + நகர்
”னல முன் றனவும் ஆகும் தநக்கள்” (பொன்னகர்)

12. புதுமலர் – புதுமை + மலர்
“ஈறுபோதல்” (புதுமலர்)

13. மனையென – மனை + என
“இ ஈ ஐ வழி யவ்வும்” (மனை + ய் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மனையென )

14. அரசென – அரசு + என
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அரச் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அரசென )

15. ஒண்ண கர் – ஒண்மை + நகர்
“ஈறுபோதல்” (ஒண் + நகர்) “ணௗ முன் டணவும் ஆகும் தநக்கள்” (ஒண்ண கர்)

16. குறைவற – குறைவு + அற
“முற்றும் அற்று ஒரோ வழி” (குறைவ் + அற)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (குறைவற)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

பலவுள் தெரிக

Question 1.
உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு…………….
அ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி
ஆ) வினைத்தொகை, இடவாகுபெயர்
இ) வினையெச்சம், வினைத்தொகை
ஈ) பெயரெச்சம், பண்புத்தொகை
Answer:
அ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி

Question 2.
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
அ) வரை – மலை
ஆ) வதுவை – திருமணம்
இ) வாரணம் – யானை
ஈ) புடவி – கடல்
i) அ, ஆ, இ – சரி; ஈ – தவறு
ii) ஆ, இ, ஈ – சரி; அ வறு
iii) அ, இ, ஈ – சரி; ஆ – தவறு
iv) அ, ஆ, ஈ – சரி; தவறு
Answer:
i) அ, ஆ, இ – சரி; ஈ – தவறு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

கூடுதல் வினாக்கள்

Question 3.
நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் …………….
அ) சின்ன ச் சீறா
ஆ) முகமாழிமாலை
இ) சீறாப்புராணம்
ஈ) தம்பாவணி
Answer:
இ) சீறாப்புராணம்

Question 4.
பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த நகர் அ) பாக்தாத் நகர் …………….
ஆ) மக்கா நக்இ
ஆ) மக்கா ந ‘
இ) மதீனா நகர்
ஈ) முத்து நகர்
Answer:
இ) மதீனா நகர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 5.
மதீனா நகர மக்கள், தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறுவது …………….
அ) ஆரணிய காண்டம் –
ஆ) விலாதத்துக் காண்டம்
இ) நுபுவ்வத்துக் காண்க
ஈ) ஹிஜிரத்துக் காண்டம்
Answer:
ஈ) ஹிஜிரத்துக் காண்டம்

Question 6.
‘சீறத்’ என்னும் ஆபுசசொல், …………….எனத் திரிந்தது.
அ) சிறா 17
ஆ) சீரா
இ) சீற்
ஈ) சீறா
Answer:
ஈ) சீறா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 7.
‘வாழ்க்கை’) என்னும் பொருளை உணர்த்தும் சொல் …………….
அ) சீறக்
ஆ) புராணம்
இ) சீறா
ஈ) சீரா
Answer:
இ) சீறா

Question 8.
உமறுப்புலவர், சீறாப்புராணத்தை வள்ளல் – வேண்டுகோளுக்கிணங்கி இயற்றினார்.
அ) சடையப்பர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) சீதக்காதி
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) சீதக்காதி

Question 9.
‘முதுமொழிமாலை’யை நபிகள்நாயகம்மீது பாடியவர்
அ) பனு அகமது மரைக்காயர்
ஆ) அப்துல்காசிம் மரைக்காயர்
இ) கடிகை முத்துப் புலவர்
ஈ) உமறுப்புலவர்
Answer:
ஈ) உமறுப்புலவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 10.
எட்டயபுரத்தின் அரசவைப் புலவராகப் பதவி வகித்தவர்
அ) சீதக்காதி
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) உமறுப்புலவர்
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) உமறுப்புலவர்

Question 11.
‘சின்னச் சீறா’ என்னும் நூலைப் பாடியவர்
அ) சீதக்காதி
ஆ) கடிகை முத்துப் புலவர்
இ) பனு அகமது மரைக்காயர்
ஈ) அப்துல்காசிம் மரைக்காயர்
Answer:
இ) பனு அகமது மரைக்காயர்

Question 12.
கடிகை முத்துப் புலவரின் மாணவர்
அ) சீதக்காதி
ஆ) அப்துல்காசிம்
இ) பனு அகமது
ஈ) உமறுப்புலவர்
Answer:
ஈ) உமறுப்புலவர்

Question 13.
முகம்மது நபி, மதீனாவிற்கு யாருடன் சென்றார்?
அ) அகுமதுவுடன்
ஆ) அப்துல்காசீமுடன்
இ) அபூபக்கருடன்
ஈ) பனு அகமதுவுடன்
Answer:
இ) அபூபக்கருடன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 14.
மதீனா நகரின் வீதிகள், — போன்று பரந்திருந்தன.
அ) குறிஞ்சி
ஆ) மேருமலை
இ) முல்லை
ஈ) பிரபஞ்சம்
Answer:
ஈ) பிரபஞ்சம்

Question 15.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள்
அ) அப்துல்காசிம் மரைக்காயர், பனு அகமது
ஆ) சீதக்காதி, பனு அகமது மரைக்காயர்
இ) வள்ளல் சீதக்காதி, அப்துல்காசிம் மரைக்காயா
ஈ) வள்ளல் சீதக்காதி, கடிகை முத்துப் புலகர்
Answer:
இ) வள்ளல் சீதக்காதி, அப்துல்க் சிம் மரைக்காயர்

Question 16.
உமறுப்புலவர், நபிகள் மீது பாடிய நூல்கள்
அ) தேம்பாவணி, சீறாப்புராணம்
ஆ) சீறாப்புராணம், முதுமொழிமாலை
இ) முதுமொழிமாலை, நொண்டி நாடகம்
ஈ) தேம்பாவணி, முதுமொழிமாலை
Answer:
ஆ) சீறாப்புராணம் முது மொழிமாலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம்

Question 17.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.2 சீறாப்புராணம் - 1
Answer:
1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ